L Board Murder
By Rajesh Kumar
()
About this ebook
இந்த நாவல் ‘எல் போர்டு மர்டர்’ ஃபர்ஸ்ட் பர்சனில் சொல்லப்பட்ட கதை! அதாவது நாவலின் ஹீரோவே கதை சொல்லிக்கொண்டு போகிற மாதிரியான பாணி. இதுவரையிலும் நம் க்ரைம் நாவலில் இந்த பாணியை நான் பின்பற்றியது இல்லை. இப்போது முதல் முறையாய் தொட்டிருக்கிறேன். இந்த நாவலில் உள்ள இன்னொரு புதுமை கதையின் முதல்பாதி காதல் கலந்த குடும்பக் கதை. இரண்டாவது பாதி திக்... திக்... க்ரைம் கதை.
கதையின் முடிவு வழக்கம்போல் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. அவசரப்பட்டு பக்கங்களைப் புரட்டி கதையின் முடிவை படித்து விடாதீர்கள். முடிவு தெரிந்து விட்டால் சுவாரஸ்யம் குறைந்துவிடும்.
Read more from Rajesh Kumar
Kuttralathil Oru Kutram Rating: 0 out of 5 stars0 ratingsVivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Vendru Vaa Vivek Rating: 3 out of 5 stars3/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5Only Vivek! Rating: 5 out of 5 stars5/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Thavarukkum Thavarana Thavaru! Rating: 5 out of 5 stars5/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5Vivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Virpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Uravugal Pirivathillai Rating: 5 out of 5 stars5/5‘Sorry... Konnuttean..!’ Rating: 0 out of 5 stars0 ratingsOru Everest Thavaru! Rating: 5 out of 5 stars5/5
Related to L Board Murder
Related ebooks
Oru Sanikkilamai Iravu Rating: 0 out of 5 stars0 ratingsSila Vellai Iravugalum Oru Karuppu Pagalum Rating: 0 out of 5 stars0 ratingsMella Varum Boogambam Rating: 0 out of 5 stars0 ratingsMeendum August 15 Rating: 0 out of 5 stars0 ratingsSorgathin Saavi Rating: 0 out of 5 stars0 ratingsOnpathavathu Thisai! Rating: 0 out of 5 stars0 ratingsNil...Kavani...Kadhali... Rating: 0 out of 5 stars0 ratingsManam Iranthu Pesugiran Rating: 0 out of 5 stars0 ratingsUyiroduthaan Vilaiyaduven Rating: 0 out of 5 stars0 ratingsRosap Poovu Lesaai Saavu Rating: 5 out of 5 stars5/5Rajini Raajyam Rating: 0 out of 5 stars0 ratingsUrainthu Pona Unmai Rating: 0 out of 5 stars0 ratingsNishaa… Nishaa Odi Vaa…! Rating: 4 out of 5 stars4/5saagavaram Rating: 0 out of 5 stars0 ratingsIntha Aagayam Puthithu Rating: 0 out of 5 stars0 ratingsDecember Nila and Irandil Ondru Paarthu Vidu Rating: 0 out of 5 stars0 ratingsThoorathil Theriyum Sorgam Rating: 0 out of 5 stars0 ratingsUdaiyaatha Vennila Rating: 0 out of 5 stars0 ratingsMul Illaatha Kadigaram Rating: 5 out of 5 stars5/5Inimel Charumathi Rating: 0 out of 5 stars0 ratingsAndre, Appothe, Antha Nimishame! Rating: 0 out of 5 stars0 ratingsNovember Nila! Rating: 5 out of 5 stars5/5Sivappu Iravu Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Pattaampoochikal Rating: 0 out of 5 stars0 ratingsKarpura Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Yaarum Thottathillai Rating: 5 out of 5 stars5/5Miss Thevathai 1996 Rating: 0 out of 5 stars0 ratingsYours Murderly Rating: 5 out of 5 stars5/5Velvet Killer Rating: 0 out of 5 stars0 ratingsPuthumai Ulagam Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for L Board Murder
0 ratings0 reviews
Book preview
L Board Murder - Rajesh Kumar
http://www.pustaka.co.in
‘L’ போர்டு மர்டர்!
‘L’ Board Murder!
Author:
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அன்புக்குரிய வாசகர்களே!
வணக்கம்
இந்த மாதம் க்ரைம் நாவலில் இடம் பெற்றுள்ள நாவலான ‘எல் போர்டு மர்டர்’ ஃபர்ஸ்ட் பர்சனில் சொல்லப்பட்ட கதை! அதாவது நாவலின் ஹீரோவே கதை சொல்லிக்கொண்டு போகிற மாதிரியான பாணி. இதுவரையிலும் நம் க்ரைம் நாவலில் இந்த பாணியை நான் பின்பற்றியது இல்லை. இப்போது முதல் முறையாய் தொட்டிருக்கிறேன். இந்த நாவலில் உள்ள இன்னொரு புதுமை கதையின் முதல்பாதி காதல் கலந்த குடும்பக் கதை. இரண்டாவது பாதி திக்... திக்... க்ரைம் கதை.
கதையின் முடிவு வழக்கம்போல் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. அவசரப்பட்டு பக்கங்களைப் புரட்டி கதையின் முடிவை படித்து விடாதீர்கள். முடிவு தெரிந்து விட்டால் சுவாரஸ்யம் குறைந்துவிடும். எனவே ஒவ்வொரு பக்கமாய் புரட்டுங்கள்.
***
1
இன்று மோசமான நாள். காலையில் காலண்டர் ராசி பலனில் கண்ணில் பட்ட இந்த வார்த்தை என்னைக் கொஞ்சம் பாதிக்கவே செய்தது.
இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லைதான். ஆனால் மனித மனத்தின் விசித்திர பழக்கம் நீங்கள் அறிந்ததுதானே...? கெட்ட விஷயங்களைத் திரும்பத் திரும்ப அசைபோடுவது அதன் இயல்பு.
இருங்கள். முதலில் என்னைப் பற்றிச் சொல்லி விடுகிறேன்.
பரந்த மேஜைக்குப் பின்னே சுழல் நாற்காலியில் அமர்ந்து கொண்டு - எதிரே இருந்த ஜியெம்... எம்.டி... ஜே.எம்.டி... ஆகிய வயதான தலைகளுக்கு ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்த எனக்கு அப்படி ஒன்றும் அதிகம் வயதாகி விடவில்லை.
முப்பதுக்கும் முப்பத்தைந்துக்கும் இடையிலான ஒரு வயதை என் தோற்றத்தை வைத்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். என்னை இளம் தொழிலதிபர் என்று குறிப்பிட்டாலும் சரி... அல்லது மில்லினர்... என்று குறிப்பிட்டாலும் சரி... அதில் தவறு எதுவும் இல்லை.
சாதாரண குடும்பத்தில்தான் பிறந்தேன். பிறவிக் குணமாய் அமைந்திருந்த கடும் உழைப்பும்... அவ்வப்போது தழுவிச் சென்ற அதிர்ஷ்டக் காற்றும் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய் மேலே உயர்த்திக் கொண்டு சென்றது.
ஹார்ட் அட்டாக்கில் இறந்து போய் விட்ட என் அண்ணனுக்கு நான் நிறையவே நன்றி சொல்ல வேண்டும். வாழ்க்கையின் சில முக்கியமான கட்டங்களில் பழுத்த அனுபவசாலியான அவருடைய ஆலோசனைக்கு நான் செவி சாய்த்திருக்கா விட்டால் இந்த உயரம் சாத்தியமில்லை.
எனக்கும் அண்ணனுக்கும் பல வருட இடைவெளி இருந்தது. கிட்டத்தட்ட அப்பா ஸ்தானத்தில்தான் அவர் இருந்தார். பழுத்த அநுபவசாலி. நான் காலேஜ் படித்தது... ஆறு மாசம் வேலை இல்லாமல் தண்டச்சோறு சாப்பிட்டது... எல்லாம் அவர் வீட்டில்தான்.
அவருடைய ஆலோசனையின்படிதான் பிசினஸ் மேனேஜ்மென்ட் எடுத்துப் படித்தேன். படித்து முடித்த பிறகு அவர் சொன்ன கம்பெனிகளுக்குத்தான் அப்ளிகேஷன் போட்டேன்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு கம்பெனியில் இருந்து அப்பாயின்மென்ட் ஆர்டர் வந்தது. தினமும் விரக்தியோடு பேக்கரி டீயையும், சிகரட்டையும் செரித்துக் கொண்டிருந்த எனக்கு அதி பயங்கர சந்தோஷம். ஆர்டரைப் படிக்கப் படிக்கவே வீல் சேரில் சுழல்வது போல பிரமை.
மத்தியானம் அண்ணனிடம் ஆர்டரைக் காட்டினேன்.
கங்கிராஜுலேஷன்ஸ்...
சொன்னவர் கண்ணாடியைச் சரியாய்ப் பொருத்திக் கொண்டு - நிதானமாய் ஆர்டரில் பார்வையைப் போட்டார். எழுத்தெழுத்தாய்ப் படித்தார்.
கடைசியில் அவர் உதிர்த்த வார்த்தைகள் எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.
இந்த வேலைல நீ சேரவேண்டாம்...
அண்ணா...?
கம்பெனி சட்டதிட்டங்கள் எம்ப்ளாயிக்கு பெனிஃபிஷியலா இல்லை... உனக்குத் தரப்பட்டிருக்கிற ரெஸ்பான்சிபிலிட்டி ஆட்டு மந்தைத்தனமானது... இங்கே நீ புதுசா கத்துக்கவோ புதுசா சாதிக்கவோ எதுவுமே இல்லை... தவிர சம்பளமும் ரொம்பக் குறைச்சல்!
எனக்கு மனசுக்குள் குழப்பமும் அவர் மேல் கோபமும் கூட பிறந்தது.
அண்ணா... ஸம்திங் ஈஸ் பெட்டர் தென் நத்திங்... சும்மா இருக்கிறதுக்கு இந்த வேலையை ஏன் செய்யக்கூடாது...? அஞ்சாயிரம் ஒண்ணும் குறைஞ்ச சம்பளமா எனக்குப் படலை...
அண்ணா சிரித்தார்.
விஷ்ணு... நீ சொன்ன ஸம்திங் ஈஸ்... ப்ராவெர்ப் இந்த விஷயத்தில் ஒத்து வராதுப்பா... இங்கே போய் மாட்டிக்கிட்டின்னா அப்புறம் ஒரு சுழல்மாதிரி அமுக்கிடும்... முன்னேற்றத்துக்கான வேற எந்த முயற்சியும் செய்ய முடியாத அளவுக்கு தட்டி தட்டி உக்கார வெக்கிற வேலை இது... உச்சியிலிருந்தே துவங்கு...ன்னு கேள்விப்பட்டிருக்கியா...?
நீங்க வெச்சிருக்கிற ஜென் புஸ்தகத்துல படிச்சேன்...
ம்... அதுதான் கரெக்ட்... துவக்கமே அமோகமா இருக்கணும்... முதல் கோணல் முற்றும் கோணல்ன்னு தமிழ்ல நெகட்டிவ்வா சொல்லியிருப்பாங்க... அதையே திருப்பிப் போட்டு யோசிச்சுப் பாரு... உன்னோட திறமைக்கு இன்னும் பெட்டர் ஆப்பர்ச்சூனிட்டி வரும்... கொஞ்சம் வெயிட் பண்ணு...
பல விதமாய் யோசித்துப் பார்த்தேன். என்னால் அண்ணா சொன்னதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. கைக்கு எட்டியதை நழுவ விட்ட உணர்வே நீடித்தது.
மறுபடி பேக்கரியில் சிகரட் பற்ற