Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sakthi Ulla Manathai Adaiyungal
Sakthi Ulla Manathai Adaiyungal
Sakthi Ulla Manathai Adaiyungal
Ebook179 pages1 hour

Sakthi Ulla Manathai Adaiyungal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Udayadeepan has written many books on self-improvement, spiritual and meditation related topics.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110803863
Sakthi Ulla Manathai Adaiyungal

Read more from Udayadeepan

Related to Sakthi Ulla Manathai Adaiyungal

Related ebooks

Reviews for Sakthi Ulla Manathai Adaiyungal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sakthi Ulla Manathai Adaiyungal - Udayadeepan

    http://www.pustaka.co.in

    சக்தி உள்ள மனதை அடையுங்கள்

    Sakthi Ulla Manathai Adaiyungal

    Author:

    உதயதீபன்

    Udayadeepan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/udayadeepan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. மனம் சக்தியுள்ளதாக இருக்கவேண்டும்

    2. மனத்திற்குள் தோன்றும் எண்ணங்கள், வலிமையானதாக இருத்தல், அவசியம்

    3. மனத்தில், அலங்கார குணம் தேவை...

    4. மனத்தில், தன்னை உணர்வது, அவசியம்

    5. மனத்தில் ஒளியாக வழுங்கள்

    6. மனதில், நாம் நினைப்பதை, பெற்றுவிட்டதாக, உணருங்கள்

    7. மனமே ஒரு பிரபஞ்சம். அதில் அனைத்தும், உள்ளது

    9. 'ஓம்' என்பதை, அடிக்கடி உள்ளுக்குள் சொல்லுங்கள். மனம் அதில் கட்டுப்படும்

    9. மனதில் ஒருமுக சக்தியை வளர்க்க, அதை வலிமைப்படுத்துங்கள்.

    10. மனதில் பிரம்மாண்டங்களை எழுதி, பிரம்மாண்டங்களை பெறுங்கள்

    11. சாதாரணமானவற்றை, நம் மனதை விட்டு, வெளியே தூக்கி எறியுங்கள் சரித்திரமாகுங்கள்.

    12. பிறந்த குணங்கள், வாழத் தடை என்றால், அவற்றை விலக்குங்கள்

    13. அழகு என்பது, நிரந்தரம் அல்ல

    14. எண்ணங்களை கட்டுக்குள் அடக்குங்கள் மனவலிவுடன் இருக்கலாம்

    15. நேர்மையை, உங்களின் பாதை ஆக்குங்கள். வெற்றிகள் சுலபமாகும்

    16. கோடுகள், வட்டங்கள், அறவழிகளில் மனிதனுக்கு, நிறைய மனவலிமைகள் வரும்.

    17. அறிவின் பாதை, வளர்ச்சிக்காக இருக்கட்டும்

    18. பிறரை கெட்டவர் என்று, நினைப்பதே நம் மனவலிமையை, குறைத்துவிடும்

    19. நிகழ்கால, மனிதர்களின், மனோவலிமை

    20. மனிதனின், மனத்தின் வலிமையை, காக்கும் ரகசியங்கள்

    21. துறவுகளை, அதிகப்படுத்துங்கள். மனம் வலிமை பெறும்

    22. பஞ்சபுலன்களை விலக்குங்கள், சக்தி சேமிப்பில், மனம் அதில், வலிமை பெறும்.

    23. பிறரிடத்தில் குறைகள், காணுவதை நிறுத்தினால், மனம் வலிமையில் நிலைக்கும்

    24. மனதை கண்ணாடி, ஆக்குங்கள். நடப்பது அமானுஷ்யங்களாக, இருக்கும்.

    25. கட்டுப்பாடான மனவலிமைக்கு உணவும், ஒரு முக்கிய சக்தி

    26. மனம், அலைபாய்வதை தடுக்கும், ஒரே வழி தியானம்.

    27. நேர்மையுடன், அளவான ஆசைகளில், இருப்பவருக்கு, மனம் வலிமைக்குள் இருக்கும்.

    28. உயர்ந்த லட்சியங்களை, மனதுக்குள் அடக்குங்கள். மனம், வலிமை பெறும்

    29. மனதை அடக்க, ஒரே ஒரு வழி, அதை நடப்பு நிகழ்வுகளில் நிறுத்திவைப்பதுதான்

    1. மனம் சக்தியுள்ளதாக இருக்கவேண்டும்

    மனம் என்பது, விசித்திர சக்தி....

    இது மனிதனுக்குள்ளே, ஒரு தலைமை சக்தியாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வினாடியிலும், மனிதனை, இது தன் வசப்படுத்தி வைத்து, தன் போக்கில், அவனை இழுத்துச் செல்கின்றது.

    மனிதனின் அலுப்பு, சலிப்பு, விரக்தி எல்லாம்...

    இந்த மனம் மனிதனுக்குள்ளே, உற்பத்திக்கும், அதன் எண்ணங்களினால் வருவதாகும். தினமும், ஆயிரக் கணக்கில் எண்ணங்கள், மனித மனதுக்குள்ளே உற்பத்தியாகின்றன! மனிதனுக்குள், அதன் ஒவ்வொரு எண்ணத்திலும், ஒரு ஆசை, அவனுக்குள் உற்பத்தியாகிறது.

    அந்த ஒவ்வொரு ஆசையும், மனிதனை...

    தன் போக்கில் இழுத்துச்செல்கின்றது. மனிதன் பல ஆசைகளில் காலை, மதியம், மாலை, இரவு என்று, மாறி மாறி ஆசைகளில் விழுகின்றான், இதில் அவனது மனமும், உடலும், அலைச்சலுக்கு உள்ளாவது, தவிர்க்க முடியாதது ஆகிறது.

    அலைச்சல் என்பது, பெரிய காரியங்களில்...

    நடந்தால், அது சரிதான். நேரத்திற்கு அலுவலகம் செல்ல வேண்டும். ஒருவருக்கு உடம்பு சரியில்லை, இப்படிப்பட்ட காரியங்களில் ஏற்படும், அலைச்சல் கள், நல்ல காரணத்துடன் கூடியவை. இவை அவசியமானவையும்கூட.

    இதைவிட்டு, கடந்து விட்ட, காலத்தின்....

    கசப்புகள், வம்பு, வழக்குகள், இவைகளை மாறி மாறி மனத்துக்குள்ளே, மனிதன் திணிப்பதால், சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள்கூட, சரியாக சாப்பிடாமல் எழுந்து விடுவது நடக்கிறது. அதே போன்று தூங்குகிறவர், தூங்கும் தூக்கத்தை விட்டு எழுந்து, அமர்ந்து, தவிப்பதும், நடக்கிறது. மன உளைச்சல், உடல் அசதியில், இவை மனிதனை கொண்டு சென்று, விடுகின்றன.!

    இது, நம் மனம் நம்முள்ளே, வரம்பு கடந்து...

    சென்று, நம்மை பல சிக்கல்களுக்குள்ளே, இழுத்து விடுவதில், வரும் சிரமங்கள். கஷ்டங்கள். இப்படிப் பட்டுள்ள, நம் மனதின் வழிகாட்டுக்கள், நமக்கு நன்மை அளிப்பன அல்ல. இவைகள் எல்லாம், மனிதனுக்கு தீமை, விளைவிப்பவையே, ஆகும்.

    நம்முள்ளே இருக்கும் மனத்தின், நமக்கு...

    எதிராக நடக்கும் இந்த செயல், தடுத்து நிறுத்தப் படுதல் வேண்டும். இப்படி நடந்தது, சென்றது, போனது, இதை எல்லாம் இழுத்து வந்து, நம் மனம், நம் இதய அமைதியைக் கெடுத்து விடுகின்றது.

    அதிகமாக, மிக அதிகமாக, கடந்தகால...

    கசப்புகளையே நினைத்து நினைத்து, வம்பு, சண்டை, போராட்டம் என்று, மனதை அலைக் கழிக்க, அலைக்கழிக்க மனித இதயம், அதில் கனத்து, அதிகம் துடித்து துடித்து, ஒரு நாள் இதயம் வெடித்துப் போகிறது. அல்லது நடந்தால் மூச்சு வாங்குகிறது. மூச்சுவிட முடியாத சிரமத்துக்குள்ளே, மனிதன் வாழ்கின்றான், பல கஷ்டங்களுக்கு இடையில்.

    இது மட்டும் இல்லை இதயம். வெடிக்காது...

    மனிதனுக்குள்ளே இருக்கும்போது, மனித நரம்புகளில், மனித எண்ணங்களின், வீரிய உணர்வு கள், படிந்து படிந்து கொண்டே வந்து, மனிதனின் ஆண்மை, அதில் பாதிக்கப்பட்டு, மனிதனின் வாழ்க்கையே, அதில் நாசப்பட்டுப் போகின்றது.

    மனிதனுக்கு, மயக்கம் வருகின்றதும்...

    பல வியாதிகளில், மனிதன் தினமும், மருத்துவமனைகளே, கதி என்று கிடப்பதும் அவன் படி ஏறினால், மூச்சு முட்டுவதும், இதயம் அவஸ்தையில் துடிப்பதும், நம் மனதின். சலனங்களில் இருந்து, உண்டான, பலஹீனங்கள் தான்.

    எதற்கு எடுத்தாலும், துடித்து துடித்து...

    கோபப்படுவது, அதிக செக்ஸ் வைத்துக் கொள்வது, கண்டதுக்கு எல்லாம், மூக்கின்மேல் கோபத்தைக் கொட்டி, உடல் துடிப்பது எல்லாமே, நம் நரம்பு மண்டலத்தை, மிகவும் பாதிக்கும், ஒரு நிலைதான். இதனால், ஒரு டம்பளர் நீரை எடுத்து, குடிக்க முடியாமல், மனிதன் அவஸ்தைக்கு, உள்ளாவது ஒரு கொடூரமே!

    மேலும், ஆசை ஆசை என்று, எதில்...

    எடுத்தாலும் விருப்பப்பட்டு, விருப்பப்பட்டு, மனித மனம்,மனிதனை தினமும் அலைக்கழிக்கிறது.அதுவும் குறிப்பாக கண்கள் மூலம் காணும்,அழகின் ஆசைகள், மனிதனுக்குள்ளே, அவனை கொலை காரன் ஆக்கும் அளவிற்கு, அழகில் சிக்கி மயங்கி, மனிதன் அதில் மிகவும் கெட்டுப்போகின்றான். செக்ஸ் உணர்வு என்பது, மனிதனை குற்றங்களை செய்யும் அளவுக்கு தூண்டுவது, கொடுமையிலும் கொடுமை.

    கண்வழி வரும் ஆசைகளும், மனித...

    எண்ணங்களும், மிக மிக ஆபத்தானவை. அதில் விழுகின்றவன்கிட்டத்தட்ட எழுந்திருப்பதே இல்லை. அதே போன்று பிறர் ஒருவரை, பழி போட்டு பேசும் நம்கூட, வீட்டில் வசிப்பவர்களின் துடுக்கான, நறுக்கான கத்தி போன்ற பேசும் பேச்சில், மனதினால் நொந்து, ஒரேயடியாக, நாம் நொறுங்கிப் போகின்றோம்.

    இப்படி, கண் வழியில் வரும், எண்ணங்களும்...

    காது வழியில் கேட்கும் வார்த்தைகளும், நம் மனதை சீண்டி, அதில் நம்பாடு மிகவும், பரிதாபமாகி விடுகிறது. மனம் என்பது, எண்ணங்களின் உற்பத்தி ஸ்தானம். இந்த எண்ணங்கள் பாம்புகள், தேள்கள் போன்று, நம்மை தினமும் கொட்டித் தீர்க்கின்றன.

    இந்த எண்ணங்களே, இந்த உலகில் இருக்கும்...

    மிகவும் வலிமை வாய்ந்த சக்திகள். மனிதனிடத்தில் இருந்து கிளம்பும் எண்ணங்கள், வான்வெளியில் சென்று பதிகின்றன. இவைகள் நல்ல எண்ணங்கள் என்றால், அதில் பெரிய ஆபத்து, எதுவும் மனித குலத்துக்கு இல்லை, மனிதனுக்கும் இல்லை.

    ஆனால், மனிதன் எண்ணும், ஒவ்வொரு கெட்ட...

    எண்ணமும் அவனை விட்டுப் புறப்பட்டு, வெட்ட வெளியில் சென்று, சேர்ந்து, சுற்றி அங்கே விண்வெளியில் சென்று சேர்ந்து கொண்டே இருக்கின்றன! கெட்ட செயல்களை அரங்கேற்றிக் கொள்ள. இது மிகவும் ஆபத்தான ஒரு விஷயம். இவை மிகவும் பயங்கரமான சக்திகள் ஆகின்றன.

    சில, இடங்களில் மட்டும், அடிக்கடி வாகனங்கள்...

    விபத்துக்குள்ளாகும், அதில் மரணமும் மனிதர்களுக்கு சித்திக்கும். இதற்கு காரணம், விண்ணில் சுற்றிக்கொண்டிருக்கும், கெட்ட மனிதர்களின், கெட்ட எண்ணங்கள்தான்.

    சில மனிதர்களுக்கு, அடுத்தவர் மரணத்தை...

    பார்த்து ரசிக்க, ஒரு விபரீத ஆசை ஏற்படும். அப்படிப்பட்ட விசித்திர ஆசை கொண்ட கெட்ட எண்ணங்கள், விண்ணில் பாய்ந்து, அங்கு காத்தி ருக்கும். யாரை பழிவாங்கலாம் என்று!

    சாலைகளில், சில இடங்களில், குறுகிய...

    வளைவுகள் இருக்கும். அந்த இடத்திற்கு வரும் இந்த கெட்ட மனிதர்களின் எண்ணங்கள், எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு, அவற்றின் ஒட்டுமொத்த சக்தியில், வாகனம் ஓட்டும் - ஓட்டுனரின் மூளையில், சென்று இறங்கி, அவர்களை தாறு மாறாக வண்டியை ஓட்ட வைத்து, அதில் வண்டி கிடு கிடுவென்று பள்ளத்தில் உருண்டு விழ, அதில் நிறைய, மனித மரணங்கள், ஏற்படுகின்றன.

    மனித மனம், அதிக எண்ண ங்களை, சுமப்பதால்...

    அதில் மனிதனின் வாழ்க்கை, கண்ட கண்ட தோல்விகளை சந்திக்கிறது. கண்ட கண்ட கஷ்டங்களை சந்திக்கிறது. எனவே தேன் கூட்டில் இருக்கும் தேனீக்களைப் போன்று, கணக்கற்று தன் எண்ணங்களை உற்பத்தி செய்வதை, மனிதன் தனக்குள்ளே நிறுத்திக் கொள்ள வேண்டும். இது தான், வருமுன் காக்கும் ஒரு திட்டம்.

    இதற்கு, உதவுவதுதான், நம் மூச்சை விடும்...

    சாதாரண ஒரு முறையை மாற்றி, அதை மூன்ற டுக்குகள் கொண்ட, ஒரு மூச்சாக மாற்றும் அற்புதக்கலை. நாம் மூச்சு, உள்ளே இழுக்கப்படு கையில், அது ஒரு அடுக்கு.

    இதே மூச்சை, நம் உள்ளே நிறுத்துவதில், அது ஒரு அடுக்கு. பிறகு மூச்சை வெளியிடுவதில், ஒரு அடுக்கு. இப்படி மனித மூச்சை, மூன்று வகையாக பிரித்துக் கொண்டு, இதில் மூச்சை உள்ளே வைத்திருக்கும், கும்பக மூச்சில், நம் கவனத்தை வைத்துக் கொண்டிருக்க வேண்டும். அப்போது.

    நமக்குள்ளே, ஒரு அதிசய மாற்றம் நிகழும், அது...

    நம் மூச்சை உள்ளே வைத்திருக்கையில், காற்று அங்கு சலனமில்லாமல் இருப்பதால், நம் மனமும், எண் ணங்களின் உற்பத்தி இன்றி, அமைதியில் இருக்கும்.

    எப்போது,

    Enjoying the preview?
    Page 1 of 1