Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavu Thadayangal
Kanavu Thadayangal
Kanavu Thadayangal
Ebook86 pages35 minutes

Kanavu Thadayangal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903759
Kanavu Thadayangal

Read more from Pattukottai Prabakar

Related to Kanavu Thadayangal

Related ebooks

Related categories

Reviews for Kanavu Thadayangal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavu Thadayangal - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    கனவுத் தடயங்கள்

    Kanavu Thadayangal

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    புது இடம் என்றாலே எனக்கு தூக்கம் சரியாக வராது. அதிலும் மணவறைக்கான ஜோடனை ஒரு புறமும், தாம்பூலப்பை போடுகிறவர்களின் பேச்சுக்களும் கொஞ்ச நஞ்சம் வருகிற தூக்கத்தையும் கெடுத்துவிட்டது. அந்த மண்டபத்தில் சாஸ்திரத்திற்கு நான்கு மின்விசிறிகள் தான் ஒப்புக்குச் சுழன்று கொண்டிருக்க... மேளக்காரர்கள் ஒரு விசிறியின் கீழே சமஸ்தானத்தைக் கைப்பற்றியிருக்க... இரண்டு விசிறிகளின் கீழே லேடீஸ் அண்ட் சில்ட்ரென்... மிஞ்சின மின்விசிறிக்குக் கீழே தாம்பூலப்பை போடுகிற கோஷ்டி.

    பாவப்பட்ட ஆண்களின் ஐம்பதைத் தாண்டியவர்கள் சட்டை, பனியன் எல்லாம் கழற்றி வியர்த்தாலும் தூங்கிக் கொண்டிருக்க... எனக்கு குறைந்தபட்சமாக சட்டை மட்டும் தான் கழற்றி தலைமாட்டில் வைக்க முடிந்தது. பனியனைக் கழற்றக் சங்கோஜம்.

    என் மனைவியின் மாமா மேல் எரிச்சலாக வந்தது.

    கல்யாணப் பத்திரிகை கொடுத்ததோடு நிறுத்தியிருக்கலாம். உங்களுக்கெல்லாம் ஃபர்ஸ்ட் கிளாஸ் அட்டாச்ட் பாத்ருமோட டபுள் ரூம்ஸ் போட்டு வெச்சிருக்கேன். நேரா கல்யாண மண்டபத்திற்கே வந்துடுங்க. பக்கத்தில்தான் லாட்ஜ் என்று வருந்தி வருந்தி சொல்லியிருக்க வேண்டாம்.

    ஆனால் எனக்குள் சந்தேகம் இருந்தது. இவளைக் கேட்டேன். கனகா, என் பேங்கோட திண்டுக்கல் பிராஞ்ச்லதான் பட்டாபிராமன் இப்ப ஆபீசரா இருக்கான். ஒரு போன் போட்டா லாட்ஜ் போட்டு வெச்சிடுவான். உன் மாமா போடற ரூம் நமக்கு செளகரியமா இருக்குமோ, என்னவோ... என்ன சொல்றே?

    கனகாவுக்கு குத்தாத மூக்கு விடைத்துக் கொண்டது.

    என் மாமா தான் ஏற்பாடு பண்ணியிருக்கேன்னு சொல்லிட்டுப் போனாரே... அப்புறம் என்ன உங்களுக்குச் சந்தேகம்? இந்தக் கல்யாணத்தை ரொம்ப தடபுடலா செய்றார். நமக்கு ஏ. சி. ருமே போட்டுத் தந்தாலும் தருவார்... என்றாள்.

    நம்பிக்கையோடு வந்து சேர்ந்தோம். கனகாவின் மாமா மதியம் மூன்று மணிக்கு எங்களை அகலப் புன்னகையோடு வரவேற்றுவிட்டு, நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்த பாலாஜி என்கிற பையனை விளித்து, பாலாஜி, இவங்களுக்கு டீலக்ஸ் ரூம் ஏற்பாடு பண்ணிக் கொடுத்துடு என்றார். அப்போது கனகா என்னைப் பார்த்த மந்தகாசமான பார்வையை கிளிக் செய்ய கேமிரா இல்லையே என்று வருத்தப்பட்டேன்.

    டீலக்ஸ் ரூம்னா என்னப்பா? என்றாள் பத்து வயது பவானி.

    அந்த பாலாஜிகிட்டே வந்து, சார் இங்கேயே இருங்க. கொஞ்ச நேரத்தில் வந்து கூட்டிட்டுப் போறேன் என்று போனான்.

    மறுநாள் கல்யாணத்திற்கு முதல்நாள் மதியமே எங்களை மாதிரி வந்துவிட்ட வேறுசில உறவினர்களுடன் எண்கள் எழுதிய ஸ்டீல் நாற்காலிகளில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தோம்.

    மணி நான்காயிற்று. ஐந்தாயிற்று. எனக்குக் கோபம் வந்து கனகாவை அழைத்து. அந்தப் பாலாஜியை ஆளையேக் காணோம். உங்களை எல்லாம் நிச்சயதார்த்தத்துக்குள்ளே என்ஃபிரண்டு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போலாம்னு நினைச்சிருந்தேன். உங்க மாமாவைக் கேட்டுச் சொல்லு. நமக்கு ரூம் உண்டா, இல்லையா? நானே வெளில போய் ரூம் போட்டுட்டு வந்துடறேன் என்று கத்தினேன்.

    பவானிக்கு அங்கே உடனே தோழிகள் கிடைத்து ஓடி விளையாடத் துவங்க. நான் படித்த ஜூனியர் விகடனை நாலாவது தடவை படித்தேன்.

    மாமாவை மண்டபம் பூரா தேடிப் பார்த்துப் பேசிவிட்டு தொய்ந்த முகத்தோடு வந்தாள் கனகா.

    நமக்கெல்லாம் ரூம் ஒதுக்கி வைச்சிருந்தாங்களாம். திடீர்னு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அஞ்சி ரூம் எக்ஸ்ட்ராவா வேணும்னு கேட்டாங்களாம். வேற வழி இல்லாம கொடுத்திருக்காங்க. மாமா ரொம்ப வருத்தப்பட்டு சொன்னார். பெரிய மனசு பண்ணி அட்ஜஸ்ட் பண்ணிக்கச் சொன்னார். இங்கே ஆறு பாத்ரும், ஆறு லெட்ரின் இருக்காம். ஜமுக்காளம், தலைகாணி எல்லாம் நிறைய இருக்காம். ஒரு நைட்டுதானேங்க? சூட்கேஸை மட்டும் ரூமுக்குள்ளே வெச்சிக்கலாம்

    Enjoying the preview?
    Page 1 of 1