Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thedal
Thedal
Thedal
Ebook162 pages1 hour

Thedal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாலாசிரியர் டாக்டர் ஜெ.பாஸ்கரன் தோல் மற்றும் நரம்பியல் மருத்துவராகக் கடந்த 37 வருடங்களாகச் சென்னையில் பணி புரிந்து வருகிறார். சென்னை மேற்கு மாம்பலம் ஹெல்த் சென்டரில் மருத்துவக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.

தாய்மொழியாம், தமிழ்மொழியில் எழுதுவதற்கும், படிப்பதற்கும் ஒரு கணிசமான நேரத்தை ஒதுக்கி, சில புத்தகங்களையும், சிறுகதைகளையும், கட்டுரைகளையும் கடந்த பத்தாண்டுகளாக எழுதி வருகிறார்.

2010 ஆம் வருடத்துக்கான தமிழ்நாடு அரசின் 'சிறந்த மருத்துவ நூல் மற்றும் ஆசிரியர்' வகையில் "வலிப்பு நோய்கள்" புத்தகம் விருது பெற்றது. உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர் சங்கம் 'தலைவலி' புத்தகத்துக்கு (சிறந்த கட்டுரைத்தொகுப்பு) என்.ஆர்.கே விருதும், 'அப்பா என்னும் உன்னதமான உதாரண மனிதர்' கட்டுரைக்கு சிறந்த கட்டுரைக்கான விருதையும் வழங்கிக் கௌரவித்தது.

அமெரிக்காவின் உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகம், 'அப்பாவின் டைப்ரைட்டர்' புத்தகத்திற்கு “Best Appreciation Award” வழங்கிக் கௌரவித்தது.

இவரது சிறுகதைகள் கலைமகள், தினமணிக் கதிர், லேடீஸ் ஸ்பெஷல், விருட்சம் சிந்தனை இதழ்களில் வெளியாகின.

கலைமகளின் கி.வா.ஜ நினைவுச் சிறுகதைப் போட்டியில் (2018) இவரது 'காப்பு' சிறுகதை முதற்பரிசு பெற்றது. லேடீஸ் ஸ்பெஷல் சிறுகதைப் போட்டியில் (2018) 'நப்பின்னையாகிய நான்' ஆறுதல் பரிசு பெற்றது. இவரது "தேடல்", உரத்த சிந்தனை யின் என்.ஆர்.கே விருது 2018 சிறந்த சிறுகதைத் தொகுப்பு இரண்டாவது பரிசு பெற்றது.

நூற்றுக்கும் மேலான பொதுக் கட்டுரைகள், மருத்துவக் கட்டுரைகள், வாழ்வியல் கட்டுரைகள், கலைமகள், மஞ்சரி, அமுதசுரபி, நம் உரத்த சிந்தனை, லேடீஸ் ஸ்பெஷல், இலக்கிய பீடம், மக்கள் முழக்கம், தினமணி.காம், விருட்சம்.இன், குவிகம்.காம் மற்றும் முகநூல் தளங்களில் வெளியாகி உள்ளன.

தமிழ் இந்துவில் தலைவலி, வலிப்பு நோய்கள் குறித்த தொடர்கள் 10 வாரங்களுக்கு வெளியிடப்பட்டன. மக்கள் குரல் திருநெல்வேலி பதிப்பு பத்திரிக்கையில், 'ஆட்டிசம்' மற்றும் நரம்பியல் கேள்வி பதில்கள் வெளியாயின.

டெக்கான் க்ரானிக்கல் 'துரித உணவுகள்' பற்றிய கட்டுரையை வெளியிட்டது. இசை, மூளை, மனம் பற்றிய ஆங்கிலக் கட்டுரைகளை 'நாத பிரம்மம்' என்ற இசை இதழ் வெளியிட்டது. 'அது ஒரு கனாக்காலம்' இவரது இளமைக்கால நினைவுகளின் கட்டுரைத் தொகுப்பு!

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580126303906
Thedal

Read more from Dr. J. Bhaskaran

Related to Thedal

Related ebooks

Reviews for Thedal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thedal - Dr. J. Bhaskaran

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    தேடல்

    சிறுகதைகள்

    Thedal

    Sirukathaigal

    Author :

    டாக்டர். ஜெ பாஸ்கரன்

    Dr. J. Bhaskaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-j-bhaskaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. சுழற்சி

    2. புது ஜாதி

    3. கூந்தலே உன்னை ஆராதிக்கிறேன்!

    4. நடைபாதைப் பூ!

    5. மொட்டக் கடிதாசு

    6. தானம்

    7. அம்மா மரம்!

    8. தலைமுறைகள்

    9. சுமை

    10. தேடல்

    11. லெச்சுமி

    12. கண் மலர்கள்

    13. அம்மாவைத் தேடி

    14. பிறழ்வு

    15. நினைவுகளின் நிழல்கள்

    16. மகளிர் மட்டும்!

    17. இலவசம்தானே!

    18. அனாதை உறவுகள்!

    19. பள்ளிக்கு நேரமாச்சு!

    20. முதற்சான்றிதழ்!

    21. ரசிகன்!

    1. சுழற்சி

    அவசர சிகிச்சைப் பிரிவில் மூச்சு பேச்சின்றிக் கிடந்த அவன் முகம் சிறிது தெரிந்த முகமாய்த் தோன்றியது.

    அழுக்கேறிய நீலநிற பேண்ட்; சிகப்பு நிற முண்டா பனியன், கை, கால் முகம் எங்கும் இரத்தம் கசியும் சிராய்ப்புகள்; தலையில் ஒரு கோழிமுட்டை அளவு கரு இரத்தக்கட்டி.

    விரைவாய்க் கூப்பிட்ட குரலுக்கு, மெதுவாய் இமைகள் மூடித் திறந்தன. மூன்றாவது மாடியில் பிளம்பிங்க் வேலை செய்கையில், கால் இடறிக் கீழே விழுந்தவன், அரை மயக்க நிலையில் கோணலாய்க் கிடந்தான்.

    துரிதமாக டெடனஸ் டாக்சாய்ட் ஊசி, காயங்களுக்கு மருந்து, இரத்தக் கொதிப்பு, இரத்த சர்க்கரை அளவு எல்லாம் சரிபார்க்கப்பட்டு, தலைகீழாய்த் தொங்கிய பாட்டிலில் இருந்து, சொட்டு சொட்டாய் குளுக்கோஸ்… ஸ்டெரிலியத்தில் கை துடைத்தபடியே ‘சீக்கிரமா ஒரு சி.டி. ஸ்கேன், எக்ஸ்ரே லாங்க் போன்ஸ், செஸ்ட் எக்ஸ்ரே எடுத்துருங்க, அர்ஜெண்ட்’ என்றேன் அருகிலிருந்த நர்சிடம்,

    கூட யாரும்மா வந்து இருக்காங்க? கூப்பிடுங்க என்றபடியே திரும்பிய என் முன்னால் முனுசாமி நின்று கொண்டிருந்தார். மழை, வெயில் பாராமல் உழைத்த உடம்பு, வலது பக்கம் செயலிழந்து, இறுகிப்போன கை, ஒரு பக்கமாய்த் தாங்கி நிற்கும் கால், தலை முழுக்க நரை, கண்களில் நீர், முகத்தில் சோகத்தின் நிழல்.

    என்ன முனுசாமி, என்ன ஆச்சு?

    மவனுங்க பாவி புள்ள, மாடீலேந்து கீழே விழுந்துட்டாங்க; பட்டமரம், என்னியவே காப்பாத்தி விட்டீங்க மகராசா, பச்சமரம், இத்தையும் எழுப்பி ஒக்கார வச்சிருய்யா சாமி… குரல் உடைந்து விக்கினார் முனுசாமி. சாட்டையால் சொடுக்கிய குதிரையாய், இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தவை என் மனத்திரையில் விரிந்தோடின.

    ஆறாம் எண் ஜெனரல் வார்டில், கடைசி கட்டிலில் முனுசாமி, அதிகாலை படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாமல், வலது கை, கால் சுவாதீனமிழந்து, அரை மயக்கத்தில் அட்மிஷன். கவனிக்கப்படாத இரத்தக்கொதிப்பு, மூளையின் இரத்தக் குழாயைப் பாதித்து, எழுபது வயது முனுசாமிக்குப் பக்கவாதம். நல்லவேளையாக, சிகிச்சை பலனளித்து, உயிர் பிழைத்தார். ஆனாலும் அவர் தானாய் எழுந்து நடப்பதற்கும், பாத்ரூம் செல்வதற்கும், பிஸியோதெராபி மற்றும் மருந்துகள் என, இன்னும் ஓரிரு மாதங்களுக்குச் சிகிச்சை தேவைப்படும். மனைவியை இழந்து, தனிமரமாய் நிற்கும் முனுசாமிக்கு, அவரது ஒரே மகனின் முழு கவனமும் இப்போது தேவைப்பட்டது.

    ஓரளவுக்குத் தேறிய முனுசாமி வீட்டுக்குப் போவதற்குத் தயாரானார். அவர் மகன் இன்று அரை மயக்கத்திலிருக்கும் சேகர், என்னிடம் மெதுவாக வந்து அப்பா நல்லா ஆய்ட்டாங்களா டாக்டர்? ஆனா… இன்னும் தானா எழுந்து நடக்கலீங்களே… என்றான் இழுத்தவாறே…

    அதுக்குக் கொஞ்ச நாளாகும். பிஸியோதெரபி செய்திட்டு வந்தாங்கன்னா சரியாயிடுவாங்க. இனிமே ஆஸ்பத்திரியிலே இருக்கத் தேவையில்ல…

    அதுக்கு இல்லே, சேகர் தயங்கியவாறே கேட்டான்; வேறே ஏதாச்சும் செய்ய முடியுமான்னு… குரலில் இருந்த அழுத்தம் சிறிது வித்தியாசமாய்ப்பட்டது.

    டிஸ்சார்ஜ் எழுதிக் கொண்டிருந்தவன் குனிந்த தலை நிமிராமல், முடிஞ்சதெல்லாம் செய்துட்டோம்பா, நல்லாய்ட்டு வராரு, வீட்லயே வெச்சு இனிமே பாத்துக்கலாம். சீக்கிரமே நடந்துருவாரு என்றேன் அவனைத் தேற்றும் விதமாக. அங்கே ஓர் அமைதி விழுந்தது.

    இல்லே இப்போது அவன் குரலின் அழுத்தம் கூடியிருந்தது. இல்லே, வேற எதுனாச்சும்… செய்ய முடியுமான்னு…

    என்னை யாரோ உற்று நோக்குவதை உணர்ந்து, தலை நிமிர்ந்தேன். என் பார்வையின் வெறுப்பு கலந்த சீற்றம் அவனைச் சிறிது அசைத்திருக்க வேண்டும்.

    அது இல்லே சார், சின்ன வீடு, ஒரே ரூம். இப்பத்தான் கண்ணாலம் கட்டிக்கினேன். என் பொண்சாதி சிறிசு பாருங்க, பயப்படுது. இவரை எங்கே வெச்சுப் பாக்கறதுங்க? அதுதான். ஏதாவது செய்ய முடியுமான்னு… இழுத்தபடி, கவிழ்ந்த தலையுடன், அரைக் கண்ணால் என்னைப் பார்த்தபடி கேட்டான். அவன் கேள்வியின் உக்கிரம் என்னைத் தூக்கிப்போட்டது! இப்படிக்கூட உறவுகள் இருக்க முடியுமா? எந்த ஆதார சுருதியும் இல்லாத வாழ்வின் இலக்குதான் என்ன? விழுதுகளே வேரை வெட்டும் வேட்கை எப்படி வந்தது? உடல் ஒருமுறை சிலிர்த்து, நான் என் நிலைக்கு வருமுன் சில கணங்கள் கரைந்தன.

    என்ன? என்பதுபோல் அவனைப் பார்த்தேன்.

    மீண்டும் அவன் அதே கேள்வியைத், தயக்கமின்றிக் கேட்டபோது நான் என்னை இழந்தேன். வர்ற பேஷண்டையெல்லாம் எப்படியாவது காப்பாத்தணும்ன்னுதான்யா எங்களுக்கு சொல்லிக் கொடுத்து இருக்காங்க. நீங்க சொல்ற மாதிரி செய்யறதுக்கில்லே. எதுக்குமே பயனில்லாமே கோமாவில் இருக்கிறவங்களையே நாங்க விபரீதமா ஒண்ணும் செய்யக் கூடாதுன்னு எங்க மருத்துவ நீதி சொல்லுது! மனசாட்சியே இல்லாம நீ கேக்கறது நல்லா இல்லேய்யா, உனக்கும் வயோதிகம் வரும்யா, மறந்துடாதே

    வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவனிடம், இங்க ஆஸ்பத்திரியிலே ஓரளவுக்குமேல வெச்சுக்க முடியாது. இங்கேயே இருந்தா வேற தொத்து நோயெல்லாம் வரும். மேலும், அவர் வீட்ல இருந்தாத்தான் இன்னும் வேகமாக் குணம் அடைவாரு என்றேன்.

    அரைமனதுடன், என்னை மனதார சபித்துக்கொண்டே, சேகர் திரும்பிப் போனான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எங்கேயோ பார்த்தபடி முனுசாமி கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தார். இனி என்ன என்பதுபோல்! காலத்தின் சுழற்சிதான் எவ்வளவு வினோதமானது! இன்று அதே முனுசாமியின் கருணைக் கரங்களில் அவர் மகன்!

    சேகர் மண்டையில் உள்காயம் ஏதுமில்லை. கை எலும்பு மட்டும் முறிந்திருந்தது, உயிருக்கு ஆபத்தொன்றுமில்லை. இன்னும் இரண்டு, மூன்று வாரங்களில் எலும்புகள் கூடிய பிறகு பிரச்சனை ஏதும் இராது. மாவுக்கட்டுக்கை, கழுத்து நூல் மாலையில் ஊஞ்சல் ஆடியது.

    நாள் முழுதும் முனுசாமி கையில் டீ, பன், பிளாஸ்டிக் பையில் பலகாரம், மருந்து, மாத்திரை என அங்கேயே சுற்றி வந்தார். வார்டுக்கு வெளியே வராந்தாவில் இரவு தூங்குவார்; சேகர் சிறிது செருமினாலும் சட்டென எழுந்து உட்கார்ந்து கொள்வார். கவலை தோய்ந்த முகத்துடன், தன் பக்கவாதத்தையும் பொருட்படுத்தாமல் தன் மகனை அவர் கவனித்துக்கொண்டது, மருத்துவமனை சிப்பந்திகள் அனைவரின் அன்பையும், மரியாதையையும் அவர்பால் திருப்பியது.

    இன்னா, டீ குட்சியா? ஆயா.

    முனுசாமி, நீங்க போய் குளிச்சு, சாப்பிட்டு வாங்க; உங்க மகன நாங்க பாத்துக்கறோம் டூட்டியில் இருக்கும் நர்சு.

    சேகர் தன் தந்தையைப் பார்த்துக்கொண்டே இருந்தான். மனதை ஏதோ பிசைந்தது. கண்களில் ஈரம் கசிந்தது. மனைவி முதல் நாள் வந்ததோடு சரி கேட்டதற்கு முனுசாமி, அது சின்ன புள்ளடா, பயப்படுதோ என்னாவோ என்று மருமகளுக்குப் பரிந்து பேசினார். வூட்டப் பாத்துக்கணும், ஒனக்கு ஏதாச்சும் வாய்க்கு ருசியா செய்யணுமில்ல? என்று ஆறுதல் சொன்னார். மனம் கனத்தது. அப்பா என்னும் ஜீவன் எப்படி தன்னை வருத்திக்கொண்டு இங்கு என் உயிருக்குக் காவல் காக்கிறது? இவரையா ஏதாவது செய்யச் சொன்னேன்? இந்த வலி, மற்ற வலிகளை மரக்கடித்தது.

    முனுசாமி, நாளைக்கு உங்க பையனை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம். ஒரு வாரம் கழித்து, புறநோயாளிகள் பிரிவில் வந்து காண்பிங்க. மருந்தெல்லாம் ஒழுங்கா எடுத்துக்கச் சொல்லுங்க. நல்லாயிடுவாரு கைகூப்பிய முனுசாமியின் கண்களில் ஈரம், முகத்தில் மகிழ்ச்சி.

    ஐயா, புள்ள குட்டிங்களோட நல்லா இருக்கணும் நீங்க,’ மடங்கிய வலது கையும், இறுகிய வலது காலும் சுழல, விந்தி, விந்தி சேகரை நோக்கிப் போனார் முனுசாமி.

    மாலை, மருத்துவமனை வாசல் வராந்தாவில் ஒரே கூச்சலும், குழப்பமுமாக, கூட்டமாயிருந்தது. என்னவென்று விசாரித்ததில், நடந்து வந்து கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென்று மாரடைப்பில் அங்கேயே விழுந்து இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். கூட்டத்தை விலக்கிப் பார்த்த எனக்கு அதிர்ச்சி. சக்கர வண்டியில் சேகர் அருகில் கையில் ஒரு மஞ்சள் பையுடன் முனுசாமி வான் நோக்கி சாய்ந்து கிடந்தார்.

    ஏதோ பத்திரப்பதிவு அலுவலகத்தில் தாமதமாகி விட்டதென்றார்; மகனை வீட்டுக்கு கூட்டிப்போக அவசரமாக வந்தவர் இப்படிப் போய்ட்டாரே, என்று அருகிலிருந்த நர்சு வருந்தினார். முனுசாமி எனும் மனிதன் காலத்தை வென்றாலும், காலனை வெல்ல முடியவில்லை. தரையில் கிடந்தவரை நோக்கினேன். மஞ்சள் நிறப் பையிலிருந்து, சேகருக்கு மாற்றி எழுதிய

    Enjoying the preview?
    Page 1 of 1