Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aagayam Arugil Varum
Aagayam Arugil Varum
Aagayam Arugil Varum
Ebook224 pages1 hour

Aagayam Arugil Varum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703901
Aagayam Arugil Varum

Read more from Vidya Subramaniam

Related to Aagayam Arugil Varum

Related ebooks

Reviews for Aagayam Arugil Varum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aagayam Arugil Varum - Vidya Subramaniam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஆகாயம் அருகில் வரும்

    Aagayam Arugil Varum

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    பொருளடக்கம்

    வாழ்க்கை... ஒரு தேடல்தானே...

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    வாழ்க்கை... ஒரு தேடல்தானே...

    வெ. இறையன்பு இ.அ.ப.

    இணை ஆணையர்,

    நகராட்சி நிர்வாகம்,

    சேப்பாக்கம்,

    சென்னை - 600005.

    ‘ஆகாயம் அருகில் வரும்’ என்கின்ற வரிகளை உச்சரிக்கும் பொழுது கவித்துவத்தையும் மீறியதாய் ஒளிரும் நம்பிக்கைப் பிழம்பு நம்மை ஆட்கொள்ளும் ஒரு மெல்லிய அதிர்வு.

    கதை என்று தனியாய் எதுவும் இருப்பதில்லை. வாழ்க்கை நம் விழிகளின் முன்பாக நம் அனுபவ ஆழத்திற்கேற்ப விரித்து வைத்திருக்கும் அசாதாரணமான நிகழ்வுகள் எல்லாமே கதைக்கான கருவை உள்ளே ஒளித்து வைத்திருக்கின்றன. ‘இதை எழுதலாமே’ என்ற எண்ணத்தைக் காட்டிலும் ‘இதை எழுதித்தான் தீரவேண்டும்’ என்கிற தீர்மானத்தின் நடுவே நின்று எழுதப்படும் பொழுது நாமே காகிதத்தில் கரைந்துபோன ஒரு திருப்தி தென்படுகிறது. நமக்கு திருப்தி தராத படைப்பு யாரால் பாராட்டப்பட்டாலும் நமக்கு அது மகிழ்ச்சியை அளிக்காமலேயே ஒதுங்கி நின்றுவிடுகின்றது.

    இந்தப் புதினத்தைப் படித்து முடித்தபொழுது யாருடைய அண்டை வீட்டிலோ அமர்ந்து கொண்டு அவர்கள் வாழ்க்கையைத் தாமரை இலை மீது படிந்த தண்ணீராய் ஒட்டாமல் எட்ட நின்று பார்த்த ஒரு உணர்வு. அதில் சோகம், மகிழ்ச்சி, சுகம், இரக்கம் எல்லாவுமாய்த் தெறித்து வாழும் இயல்பு. அந்த வகையில் காட்சியமைப்பிற்கு ஏற்றதாய் இதன் உரையாடல்கள் இதை உயர்த்தி விடுகின்றன.

    ‘இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே’, ‘இன்னும் சற்று அளவு குறைந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே’ எனும்படியான எண்ணங்களுக்கப்பால் வாசித்து முடித்தபின் நேசிக்கிற அளவிற்குப் பொருத்தமாய் எழுதப்பட்டிருக்கிறது. கச்சிதமான கட்டமைப்புடன் வரிகள் ஜீவித்திருக்கும்படியான உள்ளடக்கத்துடன் ஒரு சராசரிக் குடும்பத்தின் நிகழ்வுகள் நீரோடையைப் போல் சீரான ஓட்டத்துடன் எழுதப்பட்டிருக்கின்றன.

    ‘இங்கு சற்று இளைப்பாறிவிட்டு மேலே செல்லலாம்’ என்று தோன்றாதபடி சுவாரசியமான சம்பவங்கள் நம்மைக் கதையின் கடைசிவரி வரை அழைத்துச் செல்கின்றன.

    வாழ்க்கை என்பது தீர்வை நோக்கிச் செல்கிற ஒரு பிரச்சனையா? இல்லை. அது ஒரு விடுகதை. வாழ்ந்து பார்த்துக்கொண்டே ஒவ்வொரு கணத்தையும் ரசிக்கிற பக்குவத்துடன் நம்மை உருவாக்கிக் கொள்ளுகிற ஒரு விந்தை. தீர்வுகளை நோக்கி நாம் பயணித்து என்ன பயன்? ஒவ்வொரு தீர்விலும் ஒரு பிரச்சினை அடங்கியிருக்கிறது. நாமாக முடிவு செய்துகொண்ட விடையைத் தேடித்தான் நாம் பயணப்பட முற்படுவோம். ஒரு சருகாய் நம்மை வாழ்க்கை நதியில் அடித்துச் செல்ல சம்மதித்துவிட்டால் பசியைக்கூட உற்று நோக்கமுடியும். பழைய சோற்றைக்கூட சுவைத்து உண்ணமுடியும்.

    என்றேனும் ஒருநாள் இந்த நிலை மாறிவிடும் என்கிற நினைப்பு மட்டும் உயிரில் ஊறாமல் இருந்தால் மனிதர்களுடைய விழிகள் இருண்டு போயிருக்கும். ஒவ்வொருவரும் அப்படியொரு நாளுக்காகக் காத்துக் கொண்டுதான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    நமது வெற்றிகளுக்கு நம்மை மட்டுமே சுட்டி பெருமையை யாரும் பகிர்ந்தெடுத்துக் கொள்ளாதபடி பார்த்துக் கொள்ளுகிற நாம், தோல்விகளை மாத்திரம் அடுத்தவர்கள் தோள்களில் தொங்கப்போட்டு விடுகிறோம். நம்மில் இருந்துதான் நமது பிரச்சனைகள் ஆரம்பமாகின்றன என்பதை நாம் நம்ப மறுக்கின்றோம்.

    ‘வேலையில்லாத திண்டாட்டம்’ என்பது ஒரு பொதுவான பிரச்சனையாக எழுப்பப்பட்டு வந்தாலும் அது தனிப்பட்ட பிரச்சனைதான் என்பதை ஆழ்ந்து கவனிப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். ‘நாம் நமக்கான வேலை இதுதான்’ என்று முன்கூட்டித் தீர்மானித்து அதை விடாப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டிருப்பதால்தான். இந்தப் பிரச்சனை போஷாக்குடன் வளர்ந்து வருகிறது. இருக்கிற வேலைகளுக்கு ஏற்ற மாதிரி நம்மை செதுக்கிக்கொள்ள முற்படாதவரை இந்தப் புலம்பல் நம் செவிப்பறைகளை சேதப்படுத்தக்கூடும்.

    வித்யா சுப்ரமணியம் இந்தப் பிரச்சனை பொதுவானதல்ல; தனிப்பட்டது என்று அணுகியிருக்கிறார். கதையின் முக்கிய பாத்திரம் திடீரென அரசு அலுவலகத்தில் அமர்ந்தோ திரைப்படத்தில் சேர்ந்தோ பெரும்புள்ளியாக ஆவதாகக் காட்டும் நாடகத்தன்மை ஏதும் இல்லாமல் யதார்த்தமாய் ஒரு சுயவேலை வாய்ப்பைத் தேடிக் கொள்வதாய் நிற்கும் கதையாய் இது அமையும் பொழுது நமக்கு மகிழ்ச்சி தோன்றுகிறது.

    வாழ்க்கை வறண்ட பாலைவனப் பயணமாய்ச் சித்தரிக்கப்பட்டு, எதிர்ப்படும் ஒற்றைப் பனைமரமும் பட்டுப்போய் நிற்பதாய் உருவகப்படுத்தப்படும் விரக்தியை விநியோகிக்கும் இலக்கியங்களிலிருந்து துண்டித்துக்கொண்டு நம்பிக்கையளிப்பதாய் நிற்கிறது. இதில் எல்லாம் உண்டு. காதல், பாசம், அன்பு ஏமாற்றம், விரக்தி, நட்பு என்று மனிதனை கணத்துக்கு கணம் மாற்றிக்கொண்டிருக்கும் உணர்ச்சிகள் அவை யாவும் மெல்லிய அதிர்வுகளாய்ப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

    பெண் தண்ணீர் மாதிரி இருக்கணும். எந்தப் பாத்திரத்துல இருக்கோமோ அந்தப் பாத்திரத்தோட வடிவம், நிறமா மாறிடணும். அதேநேரம் சுயதன்மையையும் இழக்காம இருக்கணும். பொம்மனாட்டியோட வாழ்க்கை அப்படித்தான். அஞ்சுலேர்ந்து பத்து வரை பயந்தெரியாம ஓடற காட்டாறு மாதிரி. பத்துலேர்ந்து பதினைஞ்சு வரை பொங்கிப் பிரவாகமா கொட்டற மலையருவி. பதினைஞ்சுலேர்ந்து இருபதுவரை ஒய்யாரமா நடைபோடற அழகான நதி. அதுக்கப்புறம் கல்யாணம்ங்கற கடல்ல நடந்து தன்னை இழக்கற நிலை. உற்பத்தியாகறதுலேர்ந்து கடல்ல கலக்கிறவரை நதி போற இடமெல்லாம் செழிப்புதான்

    என்று வித்யா சொல்கிற கருத்தில் எனக்கும் உடன்பாடுதான். ஒரே ஒரு சின்னத் திருத்தம். தேடுதலில் இருக்கிற எல்லோருக்குமே இது பொருந்தும். தன்னை முழுவதுமாய் இழக்கச் சம்மதிக்கும் பொழுதுதான் பனித்துளி பாற்கடலில் கலக்கமுடியும்.

    வாழ்த்துக்களுடன்,

    வெ. இறையன்பு

    1

    சித்தி வினாயகருக்கு ஐந்தாறு தோப்புக்கரணம் போட்டுவிட்டு அவரைச் சுற்றிக்கொண்டு நடந்தான் அரவிந்தன். மெயின் ரோடுக்கு வந்து இடதுபுறம் திரும்பினால் பஸ்ஸ்டாண்டு. அதை ஒட்டி ஒரு பாழடைந்த வீட்டின் முன்னால் காம்பவுண்டுச் சுவர் சிதிலமடைந்து குட்டிச்சுவராய் மாறியிருந்தது.

    பஸ்ஸ்டாண்டை ஒட்டி மறுபுறம் பங்க் கடை ஒன்றும் உண்டு. வழக்கமாக அவர்கள் அங்கேதான் கூடுவார்கள். பங்க் கடையில் கடனுக்கு சிகரெட் வாங்கிப் பற்றவைத்துக் கொண்டு குட்டிச்சுவரில் உட்கார்ந்தால் இரவு எட்டு மணிவரை அரட்டைக் கச்சேரி. அந்த வழியாகப் போகும் இளசுகளை வெறித்துப் பார்ப்பது, குசுகுசுவென்று கிண்டலடித்துச் சிரிப்பது என்று பொழுது விரைந்துவிடும்.

    குட்டிச்சுவர் காலியாக இருந்தது. இன்னும் யாரையும் காணவில்லை. அரவிந்தன் சிகரெட் பிடிக்கமாட்டான். ஒரே ஒருமுறை நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாக ஒரே ஒரு சிகரெட் பிடித்துவிட்டு புகை வாசனையோடு வீட்டுக்குப் போனதுமே அம்மா கண்டுபிடித்துவிட்டாள், தேவலைடாப்பா! வேலைவெட்டிக்கு போகாட்டாலும் ஏதோ இந்த வரைக்கும் சிகரெட்டாவது பிடிச்சுட்டு வரயே, சந்தோஷம்! அப்டி உக்காரு சுத்திப் போடறேன்.

    அரவிந்தன் கூசிப்போனான். ‘சிகரெட் பிடிப்பது தப்புடா அம்பி’ என்று அம்மா ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் அவள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருப்பான். ஆனால் வேலைவெட்டிக்கு போகிறவனுக்குதான் சிகரெட் பிடிக்கும் யோக்யதை உண்டு என்கிற ரீதியில் அவள் பேசியதில் மிகவும் நொந்துபோனான். அதற்குப்பிறகு மறந்தும் புகைபிடிக்கவில்லை.

    ஆனாலும் அம்மாவின் சந்தேகம் சந்தேகம்தான். மூக்கைச் சுருக்கி சுவாசத்தை உள்ளிழுத்து சிகரெட் வாடை அடிக்கிறதா என்று பார்ப்பது அவளுக்கு அனிச்சைச் செயலாகிவிட்டது. முதல் கொஞ்சநாட்களுக்கு அவள் அப்படிச் செய்தது அரவிந்தனுக்குக் கஷ்டமாக இருந்தது; போகப்போகப் பழகிவிட்டது.

    பங்க் கடையில் நாலணா கொடுத்து ஒரு சுபாரி பொட்டலம் வாங்கிப் பிரித்துப் போட்டுக்கொண்டு குட்டிச்சுவர் மீது உட்கார்ந்தான். நண்பர்கள் யாரும் இன்னும் வராததால் போரடித்தது. வாகனங்கள் விரைந்து செல்வதை வேடிக்கை பார்த்தான். சற்று நேரத்தில் மரகதமணியும் விஸ்வநாதனும் வந்தார்கள். பங்க் கடையில் சிகரெட் வாங்கிப் பற்றவைத்துக் கொண்டான் மரகதமணி. விஸ்வநாதனும் சிகரெட் பிடிப்பதில்லை. ஒருக்கால் அவனுக்கும் அம்மா என்றால் பயமோ என்னமோ?

    என்னடா ஏதாவது கார்டு வந்துச்சா? விஸ்வநாதன் கேட்டான்.

    ப்ஸு! சலித்துக் கொண்டான் அரவிந்தன்.

    எனக்கொரு கார்டு வந்திருக்கு மரகதமணி ஷர்ட் பாக்கெட்டிலிருந்து அதை எடுத்துக் கொடுத்தான்.

    ‘தற்சமயம் எங்கள் கம்பெனியில் பியூன் வேலை ஒன்றுதான் காலியாக உள்ளது. தங்களுக்கு விருப்பமிருந்தால் நாளை முதலே சேர்ந்து கொள்ளலாம். நேர்முகத்தேர்வு தேவையில்லை. தங்கள் விருப்பத்தை நேரில் வந்து தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.’

    போகப் போறயா? விஸ்வநாதன் கேட்டான்.

    நானா… ப்யூன் வேலைக்கா? ரொம்பத்தான் கொழுப்புடா மச்சி உனக்கு. வேணும்னா இந்த கார்டை எடுத்துக்கிட்டு நீ போய் வேலைல சேரு!

    ம்க்கும்… இதுக்குதான் எம்.ஏ. படிச்சேன் பாரு.

    அப்பொ நாமட்டும் இதுக்குதான் படிச்சேன்றயா?

    டேய் விடுங்கடா… அரவிந்தன் அவர்கள் பேச்சை நிறுத்தினான். அம்மாவிடம் பேச்சுக் கேட்பதைவிட பியூன் வேலை தேவலையோ என்று தோன்றியது அவனுக்கு. அட்லீஸ்ட் போஸ்டல் செலவுகளுக்காவது அப்பாவிடம் கைகட்டி நிற்கவேண்டாமே. அப்பா பாவம், அவன் கேட்கும் அளவுக்கு வைத்துக் கொள்வதில்லை. சம்பளம் வாங்கிய மறுநாளே அவன் பாக்கெட் செலவுகளுக்கு என்று நூற்றி ஐம்பது ரூபாய் கொடுத்துவிடுவார்.

    சில சமயங்களில் அதுவும் தீர்ந்துபோய் அவசரத்திற்கு மறுபடியும் அவர் முன்னால் தயங்கி நிற்பான். அவன் கேட்பதற்குள் அப்பாவே புரிந்துகொண்டு அம்மாவுக்குத் தெரியாமல் ஐம்பது ரூபாயை மடித்து அவன் பாக்கெட்டில் செருகிவிட்டுப் போவார். அம்மாவைப் போல் இல்லை அப்பா என்பதுதான் அரவிந்தனுக்குப் பெரிய ஆறுதல். சின்ன வயசிலிருந்தே அப்பா, குழந்தைகளைக் கடிந்து கொண்டு அவன் பார்த்ததில்லை. அவனிடமும் சரி, சந்தியாவிடமும் சரி, அதிகம் செல்லம் கொண்டாடவும் மாட்டார். அதே நேரம் ‘ச்சீ’ என்று அதட்டவும் மாட்டார்.

    சமயத்தில் அவர் இவர்களிடம் பேசுவதைப் பார்த்தால் அப்பா என்பது மறந்து போய் நல்ல சிநேகிதரோ என்றுதான் நினைக்கத் தோன்றும். அப்போதும் சரி இப்போதும் சரி, அம்மா என்றால்தான் சந்தியாவுக்கும் அவனுக்கும் பயம். அம்மாவின் உருவத்தைவிட, குரல்தான் அதிகம் பயமுறுத்தும். உருவத்தை கெச்சலாக வைத்துவிட்டு உடம்பின் ஆகிருதியையும் சேர்த்து அவள் குரலில் வைத்துவிட்டிருந்தான் பகவான்.

    என்னடா யோசனை? விஸ்வநாதன் உலுக்கினான்.

    ம்…? இல்ல… பேசாம நா போகலாமான்னு யோசிக்கறேன். டேய் மரகதம், அந்தக் கார்டை கொடுடா. எங்கப்பாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு நாளைக்கே போய் பார்க்கறேன்.

    என்னடா… நிஜமாதான் சொல்றயா? இருவரும் ஏககாலத்தில் வியந்தனர்.

    ஏன்டா இப்படி கேக்கறீங்க? இப்டி குட்டிச்சுவர்ல உட்கார்ந்து பொழுதைக் கழிக்கறதைவிட இந்த பியூன் வேலை பெட்டர்னு படறது எனக்கு!

    எம். ஏ. எக்கனாமிக்ஸ்டா நீ!

    அதுசரி, அதுக்காக மன்மோகன்சிங் உத்யோகமா கிடைக்கும்? இப்போதைக்கு என் ஒருத்தன் எக்கனாமிக்ஸை முதல்ல பார்த்துக்கறேன். அரவிந்தன் கீழே இறங்கினான். மரகதமணியிடமிருந்து கார்டை வாங்கிப் பாக்கெட்டில் செருகிக் கொண்டான்.

    டேய் டேய், வண்டிங்க வருது, கொஞ்சம் நேரம் உக்காருடா மரகதமணி அவனைத் தடுத்தான். வண்டிங்க என்றால் அவன் பாஷையில் பெண்கள் என்று அர்த்தம். புதுசாய் யாராவது பெண்கள் போனால் ‘புது வண்டிங்கடா எல்லாம் பளபளன்னு இருக்கு’ என்பான். அல்லது பார்த்துப் பழகின முகங்கள் என்றால் ‘என்னடா இது, டயர்ல காத்திறங்கி போச்சு’ என்பான்.

    அதற்கு அர்த்தம் யாரோ கொஞ்சம் இளைத்து விட்டார்கள் என்பது. ‘போய் காத்தடிப்போமா’ என்று அவர்கள் அருகில் வரும்போது அவர்கள் காதுபடச் சொல்லிச் சிரிப்பான். அவர்கள் முறைத்துவிட்டுச்சென்றால் ‘யப்பா, ஹெட்லைட் எவ்ளோ சூடு பார்டா’ என்பான்.

    இதையெல்லாம் வைத்து மரகதமணியை பெண் பித்தன் என்றோ பொறுக்கி என்றோ சொல்லிவிட முடியாது. அவர்கள் அவனைத் தாண்டிச் சென்றதுமே அவன் பேச்சு வேறு விஷயத்திற்குத் தாவிவிடும். வண்டி வண்டி என்று பெண்களை கிண்டலடிக்கும் அதே வாய் ஜேகேயைப் பற்றியும் அருமையாகப் பேசும்.ஈவ்டீஸிங்’ வேணாண்டா மரகதம். எவளாவது ஒருநாள் உன்னைப் பளார்னு அறையப் போறா பார் என்பான் விஸ்வநாதன்.

    அறைஞ்சுடுவாளா என்னை…? அப்டி எவ என்னை அறையறாளோ அவதான் என் பொண்டாட்டின்னு நினைச்சுக்கோ என்பான் படு கேஷுவலாக.

    அவர்கள் மெல்ல நடந்து வந்து இவர்களை நெருங்கிக் கடந்து சென்றார்கள்.என்னடா இது பின் டயர் ரெண்டும் இப்டி குலுங்குது? மரகதம் எப்போதும் போல தன் கிண்டலை

    Enjoying the preview?
    Page 1 of 1