Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Savi1, Savi2, Savithri
Savi1, Savi2, Savithri
Savi1, Savi2, Savithri
Ebook90 pages48 minutes

Savi1, Savi2, Savithri

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903731
Savi1, Savi2, Savithri

Read more from Pattukottai Prabakar

Related to Savi1, Savi2, Savithri

Related ebooks

Related categories

Reviews for Savi1, Savi2, Savithri

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Savi1, Savi2, Savithri - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    சாவி1, சாவி2, சாவித்ரி

    Savi1, Savi2, Savithri

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author//pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    இருபத்தி ஆறு டிகிரி செல்சியஸ் சீதோஷ்ண நிலையில் டெல்லி மக்கள் அடிக்கடி தலை உயர்த்தி வானத்தில் பெய்யத் தயாராகிக் கொண்டிருக்கும் மேகங்களைப் பார்த்து காரியங்களை துரிதப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

    கோல்ப் கிளப்பில் விளையாடிக் கொண்டிருந்த தொப்பை வந்த வராத தனவந்தர்கள் கிரவுண்டை விட்டு கட்டிடத்திற்கு நடந்து வந்தார்கள்.

    குஷன் வைத்த வசதியான நாற்காலியில் வந்து அமர்ந்த அவன் மீசையும், தலையும் முழுக்க செம்பட்டை தட்டிப்போய் இந்தியன் அல்லன் என்பதை உடனே காட்டிக் கொடுத்தது.

    வெள்ளை ஸ்போர்ட்ஸ் சட்டையைக் கழற்றி காத்திருந்த கார் டிரைவரிடம் போட்டுவிட்டு, அவன் நீட்டின் பூத்துண்டால் வியர்வையை துடைத்துக் கொண்டான். அருகில் இருந்த சின்னச்சின்ன அறைகளில் ஒன்றுக்குள் சின்ன சூட்கேசோடு போய் வெளிவந்த போது ஆழ்ந்த நிலத்தில் சூட், கோட் அணிந்திருந் தான், காலின்ஸ்.

    கோட்டின் ஒரு பாக்கெட்டில் இருந்து சிகரெட் கேஸ் எடுத்துத் திறந்து... டிங்... டிடிடாங்... டிங்... டிடிடாங்... டிங்... டிடிடாங்... சிகரெட் எடுத்துக் கொண்டு மூடினான். அதிலேயே பொருத்தப்பட்டிருந்த லைட்டரில் முனை பொசுக்கிக் கொண்டு, சூட்கேசை டிரைவரிடம் தந்து, சலோ என்றான்.

    குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அந்த வெளிநாட்டுக் கார். புறப்பட்டதும், தலைக்கு மேல் தனக்குப் பிரியப்பட்ட சங்கீதம் அமைத்துக் கொண்டான். சாலையின் விளக்குகள் ஒருசேர எரியத் துவங்க... காரின் முன் சீட் முதுகில் பொதிந்திருந்த எலெக்ட்ரானிக் கெடிகாரம் 5:30. 12... 13... 14... 15... என்று பச்சைக் கடமை செய்து கொண்டிருந்தது.

    சுப்ரீம் கோர்ட் அருகில் என்னை இறக்கிவிட்டு வண்டியை எடுத்துச் சென்று அலுவலகத்தின் காரேஜில் பூட்டிவிட்டு நீ வீட்டுக்குப் போகலாம் என்றான் காலின்ஸ்.

    டாக்டர் ஜாஹிர் ஹுசேய்ன் மார்கில் விரைந்த கார், முதல் உலகப் போரில் இறந்துபோன பதிமூவாயிரம் இந்திய வீரர்களின் பெயர்களையும் தன் உடலில் தாங்கிய இந்தியா கேட் வந்து திரும்பி திலக் மார்கில் பயணம் தொடர்ந்தது.

    நாற்பதடி இடைவெளியில் அந்த தந்த நிற அம்பாஸிடரும் வெகு உண்மையாகத் தொடர்ந்தது. அதற்கு அறுபதடி தொலைவில் அந்த மோட்டார் பைக்கில் முகத்தை முற்றிலும் மறைக்கின்ற ஹெல்மெட் அணிந்தவனும் துடிப்பாய் தொடர்ந்து கொண்டிருந்தான்

    சுப்ரீம் கோர்ட் அருகில் வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்த பகுதியில் நிறுத்தச் சொல்லி சூட்கேசுடன் இறங்கிக் கொண்டான் காலின்ஸ். டிரைவர் அவனுக்கு வணக்கம் வைத்து விட்டு புறப்பட்டுச் சென்றதும், காலியாய்ப் போன ஒரு டாக்ஸியை அழைத்து எறிக்கொண்டான்.

    ஹோட்டல் ரஞ்சித் என்றான் காலின்ஸ்.

    பின்னால் தயங்கிக் கொண்டிருந்த அம்பாஸிடர் இப்போது டாக்ஸியைத் தொடர்ந்தது. மோட்டர் பைக் இப்போது சற்று வேகம் கூட்டிக்கொண்டு விரைந்து செல்லென்று அம்பாஸிடரை ஓவர்டேக் செய்தது. காலின்ஸ் ஏறின டாக்ஸியைக் குறி வைத்துப் பாய்ந்தது.

    மூன்று நட்சத்திர ரஞ்சித் - பவுடர் போட்டுக் கழுவின கண்ணாடி டம்ளரைப் போல் இருந்தது. பார்க்கிங் பகுதியில் அடைசலாய் கார்கள் நிற்க... காலின்ஸ் ஹோட்டலின் முகப்பிலேயே இறங்கிக் கொண்டான்.

    நிதானமாக உள்ளே நடந்தான். அகலமான மார்பிள் பதித்த வராந்தாவில் ரெஸ்ட்டாரெண்ட் பகுதிக்கு வந்து கதவைத் தள்ளி, யெஸ், சார் என்னு டை கட்டினவனால் விசாரிக்கப்பட்டான்.

    பதினேழாம் நம்பர் மேஜையை நான் பதிவு செய்திருக்கிறேன்.

    உங்கள் பெயர்?

    வில்லியம்ஸ் என்றான் காலின்ஸ்.

    அவன் அருகில் சின்ன மேஜைக்குச் சென்று சரிபார்த்துக் கொண்டு புன்னகை பொருத்திக் கொண்டு, கம் திஸ் வே என்றான்.

    குறைவான வெளிச்சத்தில் மேஜைகள். ஒரு மேஜைக்கும் மறு மேஜைக்கும் இடையே மூன்று மேஜைகள் போடலாம் போல இடைவெளி. அங்கங்கே ரகசியமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அடக்கி சிரித்தார்கள். கண்ணாடிச்

    Enjoying the preview?
    Page 1 of 1