Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Devathaiyai Thedathey
Devathaiyai Thedathey
Devathaiyai Thedathey
Ebook89 pages55 minutes

Devathaiyai Thedathey

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903783
Devathaiyai Thedathey

Read more from Pattukottai Prabakar

Related to Devathaiyai Thedathey

Related ebooks

Related categories

Reviews for Devathaiyai Thedathey

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Devathaiyai Thedathey - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    தேவதையைத் தேடாதே

    Devathaiyai Thedathey

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    ஜனனி தன் அறையைவிட்டு வெளியே வந்தாள்.

    ஸ்கர்ட் கட்டிங் த்ரீ பீஸ் சுரிதார் அணிந்திருந்தாள். அடர்த்தியான சிகப்பும் அங்கங்கே கறுப்புத் தீவுகளுமாக இருந்த அந்த ஷிபான் மெட்டீரியலில் தைக்கப்பட்ட உடை அவளை மேலும் அலங்கரித்தது. துப்பட்டாவை தாவணி போல போட்டு இடுப்பருகில் இரண்டு முனைகளையும் முடிச்சிட்டி நந்தாள்.

    ஷாம்பூ போட்ட கூந்தல் பொங்கி வழிந்தது. பின் தள்ளி வாரி பொருத்தமான நிறத்தில் பிளாஸ்டிக் கிளிப்பினால் அணைகட்டி அருவிபோல கூந்தலை வழிய விட்டிருந்தாள். பின் கழுத்திலும் காதுகளின் ஓரங்களிலும் கட்டுப்பட மறுத்த இழைச்சுருள்கள். ஒரு குட்டி மயிலை ஸ்டிக்கர் பொட்டாக நெற்றியில் ஒட்டியிருந்தாள். செர்ரி பழத்தை உடனடியாக நினைவூட்டுகிற லிப்ஸ்டிக் அண்ட் லிப்க்ளாஸ் தடவின இதழ்கள். இமை முடிகளுக்கும் பிரத்தியேக கவனிப்பு இருந்தது.

    தோளில் ஒரு நாகரீகமான கைப்பை தொங்கியது. விரல் நகங்கள் நீளமாக வளர்க்கப்பட்டு, சீராக ஷேப் செய்யப்பட்டு, நேச்சுரல் நிற பாலீஷ் பூசப்பட்டு... ‘ஸ்மைல்ஸ்' என்கிற இத்தாலி தேசத்து செண்ட் ஸ்பிரே செய்து கொண்டிருந்தாள்.

    இத்தனை அலங்காரங்களில் ஜனனி விரும்பி செய்து கொள்வது பாதி தான். மீதி... அவள் வேலை பார்க்கிற சூழ்நிலைக்குத் தேவைப்படுகிறது.

    ஜனனி கூடத்தில் உட்கார்ந்து ஹிண்டு பேப்பர் படித்துக் கொண்டிருந்த தன் அப்பா ஹரிஹரனுக்கு, குட் மார்னிங்ப்பா என்றாள்.

    குட் மார்னிங். புறப்பட்டுட்டியா? என்றார் தன் வாட்சைப் பார்த்துக் கொண்டு, டிபன் ஆச்சா?

    ''காபிதான் ட்யூ. அம்மா, சீக்கிரம். எனக்கு நேரமாச்சி" என்று குரல் கொடுத்துவிட்டு அப்பாவுக்கு எதிர்சோபாவில் அமர்ந்து, அவர் படித்துக் கொண்டிருந்த பேப்பரில் உள் பேப்பரை உருவி செய்திகளை மேயத் துவங்கினாள்.

    ஹரிஹரன் தன் தொந்தி எடுப்பாய் தெரிவதைப் பற்றிக் கவலைப்படாமல் அரைக் கை சட்டையை பேண்டில், இன் செய்திருந்தார். பாக்கெட்டில் புடைத்துக் கொண்டு சின்னச் சின்ன காகிதங்கள். இரண்டு பேனாக்கள்.

    அந்தக் காகிதங்களை எடுத்துப் பார்த்தால் பாதிக்கு மேல் கிழித்துப் போட வேண்டிய குப்பையாக இருக்கும். எப்போதோ போட்ட பெட்ரோல் பில். ஒரு ஜெராக்ஸ் கடை ரசீது. பஸ் டிக்கெட். ஜூனியர் சொர்க்காரின் மேஜிக் ஷோ பார்த்த பாதி டிக்கெட். அறிமுகமான அடுத்த நிமிடம் அவசியமே இல்லாமல் நீட்டப்பட்டு வாங்கி வைக்கப்பட்ட விசிட்டிங் கார்டுகள்.

    ஹரிஹரன் அவற்றை தானும் அலசி கிழித்துப் போடுவதில்லை. தன் மனைவியையும் கிழித்துப் போட அனுமதிப்பதில்லை.

    எதாச்சும் போன் நம்பர் பின்பக்கம் எழுதி வைச்சிருப்பேன். எதாச்சும் கேஸ் நம்பர் குறிச்சி வைச்சிருப்பேன். உனக்கு புரியாது என்று தினம் சலவை சட்டை அணியும்போது பழைய சட்டையில் இருந்து காகிதக் கத்தையை அப்படியே அள்ளி இந்த சட்டையில் வைத்துக் கொள்வார்.

    ஹரிஹரன் வக்கீல் சண்முகசுந்தரத்திடம் பதினெட்டு வருடங்களாக கிளார்க்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். வக்கீலுக்கு ஏழு ஜூனியர்கள். நான்கு கிளார்க்குகள். இரண்டு டைப்பிஸ்டுகள். ஆனால் ஹரிஹரன் இல்லை என்றால் அவருக்குக் கை ஓடாது என்று வீட்டில் இவர் அடிக்கடி சொல்லிக் கொள்வார்.

    ஹரிஹரனுக்கு ஐந்து குழந்தைகள்.

    கிருபாகர் மூத்தவன். பிலானியில் கம்ப்யூட்டர் என்ஜினியரிங் படித்து லண்டன் போய், 'அப்பா, நான் இங்கு நலம்' என்று மாதம் ஒருமுறை தபால் எழுதிக் கொண்டிருந்தவன், அப்பா, நாங்கள் இங்கு நலம். போன வாரம் எனக்கு இங்கே திருமணம் நடந்தது என்று சர்வ சாதாரணமாக எழுத...

    ஹரிஹரன் அவன் அனுப்பிய செக்கைத் திருப்பி அனுப்பி, இனி நீ எங்களுக்கு பணமும் அனுப்ப வேண்டாம், கடிதமும் எழுத வேண்டாம். எனக்கு நான்கு பிள்ளைகள்தான் பிறந்தது என்று நினைத்துக் கொண்டாயிற்று என்று அனல் கக்கும் கடிதம் எழுதினார்.

    அடுத்தவள் ஜனனி. ஸ்கைபேர்ட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் ஒரு பிரபலமான நிறுவனம். பம்பாய், டெல்லி, கல்கத்தா, பெங்களூர், சென்னை என்று முக்கிய நகரங்களில் முக்கிய அலுவலகங்கள். தவிர ஏகப்பட்ட கிளை அலுவலகங்கள். நட்சத்திர ஹோட்டல் விஸ்வரூபா. அதில் ஸ்கைபேர்டின் ஒரு அலங்கார ஆபீஸ் இருக்கிறது. அந்த

    Enjoying the preview?
    Page 1 of 1