Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbin Sangamam
Anbin Sangamam
Anbin Sangamam
Ebook90 pages50 minutes

Anbin Sangamam

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465971
Anbin Sangamam

Read more from Parimala Rajendran

Related to Anbin Sangamam

Related ebooks

Reviews for Anbin Sangamam

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbin Sangamam - Parimala Rajendran

    14

    1

    கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை கம்பளம் விரித்தாற் போல் குளிர்ச்சி தரும் இயற்கை காட்சி. இருபுறமும் உயர்ந்து நிற்கும் மலைத் தொடர்கள். அந்த மலை ரோட்டில் சிகப்பு நிற மாருதி. அழகுக்குக்கு அழகு சேர்ப்பதுபோலவளர்ந்து, வளர்ந்து சிறு பிள்ளையாக ஓடிக் கொண்டிருந்தது.

    காதோடுதான் நான் பாடுவேன்

    மனதோடுதான் நான் பேசுவேன்.

    விழியோடுதான் விளையாடுவேன்

    உன்மடிமீது தான் கண்மூடுவேன்...

    எல். ஆர். ஈஸ்வரியின் குரல், இந்த ரம்மியமான சூழலில் மனசுக்குள் புகுந்து பரவசமூட்டுது இல்லையா விக்ரம்.

    காரை ஓட்டிக் கொண்டிருக்கும் நண்பன் செந்திலை, புன்னகையுடன் பார்க்கிறான்.

    நீ என்னதான் பரவசப்பட்டாலும், உன் கல்யாணம் இன்னும் இரண்டு வருஷம் கழிச்சுதான். ஞாபகம் வச்சுக்க...

    இதைத்தான் நீயும், ஆண்ட்டியும் சொல்லிட்டு இருக்கீங்க. இந்த சைலுவாவது ஒத்து வருவான்னு பார்த்தா, அவ அதுக்கு மேலே இருக்கா...

    செந்தில் கண்ணா, என் படிப்பு முடியறவரை கல்யாணத்தை பத்தி பேசாதே.

    அம்மாவும், அண்ணனும் சரின்னு சொன்னாலும் நான் ஒத்துக்க மாட்டேன்.

    நீ பெரிய சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கலாம். ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம். இருந்தாலும் நான் என் காலில் நிற்கிற அளவு என்னை உயர்த்திக்கணும் இல்லையா... இப்படி சொல்றாப்பா உன் தங்கை சைலஜா...

    அவ என் தங்கை. அப்படித்தான் சொல்வா.என் அழகு குட்டி தேவதைக்காக நீ கொஞ்ச நாள் காத்திருக்கணும் செந்தில்.

    மனதில் அன்பு தங்கை வந்து போகிறாள்...

    அப்ப நீ உன் நண்பனின் விருப்பத்திற்கு மதிப்பு தர மாட்டே அப்படித்தானே...

    எப்படிப்பா இப்படி சொல்வே. இப்ப இவ்வளவு தூரம் உன்னோடு புறப்பட்டு வந்திருக்கிறது, உன் விருப்பத்துக்காகத் தானே.

    சரிசரி. இப்படி ஏதாவது சொல்லி என் வாயை அடைச்சுடுவே. இப்ப நான் போற விஷயத்தை பேசுவோம்.

    இதிலே பேசறதுக்கு என்ன இருக்கு. ஒரு ஜாலி டிரிப் மாதிரி கிளம்பி வந்திருக்கேன். வேலையை விட்டுட்டு பிஸினஸ் ஆரம்பிப்பதில் நான் தெளிவாகத்தான் இருந்தேன். எனக்கு எந்த (குழப்பமுமில்லை. இதெல்லாம் உன் திருப்திக்காகத்தான்.

    அப்படி சொல்லாதே. சித்தர் தரிசனம் எவ்வளவு புண்ணியம் தெரியுமா?

    நான் அவரை பார்த்தே இரண்டு வருஷமாச்சு. என்னோடு வேலை செய்யற ஒருத்தர் சொல்லித்தான் இந்த கிடுகு மலைக்கு வந்து சித்தரை பார்த்தேன்.

    அருள் வீசும் அவர் கண்கள், அவரிடமிருந்து வந்த சுகந்தமான நறுமணம். அவர் இருக்கும் இடத்தை சுற்றி ஒளி வெள்ளம் பாய்ந்தது போல... என் நிலையை என்னால் விவரிக்க முடியலை விக்ரம்.

    அந்த நிமிஷம், எல்லையில்லாத பரவசம். புன்னகையுடன் அவன் சொன்ன வார்த்தைகள்...

    பெத்தவர்களின் கனவை நிறைவேற்றிட்டே. உன் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும்னு சொன்னாரு. அது உண்மைதானே. எங்கப்பா, அம்மாவின் ஆசை, நான் பெரிய சாப்ட்வேர் இஞ்ஜினியராக வரணுங்கிறது. எதிர்நீச்சல் வாழ்க்கை என்னோடு போகட்டும் செந்தில். நீயாவது நல்லா இருக்கணும். கஷ்டப்பட்ட காலத்தில் அப்பா சொன்னது. இப்ப என்னை பெத்தவங்களின் கனவு நிறைவேறிடுச்சி. ஆனா… இப்ப அவங்க ரெண்டு பேரும் இல்லையே விக்ரம்... அவன் குரல் கரகரத்து ஒலிக்க...

    அன்போடு நண்பனின் தொடையில் கைவைத்து ஆறுதலுடன் தட்டியவன்,

    வருத்தப்படாதே செந்தில்.’ ஆக்ஸிடெண்ட்டில் இரண்டு பேரும் ஒரே நாளில் பிரிந்தது வேதனைதான்.

    உன் ஆதங்கம் புரியுது. உனக்கு நான் இருக்கேன். நண்பனாக, சகோதரனாக... இன்னும் கொஞ்ச நாளில் உனக்கு மச்சினனாக மாறப் போறேன். என் தங்கையை உனக்கு கொடுத்து, உன்னை என் உறவாக, ஏத்துக்கப் போறேன். மனசை ரிலாக்ஸ்டாக வச்சுக்க. சித்தரை சந்திக்க போறோம். அந்த கிடுகு சித்தரை பத்தி சொல்லு கேட்போம்... பேச்சை மாற்றுகிறான் விக்ரம்.

    என்னை அழைச்சுட்டுப் போனவர், சொன்னது என் மனசிலேயே நிக்குது விக்ரம்..

    "மேல் உலகங்கள் ஏழு. கீழ் உலகங்கள் ஏழு. நதிகள் ஏழு, மண்டலங்கள் ஏழு, ஸ்வரங்கள் ஏழு, தாலுக்கா ஏழு, உடல்சக்திகள் ஏழு. ஆக இறைவன் உலகத்தை படைக்கும்போது இப்படித்தான் எல்லாவற்றையும் ஏழு, ஏழாக படைத்திருக்கிறான்.

    ஏழு வகை உடல் சக்திகளை தங்களது தவ வலிமையால் ஒன்றாய் சேர்த்து சித்தி பெற்றவர்களை, நாம் சித்தர்கள்னு சொல்றோம். அதிலே ஒருத்தர்தான் இந்த கிடுகு சித்தர். எனக்குத் தெரிஞ்சு ரொம்ப வருஷமாக இந்த மலையில்தான் இருக்கிறாருன்னு சொல்றாங்க."

    "மலையில் கிடைக்கும் பழங்கள், கிழங்குகள்தான் அவரது உணவு. எப்பவும் சிவபூஜை செய்து கொண்டு, அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் அவர் வசிக்கிறதே அதிசயம். எல்லார் கண்களுக்கும் அவர் தரிசனம் கிடைக்காது. ஒருநாள் முழுக்க காத்திருந்தாலும் அவர் இருக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1