Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unnai Tharuvai
Unnai Tharuvai
Unnai Tharuvai
Ebook97 pages58 minutes

Unnai Tharuvai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903746
Unnai Tharuvai

Read more from Pattukottai Prabakar

Related to Unnai Tharuvai

Related ebooks

Reviews for Unnai Tharuvai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unnai Tharuvai - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    உன்னைத் தருவாய்

    Unnai Tharuvai

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    கல்கத்தா - ஏப்ரல் - 16 - 1990

    எட்டாவது மாடியின் அலுவலக அறைக் கண்ணாடி வழியாக மழையில் குடை பிடித்து விரையும் மனிதர்களைப் பார்ப்பது சுவாரசியமாக இருந்தது. தூரத்தில் தெரிந்த ஹூக்ளி ஆற்றை பட்டும் படாமல் பனி போர்வையிட்டிருந்தது. அழுகின்ற கட்டிடங்கள், அவசர வாகனங்கள்.

    கதவு திறந்து, கொண்டு வந்து வைக்கப்பட்ட டீயில் புகை எழுந்தது. சைகை காட்ட, ஏ.சி அணைக்கப்பட்டது.

    மேஜை பக்கமாக ரிவால்விங் சேரைத் திருப்பிக் கொண்ட மித்ரா, டீ எடுத்துக் கொண்டு இண்ட்டெர்காமில் பட்டன் அழுத்தி, சந்தோஷ், நீ சொன்ன அந்த ஏஜன்சி ஆசாமி வரவே இல்லை என்றான் இந்தியில்.

    மழை!

    சால்ஜாப்புகளை நான் வரவேற்பதில்லை. நாளைக்கு குழந்தைக்கு பர்த் டே. கொஞ்சம் ஷாப்பிங் போக வேண்டும். உனக்கு ஆட்சேபனை இல்லை என்றால்...

    சரி, நீ போ மித்ரா, அந்த ஆசாமி வந்தால் நான் பார்த்துக் கொள்கிறேன். ஜி.எம் கேட்டால்?

    உனக்கு வகை வகையாய் பொய் சொல்லத் தெரியும்

    ஒழி! ஆனால் எனக்கு லஞ்சம் வேண்டும். சண்டே ஈவ்னிங் இரண்டு கப் ஐஸ்க்ரீம். ஓக்கே?

    டோர் டெலிவரி வேண்டுமானாலும் செய்யச் சொல்கிறேன். இப்போது ஆளை விட்டால் போதும்.

    மித்ரா ஸ்டாண்டில் மாட்டியிருந்த கோட் அணிந்தான். பேனாக்களை அள்ளி ஸ்டாண்டில் போட்டான். வெள்ளை போர்டுகளைச் சுருட்டி ரப்பர்பாண்ட் போட்டு டிராயர்களுக்குள் போட்டான். சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு, சிறிய பிரீஃப் கேசுடன் புறப்பட்டான்.

    லிஃப்டில் ஜென்சி சேர்ந்து கொண்டாள். கைப்பையில் விமன்ஸ் மேகசின். கலைந்த பாப் தலை.

    உங்களுக்கென்ன சார், கார் இருக்கிறது. பத்தே நிமிடங்களில் வீடு. என்றாள் G பட்டன் அழுத்தி.

    யெஸ் பதினோராவது நிமிடம் முத்தம்.

    நாட்டி! எனக்கு பஸ் கிடைத்து போய்ச் சேர்வதற்குள் வாழ்க்கை வெறுத்து விடும். உங்கள் திசையில் என்றால் கூட லிஃப்ட் கேட்பேன்.

    இன்றைக்கு நானே யாரிடமாவது லிஃப்ட் கேட்க வேண்டிய நிலை.

    ஏன், என்னாயிற்று உங்கள் காருக்கு?

    ஜூரம், நான்கு நாட்களாக மெக்கானிக் ஷெட்டில் விசுவாசமில்லாமல் படுத்திருக்கிறது. இந்த மழையில் காசிப்பூர் வர எந்த டாக்ஸிக்காரனும் சம்மதிக்கப் போவதில்லை. ஐ ஹேவ் டு சர்ச் ஃபார் நோன் ஃபேஸஸ் இன் தி கார்.

    லிஃப்ட் தரை தொட்டிருக்க, ஜென்சி தன் குட்டைப் பாவாடையை ஒரு தரம் இழுத்து விட்டுக் கொண்டு, ஆல் தி பெஸ்ட் என்று பட்டன் குடை விரித்துக் கொண்டு சாலையோரத்திற்கு நடந்தாள். நிச்சயமாக அவளுக்கு பத்தாயிரம் பேராவது லிஃப்ட் கொடுப்பார்கள்.

    மித்ரா பிரீப் கேசைதலைக்கு மேல் பிடித்துக் கொண்டு ஓட்ட நடையில் அலுவலகத்திற்கு அருகாமை பஸ் ஸ்டாப்பிற்கு வந்து நின்று கொண்டான். கர்சீப் எடுத்து வாட்ச் மைக்கா மேல் நின்றிருந்த நீர்த்துளிகளைத் துடைத்தான். கோட்டையும் மீறி குளிரியது.

    அந்த ஏரியாவில் இருந்து காசிப்பூருக்கு பஸ் என்பது இந்த ஜென்மத்தில் ஒன்று, அடுத்த ஜென்மத்தில் ஒன்றுதான் போகும். இந்த மழையில் மூன்று பஸ் மாறுவதென்பது... நினைக்கவே போர்!

    மித்ரா தன் கார் மெக்கானிக்கின் சோம்பேறித்தனத்தையும், அக்கறையில்லாமையும் சபித்தபடி இரண்டு மூன்று டாக்ஸிகளை முயன்று பார்த்தான். எந்த வண்டியும் அவன் கை தட்டலை மதிப்பதாக இல்லை.

    முப்பத்தி இரண்டு வயது மித்ராவுக்கு அந்த என்ஜினியரிங் கம்பெனியில் ஏழு வருட சர்வீஸ். தமிழ் நாட்டில் இருந்து கல்கத்தா வந்து ஒன்பது வருடங்களாயிற்று. மூவாயிரத்தில் துவங்கிய சம்பளம், இன்றைக்கு ஆறாயிரத்தைத் தொட்டுப் பார்க்கிறது. நடுவில் சந்தீபாவைக் காதலித்துக் கல்யாணம், இரண்டு வயசில் ஷில்பா. கல்கத்தா ரோவிங் கிளப், ராயல் யாக்ட் கிளப், கோல்ஃப் கிளப் என்று சகட்டுமேனிக்கு உறுப்பினர். எங்கேயாவது சிக்னலுக்கு காரை நிறுத்தினால் போதும். அருகில் வந்து நிற்கும் வாகனத்திலிருந்து, ஹலோ மிஸ்டர் மித்ரா என்பார்கள். தியேட்டரில் இடைவேளையின் போது நாலு பேராவது வந்து கை குலுக்கி 'ஹவ் டு யு டூ' கேட்டு விட்டுப் போவார்கள்.

    மித்ரா பெண்டாட்டி வார்த்தைக்கு டபுள் முக்கியத்துவம் கொடுப்பான். 'குழந்தைக்கு ஃப்ராக் வாங்கலாமா, ஜீன்ஸ் வாங்கலாமா?' 'யுவர் சாய்ஸ் சந்தீபா' - 'எம்.ஆர்.எஃப்ல புதுசா ஷேர்ஸ் லான்ச் பண்றாங்க. வாங்கிப் போடட்டுமா மித்ரா?' 'உன் இஷ்டம் சந்தீபா. எதில் கையெழுத்து போடட்டும்?'

    ஒரு நாள் சந்தீபா அவன் தலையைத் தூக்கித் தன் மடியில் வைத்துக் கொண்டு, மெதுவாக கோதியவாறு கேட்டாள்:

    என் வார்த்தைக்கு மறுப்பு சொல்றதே இல்லையே ஏன்?

    "உன்

    Enjoying the preview?
    Page 1 of 1