Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannukkul Neethaan
Kannukkul Neethaan
Kannukkul Neethaan
Ebook95 pages47 minutes

Kannukkul Neethaan

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Kannukkul Neethaan

Read more from Rajeshkumar

Related to Kannukkul Neethaan

Related ebooks

Related categories

Reviews for Kannukkul Neethaan

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannukkul Neethaan - Rajeshkumar

    9

    1

    அபர்ணா சுவிட்சுகளை அணைத்துவிட்டு கம்ப்யூட்டரை அதன் ரெக்ஸின் உறையால் போர்த்தினாள்.

    மெல்லிய சிந்த்தெடிக் புடவைக்குள் - வெல்வெட்டில் செதுக்கிய சிற்பம் போன்ற உடம்பு. மின்சாரம் ததும்பும் கண்கள். உறைந்த வெண்ணெய்க்கட்டி போன்ற மோவாயில் பதிந்து இருந்த ஒரு கடுகு மச்சம் அவளுடைய அழகை உச்சத்துக்கு கொண்டு போயிருந்தது.

    தூரத்து மேஜையிலிருந்து அவளுடைய தோழி உமா கூப்பிட்டாள்.

    அபர்ணா... ஆபீஸை விட்டுக் கிளம்பறதா உத்தேசம் இருக்கா இல்லையா...?

    ஒரு அஞ்சே நிமிஷம் நில்லுடி... இப்போ வந்துடறேன்.

    லெவன் ஈ போயிடப் போகுது... அதுக்குள்ளே வந்து சேரு... அந்த டவுன் பஸ்தான் கொஞ்சம் கூட்டமில்லாம இருக்கும். உன்னை மாதிரி இருந்தா பிரச்னை இல்லை...

    லஞ்ச் பாக்ஸைத் தன்னுடைய கைப்பைக்குள் திணித்துக் கொண்டிருந்த அபர்ணா நிமிர்ந்தாள்.

    என்னடி சொல்றே...? என்னை மாதிரி இருந்தா பிரச்னை இல்லையா...? வாட் டூ யூ மீன்...?

    ரோட்ல போறவன் வர்றவன் எல்லாம் உன்னைப் பார்த்தா ஒரு நிமிஷம் நின்னு - லிட்டர் லிட்டரா வழிஞ்சிகிட்டு உனக்கு லிஃப்ட் கொடுக்க போட்டா போட்டி போடறாங்களே!

    ச்சீ... அந்த மாதிரி பல்லிளிக்கிற ஆசாமிகளைப் பார்த்தாலே எனக்கு கம்பளிப் பூச்சிகளைப் பார்க்கிற மாதிரி இருக்கும். கால்ல இருக்கிற ஸ்லிப்பரை கழட்டிவிட்டு நாலு சாத்து சாத்தலாமான்னு தோணும்... என்ன ஜென்மங்களோ...?

    நீ என்னதான் சொல்லு... உன்னோட அழகு உனக்குப் பெரிய அட்வான்ட்டேஜ்தான்... நீ கேட்டு எதையும் எவனும் மறுக்கவே மாட்டான்...

    டோண்ட் பி சில்லி உமா... இந்த அழகால அட்வான்ட்டேஜை விட அவஸ்தை தான் அதிகம். நிஜமான அக்கறையோட பேசறவங்களை வடிகட்டித்தான் தேடணும்... பஸ்ஸில் போறப்பவும் சரி... பொது இடங்களில் நடக்கறப்பவும் சரி... ஏதோ பார்க்காததை பார்த்துட்ட மாதிரி என்னை வெறிச்சு வெறிச்சுப் பார்க்கறவங்கதான் அதிகம். வேணுமின்னே உரசறவங்க... அநாவசியமா தொட்டு பேச முயற்சி பண்றவங்க... இவங்களை சமாளிக்கவே எக்ஸ்ட்ரா பத்து மூளை வேணும்... எவ்வளவு டென்ஷன் தெரியுமா...? என்னோட முகத்துல நானே ஆசிட்டை எடுத்து ஊத்திக்கலாமாங்கற அளவுக்கு சில சமயம் வெறுப்பாயிடும்...

    ஏய்... ஏய்... ரொம்ப டென்ஷன் ஆகாதே... டேக் இட் ஈஸி... சின்னச் சின்ன இடைஞ்சல்களை ஈஸியா எடுத்துக்கிட்டாத்தான் பிரச்னை இல்லாம வாழ முடியும்... இப்ப... நாம கிளம்பலாமா?

    ம்.

    ஆபீஸ் ஹாலின் வாசல் கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் உமா.

    ஹேண்ட் பேகைத் தோளில் மாட்டிக்கொண்டு அபர்ணாவும் அவள் பின்னால் நடந்தாள்.

    வராந்தாவைத் தொட்டு பத்தடி தூரம் நடந்திருப்பார்கள்.

    ப்யூன் மூச்சிரைக்க ஓடி வந்தான்.

    அபர்ணாம்மா...

    அவள் நின்றாள்.

    என்ன... வேலு...?

    டெல்லியில் இருந்து வந்திருக்கற போர்டு டைரக்டர் உங்களைக் கூப்பிடறார்ம்மா...

    புருவங்களைச் சுருக்கினாள் அபார்ணா.

    எதுக்கு...?

    தெரியலைம்மா...

    உமா குறுக்கிட்டு சொன்னாள்.

    ஏதாவது என்கொய்ரியா இருக்கும். எனக்கு நேரமாச்சு... அபர்ணா... நீ போர்டு டைரக்டரைப் பார்த்துட்டு பின்னாடி வந்து சேரு... நான் கிளம்புறேன்.

    ‘லெவன் ஈ’ பஸ்சைப் பிடிக்கும் அவசரத்தில் வேகமாய் நடையைக் கட்டினாள் உமா.

    அபர்ணா ப்யூனிடம் திரும்பினாள்.

    டைரக்டர் மட்டும் தனியா இருக்காரா?

    ஆமாங்கம்மா.

    அபர்ணா யோசனையோடு மொசைக் வராந்தாவை முழுவதுமாய்க் கடந்து போர்டு டைரக்டரின் அறையைத் தொட்டபோது கதவு லேசாய் சாத்தியிருந்தது.

    அந்தக் கனமான தேக்குக் கதவை மெதுவாய்த் தள்ளி -

    எக்ஸ்க்யூஸ் மீ ஸார்... என்றாள் அபர்ணா.

    எஸ்... கமின்...

    ஏசியின் உறுமலோடு அந்த அறை ‘ஹோ’வென்று விரிந்திருந்தது. க்ரானைட்டில் செதுக்கிய விஸ்தாரமான மேஜைக்குப் பின்னே டெல்லியிலிருந்து வந்திருந்த சுவாமி சாம்பல் வர்ண சூட்டில் கம்பீரமாய்த் தெரிந்தார். ஐம்பத்தைந்து வயதைத் தொட்டிருந்தாலும் எஃகைப் போல உறுதியிழக்காத கட்டுமஸ்தான உடம்பு.

    அபர்ணா மேஜைக்கருகே போய் தயக்கமாய் நிற்க - சுவாமி புன்னகையோடு நிமிர்ந்தார்.

    உக்காரும்மா...

    பரவால்ல ஸார். நீங்க வரச் சொன்னதா ப்யூன் சொன்னான்...

    எஸ்... எஸ்... சில நிர்வாகக் காரணங்களுக்காக டெல்லி ஹெட் ஆபீஸிலிருந்து வந்தேன். வந்த வேலை முடிஞ்சது... நாளைக்கு ஃபிளைட் ஏறிடுவேன்...

    அபர்ணா நெற்றியில் வியப்பை ஒட்டிக்கொண்டு அவரைப் பார்க்க, அவர் தொடர்ந்து புன்னகை சிதையாமல் சொன்னார்:

    இதையெல்லாம் உன்னைக் கூப்பிட்டு வெச்சு எதுக்காக சொல்லிட்டிருக்கேன்னுதானே நீ நினைக்கிறே...? காரணத்தோடதான் உன்னை நான் இங்கே கூப்பிட்டிருக்கேன்...

    என்ன காரணம்ன்னு நான் தெரிஞ்சிக்கலாமா ஸார்...?

    ஷ்யூர்... ஒரு ஸ்வீட் நியூசை உன்கிட்டே சொல்லணும்... அதுக்காகத்தான் இந்த அழைப்பு...

    சுவாமி சொல்லிக்கொண்டே மேஜையின் ஓரத்தில் பேப்பர் வெயிட்டுக்குக் கீழே இருந்த ஒரு கவரை எடுத்து அவளிடம் நீட்டினார்.

    இந்தா!

    எ... என்ன ஸார் இது...?

    ப்ரொமோஷன் ஆர்டர்... உனக்குப் பதவி உயர்வு.

    முகம் பூராவும் ஒரு திடீர் சந்தோஷம் பரவ - நிமிர்ந்தாள் அபர்ணா.

    Enjoying the preview?
    Page 1 of 1