Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kuttra Surangam
Kuttra Surangam
Kuttra Surangam
Ebook106 pages1 hour

Kuttra Surangam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903854
Kuttra Surangam

Read more from Pattukottai Prabakar

Related to Kuttra Surangam

Related ebooks

Related categories

Reviews for Kuttra Surangam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kuttra Surangam - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    குற்றச் சுரங்கம்

    Kuttra Surangam

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    நிறம் மாறிக் கொண்டிருக்கும் வானத்திலிருந்து வெளிச்சம் ஒழுகிக் கொண்டிருந்தது. தேதிகள் கிழிக்கப்பட்டு, பற்கள் துலக்கப்பட்டு, பால் பாக்கெட்டுகள் பொறுக்கப்பட்டு, செய்தித்தாள்கள் புரட்டப்பட்டு, விளக்குகள் அணைக்கப்பட்டு... மற்றும் ஒரு புதிய நாள்.

    அந்த ஸ்டோர்சில் பதினான்கு குடித்தனங்கள். கைப்பம்பு முன்பாக குடங்கள். எவர்சில்வர். பித்தளை. பிளாஸ்டிக். காத்திருக்கும் நேரத்தில் பெண்கள் அவல் மென்று கொண்டிருந்தார்கள்.

    கோகிலா வீட்ல புதுசா கலர் டெலிவிஷன் வாங்கிருக்கா, பார்த்தியா?

    என்ன பெரிய அதிசயம்? இன்ஸ்டால்மெண்ட்டு! என் வீட்ல கூடதான் வந்து கெஞ்சினான். வெறும் ஐநூறு கட்டினா பொட்டி கொண்டாந்து வீட்ல வெக்கிறேன்னான். எனக்கு இந்த கடன் பிசினெசேப் பிடிக்காது

    தேவகிக்கு டாக்டர் என்ன சொன்னாங்களாம்? கேட்டியா?

    கல்யாணமாகி நாலு வருஷம் கழிச்சு முதல் தடவையா உண்டாயிருக்கா. ஸ்கான் பண்ணிப் பார்த்தா... பொம்பளைப் பிள்ளையாம். மாமியார்க்காரி கலைச்சிடச் சொல்றாளாம்.

    புருஷன் என்ன சொல்றான்?

    அம்மாவோட வார்த்தையை அவன் என்னைக்கு மீறிப் பேசிருக்கான்?

    பாவமே! அதான் இவ முகம் வாட்டமா இருக்குதா?

    ஜலஜா வீட்டுக்கு அவ தங்கச்சி வந்து ஒரு மாசமா தங்கி இருக்கா இல்லே, ஏன்னு சொல்லு பார்க்கலாம்.

    மெட்ராசை சுத்திப் பார்க்கறதுக்காக வந்திருக்கிறதா சொன்னா

    ஒரு நாளைக்கு மேல சுத்திப் பார்க்கறதுக்கு மெட்ராஸ்ல என்னடி இருக்கு? அதுக்கு ஒரு மாசமா டேராப் போடுவாங்க?

    பின்னே என்ன காரணம்? உனக்குத் தெரியுமா?

    துப்பறிஞ்சில்ல தெரிஞ்சி வெச்சிருக்கேன். அவளுக்கு கர்ப்பப்பையில் கட்டி மாதிரி இருக்காம். கல்யாணப் பொண்ணுக்கு இப்படி இருந்தா எப்படி? விஷயம் வெளில பரவிடுமேன்னு மெட்ராசுக்கு வரவழைச்சு ரகசியமா வைத்தியம் பார்த்துகிட்டிருக்கா.

    ரமணியோட புருஷனை எங்கே பத்து நாளாக் காணோம்?

    உனக்குத் தெரியாதா? ஆபீஸ்ல ஏதோ பிரச்சனை. ஹைதராபாத்துக்கு தண்டனை மாதிரி தூக்கி அடிச்சிட்டாங்க. இவ பெருமையா டிரெயினிங்குக்கு கம்பெனி அனுப்பி வெச்சிருக்கிறதா சொல்லிட்டுத் திரியறா.

    புருஷன் ஊர்ல இல்லாதப்போ இவ எங்கே கொண்டை போட்டுக்கிட்டு லிப்ஸ்டிக் அப்பிக்கிட்டு வெளில போறா?

    சொந்தக்காரங்க வீட்டுக்குன்னு சொன்னா. எந்த அளவுக்கு உண்மையோ அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

    ஆனந்தியை பொண்ணு பார்த்துட்டுப் போனாங்களே, என்ன ஆச்சாம்? பதில் எதுவும் வந்திச்சாமா?

    மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு மொட்டைக் கடுதாசி போச்சாம்

    என்னன்னு?

    ஆனந்திக்கு ஒரு காதல் விவகாரம் இருக்குன்னு யாரோ எழுதிப் போட்ருக்காங்க. அப்புறம் எப்படி பதில் வரும்? மார்க்கெட்ல பார்த்தப்போ தரகர் எங்கிட்ட சொன்னார். யார் கிட்டயும் சொல்லாதிங்கன்னார். நீங்களும் யார்கிட்டயும் சொல்லிடாதிங்க. பாவம்! ஒரு பொண்ணோட வாழ்க்கைப் பிரச்சனை.

    ஆனந்தி நிஜமாவே யாரையாச்சும் லவ் பண்றாளா என்ன?

    எப்பவும் ஒரு கனவுலதான் இருக்கா. மூணு தடவை கூப்புட்டாதான் திரும்பிப் பார்க்கறா. தானா சிரிச்சுக்கறா. இருக்கலாம்.

    அவ யாரை லவ் பண்றாளாம்? தெரியுமா?

    நான் என்ன நினைக்கிறேன்னா...

    சட்டென்று வாக்கியம் பிரேக் அடித்து நின்றது.

    வசந்தன் தன் பிளாஸ்டிக் பக்கெட்டோடு வந்து குடங்களின் வரிசையில் கடைசியாக வைத்துவிட்டு நின்றதும், அத்தனைப் பெண்களும் பேச்சை நிறுத்தி தங்களுக்குள் பார்த்துக் கொண்டார்கள்.

    வசந்தன் லுங்கியும், கை வைத்த பனியனுமாய் இருந்தான். அவன் தோளில் துவைக்க வேண்டிய இரண்டு பேண்ட், சட்டைகள் கிடந்தன.

    ஏய், நகருடி. என்ஜினியரு முதல்ல தண்ணி அடிச்சிட்டுப் போயிடட்டும்

    இல்லைங்க. அவசரமில்லை, என் முறை வர்றப்போ அடிச்சுக்கறேன்

    பரவாயில்லை, அடிச்சிட்டுப் போங்க. ஆம்பளைங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும்.

    வசந்தன் வாளியை எடுத்து முன்னால் வைத்தாள் ஒருத்தி, சலுகை அவனுக்காக அல்ல! தடைப்பட்ட அரட்டை தொடர வேண்டும் என்பதற்காக.

    வசந்தன் அடித்து தண்ணீர் பிடித்துக் கொண்டு வீட்டின் பின்புறம் இருந்த குளியலறையை நோக்கிச் செல்ல...

    அரட்டை தொடர...

    அருகிலிருந்த ஒரு போர்ஷனின் ஜன்னலில் இருந்து வசந்தனை யேப் பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தி உள்புறமாகத் திரும்பி, அம்மா, துவைக்கிறதுக்கு ஏதாச்சும் துணி இருக்கா? என்றாள் கையில் வைத்திருந்த காபியைக் குடித்தபடி.

    அதான் காலைலயே எல்லாம் துவைச்சி மாடில காயப் போட்டுட்டும் வந்துட்டியே... இன்னும் என்ன இருக்கு? என்றுக் குரல் வந்தது.

    யோசித்தாள். தன் கையிலிருந்த காபி டம்ளரைப் பார்த்தாள். தன் தாவணியில் கொஞ்சம் ஊற்றிக் கொண்டாள்.

    இல்லைம்மா, தாவணில கொஞ்சம் காபி சிந்திடுச்சி. அதை உடனேத் துவைச்சாதான் கறை போகும். அதோட வேற ஏதாச்சும் துவைக்கனுமான்னு கேட்டேன் என்றபடி தன் தாவணியை நீக்கினாள்.

    கொடியில் தொங்கிய மற்றொரு தாவணி எடுத்து, அதை அணியும் முன்பாக எதிரே கண்ணாடியில் ஒரு முறை தன்னை நேராக பக்கவாட்டில் பார்த்துக் கொண்டு அதன் பின் அணிந்தாள்.

    ஆனந்தி பின்புறம் வந்தபோது அந்தக் குளியலறையின் கதவு திறந்திருக்க, குந்தி அமர்ந்து தனது சட்டைகளுக்கு சோப்பு போட்டுக் கொண்டிருந்தான் வசந்தன்.

    அதற்கு அடுத்த அறையின் வாசலுக்கு வந்த ஆனந்தி வேண்டுமென்றே தன் கண்ணாடி வளையல்களை சப்தப் படுத்தினாள்.

    அவன் திரும்பிப் பார்க்க...

    "குட் மார்னிங்

    Enjoying the preview?
    Page 1 of 1