Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thik Thik Divya
Thik Thik Divya
Thik Thik Divya
Ebook118 pages43 minutes

Thik Thik Divya

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Thik Thik Divya

Read more from Rajeshkumar

Related to Thik Thik Divya

Related ebooks

Related categories

Reviews for Thik Thik Divya

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thik Thik Divya - Rajeshkumar

    27

    1

    குமுளி.

    தேயிலைத் தோட்டங்கள் கெட்டியான பனிப்போர்வையில் சிக்கியிருக்க அந்த போர்வையை விலக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான், அப்போது பிறந்த குங்குமநிற சூரியன். கேரள செக்போஸ்ட் அருகே நிறைய லாரிகள் வரிசையாய் தவமிருக்க - தேயிலை பறிப்புக்கு போகும் பெண்கள் மலைச்சரிவுகளின் வகிடுகளில் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

    செழிப்பான தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் - தந்தத்தால் செய்த மாதிரி எமரால்ட் க்ரின் எஸ்டேட் கட்டிடம் தெரிய அதன் பால்கனி வராந்தாவில் - சக்கர நாற்காலியில் - உட்கார்ந்திருந்த துர்கா பரமேஸ்வரி - அறையின் பக்கம் பார்த்து குரல் கொடுத்தாள்,

    ‘‘சுதா...’’

    "இதோ... வந்துட்டேன்ம்மா...’’

    அந்த பணிப்பெண் சுதா ஓடிவந்தாள்.

    ‘‘எனக்கு காபி கலந்திட்டிருந்தியா...?’’ ‘

    ‘ஆமாம்மா...’’

    ‘‘காபி எனக்கு வேண்டாம்... பாதி டம்ளர் வெந்நீரில் ரெண்டு ஸ்பூன்-க்ளுகோஸ் கரைச்சு குடு... என்னமோ தெரியலை மனசு பூராவும் படபடப்பாவே இருக்கு...’’

    சுதா சிரித்தாள்.

    "உங்க படபடப்புக்கு காரணம் எனக்குத் தெரியுமம்மா... அஞ்சு வருஷமா வெளிநாட்டில் இருந்துட்ட திவ்யாம்மா இன்னிக்கு வர்றாங்க... அதானே...?’’

    "ம்... அஞ்சு வருஷங்களுக்கு முன்னாடி... மதுரை ஏர்போர்ட்ல அவளை வழியனுப்பி வெச்சபோது என்னோட ரெண்டு கண்ணும் நல்லா இருந்தது. இப்போ ரெண்டு கண்ணும் - பட்டுபோய் பார்வை தெரியாமே அல்லாடிட்டிருக்கேன்... என்னோட மக திவ்யா வந்தாலும் அவளைத் தடவி பார்த்துக்க வேண்டியதுதான்...’’ - துர்கா பரமேஸ்வரியின் கண்களில் ஸ்படிகமாய் நீர்த்துளிகள் மின்னின. போர்த்தியிருந்த சால்வையால் கண்களை ஒற்றிக் கொண்ட அவளுக்கு ஐம்பது வயது இருக்கலாம். பனிச் செழிப்புக்கு ஏற்ற மாதிரி இல்லாமல் உடம்பு வற்றிப் போயிருந்தது. முகத்தில் அறுபது வயதின் சுருக்கங்கள். தலையில் ஒட்டாமல் சிலும்பும் மெலிதான நரைமுடி போன வருடம் வந்த முடவாதத்தால் செயல்திறனை இழந்து மரத்து போன கை கால்கள்.

    சுதா பிளாஸ்கிலிருந்த வெந்நீரை டம்ளரில் பாதி அளவுக்கு எடுத்துக் கொண்டு - க்ளுகோஸ் பாக்கெட்டைத் தேடிக் கொண்டிருந்தபோது - அந்த ஷூ சத்தம் கேட்டது.

    சுதா நிமிர்ந்தாள்.

    சிவப்பிரகாஷ் கனமான கம்பளிக்கோட்டிலும், கனகராஜ் உல்லன் ஸ்வெட்டரிலும் - வராந்தாவின் கோடியில் தெரிந்தார்கள். சுதா அவசர அவசரமாய துர்கா பரமேஸ்வரியிடம் வந்தாள்.

    ‘‘அம்மா...! அய்யாவோட தம்பியும், உங்க தம்பியும் வர்றாங்க..."

    ‘‘வரட்டும்... நான்தான் அவங்களை வரச் சொல்லியிருந்தேன்...’’ துர்கா பரமேஸ்வரியையே பார்த்தபடி வந்து கொண்டிருந்த - சிவப்பிரகாஷ் நடுத்தர வயதில் தோற்றம் காட்ட - கனகராஜ் முப்பது வயதில் நடிகர் பாண்டியனை ஞாபகத்துக்கு கொண்டு வந்தான். இரண்டு பேரின் தலைகளிலும் பனிக்குல்லாய் ஏறியிருந்தது.

    சிவப்பிரகாஷ் அண்ணி என்றபடி துர்கா பரமேஸ்வரியின் அருகே வந்து நின்றார்.

    வா... சிவா. காரை மதுரைக்கு எத்தனை மணிக்கு அனுப்பறே...?

    "இன்னும் கொஞ்ச நேரத்துல அனுப்பிடறேண்ணி... டிரைவர் சக்திவேல் காரை வாட்டர் சர்வீஸ் பண்ணிட்டிருக்கான்... ஏழு மணி சுமார்க்கு அவனை ஏர்போர்ட் அனுப்பினாலும் போதும். மத்தியானம் பன்னெண்டு மணிக்குத்தானே ஃபிளைட்...’’

    ‘‘நீ ஏர்போர்ட் போகலையா சிவா...?"

    இல்லேண்ணி... எஸ்டேட்ல இன்னிக்கு லேபர் ஆபீஸர் ஒரு விசாரணைக்காக வர்றார்... நானும் கனகராஜம் இருந்து அந்த பிரச்னையை சரி பண்ணனும்... இல்லேன்னா விவகாரம் போலீஸ் வரைக்கும் போயிடும்...

    ‘‘அதென்ன விவகாரம்...?"

    கனகராஜ் முன்னால் வந்தான்.

    "நான் சொல்றேன்க்கா... போன மாசம் அஞ்சாம் தேதி நம்ம எஸ்டேட்ல மண்ணு சரிஞ்சு... ஒரு கூலிப் பொண்ணு செத்துப் போச்சு. அந்தப் பொண்ணு அந்த சமயத்துல கர்ப்பமா வேற இருந்துச்சு... அது ஆக்ஸிடெண்ட் மாதிரிதான்... இருந்தாலும் - இந்த தொழிற்சங்க தலைவர்ங்க பிரச்சனையை பெரிசாக்கி - லேபர் கோர்ட் வரைக்கும் கொண்டு போயிட்டாங்க. லேபர் ஆபீஸர் இன்னிக்கு விசாரணைக்கு வர்றார். நானும் மச்சானும் இருந்து கவனிக்கணும்...’’

    அப்போ... ஏர்போர்ட்டிலிருந்து திவ்யா தனியா வரணுமா...?

    கனகராஜ் சிரித்தான்.

    "என்னக்கா... இப்படி சொல்றே...? திவ்யா என்ன - காட்டாமணக்குப் பட்டியிலிருந்தா வர்றா...? லாஸ் ஏஞ்சலிலிருந்து வர்றா... மதுரையிலிருந்து குமுளிக்கு தனியா கார்ல வரமாட்டாளா...?’’

    ‘‘கனகராஜ்."

    என்னக்கா?

    "திவ்யா... குமுளி வந்தாலும்... இங்கே தங்க அவ பிரியப்பட மாட்டா... தேக்கடி பங்களாவுக்குத்தான் போவா... அந்த பங்களாவை சுத்தம் பண்ணியாச்சா...?’’

    ‘‘நேத்தைக்கே... நம்ம எஸ்டேட்ல வேலை செய்யற பொண்ணுகளை அனுப்பிச்சு... பங்களாவை கண்ணாடி மாதிரி பண்ணியாச்சு...’’

    சரி... நீங்க போய்... காரை ரெடி பண்ணி - சீக்கிரமா மதுரைக்கு அனுப்பப் பாருங்க... டிரைவர் சக்திவேல்கிட்டே காரை மெதுவா ஓட்டச் சொல்லுங்க...

    "சரி.’’

    இருவரும் நகர்ந்தார்கள்.

    பால்கனி வராந்தாவில் நடந்து - மாடிப்படிகளில் இறங்கி பின்பக்க தோட்டத்திற்கு வந்தார்கள். சிவப்பிரகாஷ் சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துக் கொண்டு குரலைத் தாழ்த்தி கூப்பிட்டார்.

    ‘‘கனகு...’’

    "என்னங்க மச்சான்...?’’

    ‘‘என்னோட அண்ணன் உயிரோட இருந்தவரைக்கும் அவர்க்கு கொத்தடிமை மாதிரி வேலை செஞ்சிட்டிருந்தேன். அதுக்கப்பறம் அண்ணி - அதாவது உன்னோட அக்கா கைக்கு அதிகாரம் வந்தது. உன்னோட அக்காவுக்கு கையும் காலும் ஸ்ட்ரக் ஆகி – கண் அவிஞ்சு போனாலும் - அந்த அதிகார தோரணை மட்டும் குறையலை.’’

    ‘‘பார்த்துடலாம்... இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அக்கா கையில கொடி இருக்கும்ன்னு. போதாக்குறைக்கு மக வேறே வர்றா... எஸ்டேட் நிர்வாகத்தை பூராவும் நம்ம ரெண்டு பேரைக் கேக்காமலேயே எடுத்துக்கப் போறா..."

    இவ... ஏன் வர்றா... வெளிநாட்டிலேயே இருந்து தொலைக்காமே...

    ‘‘அம்மாவைப் பார்க்கணும்ன்னு அவளுக்கு ஆசையாயிருக்காதா என்ன?" இருவரும் பேசிக் கொண்டே வந்ததில் - பங்களாவின் முன்பக்கம் வந்திருந்தது. டிரைவர் சக்திவேல் பக்கெட் தண்ணிரில் துணியை முங்கி - எடுத்து பிழிந்து - வெள்ளை அம்பாசிடரை பால்நிறத்துக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1