Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Irantha Kaalam
En Irantha Kaalam
En Irantha Kaalam
Ebook92 pages42 minutes

En Irantha Kaalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903784
En Irantha Kaalam

Read more from Pattukottai Prabakar

Related to En Irantha Kaalam

Related ebooks

Related categories

Reviews for En Irantha Kaalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Irantha Kaalam - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    என் இறந்த காலம்

    En Irantha Kaalam

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    ஒரு முன் குறிப்பு:

    இக்கதையில் 'பரத் – சுசீலா’ கௌரவ பாத்திரங்களேற்கச் சம்மதித்தமைக்கு நன்றி!

    1

    சாம்சனின் ஒரு கை மதுக்கிண்ணம் பிடித்திருந்தது.

    மறு கை அவள் கன்னம்பிடித்திருந்தது.

    சாம்சனின் குணாதிசயங்களைப்பற்றி நேயர்கள் ஒரு யூகத்திற்கு வந்திருக்கலாம், வாஸ்தவம். அவன் ஒரு துஷ்டப் பையன்.

    சாம்சன் தனது 27 வருட, 6 மாத 18 நாள் ஆயுளில் செய்த குற்றங்களுக்காக தண்டனை தரப்பட வேண்டுமெனில் அவனுக்கு இருபது, முப்பது ஆயுள் தேவைப்படலாம்.

    சாம்சன் ஒரு தொழிலாளி. குற்றத் தொழிலாளி. சலூனில் ஸ்டெப் கட்டிங், ஸம்மர் கட்டிங், ஷேவிங் என்று பல ‘ங்'குகள் செய்யப்படுவது போல் அவனும் பல 'ங்'குகளை தொழிலாகச் செய்து வருகிறான்.

    லூட்டி ‘ங்', கிட்- நாப்பி ‘ங்’, கில்லி'ங்', பிளாக்-மெயிலி’ங்’ - போன்ற ‘ங்'குகள், சிறியவர் முதல் பெரியவர் வரை யாரும் நாடலாம். குற்றத்திற்குத் தகுந்தபடி விலைகள். ஆனால் ஒரே விலை வரிகள்’! இல்லை. விழாக்கால தள்ளுபடி, இலவச இணைப்பு கிடையாது.

    கைராசியான, நம்பிக்கையான, நாணயமான குற்றங்களுக்கு நாட வேண்டிய ஒரே இடம்: சாம்சன்.

    முதலில் சாம்சனை வர்ணித்துவிட்டு, பிறகு அவன் மடியில் படுத்திருக்கும் அவள் பிரித்துப்போட்ட சேலையில் உள்ள எம்பிராய்டரி டிசைனைப் பற்றிச் சொல்ல அனுமதியுங்கள்.

    சாம்சன் ஐந்தடி, ஒரு அங்குலம். மாநிறம். அரைக்கை காட்டன் சட்டை! ஜீன்ஸ் பேண்ட். பவர் ஷூ. கைகளில், மார்பில் கொச கொசவென்று ரோமங்கள், லேசான தொந்தி, (நன்றி: ஹேவர்ட்ஸ் 5000) உப்பின கன்னங்களில் மட்டும் பிரபுசாயல். இடுங்கின கண்கள், உறங்கும் நேரம் தவிர உதட்டில் ஒரு நிரந்தர அங்கமாக சிகரெட், புட்போர்டு பிரயாணி போல தொத்திக் கொண்டிருக்கும்.

    சாம்சனின் பிறப்போ, அவன் கை பிடித்து நெல்லில் எழுதி பேர் சூட்டினார் களா என்பதோ நமக்குத் தேவையில்லை,

    அவனது ஏழாவது வயதில்விக்கலுக்குக் கூட சாராயத்தைக் குடிக்கிற அப்பா அரிவாளால் அம்மாவை வெட்டி, ஜெயிலுக்குப்போய்விசாரணைக்குப்பின் தூக்கில் போடப்பட்டு சாம்சன் அனாதையாக்கப்பட்டதுதான் அவனது சுதந்திரமான முதல் துவக்கம்.

    அடைக்கலம் தரவோ, ஆதரிக்கவோ யாருமில்லாமல், படிக்கவோ வேலைக்குச் செல்லவோ வழியில்லாமல் ஒரு கசாப்புக் கடை பாயிடம் எடுபிடியாக உருமாறின சாம்சன் பாயிடம் இருந்து அவரின் உபதொழிலாள கஞ்சா விற்பதைக் கற்றுக் கொண்டு வளர்ந்து

    சரி, வேண்டாம். நீங்கள் ஆவலாகக் காத்துக் கொண்டிருப்பதால் மோனிஷா விடம் வந்துவிடலாம்.

    மோனிஷா ஒரே ஒரு பெக்தான் குடித்திருந்தாள். ஆனால் போதை அதிகம் ஏறியிருந்தது. ஜாக்கெட்டும், பாவாடையும் மட்டுமே அணிந்திருந்தாள். ஒருஎறும்பின் பார்வையில் சொன்னால் அவள் உடம்பு ஒரு மலைப்பிரதேசம், எறும்பின் பயணம் முழுக்க அபாயகரமான வளைவுகள், திருப்பங்கள், பள்ளத்தாக்குகள்.

    மோனி, இன்னொரு பெக் என்றான்.

    இல்லை சாம், போதும் சுத்துது என்றாள்,

    இதென்ன தேமலா?

    கேப்பியே. முந்தா நாள் உன் விரல் நகம் பட்ட காயம்.

    ஸாரிடி குட்டி.

    ச்சை! கருமம்! என்னதிது குட்டி, கிட்டின்னுகிட்டு?

    சொல்லக் கூடாதா?

    கெளரவமா இல்லை.

    நாம செய்யற காரியமெல்லாம் கெளரவமா இருக்காக்கும்?

    உன்னை செல்லப் பொறுக்கின்னு கூப்புடவா?

    கூப்புடேன், எனக்கு கோபம் வராது.

    சாம், எப்போ கல்யாணம்?

    யாருக்கு?

    நமக்குத்தான்.

    கல்யாணத்துக்கப்புறம் ஆரம்பிக்கறதுக்குப் புதுசா என்ன பாக்கி இருக்கு மோனி?

    ஒரு அந்தஸ்து வேணாமா?

    நான் என்ன மந்திரியா, என்னைக் கட்டிக்கிட்டா அந்தஸ்து கிடைக்க?

    மழுப்பாதே!

    மழுப்பலை. காரணமாத்தான் நான் கல்யாணத்தை யோசிக்கலை.

    என்ன காரணம்?

    மோனி, எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு. அதனாலதான்.

    ஏன் இப்படி உளர்றே?

    இல்லை. சீரியஸா சொல்றேன். நான் செய்ற ஒவ்வொரு காரியமும் அபாயம் தான். கேரளா போலீசும், ஆந்திரா போலீசும் என்னை கங்கணம் கட்டிக்கிட்டு தேடுது. எப்ப மாட்டுவேன்னு தெரியாது.

    நீ மாட்டவே மாட்டே சாம்.

    அப்படி மாட்டிகிட்டா நிச்சயமா தூக்குதான்.

    அதனால?

    உன்முகத்தில் பொட்டு இல்லைன்னா அழகா இருக்காது மோனி. அதனாலதான் கல்யாணம் வேணாம்னு சொல்றேன், மாட்டிக்கிற வரைக்கும் சந்தோஷமா இருக்கலாம்.

    Enjoying the preview?
    Page 1 of 1