Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nil, Oru Nibanthanai
Nil, Oru Nibanthanai
Nil, Oru Nibanthanai
Ebook94 pages50 minutes

Nil, Oru Nibanthanai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903709
Nil, Oru Nibanthanai

Read more from Pattukottai Prabakar

Related to Nil, Oru Nibanthanai

Related ebooks

Related categories

Reviews for Nil, Oru Nibanthanai

Rating: 5 out of 5 stars
5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nil, Oru Nibanthanai - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    நில், ஒரு நிபந்தனை

    Nil, Oru Nibanthanai

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    நீ மட்டும்தான் மலை மேல் இருப்பாயா என்று தன் தம்பிக்கு சவால் விட்டு, மலை மேல் இருந்து அண்ணன் சாமி ஆட்சி புரியும், திருச்சி என்று சுருக்கமாக அழைக்கப்படும் - திருச்சிராப்பள்ளி.

    அனேகமாக பெரும்பாலானவர்களின் வீட்டுக் காலண்டர்களில் நழுவி காணாமல் போயிருக்கும் தேதி - வருடத் தேனின் கடைசிச் சொட்டு!

    31.12.1999.

    மாலை மணி 6.10 வானம் கறுப்பு சால்வை போர்த்தியிருந்தது. சாஸ்த்திரத்திற்கு கொஞ்சூண்டு சூரிய வெளிச்சம் மட்டும் மிச்சமிருந்தது. பூமியுடன் போருக்குப் புறப்பட்டவை பனி.

    ஷியாம் காரில் அமர்ந்து ஸ்டார்ட் செய்தான். முக்கிய சாலைக்கு வந்து திருச்சியை நோக்கி நிதானமாக ஓட்டினான்.

    வழியெங்கும் ஒரு சுவர் பாக்கியில்லாமல் தேர்தல் பிரச்சாரங்கள் எழுதப்பட்டிருந்தன. புதுசு புதுசாய் கொடிக்கம்பங்கள். ஸ்பீக்கர் கட்டின ஆட்டோவில் கட்டிப் போன தொண்டையில் ஒருவன் நமது சின்னம், நமது சின்னம் என்று அலறிக் கொண்டு கடந்தான். ஒரு கிலோ மீட்டர் தாண்டுவதற்குள் மூன்று இடங்களில் பொதுக்கூட்டங்கள் கதறின. 'நான் இந்த மேடையில் ஒரு சவால் விடுகிறேன். அதைச் சந்திக்கத் தயாரா?' என்று எதிரே இல்லாத எதிரியை ஒரு ஒல்லியான பேச்சாளர் எச்சரித்துக் கொண்டிருந்தார்.

    ஷியாம் டோல்கேட் வந்து சிக்னலுக்கு நிறுத்தினான். காரின் டேப்பில் பாட்டு கேட்டான். இரண்டே வரிகள் கேட்டுவிட்டு உடனே அணைத்தான். புறப்பட்டான். ஜங்ஷன் வந்தான்.

    எல்லா திசைகளிலும் புத்தம் புதிய ஹோட்டல்கள். நெற்றியில் அவற்றின் நியான் எழுத்துக்களின் வேடிக்கை. பேக்கரிகளில் கூட்டம் வழிந்தது. ஸ்டேஷனரி கடைகளில் அட்டை நட்சத்திரங்களுக்கள் பல்புகள் மாட்டியிருந்தார்கள்.

    ஷியாம் பெரிய ஆஸ்பத்திரி வழியாக ஒட்டித் திருப்பி வயலூர் ரோட்டைத் தொட்டான். பிஹப் ஹீலர் கல்லூரி தாண்டி, குமரன் நகர் தாண்டி, புதிதாய் உருவாகிக் கொண்டிருந்த கணேசா நகருக்குள் திரும்பினான். அங்கங்கே நவீன வீடுகள் இடறின. சில வீடுகள் புதிய வளர்ச்சியில் இருந்தன. சில மனைகளில் காம்பௌண்ட் சுவர் மட்டும் எழுப்பப் பட்டிருந்தது. ஒரு விசாலமான மனைப் பகுதியில் ‘அணுகவும் - சோழா ரியல் எஸ்டேட்ஸ்' என்று போர்டு நடப்பட்டிருந்தது."

    ஷியாம் தனது அடக்கமான, தனி நவீன வீட்டின் கேட்டுக்கு முன்னால் காரை நிறுத்தி, ஹாரனை இரண்டு முறை அழுத்தினான்.

    வினாடிகளில் வீட்டின் வாசலில் போட்டிருந்த விளக்கு எரிந்தது. தொடர்ந்து கதவு திறந்து கொண்டு சாவிக் கொத்துடன் வந்தாள் மாயா.

    கேட்டைப் பூட்டிக் கொண்டு வந்த மாயா, கொஞ்சம் முன்னாடி வாங்க, நான் சீக்கிரமா புறப்படனும்னு மூணு தடவைச் சொன்னேன். அப்படியும் லேட்டா வர்றீங்களே என்றாள் குற்றம் சாட்டும் குரலில்.

    வீட்டு வாசல்ல நின்னுப் பேசாதேன்னு ஆயிரம் தடவை சொன்னாலும் புரியாதாடி. உனக்கு? என்று எரிச்சலாய் கத்திவிட்டு வீட்டுக்குள் வந்தான் ஷியாம்.

    அவனைத் தொடர்ந்து வந்து, கதவைச் சாத்தின மாயா, வீட்டுக்குள்ளே வந்தாச்சு. இப்ப சொல்லுங்க. இருட்டிப் போனதுக்கப்புறம் நான் புறப்பட்டுப் போகனுமா? அப்புறம் நான் எதுக்காகப் படிச்சிப் படிச்சி சொல்லனும்? என் வார்த்தைக்கு என்ன முக்கியத்துவம் தர்றிங்க? என்றாள் படபடப்பாக.

    சோபாவில் தளர்வாக அமர்ந்தான் ஷியாம். அவளை எரிச்சலுடன் பார்த்தான்.

    "ஏன் இப்படி வந்ததுமே பாயறே மாயா? எவ்வளவு விதமான டென்ஷன்களை சமாளிக்க வேண்டியிருக்கு. இங்கே இருக்கிற ஸ்ரீரங்கத்துக்குப் போறே. இருட்டினா என்ன? டவுன் பஸ்ல அரை மணி நேரம், மணி ஆறரைதான் ஆகுது. ஏன் இப்படிச் சின்ன விஷயத்துக்குத் துளைச்சி எடுக்கறே. முதல்ல காபி எடு.

    ஷியாம் சிறிய ஹாலை ஒட்டியிருந்த தனது அறைக்குள் நுழைந்தான். கட்டிலின் மேல் பிரெளன் சூட்கேசும், கைப்பையும் தயாராக இருந்தன."

    ஷியாம் பேண்ட்டை உருவிவிட்டு, லுங்கி அணிந்தான். துண்டு எடுத்துக் கொண்டு அறையையொட்டி இருந்த பாத்ரூம் சென்று முகம் கழுவினான். துடைத்துக் கொண்டு டிரெஸ்சிங் மேஜை முன்னால் அமர்ந்து சீப்பு எடுத்தான்.

    மாயா காபி டம்ளர் கொண்டு வந்து வைத்தாள்.

    "நாளைக்கு ஞாயித்துக் கிழமை தானே? நீங்களும்

    Enjoying the preview?
    Page 1 of 1