Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indru Mudhal Ethiri
Indru Mudhal Ethiri
Indru Mudhal Ethiri
Ebook96 pages52 minutes

Indru Mudhal Ethiri

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903745
Indru Mudhal Ethiri

Read more from Pattukottai Prabakar

Related to Indru Mudhal Ethiri

Related ebooks

Related categories

Reviews for Indru Mudhal Ethiri

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indru Mudhal Ethiri - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    இன்று முதல் எதிரி

    Indru Mudhal Ethiri

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author//pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    நியூடெல்லி. பனி மாதத்தின் ஒரு ஈரமான மாலை. குழந்தைகளின் சண்டைபோல் திடீர் என்று மூன்று நிமிடங்களுக்கு சடசட மழை. பிறகு சமாதானமாகி காற்றால் விசிறிக் கொண்டிருந்தது. வீரியமில்லாத வெளிச்சம். குடைகள். குடைகள்.

    சாலைகளில் போக்குவரத்துத் துறையின் வெள்ளைப் பட்டைகள் பளீரென்று தெரிந்தன. பறவைகள் மரங்களை விட்டு விலகும்போது, கிளைகள் தண்ணீரை உதிர்த்தன. அஸ்தமனச் சூரியனின் பின்னணியில் கட்டிடங்களின் கறுப்பு அவுட் லைன்களும், கூட்டமாகப் பறக்கும் பறவைகளும் கேமிராக்களை 'கிளிக்'கச் சொன்னன.

    அலிபோர் ரோடில் சந்தடிகள் கரைந்த எல்லையில் ஏராளமான மர வரிசைகள். உள்ளே பதுங்கியிருந்த அந்த அரசாங்க கட்டிடத்தை அவை சத்தமாக மறைத்தன. இந்திய இராணுவத்திற்குச் சொந்தமான அலுவலகங்களில் ஒன்று. உச்சந்தலையில் தேசியக் கொடி நனைந்து தொய்ந்து சுருட்டிய மசால் தோசையாய் தொங்கியது.

    செக்யூரிட்டிக்கு சிறிய கல் கட்டிடம் இருந்து சாலையின் குறுக்கில் இரும்புக் கம்பம் இருந்தது. பொத்தான் அழுத்தினால் அது மின்சார மோட்டார் இயக்கத்தில் மேலே உயர்ந்து வாகனங்களுக்கு வழி விட்டது. STOP AND GO!'

    செக்யூரிட்டி கார்டுகள் நான்கைந்து பேர்கள் இருந்தனர். அனைவரிடமும் துப்பாக்கிகள். வந்து தேங்கிய ஜீப்பில் அமர்ந்திருந்த சௌபே அகர்வால் காந்தி டைப் கூலிங்கிளாஸ் அணிந்திருந்தார். சதுர முகம், விளம்பர ஷேவிங், பெரிய உதடுகள்.

    இரும்புத் தடை மேலே உயர, ஜீப்பின் பயணம் தொடர்ந்தது. முக்கிய கட்டிடத்தை அடைய இரண்டு நிமிடங்கள் பிடித்தது. தரையெல்லாம் ஈரம்.

    ஐந்து மணிக்கே சூரியன் பலவீனப்பட்டதால் எங்கும் மின்சார விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. முகப்பில் சோடியம் வேபரின் ஆரஞ்சு வெள்ளம்.

    அகர்வால் இறங்கிக்கொண்டு தன் பேண்டின் இரண்டு பாக்கெட்டுகளிலும் கைகளை நுழைத்துக்கொண்டு டாக், டாக் என்று நடந்தார். காரிடார் முழுக்க பச்சைத் தட்டிகள் தொங்கின. டியூப் லைட் வரிசைகளில் ஒன்று மட்டும் பள்ளிக்குச் செல்ல அடம் பண்ணும் சிறுவனாய் தேம்பிக் கொண்டிருந்தது. மாநில பாரபட்சமில்லாத கொசுக்கள். அவற்றுக்கான எண்ணெயில் தோய்த்த காகித வலைகள்!

    சுவர்களில் அம்புக் குறிகள் போட்டு பிரிவுகள் எழுதியிருந்தார்கள். மசூதி கூட்டுப் பிரார்த்தனை போல நிறைய டைப்ரைட்டர்கள் ஒரே நேரத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும் பின்னணியில் அவர் மாடிப்படிகளில் ஏறினார். பச்சைக்கம்யளம்.

    எதிர்பட்ட ஜூனியர்கள் நின்று சல்யூட் அடிக்க, தரத்திற்குத் தக்கபடி அகர்வால் பதில் மரியாதை செய்தபடி நடந்தார். நடையில் 'நான்' இருந்தது.

    மாடியின் காரிடாரில் கடைசிக்குச் செல்ல, அலுவலக ஒலிகள் தேய்ந்தன. மைக்ரோ வேவ் இரும்பு டவரின் உச்சியில் சிவப்பு விளக்கு எரிவது அவர் கண்ணை உறுத்தியது. 42 வினாடிகளுக்கு ஒருமுறை வெளிச்சம் பாய்ச்சும் சர்ச் லைட் அவர் அந்த கடைசி அறையை அடைவதற்கு முன்பு இரண்டு முறை ஒளியால் அவரைத் தடவிவிட்டு விலகியது. காற்றில் மண் வாசனை.

    அந்த சார்த்தப்பட்ட அறையின் இரும்புக் கதவின் அருகில் இருந்த அழைப்பு மணிப் பித்தானை அழுத்தினார். உள்ளே குக்கூ, குக்கூ என்றது. கதவின் நடுவில் இருந்த சிறிய சதுரம் திறந்து இவர் முகம் பார்க்கப்பட்டப் பிறகு திறக்கப்பட்டது. கிரீச் 'OIL PLEASE' கிரீச் OIL FLEASE...'

    திறந்தவன் தன் துப்பாக்கியை இறக்கி சல்யூட் அடித்ததை அலட்சியப்படுத்தி உள்ளே நடந்தார். கதவு மறுபடி கோரிக்கையுடன் மூடிக்கொண்டது.

    அது ஒரு பெரிய சதுர அறை. உத்தரத்தில் இருந்து தொங்கின இரண்டு இரும்புச் சங்கிலிகளில் பொருத்தப்பட்டக் கைகளுடன் அவன் தளர்ந்து நின்று கொண்டிருந்தான். அவன் இடுப்பில் ஒரு ஜட்டி மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது.

    அவன் முகம் லாரி சக்கரம் நசுக்கின பவுடர் டப்பா போல சப்பையாக் இருந்தது. காயங்கள் சில உலர்ந்தவை. சில புதியவை. முகத்தில் ஒரு வார தாடி. தலை குப்பையாக இருந்தது. கண்களில் மட்டும் ‘முடிந்தால் என்னை விடுவித்துப் பார்' என்னும் சவால் இருந்தது. இளைஞன், 30 அல்லது 31.

    அகர்வால் அவன் எதிரில் வந்து நின்றார். சிகரெட் பற்ற வைத்துக் கொண்டார்.

    காசிம், உன்னைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.

    உங்கள் பரிதாபம் எனக்குத் தேவையில்லை வேறு திசை பார்த்தான்.

    துவைக்கப்பட்டத் துணியாக அவன் கசங்கியிருந்தாலும் குரலில் உறுதி கொஞ்சமும் குறையவில்லை என்பதை கவனித்தார் அகர்வால். சில வினாடிகள் புகை ஊதி...

    என்ன முடிவு செய்தாய் காசிம்?

    "என்னை நீங்கள் இங்கேக் கொண்டுவந்து கேட்ட

    Enjoying the preview?
    Page 1 of 1