Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Udhaya Geetham
Udhaya Geetham
Udhaya Geetham
Ebook99 pages38 minutes

Udhaya Geetham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Inspired by mother Lakshmi Rajarathnam, started to write from the age of 10 in kids magazines and even won a prize in Balamitra.

Written more than 250 short stories, 30 novels and serials in all leading magazines like Kumudam, Kalki, Devi, Rani, Amuthasurabi, Penmani, Kanmani, Malaimadhi, Ranimuthu etc. Also, written many dramas for All India Radio (AIR).

Won Dinamalar short story prize for the story "Jeevanadigal Vatruvadillai"

Recent Kumudam short story Kalasam was a historical story which got lot of appreciation

Having given 100s of Bharathanatya performances, currently running a dance class and also interested in paintings.

Married to Priya Kalyanaraman , also a journalist

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580126003893
Udhaya Geetham

Read more from Rajashyamala

Related to Udhaya Geetham

Related ebooks

Reviews for Udhaya Geetham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Udhaya Geetham - Rajashyamala

    http://www.pustaka.co.in

    உதய கீதம்

    Udhaya Geetham

    Author:

    ராஜசியாமளா

    Rajashyamala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajashyamala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    ஆரஞ்சுப் பந்தாய் சூரியன் தகதகத்தது.

    ஜன்னல் அருகே வைக்கப்பட்டிருந்த குளிர்ந்த தண்ணீரைக் குடிக்க வந்த திவ்யாவின் கண்கள் சூரிய கிரணத்தால் கூசின. சற்றே கண்களை மூடித் திறந்து பழக்க, அந்த ஒளிக்கு கண்கள் பழகின. ஒளிக்கற்றைகளின் நடுவே வட்ட ஆரஞ்சு சூரியன் 'இன்று உழைத்துக் களைத்து விட்டேன். வீடு போகப் போகிறேன்' என்றான்.

    இன்னும் அரை மணியில் சூரியன் அஸ்தமித்து விடுவான். அலுவலக நேரமும் முடிந்து விடும். அதற்குள் ஸ்டேட்மெண்டை முடிக்க வேண்டும். அவசரமாய் இருக்கையில் போய் அமர்ந்து, விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தாள். வேகமாய் செய்ய மனமிருந்தாலும் காலை நேரச் சுறு சுறுப்பைக் காட்ட மூளை தயங்கியது, இப்போது.

    ஒரு நிமிடம் கண்களை மூடினாள். மனதை கட்டுக்குள் கொண்டுவந்து ஒருமுகப்படுத்தினாள். உடல் தளர அமர்ந்தாள். உடலின் ஒவ்வொரு உருப்பாக மனதில் நினைத்து 'ரிலாக்ஸ்' 'ரிலாக்ஸ்' என்று ஜபித்தாள். உடல் முழுதும் ரிலாக்ஸாக, கடைசியாக ஆழ்ந்த ஒரு அமைதி மனதில் ஊடுருவியது. சில நிமிடங்கள் அப்படியே இருந்தாள். அதுவரை மனதில் ஓடிக் கொண்டிருந்த தாறுமாறான எண்ணங்கள் சட்டென்று விலகிப் போயின. ஒரு புத்துணர்ச்சி ஓடி வந்து ஒட்டிக் கொண்டது. சுத்தமான சாத்த மூளை சுவாசிப்பது போல் ஒரு நிறைவு தோன்ற மெல்ல கண்களை விழித்தாள்.

    வீடாக இருந்திருந்தால், இதே போல் மேலும் மனதை ரிலாக்ஸ் செய்ய, அமைதியான தூக்கம் கண்களைத் தழுவி இருக்கும். இப்பாது வேலை இருக்க, அமைதியும், சுறுசுறுப்பும் ஏற்றிக் கொண்ட மனதையும், மூளையையும் அதில் ஈடுபடுத்தினாள். வேகமாய் செயல் பட முடிந்தது. அறிக்கையை முடித்து மேலதிகாரியிடம் கையெழுத்து வாங்கினாள்.

    பையை எடுத்துக் கொண்டு கிளம்பும் பொழுது உடன் பணிபுரியும் அனு வந்தாள்.

    போலாமா? பேசியபடியே நடந்தார்கள்.

    அனு, நான் இன்னைக்கு அம்மா வீட்டுக்குப் போறேன், உன் கூட பஸ்ல வர முடியாதுடா.

    சன்னமாக விசிலடித்தாள், அனு.

    என்னம்மா விசேஷம். அதான் முகமே ஒரு களையா இருக்கோ இன்னைக்கு?

    அதெல்லாம் இல்லப்பா. நானென்ன சீராடவா போறேன்? அரை நாள் அப்படி போயிடத்தான் முடியுமா? இன்னைக்கு நாத்தனார் மஞ்சுவும், அவ வீட்டுக்காரரும் வராங்க. விருந்து போய் சமைக்கணும்.

    அப்ப எதுக்கு அம்மா வீட்டுக்குப் போறோ!

    அம்மாவுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை, டாக்டர்கிட்டே இன்னைக்கு அப்பாய்ன்மென்ட் வாங்கி இருந்தேன். அது என் வீட்டு மனுஷங்களுக்குத் தெரியும், இருந்தும் என் மாமியார், என் நாத்தனாரையும், அவ வீட்டுக்காரரையும் விருந்துக்கு கூப்பிட்டுட்டாங்க. என்ன செய்ய முடியும் சொல்லு?

    உன் நாத்தனாருக்கு கல்யாணம் முடிஞ்சு ரெண்டு மூணு மாசமாயிடுச்சு இல்லே, இப்ப என்ன திடீர் விருந்து?

    மாப்பிள்ளையை தகுதி அடிப்படையில் ஒரு டிரெய்னிங்குக்குத் தேர்ந்தெடுத்திருக்காங்களாம். அதான்.

    பேஷ், ஒரு சாதாரண டிரெய்னிங் விஷயமா விருந்தா? சரி திவ்யா, போன மாசம் இன்கிரிமெண்டோட உனக்கு ஆபீசர் கிரேடுக்கு பிரமோஷன் கிடைச்சுதே. அதுக்கு உங்க மாமியார் என்னம்மா செஞ்சாங்க?

    சின்ன விரக்தி சிரிப்பு ஒன்று அவள் இதழ்களில் ஓடியது

    அதெல்லாம் நம்ம ஊர்ல கேட்கவே கூடாது அனு நம்ம நாட்டைப் பொறுத்தவரை மாப்பிள்ளைகள், பிள்ளைகளெல்லாம் கொண்டாடப்பட வேண்டியவங்க. மருமகள்கள் மட்டும் உடல், சம்பளம், சீர்னு எல்லா வகையிலும் உழைச்சுக் கொட்டியும் அடிமை வாழ்வு வாழ வேண்டிய ஜென்மங்கள், சரி விடு. பேசித் தீரும் பிரச்சனையா இது?

    பஸ் ஸ்டாப்பிற்கு வந்து விட்டார்கள் இருவரும், நிறுத்தத்தில் வழக்கம் போல் கூட்டம் இருந்தது. ஒரு ஓரமாக இருவரும் நின்றார்கள்.

    நீ வழக்கமான பஸ்ல போ, அனு. நான் அம்மா வீட்டுக்குப் போயிட்டு வரேன்.

    சரி, திவ்யா. ஆனா, வீட்ல போய் விருந்துக்குத் தயார் செய்ய வேண்டாமா நீ? அம்மா வீட்டுக்குப் போறேன்னு சொல்றே?

    அம்மாவோட ரத்தம், யூரின், எக்ஸ்ரேன்னு ரிசல்ட்டை நேத்தே லேப்ல வாங்கி வீட்டுக்கு எடுத்துப் போயிட்டேன். அதை இப்ப அம்மாகிட்டே கொடுத்துட்டு அப்பாவை விட்டே டாக்டர்கிட்டே அம்மாவை கூட்டிப் போகச் சொல்லணும், பாவம், வயசான காலத்துல இருட்டுல ரெண்டு பேரும் போயிட்டு வரணும்! பெற்றோர் நினைவில் மனம் இளகித் தவித்தது.

    பேசாம உங்க அண்ணன் கூட போய் உங்கப்பாம்மா இருக்கலாம் திவ்யா

    டெல்லி கிளைமேட் அம்மாவுக்கு சரிப்படலை, அனு. அண்ணனும் டிரான்ஸ்பருக்கு முயற்சி செய்றாரு. அண்ணிக்கு தனியார் நிறுவன வேலை. திடீர்னு அவங்க வேலையை விட முடியாது. மாற்று ஏற்பாடு செய்யணும், அவங்க பெரிய பையன் டென்த் படிக்கிறான். அண்ணன் சென்னை திரும்ப இத்தனை பிரச்சனை இருக்கு.

    பஸ் வர, அவசர அவசரமாய், பை என்று கூறி விட்டு கூட்டத்தில் அடித்துப் பிடித்து எறிக் கொண்டாள் திவ்யா

    பஸ் ஸ்பென்சரைக் கடக்கும் போது உலகமே 'காதலர்’களுக்கானது என்பது போல் 'வாலன்டைன்ஸ் டே' கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்தது.

    திவ்யா அந்த நெருக்கடியிலும் தன்னையும் மீறி

    Enjoying the preview?
    Page 1 of 1