Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadhambam
Kadhambam
Kadhambam
Ebook169 pages1 hour

Kadhambam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறு வயதில் எனக்கும் என் சகோதரனுக்கும் கண்ணில் படுவதை எல்லாம் படிக்கும் ஆர்வம் இருந்தது. நாங்கள் போட்டி போட்டுக் கொண்டு பத்திரிகைகளில் வரும் கதைகளை எல்லாம் படித்து முடிப்போம். எல்லா தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளையும் அலசி முடித்து விடுவோம்.

கல்கியும், சாண்டில்யனும், சுஜாதாவும் எனக்கு பிடித்த எழுத்தாளர்கள். என் படிக்கும் ஆர்வமே பின் காலத்தில் என் எழுத்து முயற்சிக்கு அடிப்படையாக அமைந்தது என்று சொல்லலாம்.

நான் 1988லிருந்து (37 வயது) தான் எழுத ஆரம்பித்தேன். உள் உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டாத குணம் உடைய நான் என் உணர்வுகளுக்கு வடிகாலாகத்தான் எழுத்தை பயன்படுத்த ஆரம்பித்தேன்.

என்னை சுற்றி நடைபெறும் நிகழ்ச்சிகள் அல்லது சம்பவங்களில் என்னை பாதித்தவற்றை எல்லாம் எழுத்து வடிவத்தில் கொண்டு வர முயற்சி செய்தேன். பேசும் பொழுதே சம்பவங்களை கதை வடிவில் சொல்லும் திறன் அமைந்ததால் நிகழ்வுகளை கோர்வையாக கதை வடிவில் கொண்டு வருவது இயல்பாகவே எனக்கு அமைந்துவிட்டது.

முதன் முதலில் சிறு கட்டுரை ஒன்றும், பத்தி கட்டுரை ஒன்றும் மங்கையர் மலரில் வெளிவந்தது. பிறகு மாதத்திற்கு ஒன்று இரண்டு என்று சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். சிறு குழந்தைகளுடன் கூட்டுக் குடும்ப சூழலில் குடும்ப பொறுப்பு அதிகமாக இருந்ததால் கிடைத்த நேரத்தில் சிறுகதைகள் தான் என்னால் எழுத முடிந்தது.

என் பெண் பிரசவத்திற்கு வந்த போது எங்கள் வீட்டில் பூனை ஒன்று வளர்ந்து வந்தது. அதை வைத்து என் கற்பனைக்கு தோன்றியதை கதை வடிவமாக கொண்டு வந்தது தான் “மியாவ்” என்னும் சிறுகதை ஆனந்த விகடனில் வெளிவந்தது.

அஸ்ஸாமில் என் பெண் வீட்டு பணிப்பெண்ணையும் சென்னையில் எங்கள் வீட்டு பணிப்பெண்ணையும் இணைத்து கதை வடிவமாக கொண்டு வந்தது தான் “சியாமா” என்ற சிறுகதை. கலைமகள் மாத இதழில் வெளிவந்தது.

இதயம் வார இதழ், மங்கை மாத இதழ்களிலும் என் சிறுகதைகள் வெளியானது. என் சிறுகதைகள் பத்திரிகைகளில் வெளிவரும்போது ஏற்படும் மகிழ்ச்சியும் திருப்தியும் வார்த்தையில் அடங்காது. (பத்திரிகையில் வெளிவருவதற்காகவோ அல்லது சன்மான தொகைக்காகவோ இல்லாமல் என் மனத் திருப்திக்காக எழுத ஆரம்பித்தேன்) பல வருடங்கள் கழித்து இந்த கதைகளை முழுக்க முழுக்க வாசகரின் கோணத்தில் படிக்கும் போது எனக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. எப்போது எழுதினேன்? எப்படி எழுதினேன்? எதற்காக எழுதினேன் என்று யோசித்து நினைவிற்கு கொண்டு வரும் விளையாட்டு மிகுந்த உவகை அளிக்கின்றது. நான் எழுதிய சிறுகதைகளிலிருந்து சிலவற்றை தொகுத்து புத்தக வடிவில் வெளிவருவதற்கு என் கணவரின் முயற்சிதான் காரணம் என்றால் மிகையாகாது. மேலும் என் உணர்வுகளை தொடும் நிகழ்வுகளை கதை வடிவில் கொடுக்கும் முயற்சியை தொடர்ந்து நடத்துவேன் என்று உறுதி அளிக்கிறேன்.

- பிரபா ராஜன்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580126203834
Kadhambam

Related to Kadhambam

Related ebooks

Reviews for Kadhambam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadhambam - Prabha Rajan

    http://www.pustaka.co.in

    கதம்பம்

    (சிறுகதைகள்)

    Kadhambam

    (Sirukathaigal)

    Author:

    பிரபா ராஜன்

    Prabha Rajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/prabha-rajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    சிறு வயதில் எனக்கும் என் சகோதரனுக்கும் கண்ணில் படுவதை எல்லாம் படிக்கும் ஆர்வம் இருந்தது. நாங்கள் போட்டி போட்டுக் கொண்டு பத்திரிகைகளில் வரும் கதைகளை எல்லாம் படித்து முடிப்போம். எல்லா தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளையும் அலசி முடித்து விடுவோம்.

    கல்கியும், சாண்டில்யனும், சுஜாதாவும் எனக்கு பிடித்த எழுத்தாளர்கள். என் படிக்கும் ஆர்வமே பின் காலத்தில் என் எழுத்து முயற்சிக்கு அடிப்படையாக அமைந்தது என்று சொல்லலாம்.

    நான் 1988லிருந்து (37 வயது) தான் எழுத ஆரம்பித்தேன். உள் உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டாத குணம் உடைய நான் என் உணர்வுகளுக்கு வடிகாலாகத்தான் எழுத்தை பயன்படுத்த ஆரம்பித்தேன்.

    என்னை சுற்றி நடைபெறும் நிகழ்ச்சிகள் அல்லது சம்பவங்களில் என்னை பாதித்தவற்றை எல்லாம் எழுத்து வடிவத்தில் கொண்டு வர முயற்சி செய்தேன். பேசும் பொழுதே சம்பவங்களை கதை வடிவில் சொல்லும் திறன் அமைந்ததால் நிகழ்வுகளை கோர்வையாக கதை வடிவில் கொண்டு வருவது இயல்பாகவே எனக்கு அமைந்துவிட்டது.

    முதன் முதலில் சிறு கட்டுரை ஒன்றும், பத்தி கட்டுரை ஒன்றும் மங்கையர் மலரில் வெளிவந்தது. பிறகு மாதத்திற்கு ஒன்று இரண்டு என்று சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். சிறு குழந்தைகளுடன் கூட்டுக் குடும்ப சூழலில் குடும்ப பொறுப்பு அதிகமாக இருந்ததால் கிடைத்த நேரத்தில் சிறுகதைகள் தான் என்னால் எழுத முடிந்தது.

    என் பெண் பிரசவத்திற்கு வந்த போது எங்கள் வீட்டில் பூனை ஒன்று வளர்ந்து வந்தது. அதை வைத்து என் கற்பனைக்கு தோன்றியதை கதை வடிவமாக கொண்டு வந்தது தான் மியாவ் என்னும் சிறுகதை ஆனந்த விகடனில் வெளிவந்தது.

    அஸ்ஸாமில் என் பெண் வீட்டு பணிப்பெண்ணையும் சென்னையில் எங்கள் வீட்டு பணிப்பெண்ணையும் இணைத்து கதை வடிவமாக கொண்டு வந்தது தான் சியாமா என்ற சிறுகதை. கலைமகள் மாத இதழில் வெளிவந்தது.

    இதயம் வார இதழ், மங்கை மாத இதழ்களிலும் என் சிறுகதைகள் வெளியானது. என் சிறுகதைகள் பத்திரிகைகளில் வெளிவரும்போது ஏற்படும் மகிழ்ச்சியும் திருப்தியும் வார்த்தையில் அடங்காது. (பத்திரிகையில் வெளிவருவதற்காகவோ அல்லது சன்மான தொகைக்காகவோ இல்லாமல் என் மனத் திருப்திக்காக எழுத ஆரம்பித்தேன்) பல வருடங்கள் கழித்து இந்த கதைகளை முழுக்க முழுக்க வாசகரின் கோணத்தில் படிக்கும் போது எனக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. எப்போது எழுதினேன்? எப்படி எழுதினேன்? எதற்காக எழுதினேன் என்று யோசித்து நினைவிற்கு கொண்டு வரும் விளையாட்டு மிகுந்த உவகை அளிக்கின்றது. நான் எழுதிய சிறுகதைகளிலிருந்து சிலவற்றை தொகுத்து புத்தக வடிவில் வெளிவருவதற்கு என் கணவரின் முயற்சிதான் காரணம் என்றால் மிகையாகாது. மேலும் என் உணர்வுகளை தொடும் நிகழ்வுகளை கதை வடிவில் கொடுக்கும் முயற்சியை தொடர்ந்து நடத்துவேன் என்று உறுதி அளிக்கிறேன்.

    பிரபா ராஜன்

    Arasi1951@yahoo.com

    27th July 2010

    உள்ளே…

    1. மியாவ்···

    2. ஷ்யாமா

    3. பேர் சொல்ல ஒரு பிள்ளை

    4. கன்னித் தாய்

    5. பூரணி

    6. கூடு விட்டு பறந்த கிளி

    7. மனமாற்றம்

    8. முகங்கள்

    9. பூவும் பொட்டும்

    10. ஸரிகமபதநி...

    11. வாழ்க்கை துணை

    12. உறவுக்கு ஒரு விலை

    13. அவனறிந்த உறவு

    14. அரண்டவன் கண்களுக்கு...

    15. ஆண் வரவு, பெண் செலவு?

    1. மியாவ்···

    அம்மா... அம்மா இந்த புஸ்ஸியை வந்து பாரேன்!

    என் பெண் ரம்யா அலறிய அலறலில் சமையல் அறையில் கை வேலையாக இருந்த நான் கரண்டியும் கையுமாக என்னமோ ஏதோ என்று ஓடினேன்.

    வராண்டாவுக்கு போனதும் பிரேக் பிடித்தாற் போல் நின்றுவிட்டேன். பஞ்சு பொதி போல அழகாக என் காலடியில் குட்டியை வைத்துவிட்டு மறுபடியும் வெளியே ஓடியது. என்னடி இது. எங்கே மறுபடியும் போயிற்று என்று கேட்டு முடிப்பதற்குள் மற்றொரு குட்டி. கறுப்பும் வெளுப்பும் கலந்தது. மூன்றாவது முறையும் ஓடியது. அடர்ந்த கருநிறத்துடன் மற்றொரு குட்டியையும் கொண்டு வந்து என் காலடியில் வைத்தது.

    என் கால் அருகில் கண் திறக்காத மூன்று குட்டிகளுடன் இனி உன் பொறுப்பு என்பது போல் காலை நீட்டிப் படுத்து விட்டது.

    எனக்கு தலை கால் புரியவில்லை. குழந்தைகளுடன் என் பெண்ணே வீட்டுக்கு வந்தது போல எனக்கு ஒரே மகிழ்ச்சி.

    பிள்ளைகள் பெற்ற வயிறு. மூன்று குட்டிகளுக்கு வேறு பால் கொடுக்க வேண்டும். வேளா வேளைக்கு பாலும் சாதமும் போடணும்டி ரம்யா.

    ரொம்பக் கவலையுடன் பார்த்து பார்த்து எங்கள் புஸ்ஸிக்கு உபசாரம் நடந்தது. ரம்யாவும் சேகரும் குட்டிகளைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

    காலேஜூம், ஸ்கூலும் விட்டு வந்தவுடன் அவர்களுக்கு விளையாட்டு பொம்மைகளாகிவிட்டன புஸ்ஸியின் மூன்று குட்டிகளும்.

    நாளைக்கு நாள் நன்றாக இருக்கிறது. நம்ம பிரியாவை அவ மாமியார் வீட்டிலிருந்து கூட்டிக்கொண்டு வரவேண்டும் என் கணவர் நினைவுபடுத்தினார். சீமந்தம் முடிந்து புகுந்த வீட்டிலேயே விட்டுவிட்டு வந்த எங்கள் மகளை நல்ல நாள் பார்த்து பிரசவத்துக்குக் கூட்டி வந்தோம்.

    பிரியா, நம்ம புஸ்ஸி அழகா மூன்று குட்டி போட்டிருக்கு பார்க்கிறாயா? என்று ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து காட்டினாள் ரம்யா. அப்போதே பிரியாவின் முகம் வெகுவாக சுருங்கிப் போய்விட்டது.

    உன் மாப்பிள்ளைக்குப் பூனைன்னாலே பிடிக்காது என்று சுரத்தில்லாமல் சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள் பிரியா.

    அவருக்குப் பிடிக்காட்டி என்ன... எனக்குப் பிடிச்சிருக்கு என்று மூன்று குட்டிகளையும் மார்புடன் அணைத்துக் கொண்டாள் ரம்யா.

    அம்மா உன் பேரன் பேத்திக்கெல்லாம் பசிக்கிறதாம் என்று குறும்புடன் கூறிக்கொண்டே ஒவ்வொன்றுக்கும் சின்ன சின்ன கிண்ணத்தில் பால் கொண்டு வைத்தாள்.

    வீடு முழுவதும் சுதந்திரமாகத் திரியும் புஸ்ஸியும் அதன் குட்டிகளும் எங்கள் உறவினர்களையும் தங்கள் உறவினர்களாகப் பாவித்து ஒட்டி உறவாட ஆரம்பித்தன. டெலிபோனில் நலம் விசாரிக்கும் உறவினர்களும் பூனைகள் எப்படி இருக்கின்றன என விசாரிக்கத் தவறுவதில்லை.

    ஒரு சனிக்கிழமை, பங்கஜம், யார் வந்திருக்கார் பாரேன் என் கணவர் வாசலிலிருந்து கூப்பாடு போட... ஓடினேன் வாசலுக்கு. என் பெண்ணின் கணவர். மாப்பிள்ளை வந்திருந்தார். வரவேற்பு, உபசாரம், சாப்பாடு எல்லாம் முடிந்தது. எப்போதும் போல் எங்கள் புஸ்ஸி 11 மணிக்கு தன் குட்டி பரிவாரங்களுடன் மதிய உணவுக்கு வந்துவிட்டது.

    சூ.. போ, போ... என்று சத்தம் வந்தவுடன் பூனைக்கு பால் சாதம் கலந்து கொண்டிருந்த நான் அதை அப்படியே போட்டுவிட்டு ஓடினேன். கையில் துணி உலர்த்தும் கொம்புடன் பூனைகளை வீட்டுக்கு வெளியே விரட்டிக் கொண்டிருந்தார் என் மாப்பிள்ளை. அது ஒன்றும் செய்யாது. திருட்டுத்தனமெல்லாம் இல்லை. போட்டதைச் சாப்பிட்டு விட்டு அது பாட்டுக்கு ஒரு மூலையில் விழுந்து கிடக்கும். விட்டுடுங்க மாப்பிள்ளை என்று கூறியவாறே சாத கிண்ணத்தை மூன்றுக்கும் பொதுவாக வைத்தேன்.

    அடுத்த நிமிடம் கிண்ணம் தெருவை நோக்கிப் பறக்கும் தட்டாகப் போய் விழுந்தது. ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தார் மாப்பிள்ளை.

    அத்தை, நீங்கள்ளாம் படிச்சவங்க தானே! கர்பிணிப் பொண்ணு, பிறந்த குழந்தை இருக்கற இடத்துல பூனைகளை எல்லாம் சேர்க்கக் கூடாதுனு தெரியாது உங்களுக்கு? இதுகளையெல்லாம முதல்ல வெளியே துரத்துங்க கூறிவிட்டுப் போய்விட்டார் மாப்பிள்ளை.

    அவர் போனவுடன் வீட்டுக்கு வெளியே சாப்பாட்டை கொண்டு போய் வைத்ததும் புஸ்ஸி குட்டிகளுடன் மகிழ்ச்சியுடன் தின்றுவிட்டு வீட்டைச் சுற்றி வந்துகொண்டிருந்தது.

    அது முதல் புஸ்ஸிக்கும் அதன் குட்டிகளுக்கும் காம்பவுண்டுக்கு வெளியே சாப்பாடு வைக்க ஆரம்பித்தோம். நடு நடுவே அது குட்டிகளுடன் வீட்டுக்குள் வருவதைத் தடை செய்ய முடியவில்லை. மாப்பிள்ளை வரும்போது அவர் கண்ணில் அது படாமல் இருக்க வேண்டுமே என்று எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொள்வேன். பிரியாவுக்கு கூட கொஞ்சம் வருத்தம் தான்.

    அவருக்குத் தான் பூனைகளைப் பிடிக்கறதில்லையே. நான் இங்கு இருக்கற வரையில் அதை எங்காவது கொண்டுபோய் விடறது தானே? எனக்கும் பிறக்கப் போற குழந்தைக்கும் ஏதாவது இன்ஃபெக்ஷன் வந்து விடுமோ என்று பயப்படுகிறார் என்று தன் கணவனுக்குப் பரிந்து வந்தாள்.

    சொந்த பெண் பேரக்குழந்தைகள் போல் பழகிய என் புஸ்ஸியையும் அதன் குட்டிகளையும் எப்படி நானே என் கையால் துரத்தியடிப்பேன். உனக்கும் உன் தம்பிகளுக்கும் அம்மை போட்டபோது எனக்கும் வந்து விடக் கூடும் என்று நினைத்து ஓடியா போய்விட்டேன். என் உடம்பையும் பொருட்படுத்தாமல் உங்களுக்குப் பணிவிடை செய்யவில்லை? மனதில் நினைத்துக் கொண்டேன். பாசம், நேசம் எல்லாம் மிருகங்களுக்கு இல்லையா? தனக்குக் கிடைத்த பாசமும் பாதுகாப்பும் தன் குட்டிகளுக்கும் கிடைக்கும் என நினைத்ததோ, என்னவோ தன் குட்டிகளை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்து எனக்குக் கிடைத்த பாசத்தை என் பிள்ளைகளுக்கும் பகிர்ந்து கொடு என்று கூறியதோ, இவ்வாறெல்லாம் தூக்கமின்றி எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி தவித்தது என் மனம்.

    மறுநாள் மாப்பிள்ளை வரும் நாள். விடிந்தவுடன் என் வேலைக்காரியை அழைத்து பூனைகளைக் கொண்டு போய் விட்டு வரும்படி கூறினேன்.

    பெண்ணிடம் மாப்பிள்ளை வாய் ஓயாது பேசினார். பிறக்கப் போகிற குழந்தையின் பராமரிப்பு, போஷாக்கு, பெயர் வைப்பது என்ற கற்பனையில் தங்கள் குழந்தையைச் சீராட்டினர். என் புஸ்ஸியும் அதன் குட்டிகளும் எங்கிருக்கிறதோ, என்ன சாப்பிடுகிறதோ என்று என் மனம் அலை பாய்ந்தது. சாப்பாடு இறங்கவே இல்லை. விளக்கு வைக்கும் நேரம். ஆதலால் குடும்பமே டி.வி பார்த்துக் கொண்டிருந்தது. 'மியாவ்' மெல்லிய சத்தம்

    Enjoying the preview?
    Page 1 of 1