Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iranthavane, Vanakkam
Iranthavane, Vanakkam
Iranthavane, Vanakkam
Ebook107 pages1 hour

Iranthavane, Vanakkam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903785
Iranthavane, Vanakkam

Read more from Pattukottai Prabakar

Related to Iranthavane, Vanakkam

Related ebooks

Related categories

Reviews for Iranthavane, Vanakkam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iranthavane, Vanakkam - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    இறந்தவனே, வணக்கம்

    Iranthavane, Vanakkam

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    சிலுசிலுவென்று சிணுங்கல் மழை. நனைதல் சுகம். உணர்ந்தவை மரங்கள். கதிரவன் கறுப்பு மேகங்களுக்குள் பதுங்கல். சோம்பேறித்தனத்தை எல்லோருக்கும் இஞ்செக்ட் செய்யும் மழைக்கால காலை.

    ஆனாலும் அந்த பங்களாவில் சுறுசுறுப்பாகக் காத்திருந்தார்கள். சற்றே ஈரமாயிருந்த செய்தித்தாள்களை பங்கு போட்டுக் கொண்டு படித்துக் கொண்டிருந்தார்கள்.

    உள்ளே போன் மீண்டும் மீண்டும் அடித்துக் கொண்டிருந்தது. யாரோ எடுத்தார்கள். யாரோ பேசினார்கள். யாரோ அவசரமாக ஓடினார்கள்.

    தேதி கேட்டு இரண்டு தயாரிப்பாளர்களும், முடிந்த படத்திற்கு டப்பிங் சௌகரியம் விசாரிக்க டைரக்டரும் அவரின் இரண்டு அசோசியேட்டுகளும், பில்டிங் பிளானில் சொல்லப்பட்ட மாற்றங்களை சரி செய்து கொண்டு வந்து காத்திருக்கும் என்ஜினியரும் அவருடைய உதவியும், அழைக்கப் பட்டதால் வந்திருந்த ஆடிட்டரும் காத்திருந்த போது, முன்னறிவிப்பு இல்லாமல் பேட்டிக்காக வந்திருக்கும் தனக்கு நேரம் ஒதுக்கப்படுமா என்று நம்பிக்கையில்லாமல் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான் அந்த நிருபன்.

    ஸ்டெடிக்காமில் ரிசப்ஷனைக் கடந்து மகாஹாலைத் தாண்டி, ரெட்கார்ப்பெட் போர்த்தின மாடிப்படிகளில் அலுங்காமல் ஏறி, அந்த அறைக்குள் நுழைந்தால்...

    தண்ணீர் படுக்கையில் கைகளைப் பரப்பி குப்புறப் படுத்து சுகமாக உறங்கிக் கொண்டிருந்தான் சூர்யா சந்தர். என்னது, யாரா? கோடம்பாக்கமே இவன் விழித்தால் உதயமாகிறது. இவன் உறங்கினால் அஸ்தமனமாகிறது. வரவேற்பறையில் 100-வது நாள், 175-வது நாள், என்று அடுக்கப்பட்டிருக்கும் கேடயங்களைப் பார்த்த பிறகுமா இந்தக் கேள்வி?

    சூர்யா சந்தரை வர்ணிக்கலாமா? நல்ல அகலமான... டெலிபோன் ஒலித்து அவன் தூக்கத்தையும், நம் வர்ணனையும் கலைத்து விட்டது பாருங்கள்.

    ஹலோ, சூர்யா என்றான் படுத்தபடியே எழுந்து கழுத்தில் இடுக்கிக் கொண்டு. மறுபடி கண்களை மூடிக் கொண்டான்.

    குட் மார்னிங் சார். சிக்ஸ் தர்ட்டிக்கு எழுப்பச் சொன்னீங்க

    விஷால், மழை பெய்யுது போலிருக்கே...

    ஆமாம் சார்

    இந்த மழையில பீச்சுல எப்படிய்யா டூயட் பாடறது? கேன்சல் ஆகியிருக்குமே. போன் வந்துச்சா?

    வந்துச்சு சார். கேன்சல் பண்ணலை. நீலாங்கரை பங்களாவுக்குள்ளே இன்டோர் சீன்ஸ் பிளான் பண்ணிருக்காங்களாம்.

    விட மாட்டாங்களே. நீலாங்கரை பங்களான்னா மாஸ்க் ஷாட்ஸ்தான் இருக்கும் அங்கே. அதான் பேலன்ஸ்

    ஆமாம். அதான் சார்

    படுத்துவாங்களே விஷால். உடனே உடனே ரெண்டு காஸ்ட்யூமையும் மாத்தி மாத்திப் போடணும். காம்பினேஷனுக்கு மீனா கிடைக்கலைன்னு சொல்லிட்டிருந்தாங்களே...

    மைசூர்ல ராஜகுமாரி ஷூட்டிங் முடிச்சுட்டு நேத்து நைட் வந்துட்டாங்களாம்.

    எப்படிப் பார்த்தாலும் அவாய்ட் பண்ண முடியாதுன்றே?

    ஆமாம் சார்.

    முக்கியமா யாராச்சும் வந்திருக்காங்களா?

    என்ஜினியரும், ஆடிட்டரும் வந்திருக்காங்க சார்.

    என்ஜினியரை நீலாங்கரை ஷூட்டிங் பங்களாவுக்கு வந்துடச் சொல்லு. மேக்கப் கேப்புல டிஸ்கஸ் பண்ணிடறேன். ஆடிட்டர் என்னோட கார்ல வந்துடட்டும்.

    டைரக்டர் பிரகாஷ் வந்திருக்கார்

    டப்பிங் மேட்டர்தானே?

    ஆமாம்

    இவருக்கு முதல் படமா இருக்கலாம். எனக்கு முதல் படம் இல்லையே. கம்பெனிலேர்ந்து கொடுத்த ரெண்டு செக்கும் பவுன்ஸ் ஆகியிருக்கு. இதோ, அதோன்றாங்க. இந்தாளோட முகத்துக்காக டப்பிங் முடிச்சுக் கொடுத்துட்டா பைசா பேறாது விஷால். இவனை இன்னைக்கு நான் பார்க்கலை விஷால். புரொட்யூசரை விட்டுப் பேசச்சொல்லு. கால்ல விழுந்துடறான். ஒரு மாதிரியாய்டுதுப்பா.

    "சரிங்க சார், சொல்லி அனுப்பிச்சுடறேன். அப்புறம் கே.வி.எல்.சும், பாலமுருகன் செட்டியாரும் வந்திருக்காங்க.

    சப்ஜெக்ட் சரியில்லை. தெலுங்குல ஹிட்டாயிருந்தா இவங்களை யாரு கண்ணை மூடிக்கிட்டு பதினைஞ்சு ரூபா கொடுத்து ரைட்ஸ் வாங்கச் சொன்னது? சில சப்ஜெக்ட்ஸ் அங்க எடுபடும். இங்க ஊத்திக்கும். சில சப்ஜெக்ட்ஸ் இங்க சக்கைப் போடு போடும். அங்க காத்து வாங்கும். இது புரியாம நீங்கதான் பண்ணணும்னு கெஞ்சினா எப்படி? சரி, நானே பேசி அனுப்பிச்சுடறேன்.

    அப்புறம் கெளதம்னு சினிமா தென்றல் பத்திரிகையி லேர்ந்து...

    இப்ப பேட்டி எல்லாம் எதுவும் வேணாம் விஷால். அனுப்பிச்சுடு

    தீபாவளி இதழ்ல உங்க ப்ளோ - அப் லைஃப் சைசுக்குப் போட்ட பத்திரிகை சார். மன்றத்துக்காரங்க நட்சத்திரம் தொங்க விட்டப்போ, அதைத்தான் வெட்டி யூஸ் பண்ணினாங்க. அஞ்சி நிமிஷம்தான் கேக்கறார்.

    அப்படின்னா ஒரு கண்டிஷன் சொல்லிடு.

    என்ன?

    பிரதீபா உங்களை லவ் பண்றதா பேட்டில சொல்லிருக்காங்களே சார், உண்மையா? - இந்த ஒரு கேள்வி கண்டிப்பா கேக்கக்கூடாது. சொல்லிடு, பிரேக் ஃபாஸ்ட் செட்ல எடுத்துக்கறேன். பேக் பண்ணிக்கோ. இப்போ காபி மட்டும் அனுப்பு.

    சூர்யாசந்தர் எழுந்து அமர்ந்ததும் படுக்கைக்குள் தண்ணீர் அலைந்தது. கைகளை உதறினான். கொட்டாவி விட்டான். தலை மாட்டில் இருந்த கிங்சைஸ் சிகரெட் எடுத்துக் கொளுத்திக் கொண்டான். எழுந்து வந்து தொங்கும் மணிக் கயிற்றை இழுத்து ஸ்க்ரீன் விலக்கி கண்ணாடிக்கு வெளியே தூறலைப் பார்த்தான்.

    சிகரெட் முடிந்ததும் டாய்லெட் அறைக்குள் சென்று திரும்பினான். பிளாஸ்க்குடன் காத்திருந்தவன் கப்பில் ஆவி பறக்க ஊற்றி நீட்டினான்.

    என்னடா ராஜூ, கவனிக்கவே இல்லை, மீசை ஒதுக்கியிருக்கே போலிருக்கு. வயசுக்கு வந்துட்டியா?

    போங்க சார்

    அதுசரி, செல்வி குளிக்கிறப்ப எட்டிப் பார்த்தியாமே...

    "அய்யய்யோ!

    Enjoying the preview?
    Page 1 of 1