Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Adhikalai Iruttu
Adhikalai Iruttu
Adhikalai Iruttu
Ebook287 pages1 hour

Adhikalai Iruttu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தினத்தந்தி சார்பாக வெளியாகும் என்னுடைய முதல் நாவல்! இதைத் தொடராக குடும்பமலரில் எழுதும்போது, எனக்கு முழு சுதந்திரம் தரப்பட்டது. அவகாசமும் இருந்ததால் வித்தியாசமாக சிந்திக்க முடிந்தது.

"அதிகாலை இருட்டு” என்ற தலைப்பை படிக்கும்போது இது ஒரு துப்பறியும் தொடர் என்று தோன்றும்.

ஆனால் முழுக்க, முழுக்க இது ஒரு சென்டிமென்ட் தொடர். குடும்ப பின்னணி, பாசத்துக்கும் ஏங்கும் இதயங்கள், பணம் கொட்டிக்கிடந்தாலும் தாங்கிப் பிடிக்கும் பாசம் இல்லையென்றால், கரன்சிகளால் சாதிக்க முடியாது என்பதை அழகாகச் சொல்லும் வாய்ப்பு இந்தப் புதினத்தில் எனக்குக் கிடைத்தது.

தாய் கிடைக்காத ஒரு மகள் - மகளை அடைய முடியாத ஒரு தாய் - நெருக்கத்தில் இருந்தும் நெஞ்சம் தவிக்கும் தவிப்பு - சூழ்நிலை காரணமாக சொல்ல முடியாத இறுக்கம் - இத்தனையும் உள்ளே வந்து விட்டது. பரபரப்புக்கு பஞ்சமே இல்லை!

என்னை எழுது... என்னை எழுது என நமக்குக் கட்டளையிடும் ! குணாதிசயம், படைப்புக்கு பிதாமகன்!

அது கிடைத்துவிட்டது. எழுத உட்கார்ந்தால் ஒரே நேரத்தில் நான்கைந்து அத்தியாயங்கள் சரமாரியாக வந்து விழும். முப்பது பகுதிகளைக் கடந்ததும், இது பெரிதாக வரும் என்பதை உள்மனது சொல்லிவிட்டது.

அதை தினத்தந்தி நிர்வாகத்திடம் சொன்னபோது, அவர்கள் என் கைகளை கட்டவே இல்லை. அதனால் 48 வாரங்கள்.

ஒரு வருட காலத்துக்கு ஏறத்தாழ வெளிவந்த தொடர்! நான் எழுதிய தொடர்களில் இதுதான் என்னைப் பொறுத்த வரை நீளமான பெரிய தொடர். அவர்கள் கட்டுப்படுத்தவே இல்லை. வாராவாரம் வரும் வாசகர் கடிதங்கள் என்னை அதிகமாக ஊக்குவித்தது.

இந்த அதிகாலை இருட்டு, எனது எழுத்துப் பயணத்தில் பெரிய வெளிச்சத்தை வீசிய தொடர்!

நன்றி! தேவிபாலா

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603775
Adhikalai Iruttu

Read more from Devibala

Related to Adhikalai Iruttu

Related ebooks

Reviews for Adhikalai Iruttu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Adhikalai Iruttu - Devibala

    http://www.pustaka.co.in

    அதிகாலை இருட்டு

    Adhikalai Iruttu

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    என்னுரை

    தினத்தந்தி சார்பாக வெளியாகும் என்னுடைய முதல் நாவல்! இதைத் தொடராக குடும்பமலரில் எழுதும்போது, எனக்கு முழு சுதந்திரம் தரப்பட்டது.

    அவகாசமும் இருந்ததால் வித்தியாசமாக சிந்திக்க முடிந்தது.

    அதிகாலை இருட்டு என்ற தலைப்பை படிக்கும்போது இது ஒரு துப்பறியும் தொடர் என்று தோன்றும்.

    ஆனால் முழுக்க, முழுக்க இது ஒரு சென்டிமென்ட் தொடர்.

    குடும்ப பின்னணி, பாசத்துக்கும் ஏங்கும் இதயங்கள், பணம் கொட்டிக்கிடந்தாலும் தாங்கிப் பிடிக்கும் பாசம் இல்லையென்றால், கரன்சிகளால் சாதிக்க முடியாது என்பதை அழகாகச் சொல்லும் வாய்ப்பு இந்தப் புதினத்தில் எனக்குக் கிடைத்தது.

    தாய் கிடைக்காத ஒரு மகள் - மகளை அடைய முடியாத ஒரு தாய் - நெருக்கத்தில் இருந்தும் நெஞ்சம் தவிக்கும் தவிப்பு - சூழ்நிலை காரணமாக சொல்ல முடியாத இறுக்கம் - இத்தனையும் உள்ளே வந்து விட்டது.

    பரபரப்புக்கு பஞ்சமே இல்லை!

    என்னை எழுது... என்னை எழுது என நமக்குக் கட்டளையிடும் ! குணாதிசயம், படைப்புக்கு பிதாமகன்!

    அது கிடைத்துவிட்டது. எழுத உட்கார்ந்தால் ஒரே நேரத்தில் நான்கைந்து அத்தியாயங்கள் சரமாரியாக வந்து விழும்.

    முப்பது பகுதிகளைக் கடந்ததும், இது பெரிதாக வரும் என்பதை உள்மனது சொல்லிவிட்டது.

    அதை தினத்தந்தி நிர்வாகத்திடம் சொன்னபோது, அவர்கள் என் கைகளை கட்டவே இல்லை. அதனால் 48 வாரங்கள்.

    ஒரு வருட காலத்துக்கு ஏறத்தாழ வெளிவந்த தொடர்! நான் எழுதிய தொடர்களில் இதுதான் என்னைப் பொறுத்த வரை நீளமான பெரிய தொடர்.

    அவர்கள் கட்டுப்படுத்தவே இல்லை. வாராவாரம் வரும் வாசகர் கடிதங்கள் என்னை அதிகமாக ஊக்குவித்தது.

    இந்த அதிகாலை இருட்டு, எனது எழுத்துப் பயணத்தில் பெரிய வெளிச்சத்தை வீசிய தொடர்!

    நன்றி!

    தேவிபாலா

    1

    திடீரென ஒரு முனகல் கேட்க, விசுக்கென கண்களை விழித்தான் கோபி! படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான்! திரும்பினான்!

    முனகல் மறுபடியும் கேட்க, வேகமாக எழுந்து அம்மா இருந்த அறையை நோக்கி வந்தான்!

    விளக்கை போட்டான்! அம்மா நெஞ்சைக் கைகளால் பிடித்தபடி துடித்துக் கொண்டிருக்க, பதறி விட்டான் கோபி!

    என்னம்மா! என்ன ஆச்சு!

    அம்மாவால் பேச முடியவில்லை. தவிப்பு அதிகமாக இருந்தது! உடம்பின் அதிர்வில் உபாதையின் தீவிரம் தெரிந்தது!

    ஜெயா! சீக்கிரம் வா!

    குரல் கேட்டதும் அவனது அடுத்த தங்கை ஜெயா ஓடி வந்தாள்!

    அய்யோ ! அம்மாவுக்கு என்னாச்சு!

    கூச்சல் போடாதே! நான் போய் ஆட்டோ கொண்டு வர்றேன். நீ அம்மாவைப் பிடி!

    ஜெயா பிடித்துக்கொள்ள, அடுத்த தங்கை ராணி ஓடி பயந்தாள்.

    அதிகாலை மூன்றரை மணி! இருட்டு முழுவதும் பயிரிலகாத நிலை!

    அம்மா கண்கள் செருகி ஒரு மாதிரி மயக்க நிலையை எட்டிக் கொண்டிருக்க, இரு பெண்களும் அழத்தொடங்க, சில நொடிகளில் ஆட்டோ வந்து விட்டது.

    ராணி! நீ கதவை சாத்திவிட்டு வீட்ல இரு! நானும், ஜெயாவும் அம்மாவைக் கூட்டிட்டுப் போறோம்!

    சரிண்ணா ! இருவரும் அம்மாவை ஆட்டோவில் ஏற்றி தங்கள் மேல் சாய்த்துக் கொள்ள ஆட்டோ புறப்பட்டது.

    மெதுவா போப்பா! அதிர்வு வேண்டாம்!

    சில நொடிகளில் அந்த ஆஸ்பத்திரி வாசலில் ஆட்டோ நிற்க, உள்ளே போய் விவரம் சொன்னான். ஸ்ட்ரெச்சர் வந்தது. அம்மா கிடத்தப்பட்டாள். உள்ளே கொண்டு போனார்கள்.

    நகரில் அது ஒரு நல்ல ஆஸ்பத்திரி. அதிகம் பணம் பறிக்காமல் நியாயமாக சிகிச்சை தரும் கண்ணியமான மருத்துவமனை!

    பரபரவென செயல்படத் தொடங்கினார்கள்!

    பரிசோதனை நடந்தது! 'டியூட்டி' டாக்டர்கள் இருந்தார்கள். சில நொடிகளில் வெளியே வந்தார்கள்.

    ஹார்ட் அட்டாக் வந்திருக்கு. பெரிய டாக்டருக்கு தகவல் குடுத்திருக்கோம். வந்துட்டே இருக்காங்க!

    அய்யோ ! உயிருக்கு ஆபத்தா!

    டாக்டர் வந்து பார்க்கட்டும்!

    அடுத்த பதினைந்து நிமிடங்களில் டாக்டர் பாண்டியன் உள்ளே நுழைந்தார்.

    காஞ்சனாவுக்கு சொல்லியாச்சா?

    சொல்லிட்டோம் டாக்டர்!

    அடுத்த பத்தாவது நிமிடம் அந்த ஆஸ்பத்திரியின் தலைமை நர்ஸ் காஞ்சனா உள்ளே நுழைந்தாள்!

    அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் பாண்டியன் இருந்தார்.

    அரைமணி நேரம் போனது.

    கோபியும், ஜெயாவும் புழுவாகத் துடித்துக்கொண்டிருந்தார்கள்.

    டாக்டரும், நர்ஸ் காஞ்சனாவும் வெளியே வந்தார்கள்.

    என்ன டாக்டர்!

    பலமான 'ஹார்ட் அட்டாக்'தான்! எல்லா முதலுதவிகளும் செஞ்சிருக்கோம்! ஆஞ்சியோ பண்ணிப் பார்க்கணும்! எத்தனை அடைப்பு இருக்குன்னு தெரிஞ்ச பிறகு, ஆபரேசனைப் பத்தி தீர்மானிக்கணும்!

    உயிருக்கு ஆபத்தா டாக்டர்? ஜெயா பதற்றமாகக் கேட்டாள்.

    எவ்ளோ செலவாகும் டாக்டர்! - இது கோபி!

    சடக்கென நிமிர்ந்து பார்த்தாள் காஞ்சனா.

    முதல்ல முதலுதவி பலன் தரட்டும். டெஸ்டுகள் எடுக்கணும். அப்புறமா ஆஞ்சியோவுக்கு அனுப்பணும்

    ஜெயா, நர்ஸ் காஞ்சனாவிடம் வந்து அழுதாள்.

    எங்கம்மாவுக்கு எதுவும் ஆகக் கூடாது

    இந்தாப் பாரம்மா! நம்பிக்கையோட இரு! அதுதான் மனுஷனுக்கு பலம்!

    எவ்ளோ பணம் கட்டணும்! அதை சொல்லுங்க! பணத்துக்கு நான் ஏற்பாடு செய்யணும்! கோபி பரபரத்தான்.

    இருங்க! மற்ற ஆஸ்பத்திரிகள் மாதிரி 'அட்மிட்' பண்ணினதும் நாங்க பணத்தைக் கட்டச் சொல்லி உங்களை கேட்டோமா? முதலுதவி பலன் தரட்டும்! அப்புறமா பேசலாம். அப்படி வெளியே போய் உட்காருங்க

    இருவரும் உட்கார, அடுத்த இரண்டு மணி நேரங்களில் அதிகாலை இருட்டு மெல்ல விலகத் தொடங்கி விடியல் ஆரம்பமானது.

    அதற்குள் ரத்தம் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. மற்ற பரிசோதனைகளும் எடுக்கப்பட, முதலுதவியால் உயிருக்கு வரும் ஆபத்து தற்காலிகமாக தடுக்கப்பட்டு விட்டது.

    பரிசோதனை அறிக்கைகள் வெளியே வர, கோபி, ஜெயாவை டாக்டர் பாண்டியன் அழைத்தார். நர்ஸ் காஞ்சனாவும் உடனிருந்தாள்.

    சர்க்கரை அளவு எக்கச்சக்கமா ஏறியிருக்கு. ரத்த அழுத்தமும் அதேதான்! இதுக்கு முன்னால எங்கே பார்த்தாங்க? மருந்து சாப்பிட்டாங்களா? அளவுக்கு அதிகமா டென்ஷன் படறாங்களா? சொல்லுங்க!

    ஜெயா பேசவில்லை.

    கோபி ஏதோ ஒரு பதிலைச் சொன்னான்.

    இவங்க கணவர் எங்கே இருக்காங்க!

    அப்பா உயிரோட இல்லை டாக்டர்!

    சரி! ஆஞ்சியோ பண்ணிப் பார்க்கணும். அப்புறமாத்தான் மற்றதை சொல்ல முடியும்! இப்ப ஒரு அம்பதாயிரம் பணம் கட்டுங்க

    டாக்டர்! நான் ஒரு பேக்டரில் சூபர்வைசர்! மத்திய தரக் குடும்பம்! பெரிய சம்பளம் இல்லை . உடனடியா அம்பதாயிரம் பணம் புரட்ட முடியாது என்றான் கோபி.

    நான் சொன்ன தொகை ரொம்பக் குறைச்சல். உங்கம்மா வேணும்னா, நீங்க ஏற்பாடு செஞ்சுதான் ஆகணும்!

    கோபி முகம் சிவந்து விட்டது. அவனும், ஜெயாவும் வெளியே வந்தார்கள்.

    இவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன்?

    பேக்டரி மானேஜர்கிட்ட கேட்டுப் பாரேண்ணா! நான் வேலை பார்க்கிற கார்மெண்ட் கம்பெனியில கொஞ்சம் புரட்டுறேன். அம்மா சமையல் வேலை பார்க்கிற முதலாளிக்கிட்ட கேக்கலாம்!

    தேறுமா?

    தேறணும்! அம்மாவைக் காப்பாத்தி ஆகணுமே!

    இந்த அதிகாலை நேரத்துல நமக்கு வந்த கஷ்டத்தைப் பாரு!

    இருவரும் புலம்பியபடி நடக்க, பின்னால் வந்த நர்ஸ் காஞ்சனா சகலமும் கேட்டபடி டாக்டர் அறைக்குள் சென்றாள்.

    வா காஞ்சனா! டீ சாப்பிடலாம். டிபனுக்கு சொல்லிடு.

    "சரி டாக்டர்'

    தேநீருக்கு சொல்லிவிட்டு, பாவம் டாக்டர்! நடுத்தர வர்க்கம். பணத்துக்கு கஷ்டப்படுற குடும்பம். புரட்டியாகணுமே!

    "செய்யத்தான் வேணும் காஞ்சனா! அந்த கோபி, ஒரு பேக்டரில் சூபர்வைசரா இருக்கான். ஓரளவு சம்பாதிப்பான். பெத்த தாய் இல்லையா? அவங்க உயிரை காப்பாத்தணுமுன்னா கடனை, உடனை வாங்கத்தான் வேணும்.

    அது ஒரு மகனோட கடமை இல்லையா காஞ்சனா!"

    அது உண்மைதான் டாக்டர்!

    "இதப்பாரு! நீ இரக்கம் காட்டுறதுல தப்பே இல்லை . உன் தயவால பல பேருக்கு இங்கே இலவச சிகிச்சை நடக்குது. 'பீஸை' குறைச்சு வாங்கறோம். தப்பில்லை. ஆனா அதிகபட்ச இரக்கமும் ஆபத்து. கடமை உணர்வுலேருந்து நழுவ வைக்கும். கஷ்டப்பட்டுத் தான் காஞ்சனா எல்லோருமே முன்னுக்கு வரணும்

    புரியுது டாக்டர்!

    நீ போய் 'பேஷண்டை கவனி!

    சரி டாக்டர்!

    காஞ்சனா உள்ளே வந்தாள். லஷ்மி அம்மா கண் விழித்திருந்தாள்.

    சிஸ்டர்! எனக்கு என்ன பிரச்சினை? என் குழந்தைங்க தவிக்கிறாங்களா? அவங்களுக்கு நான் கஷ்டம் தரக்கூடாது சிஸ்டர்!

    காஞ்சனா சிரித்தாள்.

    உள்ளே வந்த மற்றொரு நர்ஸ் 'ட்ரிப்ஸ்' பாட்டிலை மாற்றி விட்டு ரத்த அழுத்தம் பார்த்தாள்.

    இதப்பாருங்கம்மா! பதற்றம் கூடாது. இந்த காஞ்சனா சிஸ்டர் அரவணைப்புல நீங்க வந்துட்டா, குணமாகி வீட்டுக்குப் போறது உறுதி. மருந்தை விட எங்க காஞ்சனா சிஸ்டரோட அன்புதான் இங்கே உள்ள நோயாளிகளை குணமாக்குது!

    லஷ்மியம்மா நிமிர்ந்து பார்த்தாள்.

    கருணை வழியும் கண்களுடன் காஞ்சனா இதமாக சிரித்தாள்.

    மெல்ல அந்தம்மாவின் கூந்தலை வருடிக் கொடுத்தாள்.

    இதப்பாருங்க! பதற்றமே கூடாது. உங்க மேல பாசம் வச்ச உங்க பிள்ளைங்களுக்காக வாழணும். அவங்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றிட்டுத்தான் மறு வேலைன்னு நீங்க நினைக்கணும்! அந்த உறுதி மனதுல இருந்தா, நோய் உங்க உடம்பை விட்டு பறந்து போயிடும்!

    சிஸ்டர்!

    நானும் உங்க மகள்தான். காஞ்சனானே என்னை நீங்க கூப்பிடலாம். ஒரு தாயோட கடமை இன்னும் எத்தனை பாக்கி இருக்கு?. மெதுவா எழுந்து ஒக்காருங்க!

    காஞ்சனா பேச, பேச லஷ்மி அம்மாவுக்கு உடம்பில் ஒரு புதுத்தெம்பு புகுந்தது.

    நரம்புகள் இயல்பாகி, ரத்த ஓட்டம் சீராகத் தொடங்கி விட்டது. அந்த ஸ்பரிசம், சொற்கள், கருணைவழியும் கண்கள், சிரிப்பு, அணுகுமுறை எல்லாமே இதுவரை அறிந்திராத ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது.

    தைரியமா இருங்க. ஆபரேஷனே தேவைப்படாது! - சிரித்தபடி வெளியே சென்றாள் காஞ்சனா. எதிரே டாக்டர் பாண்டியன்.

    உன்னோட மனோதத்துவ சிகிச்சையை தொடங்கிட்டியா காஞ்சனா?

    அவங்க ஒரு அம்மாவாச்சே டாக்டர்?

    தாயில்லாத பெண் நீ! எல்லாருக்கும் தாயா இருக்கே ?

    2

    தாயில்லாத பெண் நீ! எல்லாருக்கும் தாயா இருக்கே" - டாக்டர் பாண்டியன் கனிந்த குரலில் கேட்க, சிரித்தாள் காஞ்சனா!

    அதுக்கு காரணம் நீங்கதானே டாக்டர்?

    இல்லம்மா ! கடவுள்!

    அதைத்தான் நானும் சொல்றேன்! உங்களைத்தான் கடவுள்னு சொல்றேன்!

    போம்மா! ஒரு சாதாரண, சராசரி மனுஷனை கடவுள்னு சொல்லாதே!

    நீங்க மறுத்தாலும், கோபப்பட்டாலும், நிஜம் அது தான்! இந்தக் கருணையும், கனிவும், பாசமும், எல்லாரையும் நேசிக்கிற குணமும் எங்கிருந்து எனக்கு வந்தது? கத்துக் கொடுத்தது யாரு?

    அப்போது செல்போன் அடிக்க, அதை அழுத்தினார்.

    அப்படியா? உடனே கொண்டு வந்து அட்மிட் பண்ணுங்க! இது இரண்டாவது அட்டாக்கா. பயப்பட வேண்டாம். இப்பவே கூட்டிட்டு வாங்க. பாத்துக்கலாம்!

    போனை வைத்தார் டாக்டர் பாண்டியன்.

    காஞ்சனா! அந்த தொழிலதிபர் வராகனுக்கு இரண்டாவது அட்டாக்!

    குடியை நிறுத்த மாட்டார். படிச்சுப் படிச்சு சொல்லி அனுப்பினேன். என் அன்பும், மனோதத்துவமும் எடுபடாத இடம் இதுமட்டும் தான். சரி வரட்டும். பார்க்கலாம்!

    பரபரவென செயல்பட தொடங்கிவிட்டாள் காஞ்சனா!

    நாற்பத்தி ஐந்து வயதை எட்டிக் கொண்டிருக்கும் டாக்டர் பாண்டியன் இதய நோய் நிபுணர்! அவரது சொந்த மருத்துவமனை இது!. பணத்தை விட, தொழிலை, உயிரை அதிகமாக மதிக்கும் டாக்டர்! கல்யாணமே செய்து கொள்ளவில்லை. அவரது மனைவியே மருத்துவம் தான்!

    தவிர பல சமூக சேவைகள்!

    எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத உன்னதமானவர் டாக்டர் பாண்டியன்!

    பல தொண்டு நிறுவனங்களுக்கு அடிகோலியவர்.

    'அன்னை தெரசா இல்லம்' - இவரது முயற்சியால் உருவானது!

    இங்கே வரும் வருமானத்தில் பெரும் பகுதி அன்னை தெரசா இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர், அபலைகள், ஆதரவற்ற குழந்தைகளுக்காக செலவிடப் படுகிறது!

    டாக்டரின் இருபத்தி இரண்டாவது வயதில்...

    அவரது அப்பா உருவாக்கித் தந்த இந்த மருத்துவமனை நிர்வாகியாக பொறுப்பேற்ற சமயம், உருவானதுதான் அன்னை தெரசா இல்லமும்!

    அந்த ஜூலை மாதம் 17-ம் தேதியை டாக்டரால் மறக்க முடியாது!

    இங்கே ஒரு அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு வெளியே வரும்போது அதிகாலை மூன்று மணி! உள்ளே கனமான இருட்டு! காரை அவரே எடுத்துக்கொண்டு புறப்படும் வேளை!

    வீட்டை நோக்கி கார் ஓடத் தொடங்க, லேசான மழைத் தூறல்!

    தூரத்தில் ஒரு உருவம் கையில் பொட்டலமாக எதையோ தூக்கிக் கொண்டு வருவது தெரிந்தது!

    ஒரு கோவில் வாசலில் அந்தச் சின்ன மூட்டையை இறக்கி வைத்துவிட்டு, அந்த உருவம் ஓரிரு நிமிடங்கள் நின்று விட்டு வேகமாக விலகிப் போவது தெரிந்தது!

    பெண் உருவம் என்பது வடிவத்தில் புரிந்தது. டாக்டருக்கு குழப்பம். 'எதைப் போட்டுவிட்டு ஓடுகிறாள். ஏதாவது கடத்தல் பொருளா? சமூக விரோதியா? அவள் போட்ட பொருளை கவனிப்பதா? இல்லை. அவளை பின் தொடர்வதா?'

    'ஏதாவது வெடி குண்டாக இருந்தால், உடனே நடவடிக்கை எடுப்பது அவசியம்'

    டாக்டர் கோவில் வாசலில் காரை நிறுத்தி இறங்கி சென்று பார்த்தார். அந்த சின்ன மூட்டை அசைந்தது. டாக்டர் மெதுவாக மூடியிருந்த துணியை விலக்கி பார்த்தார். அதற்குள் ஒரு குழந்தை இருந்தது.

    டாக்டர் ஆடிப் போனார்.

    மெல்லிய துணியால் மூடப்பட்ட அழகான பெண் குழந்தை !

    பிஞ்சுக் கையும், கால்களும் நெளிய, கண்களை உருட்டி விழித்தபடி அழாமல் அவரை பார்த்தது.

    அழகு கொட்டும் முகம். நல்ல நிறம்!

    'எப்படி இத்தனை அழகான குழந்தையை வீசிவிட்டுப் போக மனசு வந்தது?'

    'யார் அவள்?'

    'இந்தக் குழந்தையின் தாயா?'

    மழைத்தூறல் வலுத்து, துளிகள் பெரிதாகி சடசடவென இறங்கியது.

    டாக்டர் பாண்டியன் குழந்தையை தூக்கிக் கொண்டு வேகமாக காருக்குள் நுழைந்தார்.

    பக்கத்து இருக்கையில் ஜாக்கிரதையாக கிடத்தினார். பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தைதான் என்பதை தொப்புள் கொடி சொல்லியது.

    'என்ன செய்யலாம்?'

    டாக்டருக்கே படபடப்பாக இருந்தது.

    மழை வலுக்க தொடங்கியது. அழாத குழந்தை முகம் சுருங்கி மெல்ல அழத் தொடங்கியது.

    'பசிக்குதோ?' என கேட்டபடி, டாக்டர் நேராக காரை தனது தெரசா இல்லத்துக்கு செலுத்தத் தொடங்கினார்.

    அங்கு சென்றடைந்தபோது அதிகாலை நாலு மணி!

    குழந்தையை பக்குவமாகத் தூக்கிக் கொண்டு, காரை விட்டு இறங்கி ஓடிச் சென்றார். மணி அடித்தார்.

    ஆயா தூக்க கலக்கத்தில் எரிச்சலுடன் எழுந்து வந்து கதவைத் திறந்தாள். அதிர்ந்தாள்!

    டாக்டரைய்யா! நீங்களா?

    அன்னப்பூரணியம்மா எங்கே?

    சில நிமிடங்களில்

    Enjoying the preview?
    Page 1 of 1