Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nile Nadhi Kanavu
Nile Nadhi Kanavu
Nile Nadhi Kanavu
Ebook200 pages1 hour

Nile Nadhi Kanavu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறு வயதிலிருந்தே கதை, கட்டுரைகளில் நாட்டம் கொண்ட எழுத்தாளர் காந்தலக்ஷ்மி சந்திமெளலி. முதலில் ஆங்கிலத்தில் எழுதத் தொவங்கினார். உலக நாடுகள் பலவற்றிற்கு சென்றுள்ள இவர் தமிழில் சிறுகதைகள் எழுத துவங்கினார். "தினமணி - ஞாயிறு மணி, லேடீஸ் ஸ்பெஷல், கலைமகள், அமதசுரபி, கோகுலம் கதிர் என்று பல நேர்காணல்களுக்கான வாய்ப்புகள் பெற்ற பொழுது சாதனையாளர்களின் வாழ்க்கையை நேரடியாக காணும் வாய்ப்பு பெற்றேன்" என்கிறார். சிறுவர் இலக்கியம், நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் என்று பல்வேறு களங்களில் தடம் பதித்துள்ள இவர் நந்தா தீபம், சிறுவர் இலக்கிய ரத்னா, சிறந்த எழுத்தாளார், எழுத்துச்சுடர், அருள் வளர் நங்கை என்று பல விருதுகளை பெற்றுள்ளார்.

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு பல நூல்களை மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலத்திலும் சில நூல்கள் எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125903862
Nile Nadhi Kanavu

Read more from Kanthalakshmi Chandramouli

Related to Nile Nadhi Kanavu

Related ebooks

Reviews for Nile Nadhi Kanavu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nile Nadhi Kanavu - Kanthalakshmi Chandramouli

    http://www.pustaka.co.in

    நைல்நதிக் கனவு

    Nile Nadhi Kanavu

    Author:

    காந்தலக்ஷ்மி சந்திமெளலி

    Kanthalakshmi Chandramouli

    For more books

    http://pustaka.co.in/home/author/kanthalakshmi-chandramouli

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    1

    அரசன் அவுரங்கசீப் மொகலாய சாம்ராஜ்யத்தின் முற்றுப்புள்ளி என்றே கூறலாம். கொடுமைக்கார அரசனான அவன், தன் தந்தை ஷாஜஹானையும் விட்டு வைக்கவில்லை. முனைவர் லலிதாவின் குரல் கல்லூரியின் அறையில் ஓங்கி ஒலித்தது.

    பவித்ரா ரகசியமாக தன் கைகடிகாரத்தைப் பார்த்தாள். எப்பொழுதும் போல ப்ரீதி இன்றைக்கும் 'லேட்'!

    மறுபடியும் சரித்திர பேராசிரியரின் குரல் ஒலிக்கத் துவங்கியது.

    அதே சமயம் அறை வாசலில் ப்ரீதியின் குதிகால் செருப்பு ஒலி வேகமாக கேட்டது.

    எக்ஸ்க்யூஸ் மீ மேடம்! ப்ரீதி வெள்ளை சல்வார் கமீஸில் தேவதையாக கதவருகில் நின்றாள்.

    தன் மூக்கு கண்ணாடி வழியே முறைக்கும் பேராசிரியர் லலிதாவிற்கு 'வணக்கம்' என்று கை குவித்தாள்.

    ப்ரீதி, நானும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். இப்படி தினமும் 'லேட்' ஆக வருவதற்கு நீ வெட்கப்பட வேண்டும். இன்னும் மூன்று மாதத்தில் முதுகலை பட்டம் வாங்கி, வெளியுலகில் காலடி வைக்க வேண்டும். பொறுப்பில்லாமல் இருப்பது சரியா?

    கதவில் ஒய்யாரமாக சாய்ந்துக் கொண்டே பேராசிரியரின் பேச்சை கேட்ட ப்ரீதி வெட்கப்படறேன், மேடம். வேதனைப்படறேன் மேடம், நான் ஏன் 'லேட்'டாக வந்தேன் என்று தெரிந்தால், நீங்க சந்தோஷப்படுவீங்க, பெருமிதப்படுவீங்க மேடம் என்றாள்.

    மொத்தம் 80 மாணவிகளைக் கொண்ட அந்த அறையில் நிசப்தம்!

    இன்றைக்கு ப்ரீதி என்ன கதை கூறப் போகிறாள்? இவளுக்கென்று எங்கிருந்துதான் இப்படி எல்லாம் பேசத் தோன்றுகிறதோ! பவித்ராவிற்கு சிரிப்பு வந்தது.

    அடுத்து பேராசிரியரின் பதிலை எதிர்பாராமல் பேசினாள் ப்ரீதி.

    நான் வர வழியிலே ஒரு 'ஆக்ஸிடெண்ட்' புது திருமண ஜோடி! பாவம், அவங்க அடிபட்டு துடிச்ச துடிப்பு இருக்குதே... மேடம், என் துப்பட்டாவால் அவங்களுக்கு கட்டுப்போட்டு, ஆஸ்பத்திரிக்கு அலைஞ்சு... அப்பப்பா கொடுமையின் உச்சக்கட்டம்.

    கிட்டத்தட்ட ஒரு சீரியலின் கதாநாயகி போன்றே தோன்றினாள் ப்ரீதி.

    சரி, சரி போய் உட்காரு. எனக்கு லெக்சர் முடிக்கணும்.

    மொத்தம் வகுப்பறையே தன்னை நோக்க பெருமையுடன் நடந்து பவித்ராவின் அருகில் அமர்ந்தாள் ப்ரீதி!

    என்னம்மா, லெக்சரருக்கு காதுல பூ சுத்தியாச்சா? நாளைக்கு என்ன கூறப் போகிறாய் என்று காண ஆவலுடன் காத்திருக்கிறோம் மற்றொரு பெண் கூற, சிரிப்பை அடக்க முடியாமல் மற்ற பெண்கள் அவஸ்தைப்பட்டனர்.

    உனக்குன்னு எப்படிதான் இதெல்லாம் தோணுதோ பவித்ரா பேராசிரியர் மீது ஒரு கண்ணும், ப்ரீதி மீது ஒரு கண்ணுமாகக் கூறினாள்.

    என்ன வார்த்தை கூறிவிட்டாய் பவித்ரா? என் பொய்களைக் கேட்டு நீ மகிழ்ந்து விடுவாய் என்று ஓடோடி வந்த என்னை ஏமாற்றத்திற்குள்ளாக்கி விட்டாய். எல்லாம் என் தலைவிதி. பேசு பவித்ரா, பேசு!

    தாங்க முடியாமல் பவித்ரா சிரிக்க, பேராசிரியர் நீங்க இரண்டு பேரும் பேசி முடித்த பிறகு சொல்லுங்கம்மா. மீதி பாடத்தை நடத்தறேன் என்று கூறினார்.

    முகம் சிவக்க, தலை கவிழ்ந்த பவித்ராவை கிள்ளிக் கொண்டே மேடம், பவித்ரா அந்த ஜோடியை நினைத்து கலங்கறா என்று ப்ரீதி குரல் கொடுத்தாள்.

    இந்த ப்ரீதி திருந்தவே மாட்டாள். எதுவும் கேலி, எதிலும் சிரிப்பு! எப்படிதான் இவளால் முடிகிறதோ? வாஞ்சையுடன் தன் தோழியைப் பார்த்தாள்.

    தடங்கலுக்கு வருந்துகிறேன் பவித்ரா. மற்றவை நம் கேண்டீன் அரசமரத்தடியில் என்று கூறினாள் ப்ரீதி!

    2

    ப்ரீதியும், பவித்ராவும் பள்ளியிலிருந்து ஒன்றாக படித்த, உயிர் தோழிகள்.

    காட்டாற்று வெள்ளம் பாய்ந்து குற்றால அருவி போல நுங்கும் நுரையுமாக ஓடும் பரிதி!

    அமைதியான கங்கை நதியாக, சிறு சலசலப்பு கூட இல்லாமல், தெளிவாக ஓடும் பவித்ரா!

    நவநாகரீக பெண்ணாக உடை, எண்ணம், நோக்கம் கொண்டவள் ப்ரீதி. குதிரைவால் முடி காற்றில் பறக்க, குதிகால் செருப்புடன் நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வையாக தான் வலம் வருவாள்.

    நிதானமாக அழகு மயிலாக, கருநாகப் பாம்பு போன்ற தலைப் பின்னலுடன் ஆடித்தேராக வலம் வருபவள் பவித்ரா.

    புடவை அல்லது சல்வார் கமீஸ்தான் போடுவாள் பவித்ரா. குண்டு கண்கள், வட்ட முகம், கூர்ந்த நாசியில் ஒற்றை கல் மூக்குத்தி பளபளக்கும். - பவித்ரா நேர்மை, உண்மை, நியாயம் என்று தான் பேசுவாள். யாரையும் கடிந்து பேசமாட்டாள். ஆண்களைக் கண்டால் ஓட்டிற்குள் சுருங்கும் ஆமையாக இருப்பாள்.

    உன்னை சொல்லி தப்பில்லைடி. எல்லாம் உன்னை வளர்த்த பாட்டியை சொல்லணும். அவனவன் என் பின்னால் சுத்தி, கொஞ்சம் உங்க பிரண்ட் பவித்ராவை பேச சொல்லுங்க என்று கெஞ்சறான், நீ அந்த காலத்து ராணி மங்கம்மா மாதிரி நடந்துக்கறே ப்ரீதி ஆதங்கத்துடன் கூற...

    இதோ பார், நான் படிச்சு முடிச்சு, வாழ்க்கையில் சாதிக்கணும். என்னை வளர்த்த பாட்டிக்கு நான் செய்யும் ஒரே உதவி அதுதான்.

    சாதிக்க பிறந்தவள்தான் பெண்! நான் நம்பறேன். ஆனால் வாழ்க்கையில் எதையும் என்ஜாய் பண்ணாமல் சாதிக்கணும் அப்படீன்னு யாரும் சொல்லலியே.

    நான் வாழ்க்கையை அனுபவிக்கவில்லை என்று யார் சொன்னாங்க? நீயாக எதையும் தீர்மானம் பண்ணாதே. நான் நல்லா சந்தோஷமாக இருக்கிறேன். ஏன் காதல்ங்கற வலையில் விழுந்தால்தான் காலேஜ் போகும் பெண்களுக்கு மகிழ்ச்சியா? நீயாக ஏதாவது சட்டம் போட்டிருக்கியா?

    "அடேங்கப்பா, என் சிநேகிதி 'மௌன சாமி பவித்ராவா' இப்படி ஒரு நிமிஷம் மூச்சு விடாமல் பேசுவது? நம்ப முடியவில்லையே? 'காதல்' அப்படிங்கற வார்த்தை ஒரு பெண்ணை இந்த அளவு மாற்றுமா? நினைத்துப் பார்க்க முடியவில்லையே' என்ற ப்ரீதியை அடிப்பது போன்ற பாவனையில் கையை ஓங்கினாள் பவித்ரா.

    ஏய், உன்கிட்டே பேசி ஜெயிக்க என்னால் முடியாதும்மா. இப்படி வாய் கிழிய பேசற நீ யாரை காதலிச்சு இருக்கே? சொல்லு பார்க்கலாம்.

    மேடம், என் லஷ்மி கடாட்ச பார்வை ஒருத்தர் மேலே விழணும்னா, அவன் சாதாரண புருஷனா இருக்க முடியுமா? அழகு, அறிவு, அந்தஸ்து, ஆறு அடிக்கு மேலே உயரம், பலம், தைரியம், வீர பராக்கிரமம், கை நிறைய சம்பளம், எனக்கு மட்டுமே செலவு செய்யும் தாராள குணம் இத்தனையையும் கொண்டவனாக இருக்கணும். கண்களில் குறும்பும் வாய் கொள்ளா சிரிப்புமாக பேசும் சிநேகிதியைப் பார்த்து சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது.

    பவி, லெக்சர் முடுஞ்சுடுச்சு. உன் கோழி தூக்கத்தை விட்டு, துயிலெழுந்து நம் சாம்ராஜ்யமான அரச மரத்தடிக்கு செல்லலாமா? ப்ரீதியின் குரல் அவளின் பழைய நினைவுகளை கலைத்தது.

    3

    சென்னையின் பெருமைக்குரிய சின்னமான அந்த கல்லூரி ஊரின் நடுநாயகமாக வீற்றிருந்தது. கிட்டத்தட்ட 150 வருடம் பழமையான கட்டிடம்.

    ஆங்கிலேயர்கள் கட்டிய கட்டிடம்; செம்மண் நிறத்தில் தூண்களும், உயர்ந்த மேல் கூரையும், மிக நீளமான வராந்தாக்களும், பெரிய கிளாஸ் ரூம்களும் ஏதோ விக்டோரியா மகாராணியின் அரண்மனையில் இருப்பது போலத் தோன்றும்.

    இரவெல்லாம் விழித்து, ஆடாமல் ஆசையாமல் நிற்கும் 'சென்ட்ரி' போல நெடிதுயர்ந்து நிற்கும் அந்த கட்டிடம் காலை 8 மணியிலிருந்து கலகலப்பும், சிரிப்பும், கும்மாளமுமாக களைகட்டும்.

    எதிரில் இருக்கும் கடற்கரை ஓர பென்சுகளில் இள வட்ட காளைகளின் படையெடுப்பு காலை எட்டு மணி முதல் மாலை 6 மணி வரை கட்டாயம் உண்டு.

    பட்டாம்பூச்சிகளாக, வண்ணமயமாக சிறகடித்து பறக்கும் பெண்களை காணவும், பேசவும் தவம் கிடக்கும் ஹீரோக்கள்!

    தப்பித்தவறி எந்த பெண்ணுடைய கடைக்கண் பார்வை பட்டுவிட்டால் ஜன்ம சாபல்யம் அடைந்துவிட்ட மகிழ்ச்சியில் திளைக்கும் காதல் மன்னர்கள்!

    பணக்கார பெண்கள் படிக்கும் காலேஜ்டா. நம்மையெல்லாம் திரும்பிக் கூட பார்க்காதுங்க. பைக், கார், கூலிங்கிளாஸ்னு உருப்படாத பசங்களை மட்டும் காதலிக்கும். பண பேய்ங்கடா இந்த பொண்ணுங்க! என்று 'சீ..சீ... எட்டாத பழம் புளிக்கும்' எனும் ரீதியில் பெருமூச்சு விடும் நடுத்தர வர்க்கத்து ஆண்களும் உண்டு.

    அடுத்தடுத்து வாழ்க்கையில் சந்திக்க போகும் கட்டங்கள், எதிர் நீச்சல் போட வேண்டிய தருணங்கள் இப்படி எதைப் பற்றியும் அறியாத வயது!

    சிரிப்பும், கேலியும், மகிழ்ச்சியும் கொண்டாடும் இன்றைய நாட்கள். - இதுங்களைப் பார்த்தால், நாமும் இப்படி ஒருகாலத்துல இருந்தோமா என்று ஆதங்கப்படும் காலேஜ் பேராசிரியர்கள்!

    ஏய் பவி, இன்றைக்கு உன் பாட்டி என்ன கொடுத்து அனுப்பியிருக்காங்க? என்றபடி ப்ரீதி டிபன் பாக்ஸை கையிலெடுத்தாள்.

    கவலைப்படாதே ப்ரீதி, பாட்டி உனக்கும் சேர்த்து கந்தரப்பம் அனுப்பியிருக்காங்க. என்றபடி அரசமரத்தடியில் உள்ள சிமெண்ட் பென்ச் ஓரத்தில் அமர்ந்தாள் பவித்ரா.

    கடற்காற்றும், ஆடும் அரச கிளைகளும், டிபன் பாக்ஸைப் பார்த்தவுடன் கரையும் காகங்களும் மனதுக்கு ரம்மியமாக இருந்தது.

    பெண்கள் கல்லூரி என்பதால் ஆளுயரத்திற்கு சுவர் எழுப்பி கடற்கரையை மறைத்தாலும், காற்று வருவதற்காக சல்லடை போன்ற அமைப்பும் இருந்தது.

    சூப்பர்! உங்க பாட்டி கை மணம் சூப்பர் என்றபடி சாப்பிட்டாள் ப்ரீதி.

    ஏய், நானும் சேர்ந்து பாட்டியோட உழைச்சு கந்தரப்பம் செய்திருக்கேன். கொஞ்சம் உன் புகழ் மாலையை எனக்கம் சார்த்திவிடு!

    ஏய், ஏய், புளுகாதே!

    நிஜமாப்பா! புழுங்கலரிசி, பச்சரிசி தலா1 ஆழாக்கு இரண்டு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் வெந்தியம், வெல்லம் 2 ஆழாக்கு, தேங்காய்த் துறுவல், ஏலக்காய் போட்டு அரைச்சு எண்ணெயில் பொரிச்சு எடுக்கணும். இப்ப நம்பறியா? மூச்சு விடாமல் கூறியதில் பவித்ராவிற்கு மேல் மூச்சு வாங்கியது.

    "மாவு என்ன பதம்? அதை

    Enjoying the preview?
    Page 1 of 1