Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tholai Thoorathu Pasam
Tholai Thoorathu Pasam
Tholai Thoorathu Pasam
Ebook234 pages2 hours

Tholai Thoorathu Pasam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறு வயதிலிருந்தே கதை, கட்டுரைகளில் நாட்டம் கொண்ட எழுத்தாளர் காந்தலக்ஷ்மி சந்திமெளலி. முதலில் ஆங்கிலத்தில் எழுதத் தொவங்கினார். உலக நாடுகள் பலவற்றிற்கு சென்றுள்ள இவர் தமிழில் சிறுகதைகள் எழுத துவங்கினார். "தினமணி - ஞாயிறு மணி, லேடீஸ் ஸ்பெஷல், கலைமகள், அமதசுரபி, கோகுலம் கதிர் என்று பல நேர்காணல்களுக்கான வாய்ப்புகள் பெற்ற பொழுது சாதனையாளர்களின் வாழ்க்கையை நேரடியாக காணும் வாய்ப்பு பெற்றேன்" என்கிறார். சிறுவர் இலக்கியம், நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் என்று பல்வேறு களங்களில் தடம் பதித்துள்ள இவர் நந்தா தீபம், சிறுவர் இலக்கிய ரத்னா, சிறந்த எழுத்தாளார், எழுத்துச்சுடர், அருள் வளர் நங்கை என்று பல விருதுகளை பெற்றுள்ளார்.

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு பல நூல்களை மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலத்திலும் சில நூல்கள் எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125903837
Tholai Thoorathu Pasam

Read more from Kanthalakshmi Chandramouli

Related to Tholai Thoorathu Pasam

Related ebooks

Reviews for Tholai Thoorathu Pasam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tholai Thoorathu Pasam - Kanthalakshmi Chandramouli

    http://www.pustaka.co.in

    தொலைதூரத்துப் பாசம்

    Tholai Thoorathu Pasam

    Author:

    காந்தலக்ஷ்மி சந்திமெளலி

    Kanthalakshmi Chandramouli

    For more books

    http://pustaka.co.in/home/author/kanthalakshmi-chandramouli

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. தொலைதூரத்துப் பாசம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    2. சலங்கையின் சிரிப்பொலி

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    தொலைதூரத்துப் பாசம்

    1

    மாமி, நாளைக்கு விடியற்காலை எம்புள்ளை கிருஷ்ணா இங்கே இருப்பான். இட்லிக்கு மாவு அரைச்சு வெச்சிடுங்கோ, புளிகாய்ச்சல் இருக்கா?" லஷ்மி 'மள மள' என்று உத்தரவுகள் பிறப்பித்தாள்.

    என்ன லஷ்மி இது? கிருஷ்ணா வந்த உடனே 'ஜெட் - லாக்' அப்படீன்னு சுருண்டு படுத்துக்கப் போறான். நீ அதை மறந்துபோய் ஏகப்பட்ட 'ஐட்டம்' சமைக்காதே சந்தானம் கூறினார்.

    என்ன தான் அமெரிக்கா நேரத்துக்கும் இந்தியா நேரத்துக்கும் உள்ள வித்தியாசத்துனால 'ஜெட்லாக்' வரட்டுமே, பசிங்கறது இருக்கத்தானே செய்யும்? அதுபோக சரசா மாமி இதை விட்டா நாளைக்கு கார்த்தால்தான் வருவா. எனக்கு ஓடியாடி பண்ற தெம்பு எல்லாம் போச்சு. அதான் முன்னேற்பாடா எல்லாம் செஞ்சு வெச்சுக்கறேன்.

    சந்தானம் புன்னகையுடன் செய்தித் தாள்களுக்கு நடுவில் தலையை நுழைத்துக் கொண்டார்.

    அவருக்கும் மனதிற்குள் மகிழ்ச்சி மெல்லிய நீருற்றாக ஓடிக்கொண்டு தான் இருந்தது. கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பு பார்த்த மகன் கிருஷ்ணா நாளை வருகிறான்! பாவம், பெற்றவளாயிற்றே. லஷ்மி உற்சாகமும், படபடப்புமாக இருப்பதில் என்ன அதிசயம்?

    இரண்டு வருடங்கள் முன்பு 'ஓபன் ஹார்ட் சர்ஜரி' தனக்கு நடந்ததிலிருந்து லஷ்மிக்கு அதிகமாக உதவ முடிவதில்லை என்பதில் அவருக்கு வருத்தம்தான்.

    ரிடையர் ஆன உடனே அமெரிக்காவில் இருக்கும் தன் ஒரே மகனை காணச்சென்ற பொழுது, உடல்நிலை நன்றாகத் தான் இருந்தது. ஆறு மாத 'விசாவில்' மனைவியுடன் சென்று மகன் வீட்டில் தங்கியது இன்றும் மனதில் பசுமையாக இருந்தது.

    பாவம், எவ்வளவு உழைப்பு! உழைப்பிற்கேற்ற ஊதியம். எங்கும் சுத்தம், சுகாதாரம்! எல்லாவற்றிற்கும் அம்மாவின் கையை எதிர்பார்த்துக் கொண்டு, தன் செருப்புகளைக் கூட சரியாக எடுத்து வைக்காத செல்ல மகன், இன்று தானே சமைத்து, வீட்டையும் பராமரித்து, ஆபீஸ் மட்டுமல்ல உலகம் முழுவதும் சுற்றும் ஓர் இளைஞன்.

    நான்கு வருடங்கள் கழித்து மகனைப் பார்க்கையில் அவனுடைய உயரமும், கம்பீரமும் உதடுகள் பிரியாமல் ஆங்கிலம் பேசும் திறமையும் - அப்பப்பா எத்தனை மாற்றங்கள்!

    அப்பா, இங்கே ஆறு மாசம் இருந்தேள்னா நீங்ககூட 'பளிச்'னு கலரா ஆகிடுவேள். கிருஷ்ணா சிரித்தான்.

    சான்ஸே இல்லைடா! நான் திருநெல்வேலி தாமிரபரணி நதி வண்டல் கறுப்பு. ஒட்டுமே தவிர போகாது.

    சிரிப்பும், கும்மாளமுமாக அமெரிக்காவை சுற்றி காண்பித்தான் கிருஷ்ணா. சனி, ஞாயிறுகளில் ஓர் இடம் பாக்கியில்லாமல் பார்த்தாயிற்று. அப்பா, ட்ராஃபிக் போலீஸ் இல்லேயேன்னு நினைச்சு ஒரு தப்புகூட செய்ய முடியாது. ஒரு லைன் க்ராஸ் பண்ணிட்டா போதும், வீடு தேடி போலீஸ் வரும். அபராதம் கட்டிதான் ஆகணும். எதுவும் லஞ்சமா கொடுத்துத் தப்பிக்க முடியாது. கிருஷ்ணா அமெரிக்காவின் சாலை விதிகளைப் பற்றி பெருமையாகக் கூறினான்.

    இதே நம்ப ஊரா இருந்தா, முதல்ல லஞ்சம் தானே பேசும் லஷ்மி கூற... கிருஷ்ணா வாய்விட்டு சிரித்தான்.

    அம்மா, இங்கேயும் லஞ்சம், பசி, பட்டினி எல்லாம் உண்டு. 'அந்நியன்' படத்துல சொல்ற மாதிரி, நம்ப கடமையை செய்யவே இந்தியாவுல சில ஆட்களுக்கு லஞ்சம் கொடுக்கணும், இங்கே கடமையை மீறத்தான் லஞ்சம்!

    அது சரி, நீ எப்படா 'அந்நியன்' படத்தைப் பார்த்தே? திருட்டு வி.சி.டியா?

    ஐயோ அம்மா! அதுக்கு அவசியமேயில்லை. இங்கே இந்தியர்கள் எல்லோரும் சேர்ந்து வாரத்திற்கு ஒரு சினிமா ஹோம் தியேட்டர்ல போட்டுப் பார்ப்போம். இந்த சினிமா பார்க்கறச்சே படத்தோட டைரக்டரை முக்கிய விருந்தினரா கூப்பிட்டிருந்தோம்.

    இந்த மாதிரி நிகழ்ச்சிக்கெல்லாம் பெண்களும் வருவாளா? அம்மாவின் கேள்வியில் தொக்கி இருக்கும் சந்தேகத்தினை புரிந்து கொண்டு சிரித்தான் கிருஷ்ணா.

    அம்மா, இங்கே நம்ம இந்திய பெண்கள் ஆயிரக்கணக்குல இருக்கா. அதுவும் தனியா இருக்கா. ஆனால் எங்களைப் போலவே அவாளுக்கும் கடன், மேற்படிப்பு, கடுமையான உழைப்பு எல்லாம் இருக்கு. யாரும் கல்யாணம் தான் வாழ்க்கையின் உச்சக்கட்டம்னு இருக்கமாட்டா. அதனால உன் பிள்ளை ரொம்ப பத்திரமா இருக்கான். கவலைப்படாதே.

    மிகப் பெரிய கணினி நிறுவனத்தில் பெரிய உத்தியோகம். கை நிறைய அல்ல... பை நிறைய சம்பளம். ஆறடி உயரத்தில் வாட்ட சாட்டமாக இருக்கும் மகனைக் கண்டு பெருமையாக இருந்தாலும் தனிமை, இளமை, எல்லாமும் சொகுசாகக் கிடைக்கும் இன்ப வாழ்க்கை, பெரியவர்களின் மேற்பார்வையில்லாமல் சிறகடித்துப் பறக்கும் வாழ்க்கை முறை....

    அடுத்த தடவை கிருஷ்ணா இந்தியாவிற்கு வரச்சே கல்யாணம் பண்ணிடணும். இப்படி விட்டு வைக்கக் கூடாது சந்தானம் தீர்மானமாகக் கூறினார்.

    வயசு இருபத்தஞ்சுதான் ஆகிறது. பெண்கள் இப்பொழுது எல்லாம் இருபத்தி ஆறு, இருபத்தி ஏழு வயசுலதான் கல்யாணம் பண்ணிக்கறா. இவனுக்கு இருபது இருபத்தியொண்ணுல பெண்கள் கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம்தான். ஜோஸ்யர் மற்றும் வீட்டு சாஸ்திரிகள் கூறவே லஷ்மிக்கு கவலை வந்துவிட்டது.

    2

    வலை வீசி பெண் தேட ஆரம்பித்தாள். முதலில் ஒவ்வொரு சம்பந்தம் பற்றியும் கிருஷ்ணாவிடம் கூறி, உடனுக்குடனே ஜாதகங்களைச் சரிபார்ப்பது என பரபரத்தவள்....

    என்னன்னா இது? யாரும் தம் பெண்களை அமெரிக்கா அனுப்ப இஷ்டப்படலியே? இந்தக் காலத்து பெண்கள் 'அமெரிக்கா' அப்படீன்னா 'சரி'பான்னு நினைச்சேன்! என்று சுருதி குறைந்து போன வாத்தியமாக பரிதாபமாக நின்றாள்.

    அசடு, அசடு காலம் மாறியிருக்கு. நம்ம ஊர் பெண்கள் எப்பவுமே கெட்டிக்காராதான்! அப்போ ஒரு வீட்டுக்கு 2 அல்லது 3 குழந்தைகள் இருக்கும். ஆனா இப்போது ஒரே குழந்தைான் ஜாஸ்தி. அதுவும் பெண்ணாக இருந்துட்டா ஆணுக்கு ஆணாகவும், பெண்ணுக்கு பெண்ணாகவும், வளர்க்கணும். உலகத்தை ரொம்ப சீக்கிரமா அவா புரிஞ்சுக்கறா படிப்பு, அந்தஸ்து, தைரியம் எதிலேயும் ஆணுக்கு குறைச்சல் இல்லைன்னு வளர்த்தாச்சு. அமெரிக்காவுக்கு போனா நாமே அத்தனை வீட்டுக் காரியங்களும் செய்யணும்னு நம்பளைவிட அவாளுக்கு நன்னா தெரியும். வேலைக்காரி சௌகரியம் கல்யாணமாகி குழந்தைகளைப் பெத்துட்டா அம்மா வீட்டு சொர்க்கம் எதுவும் அங்கே கிடையாதுன்னு நன்னா புரிஞ்சுண்டு இருக்காங்க.

    ஏன்னா, இவனுக்கு நாம கல்யாணம் பண்ணலைன்னா இவன் ஏதாவது தப்பு தண்டா....

    பாவம் லஷ்மி! வீடே உலகம் என்று இருப்பவள். அமெரிக்கா சென்று வந்து மூன்று மாதம் கழித்து மார்வலி என்று துடித்த சந்தானத்தை ஆஸ்பத்திரியில் சேர்த்து, சம்பாதித்த பணம் அத்தனையும் மூட்டையாகக் கட்டி 'டாக்டரிடம் கொடுத்து ஆபரேஷன் என்று அலைந்து....

    உற்றார், உறவினர்கள் எல்லோரும் உதவினாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு சிக்கல். அதனால் முழுவதும் அருகில் இருந்து உதவ முடியாத நிலை! இந்திய வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள்.

    கஷ்டம் என்றால் அத்தனையும் போட்டுவிட்டு ஓடிவரும் நிலையில் யாருமில்லை. உடல் வியாதி, குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு, வயதாகியும் மாட்டுப் பெண் வேலைக்குச் செல்வதால் வீட்டை நிர்வாகிக்கும் பொறுப்பு - இப்படி பல காரணங்கள்!

    எப்படியோ பிழைத்தெழுந்து வந்தார் சந்தானம். அப்பா, வரமுடியலைப்பா துடித்து அழும் மகனை சமாதானப்படுத்தினர் பெற்றோர்!

    இதோ ஆபரேஷன் முடிந்து 2 வருடங்கள் விளையாட்டாக ஓடிவிட்டன. இன்று மகன் வருகிறான் என்கிற மகிழ்ச்சி முகத்தில் தாண்டவமாட இரவு தூக்கத்தினை தியாகம் செய்து, வாடகைக் காரில் விமான நிலையம் பறந்து கொண்டிருக்கிறார்கள்.

    ஏதோ தீபாவளிக்கு எழுந்துக்கற மாதிரி இப்படி அகாலத்துல பிளேன் வர்றது? அலுத்துக் கொண்டாள் லஷ்மி.

    உடல்நிலை நன்றாக இருந்தாலும், முன்பு இருந்த அளவு தெம்பில்லை என்பது சந்தானத்திற்கும் புரிந்தது. பாவம், தன்னைவிட வயதானவர்களின் நிலை எப்படியிருக்கும்?

    மகன் வெளிநாடு செல்லப் போகிறான் என்று தெரிந்து இனி அவன் இங்கு வந்து தன்னைப் பார்த்துக் கொள்வது என்பது நடக்காத விஷயம் என்று இன்றும் பலர் புரிந்து கொள்வதில்லை.

    ஏன் லஷ்மியும் கூட அவன் இன்னும் இரண்டு வருடத்தில் வந்துவிடுவான் எனும் அஞ்ஞானத்தில் இருக்கிறாள்.

    தலையைப் பின்னால் சாய்த்து கண்களை மூடினார். ஏன்னா உடம்புக்கு ஏதாவது செய்யறதா? லஷ்மி சிறிது கவலையுடன் கேட்டாள்.

    சே... சே... அதெல்லாம் ஒண்ணுமில்லை. கொஞ்சம் 'படபட'ன்னு இருக்கு. ரொம்ப வேகமா எதுவும் செய்ய முடியலை.

    ஏன்னா கிருஷ்ணா கூட யாராவது பெண்ணை அழைச்சுண்டு வந்தா என்ன செய்யறது?

    என்ன செய்ய முடியும்? வாடியம்மா மருமகளேன்னு ஆரத்தி எடுத்து அழைக்க வேண்டியதுதான்.

    ஐயோ, அதில்லைன்னா கிருஷ்ணாகிட்ட எப்படி நடந்துக்கறது?

    ஒண்ணும் யோசிக்க வேண்டாம். ஏம்மா, அப்படி ஏதாவது இருந்தா நம்மகிட்ட சொல்ற தைரியம் அவனுக்கு இருக்கும். நீ வீணா சினிமா கற்பனையெல்லாம் செய்யாதே.

    ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து விட்டதால் கார் எங்கு நிறுத்தப்படுகிறது என்று டிரைவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு மனைவியை உள்ளே அழைத்துச் சென்றார் சந்தானம்,

    கிருஷ்ணா வெளிநாடு செல்லும் பொழுது முதன்முறையாக உள்ளே வந்த நிகழ்ச்சிகள் ஞாபகத்தில் வர, அங்கேயே செளகரியமான ஓர் இருக்கையில் அமர்ந்தனர்.

    சென்னையில் ஒவ்வொரு

    Enjoying the preview?
    Page 1 of 1