Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Valliname Melliname
Valliname Melliname
Valliname Melliname
Ebook345 pages3 hours

Valliname Melliname

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

மூன்று ஆண் நண்பர்கள் ஒரே இடத்தில் பேயிங்கெஸ்டாக தங்கி வேலை பார்ப்பவர்கள். அதே போன்று மூன்று பெண்கள், ஒரே இடத்தில் பேயிங் கெஸ்டாக தங்கி வேலை பார்ப்பவர்கள்.

இந்த மூன்று பெண்கள், மூன்று ஆண்கள் - அவர்களது வேலைப் பின்னணியைக் கொண்டு 29 அத்தியாயங்களில் புனையப்பட்டுள்ள பிரபல எழுத்தாளர். திருமதி. வாஸந்தி அவர்களின் நாவல் 'வல்லினமே மெல்லினமே'. - மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி எழுதப்பட்டுள்ள இந்நாவல் சமுதாயச் சீரழிவுகளை கடுமையாகச் சாடுகிறது. இளைய தலைமுறை வருங்காலத்தையும், தேசிய ஒற்றுமையையும் காக்க வேண்டும் என்பதில் எவ்வளவு அக்கறையும் ஈடுபாடும் கொண்டுள்ளனர் என்பதை நாவலில் வரும் பிரபு, ஓமார், குமரன், கதாபாத்திரங்கள் மூலம் ஆசிரியர் சிறப்பாக வலியுறுத்தியுள்ளார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125403776
Valliname Melliname

Read more from Vaasanthi

Related to Valliname Melliname

Related ebooks

Reviews for Valliname Melliname

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Valliname Melliname - Vaasanthi

    http://www.pustaka.co.in

    வல்லினமே மெல்லினமே

    Valliname Melliname

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    பதிப்புரை

    மூன்று ஆண் நண்பர்கள் ஒரே இடத்தில் பேயிங்கெஸ்டாக தங்கி வேலை பார்ப்பவர்கள். அதே போன்று மூன்று பெண்கள், ஒரே இடத்தில் பேயிங் கெஸ்டாக தங்கி வேலை பார்ப்பவர்கள்.

    இந்த மூன்று பெண்கள், மூன்று ஆண்கள் - அவர்களது வேலைப் பின்னணியைக் கொண்டு 29 அத்தியாயங்களில் புனையப்பட்டுள்ள பிரபல எழுத்தாளர். திருமதி. வாஸந்தி அவர்களின் நாவல் 'வல்லினமே மெல்லினமே'. -

    மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி எழுதப்பட்டுள்ள இந்நாவல் சமுதாயச் சீரழிவுகளை கடுமையாகச் சாடுகிறது. இளைய தலைமுறை வருங்காலத்தையும், தேசிய ஒற்றுமையையும் காக்க வேண்டும் என்பதில் எவ்வளவு அக்கறையும் ஈடுபாடும் கொண்டுள்ளனர் என்பதை நாவலில் வரும் பிரபு, ஓமார், குமரன், கதாபாத்திரங்கள் மூலம் ஆசிரியர் சிறப்பாக வலியுறுத்தியுள்ளார்.

    இந்நாவலை வெளியிட வாய்ப்பளித்த நூல் ஆசிரியர் திருமதி. வாஸந்தி அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புடன்

    சேது சொக்கலிங்கம்

    1

    பிரபுவுக்குப் பொறுமை நழுவிக்கொண்டு வந்தது. சேர்மனுக்கு ஒரு மைக் கிடைத்துவிட்டால் ஆளே மாறிவிடுகிறார். வேலை பார்க்கும் இடத்தில் நறுக்குத் தெறித்தாற்போல இரண்டு வார்த்தையில் தனது எண்ணத்தையோ எதிர்பார்ப்பையோ தெரிவித்து கம்பீரமாக நகர்ந்து செல்பவர், விழாக்களில் அரங்கம் நிரம்பிய தலைகளைக் கண்டுவிட்டால், ஆளைக் கண்ட சமுத்திரம்தான்.

    இன்று சேர்மன் ஃபார்மில் இருந்தார். குந்து மணிகளை உருட்டி விட்டாற்போல் வார்த்தைகள் நிற்காமல் வெளிப்பட்டன. அலை அலையாய் உருண்டு பாய்ந்த அவற்றின் வீச்சில் அவரோடு அரங்கமும் மிதப்பதாகத் தோன்றிற்று. சேர்மன் தன்னம்பிக்கையின் உருவமாக நின்றார். மார்பு விரிந்து முகம் சவால் விடும் கம்பீரத்துடன் பளபளத்தது. பேசிய ஆங்கிலத்தில் வரவழைத்துக் கொண்ட அல்லது அவருக்குப் பழக்கப் பட்டுப் போன அமெரிக்க உச்சரிப்பு இருந்தது. சீக்கிரம் பேச்சை முடியுங்கள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். சொல்ல முடியாது. அவர் வெற்றியின் அடையாளம். உழைப்பின் சின்னம். கண்ணுக்கு எட்டும் வரை விரிந்த அவரது தொழில் நுட்ப சாம்ராஜ்யம், நம்பிக்கை உலகத்தின் நுழை வாயில். அதற்காக இளைய பாரதம் அவருக்கு நன்றிக் கடன் பட்டிருந்தது.

    பிரபு தன்னைச் சுற்றிலும் பார்த்தான். கட்டுண்டதுபோல் எல்லாரும் அமர்ந்திருந்தார்கள். பாவனையாக இருக்கலாம். இருபது சொச்சம் வயதுக் கும்பலின் சகிப்புத்தன்மையின் எல்லை அவனுக்குத் தெரியும்.

    மீண்டும் துழாவிப் பார்க்கும்போது சிலர் நகத்தைக் கடித்தபடி இருந்தார்கள். ஐ பாடைப் பொருத்திக் கொண்டு சிலர் தேமேனென்று இருந்தார்கள். சில லாப் டாப்புகள் திறந்திருந்தன. எஸ் எம் எஸ் பரிமாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன.

    தீபா உடன் இருந்தால் இத்தனை அலுப்பு தோன்றாது என்று இருந்தது. அவள் எங்கே போனாள் என்று தெரியவில்லை. மொபைலில் தொடர்பு கொள்ள முயன்றபோது அதை ஆஃப் செய்திருந்தாள். கூட்டம் போர் அடிக்கும் என்று போய்விட்டாளோ? தன்னிடம் சொல்லாமல் கிளம்பிவிட்டாள் என்ற நினைப்பு மெல்லிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதை எதிர் பார்ப்பது மடத்தனம் என்று உடனடியாக தனக்குள் சொல்லிக் கொண்டான். யாரிடமும் எதையும் எதிர்பார்ப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்பது தினமும் அவன் இந்த அலுவலக வளாகத்தில் அனுபவிக்கும் யதார்த்தம். அவன் அப்படி எதிர் பார்த்தான் என்ற நினைப்பே தீபாவுக்கு அதிர்ச்சியைத் தரலாம். அவள் ஒரு புதிர். அவனைப் பற்றின அவளது கணிப்பு என்ன என்று அவனுக்குத் தெரியாது. ஒரு நாள் தனக்காகவே அவள் ஜீவிப்பதான எண்ணத்தை ஏற்படுத்துவாள். மறுநாள் வேற்று கிரகத்திலிருந்து வந்தவளாகத் தோன்றுவாள். இந்திய வடக்கிற்கும் தெற்கிற்கும் அத்தனை வித்தியாசமிருக்க முடியாது. ஆனால் அவளைப் புரிந்து கொள்வது மென்பொருள் அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயம் என்று தோன்றிற்று.

    உன்னை என்னாலெ புரிஞ்சுக்க முடியல்லே! யார் நீ?

    அதுதான் நல்லது! கொஞ்சம் திண்டாடு, பரவாயில்லே! எக்ஸ்ரே படம் போல் மனித மனசு வெளிப்படுமானா இந்த பூமி தாங்காது பிரபு! -

    சட்டென்று அவள் தென்பட்டாள். பிரபுவுக்கு இரண்டு வரிசைக்கு முன்னால் அமர்ந்திருந்தாள். இடியட், எப்படி கவனிக்காமல் போனோம்? அவசரமாக ஓர் எஸ்.எம்.எஸ். செய்தான்.

    எங்கே இருந்தாய் இத்தனை நேரம்? ஆளைக் காணோம்?,

    அடுத்த நொடி பதில் வந்தது. விரல் நுனியில் அட்சரங்களை வைத்துப் பறக்கவிடுவாளா என்ன? ‘பாஸுடன் மீட்டிங்! நீ எங்கே தொலைந்தாய்?'

    'திரும்பிப் பார் ஸ்டுபிட்!' அவள் படித்துத் திரும்பித் துழாவிப் பார்த்து வியப்புடன் புன்னகைத்தாள். மார்புக் கூட்டினுள் ஏதோ சிறகடித்தது. மீண்டும் செய்தி சென்றது.

    போலாமா? கிழம் ஒரு போர்!

    'நீயும் ஒருநாள் கிழம் ஆவாய், நினைவிருக்கட்டும்!'

    'ஆவேன். ஆனால் நினைவாக மைக்கைப் பிடிக்க மாட்டேன். பிராமிஸ்!'

    அவள் சிரித்துக்கொள்வது பக்கவாட்டில் தெரிந்த முக தசைகளின் அசைவிலிருந்து தெரிந்தது.

    'இப்பவே நீ ஒரு போர்!"

    அவள் புன்னகையுடன் திரும்பிப் பார்த்தாள்.

    'தாங்க்யூ!' என்று உதடு குவித்து சல்யூட் அடித்தான். பக்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் அவனைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்ததும் அவன் தலையைக் குனிந்துகொண்டான். மொபைலில் அவளது எஸ் எம் எஸ் இருந்தது. -

    'நீ போ. எனக்கு வேறு எங்கேயோ போகணும்.' கிளம்பலாம் என்ற எண்ணம் சட்டென்று விலகியது. எங்கே போகிறாய் என்று கேட்பது நாகரிகமில்லை.

    சேர்மனின் உரை ஒரு வழியாக முடிவுக்கு வந்து தலைமை உரை ஆரம்பித்தது. தலைமை தாங்க வந்திருப்பது நல்ல வேளையாக அரசியல்வாதி இல்லை. சேர்மனுக்கு அரசியல்வாதிகளைக் கண்டால் அலர்ஜி. அதிகார வர்க்கத்தைக் கண்டாலும் அலர்ஜி. அந்த விஷயத்தில் காம்பஸ்ஸில் எல்லாருடைய ஓட்டும் அவருக்கு. மென்பொருள் தொழில் நுட்பத்தைப் பற்றி ஒரு மண்ணும் விளங்காத அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் இரண்டுமுறை வந்து உளறி கொட்டின போது சேர்மன் மேடையிலேயே அவர்களைக் கிண்டல் அடித்த பிறகு, இருதரப்புக்கும் ஏற்பட்ட உரசலினால் அவர்களை ஒப்புக்கு அழைக்கும் பாசாங்குத்தனம் கூட இப்போது இல்லை.

    இன்றைய விருந்தினர் எச்.எம்.சபர்வால். உலகப் புகழ் பெற்ற பொருளியல் நிபுணர். பார்க்க எந்த பந்தாவுமில்லாமல் எளிமையாக இருந்தார். எழுபது வயதிருக்கும் என்று பட்டது.

    இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானிலிருந்து வந்த சமயத்தில் எனக்குப் பத்து வயது என்று அவர் ஆரம்பித்தார்.

    அவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். முதுகுத் தண்டிற்குள் சில்லென்று ஒரு காற்றோடைப் புகுந்தது.

    உயிருக்கு பயந்து எல்லைத்தாண்டி வந்து அகதி முகாமில் இருந்த போது உயிர் பிழைத்திருத்தலே மிக முக்கியமான விஷயமாக இருந்தது. அடுத்தவேளை சாப்பாடு கிடைக்குமா, உடுத்த மாற்று உடை கிடைக்குமா என்னும் கேள்விகளே ஒருநாள் போதை விழுங்கிற்று. தினசரி கனவுகள் அவைதான். ஒவ்வொரு நாளும் ஒரு கண்டம்; ஒரு கேள்விக்குறி. அடுத்த நாளைப் பற்றின யோசனையே பீதி அளிக்கும். அன்று எனது இளம் கண்களுக்கு என்னைச் சுற்றி தென்பட்ட காட்சிகள் எல்லாம் எதிர்காலத்தைப் பற்றி கனவு காணக்கூட எங்கள் யாருக்கும் அருகதை இல்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தின. இன்று பின்னால் திரும்பிப் பார்க்கும்போது அது ஒரு கெட்ட கனவாகத் தோன்றுகிறது. பயங்கரக் கனவு.

    பிரபுவுக்கு இரத்த நாளங்களில் சிலிர்ப்பேற்பட்டது. கண்களில் நீர் திரையிட்டது அவனது ஆதாரவேர்கள் மேல் சாரல் பட்டது போல. சபர்வால் தனக்கு மிக நெருங்கி வந்துவிட்டது வியப்பை அளித்தது. பூர்வ ஜன்ம தொடர்பு இருக்கக்கூடும்.

    சபர்வால் முகத்தில் புன்னகை எப்படி அமர்ந்திருக்கிறது என்று வியப்பேற்பட்டது.

    இந்த அறுபது ஆண்டுகளில் தேசம் கண்டிருக்கும் மாற்றங்கள் எனக்கு திகைப்பூட்டுகின்றன. இத்தனைக்கும் அவையெல்லாம் மெல்ல மெல்ல ஏற்பட்டிருப்பவை. ஆனால் இங்கு உங்கள் சேர்மன் கடந்த பதினைந்து ஆண்டுகளில் நமது பொருளாதாரத்துக்கும் இளைஞர்களின் எதிர்காலத்துக்கும் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் பிரமிப்பை ஊட்டுவது. உங்கள் முன்னால் விரிந்து இருப்பது ராஜ பாட்டை.

    சபர்வால் பேசிக்கொண்டே போனார். அவன் அவரது முதல் வாக்கியத்திலேயே நின்றான். தனது பத்து வயது காலகட்டத்தைப் பற்றி அவர் இன்னும் சற்று பேசமாட்டாரா என்று இருந்தது. அகதி முகாம்களில் வேறு என்ன அனுபவங்களை சந்தித்தீர்? உங்களுடன் உங்கள் தங்கை தம்பி இருந்தார்களா? அப்பா அம்மா? யாரும் காணாமல் போகவில்லையா? அங்கே ஒரு சின்னப் பையனைப் பார்த்தீரா? அம்மாவின் கையை விடாமல் பற்றிக்கொண்டு, அப்பா அப்பா என்று அழுதுகொண்டு?

    எல்லாரும் பலமாகக் கையைத் தட்டிக் கொண்டி ருந்தார்கள்.

    ஆமாம், அது உண்மை என்றார் சபர்வால். இப்போது நீங்கள் எல்லாரும் தைர்யமாகக் கனவு காணலாம் அது பலிக்கும் என்ற நிச்சயத்துடன்.

    அரங்கம் எழுந்து நின்று கரகோஷித்தது. எல்லாரும் நெகிழ்ந்து போனதாகத் தோன்றிற்று..

    அவனும் எழுந்தான். மேடையில் சேர்மன் உணர்ச்சிவசப்பட்டிருந்தது தெரிந்தது. சபர்வாலின் கைகளைக் குலுக்கி நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார். கூட்டம் முடிந்து அவை கலைந்தபோது சிலர் சபர்வாலுடன் கை குலுக்க மேடைக்கருகில் நின்றிருந்தார்கள். தானும் நிற்கலாமா என்று அவன் ஒரு கணம் யோசித்தான். கை குலுக்கும் போது சொல்வதற்கு வார்த்தைகள் தயாராக இருந்தன.

    எனக்கு திகைப்பூட்டுவது என்ன தெரியுமா? அகதி முகாமிலிருந்து இத்தனை தொலைவுக்கு நீங்கள் வந்திருப்பது!

    அவன் தயங்கியபடி நிற்கும்போது, சபர்வால் பொதுவாக எல்லாரையும் பார்த்து, 'என்னை மன்னியுங்கள்' என்றார். "எனக்கும் உங்களுடன் பேச வேண்டும் என்று விருப்பம்தான். ஆனால் எனக்கு ஏழரை மணி விமானத்தை பிடிக்க வேண்டும். உடனே கிளம்ப வேண்டும் என்கிறார்கள். பெங்களூர் ட்ராஃபிக் நெரிசல் பயங்கரம் என்கிறார்கள்!' அவர் மெல்லிய புன்னகையுடன் சேர்மன் பின்தொடர் வெளியேறின போது அவனுள் ஏமாற்றம் படர்ந்தது.

    நிமிஷ நேரத்தில் அரங்கம் காலியாகிவிட்டது.அது வரைக் கட்டுப்பட்டிருந்தவர்கள் தத்தம் பைக்குகளிலும் கார்களிலும் கிளம்பிவிட்டார்கள். வீட்டிற்கு உடனடியாகப் போக வேண்டிய கட்டாயம் அதிகம் பேருக்கு இல்லை. இங்கிருந்து அவசரமாகக் கிளம்பி எந்த ரெஸ்டாரன்டிலாவது அமர்ந்து அரட்டையடிக்கப் போகும் பாச்சிலர்கள். எதற்கும் அவசரப்பட்டு விரைந்தால்தான் இடம் கிடைக்கும் என்று ஆவேசப்படும் வேகம் வேகம் என்பது ஒரு லைஃப் ஸ்டைல். இந்த வேகம் பிரபுவுக்குப் பிடிக்கும். ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்கும் வேகம். யாருக்கும் எதற்கும் காத்திராத நொடிகள். அற்புதங்களைத் தாங்கி நிற்பவை. அவற்றைக் கைபற்றத் தவறினால் உலகம் கை நழுவிப் போகும். இந்த வேகம் பெங்களூரின் ஆளுமைக்குப் புறம்பானது. அதற்கு ஈடுகொடுக்க முடியாத அதன் சாலைகள் திணறும் அவலங்களின் புகைப்படங்கள் தினமும் தினசரிகளை அலங்கரிக்கின்றன. அதற்கு பயந்துதான் சபர்வால் கிளம்பிப் போனார்.

    சபர்வால் இன்று களைத்துப்போன மனிதர் என்று அவன் நினைத்துக் கொண்டான். எத்தனையோ நெருக்கடிகளைக் கண்டிருப்பவர் அவர். அகதி முகாமில் முண்டியடித்து மீண்டவர்கள் எப்படி இருப்பார்கள் என்று அவனுக்குத் தெரியும். மனத்தை முடக்கும் யதார்த்தங்களுக்கு இடையே தளராமல் நின்றவர்கள். இரத்தத்தில் அசாதாரணத் துடிப்பு இருந்திருக்க வேண்டும். அது ஓர் அமானுஷ்ய சக்தியாகக்கூட இருக்கலாம். 'உயிர் வாழ்தலே ஒரு சவால்'. அந்தச் சவாலை சமாளித்ததே ஒரு காவியமாக இருக்க வேண்டுமே? இன்று உலகம் போற்றும் பொருளியல் நிபுணர். எப்படி சாதித்தீர்? பேரலைகள் விழுங்க வரும் போது எதிர் நீச்சல் போட எங்கிருந்து திராணி வந்தது?

    நீங்கள் சொன்னது சரி. இன்று எங்கள் முன் விரிந்திருப்பது ராஜபாட்டை. அதில் செல்லாதவன் மடையன். அதை உபயோக்கிக்கத் தெரியாதவனுக்குக் கடவுளின் அனுதாபம்கூட கிடைக்காது.

    தீபாவைக் காணும். சபர்வால் இன்று தன்னுள் ஏற்படுத்திவிட்ட கிளர்ச்சியை அவளிடம் சொன்னால் அவளுக்குப் புரியுமா என்று யோசித்தான். அறுபது ஆண்டுகளுக்கு முன் வடக்கில் நடந்த அந்த சோகம் அவளுக்கு வெறும் சரித்திரத்தின் சில ஏடுகள். அவனுக்கோ அவனது பிறப்புடன் சம்பந்தப்பட்டது. முதலாவது அவளிடம் சொல்வானா என்பது நிச்சயமில்லை. சொல்லக் கூச்சமாக இருக்கும் என்று இப்போது தோன்றிற்று. மிக அந்தரங்கமான உணர்வுகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ளமுடியாது. அவன் நேசிக்கும் பெண்ணிடம் கூட. ஒருநாள் அவளிடம் அப்பா அவனிடம் அடிக்கடி சொல்லும் கதையை சொல்லலாம். அதற்கு அவள் சந்தர்ப்பம் கொடுத்தால்.

    அவன் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு பைக்கில் அமர்ந்து நகர்ந்தபோது சபர்வால் அமர்ந்திருந்த வண்டி சற்று எட்டி ஏர்போர்ட் சாலையில் சென்றது. கனத்த ட்ராஃபிக்கில் இளைப்பாறிற்று. அங்கிருந்து கிளை பிரிந்து எதிர் திசையில் பைக்கை செலுத்திய பின்னும் பிரபு சபர்வாலுடன் பயணித்தான். நினைவுகளிலிருந்து உங்களால் தப்பிக்க முடிந்ததா? கனவுகளாய் வந்து உங்களை அலைக்கழிக்கவில்லையா? துன்புறுத்தவில்லையா? எப்படி இப்படி யோகியைப் போல் பேசமுடிகிறது? எங்கே புதைத்தீர்கள் அவற்றை? (அ) கடாசினீர்கள்? உங்களுக்குத் தெரியாது

    அந்த மூட்டைகள் என் முதுகில் அமர்ந்திருக்கின்றன. முடிச்சுகளாய் மண்டையின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருக்கின்றன.

    சரசரவென்று இருள் கவிந்துவிட்டது. பிஸ்ஸாஹட் போர்டைப் பார்த்ததும் பசித்தது. அவன் வண்டியை நிறுத்தி உள்ளே சென்றான். இருபது சொச்சம் வயதுக் கும்பலால் உணவகம் நிரம்பியிருந்தது. அநேகமாக இந்தியோ ஆங்கிலமோ பேசும் கும்பல். முப்பதைத் தாண்டியவர்களே பெங்களூரில் இல்லை என்று தோன்றிற்று. எல்லார் கண்களிலும் கனவு மிதந்தது. இவர்களில் எத்தனை பேர் அவனைப் போல் சரித்திர சுமையுடன் பிறந்திருப்பார்கள்?

    ஹை! பழக்கமான குரலைக் கேட்டு அவன் திரும்பிப் பார்த்தான். ஓமார் அக்பர், வழக்கமான உற்சாகச் சிரிப்புடன்.'

    "ஒ ஹை!' என்று அவன் சிரித்தான். 'என்ன இன்னிக்கு, வேலை சீக்கிரம் முடிஞ்சு போச்சா?'

    'முடியுமா?' என்று அக்பர் சிரித்தான். 'இந்திய அரசியலுக்கு ஜே! தினமும் ஏதாவது நியூஸ் இல்லாமலிருக்காது. ஆட்சி கவுந்துடுமான்னு இன்னிக்கு சொல்ல வேண்டிய கட்டாயத்திலே இருக்கேன்! இன்னிக்கு ராத்திரி ஒன்பது மணிக்கு சி.எம்.மோட இன்டர்வியூ. அதுக்கு முந்தி வயித்தை ரொப்பிக்கலாம்னு வந்தேன்.

    அக்பர் தனது கைப் பையை மேஜையில் வைத்து விட்டு 'ஆர்டர் பண்ணியாச்சா? உனக்கும் பண்ணவா?' என்றான்.

    'பண்ணியாச்சு.'

    அக்பர் ஆர்டர் செய்து விட்டு புன்னகையுடன் வந்து அமர்ந்தான். அவனுடைய புன்னகை அவன் முகத்தின் நிரந்தர அடையாளம். உயிர் வாழ்தலே உற்சாகம் என்பது போல. அரசியல் நிருபனுக்கு எப்படி இப்படிப்பட்ட உற்சாகம் சாத்தியம் என்று பிரபுவுக்குப் புரியவில்லை.

    ஸோ? கவுந்துடுமா? என்றான் பிரபு.

    அக்பர் சிரித்தான். 'கவுந்தால்தான் என் ரிப்போர்ட்டுக்கு சுவாரஸ்யம்!'

    உங்களுக்கெல்லாம் ஏமாற்றம் அளிக்கக் கூடாதுன்னே இவங்கள்ளாம் இப்படி நடந்துக்கறாங்களோ!

    அக்பர் இடிபோலச் சிரித்தான். 'எல்லாருக்கும் டி.வி. கேமரான்னா ஆசை! முன்னெ பத்திரிகை நிருபனா இருந்தபோது லேசிலே இன்டர்வ்யூ கிடைக்காது. இப்ப கேமரா எதிர பேசத் துடிக்கிறாங்க!"

    அக்பர் அவனுடைய வேலையை நேசித்தான் என்பதில் சந்தேகமில்லை. அரசியல்வாதிகளையும் நேசிப்பதாகத் தோன்றிற்று. ஒரு முறை அவனிடம் அதைப்பற்றிக் கேட்டபோது சிரித்தான்.கைகளை அகல விரித்து 'நா உலகத்தையே நேசிக்கிறேன்!' என்றான்.

    உடனே வரும்படி சி.எம்.மின் வீட்டிலிருந்து சேதி வரவும் அரைச் சாப்பாட்டிலேயே எழுந்து போனான்.

    பிரபு அபார்ட்மென்டுக்குப் போய் சேர்ந்த போது அவனது ஹவுஸ் மேட்ஸ் வந்திருக்கவில்லை. குமரன் - திருவண்ணாமலைக்குச் சென்றிருந்தான். இன்று இரவு வரலாம். ஒமார் அக்பருக்கு வர லேட் ஆகும் எப்படியும்.

    சற்று நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்து விட்டுப் பிரபு படுத்தான். இன்று தீபாவுடன் அதிக நேரம் பேசமுடியவில்லை என்ற நினைப்புடன் தூங்கிப் போனான்.

    கனவில் அப்பா வந்தார். ஏகமூட்டைகளைச் சுமந்த படி. அதை இறக்குங்களேன் என்றான் அவன்.

    முடியாது என்றார் அப்பா விசனத்துடன் தலையை அசைத்து. அதை நாந்தான் சுமக்கணும்.

    முன்னேறிச் சென்றவர் திரும்பி அவனைப் பார்த்தார். ரகசியம் சொல்வதுபோல் மிக மெல்லிய குரலில் சொன்னார். பிரபு, ஒண்ணுமட்டும் நினைவு வெச்சுக்க. யாரை வேணும்னாலும் நம்பலாம். ஆனா ***** மட்டும் கூடாது.

    அப்பா சொன்ன வார்த்தை தெளிவாகவில்லை.

    யாரை அப்பா...?

    அப்பா திரும்பிப் பார்க்காமல் நடந்தார்.

    அப்பா! அப்பா!,

    அவன் திடுக்கிட்டு விழித்துக் கொண்டான்.

    அவன் முதுகில் ஏதோ கனம் ஏறியிருந்ததாகத் தோன்றிற்று.

    2

    காலையில் ஆபீஸுக்குக் கிளம்பும்போது அக்கா கேட்டாள்.

    திரும்பி வர நாழியாகுமா தீபா?

    தனக்குள் எழுந்த எரிச்சலை அடக்கியபடி, ஆகலாம். ஏன்? என்றாள் தீபா.

    சும்மாதான் கேட்டேன்.

    அக்காவின் கேள்விக்கு என்ன அர்த்தம் என்று அவளுக்குத் தெரியும். 'நாழியாகுமா' என்றால் 'நாழி யாக்காதே' என்று அர்த்தம்.' ஊர் சுத்தாதே ஆபீஸ் முடிந்ததும் நேர வீட்டுக்கு வா' என்று அர்த்தம்.

    அக்காவுக்கு எத்தனையோ முறை விளக்கியாகி விட்டது. அவள் பார்க்கும் வேலை ஒன்பதிலிருந்து ஐந்து என்று நேரம் பிசகாமல் முடியும் டீச்சர் வேலையோ அலுவலக க்ளார்க் வேலையோ இல்லை. அவளது கம்பெனி தினமும் அவளைக் காலை ஒன்பதரைக்கு எதிர்பார்க்கிறது. திரும்புவதற்குக் கால வரையறை கிடையாது. சில நாட்கள் இரவு ஒன்பது கூட ஆகும்.

    'பொம்மனாட்டின்னு சலுகை கிடையாதா? அப்ப கம்பெனி வண்டியிலே வீட்டுக்கு அனுப்பட்டுமே?" என்கிறாள் அக்கா. '

    தலையைப் பிய்த்துக் கொள்ளவேண்டும் போல் இருக்கும். இப்படிப்பட்ட வேலைகளில், அதுவும் இன்றையச் சூழலில் இனபேதச் சலுகைகளை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்றால் அக்காவுக்குப் புரியாது.

    நீ சலுகை எதிர்பார்த்தால் வேலை கிடைக்காது. சிறு முணுமுணுப்புகூட இல்லாமல் மங்கு மங்கு என்று நள்ளிரவைத் தாண்டி வேலை செய்யத் தகுதி வாய்ந்த ஆண்கள் ஆயிரம் பேர் தயாராக இருக்கிறார்கள். ஐந்து மணிக்கு வீட்டுக்குக் கிளம்பணும் என்று சொல்கிற பெண்ணுக்கு வேலைக் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் எந்த கம்பெனியும் இல்லை.

    அப்ப இந்த உத்யோகமே வேண்டாமேடி? நீ சம்பாதிக்கணும்னு எந்தக் கட்டாயமும் இல்லையே?

    அக்காவிடம் சண்டை போடுவது அநாகரிகம் மட்டுமல்ல - நம்பிக்கைத் துரோகம் என்பதை அக்காவின் உடல் மொழி தெரிவிக்கும். மிக சிரமப்பட்டு சுயநலம் பாராமல் அவளை ஆளாக்கியவள். இந்தச் சுமையே தன்னை அழுத்துவதாக தீபாவுக்கு சோர்வு ஏற்பட்டது. தன்னை வளர்க்கும் பொறுப்பு அக்காவுக்கு இல்லாமல் இருந்திருந்தால் அக்கா வித்தியாசமாக இருந்திருப்பாள். அல்லது வயிற்றில் பிறந்த குழந்தைகள் இருந்திருந்தால் கவனம் சற்று திசை மாறி இருக்கும். அது இல்லாமல் போனதால் அவளே அவள் - மனத்தை ஆக்ரமித்துவிட்டது சோகம். ப்ரேக்கிங் நியூஸ்ஸுக்கு அலையும் 24 x 7 நியூஸ் சானல் போல் வேண்டாத விஷயங்களுக்கெல்லாம் பரபரக்கிறாள்.

    அக்கா படிக்காதவள் இல்லை. அந்தக் காலத்துப் பட்டதாரி. சென்னையில் அவளுடன் குவீன் மேரீஸ் கல்லூரியில் படித்த தோழிகளை வருஷத்துக்கு ஒரு முறை சந்திக்கும் தருணத்தில் அக்காவின் முக விலாசமே மாறிப் போகும். உடல் மொழியிலும் முகத்திலும் முப்பது ஆண்டுகள் உதிர்ந்து போகும். சின்னப் பெண் போல கவலையற்று சிரிப்பாள். உலகளாவிய சமாசாரங்களை - ப்ரின்ஸெஸ் டயானாவின் சாவிலிருந்து ஹில்லாரி க்ளிண்டனுக்கு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சான்ஸ் உண்டா என்பது வரை விவகாரமாகப் பேசுவாள். ஈராக்கில் ஜார்ஜ் புஷ் தொடுக்கும் அநியாய போரைப்பற்றி தர்க்கரீதியாக ஆவேசத்துடன் புட்டு வைப்பாள். ஆனால் அவள் விஷயத்தில் மட்டும் ஏன் இப்படி புராணகாலத்து காந்தாரி மாதிரி 'ப்ளிங்கர்ஸ்' அணிகிறாள் என்று புரியவில்லை.

    காந்தாரியின் கதையை அக்காதான் சொன்னாள், ராஜாஜியின் மஹாபாரதப் புத்தகத்தில் இல்லாத விளக்கத்துடன், சற்று வித்தியாசமாக. 'புருஷன் திருத ராஷ்டிரன் குருடுங்கறதனாலெ தனக்கு மட்டும் பார்வையுடைய செளகர்யம் வேண்டாம்னு தானும் கண்ணைக் கட்டிண்ட பதிவ்ருதைன்னு பௌராணிகர் கள்ளாம் சொல்லுவா. ஆனா, உண்மையிலேயே காந்தாரி மகாகெட்டிக்காரி. ஞானி புருஷனும் பிள்ளைகளும் பண்ற அக்ரமத்தைக் காண சகிக்காம, பார்த்தா ஏதாவது சொல்ல வேண்டிவருமேன்னு கண்ணைக் கட்டிண்டான்னு நினைக்கிறேன்!"

    Enjoying the preview?
    Page 1 of 1