Nandhini 440 Volts
By Rajeshkumar
3.5/5
()
About this ebook
Read more from Rajeshkumar
Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsRaja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsVetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Irandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsTheepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Saagaavaram Rating: 4 out of 5 stars4/5
Related to Nandhini 440 Volts
Related ebooks
Vivek Never Out Rating: 5 out of 5 stars5/5Irandil Ondru Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Rattham Rating: 5 out of 5 stars5/5Kanavugal Inge Virkkapadum Rating: 0 out of 5 stars0 ratingsPagai Enakku Pagai Rating: 0 out of 5 stars0 ratingsIni, Illai Ilaiyuthirkaalam... Rating: 0 out of 5 stars0 ratingsPagal Nera Alligal Rating: 5 out of 5 stars5/5Endravadhu Oru Naal Rating: 0 out of 5 stars0 ratingsThappithe Aaga Vendum Rating: 5 out of 5 stars5/5Enni Ettavathu Naal Rating: 4 out of 5 stars4/5Irandavathu Uyir! Rating: 4 out of 5 stars4/5Pathinooravathu Avatharam Rating: 4 out of 5 stars4/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Bombaykku Pathavathu Mileil... Rating: 1 out of 5 stars1/5Neruppu Nimishangal Rating: 4 out of 5 stars4/5Thodarnthu Vaa Thottu Vidathea Rating: 4 out of 5 stars4/5Uyirin Niram Ootha Rating: 5 out of 5 stars5/5Vivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Ularaatha Raththam Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi kattalai Rating: 0 out of 5 stars0 ratingsYenni Ettavathu Naal! Rating: 0 out of 5 stars0 ratingsNooru Degree Thendral Rating: 0 out of 5 stars0 ratingsSivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Vidhi Vithikkiren Rating: 4 out of 5 stars4/5Oru Thuli Kadal Rating: 2 out of 5 stars2/5Thalai Illaatha Silai Rating: 5 out of 5 stars5/5Enakku Mattume Therintha Hema! Rating: 5 out of 5 stars5/5Muthal Pagal Rating: 5 out of 5 stars5/5Ondru Irandu Iranthu Vidu Rating: 3 out of 5 stars3/5
Related categories
Reviews for Nandhini 440 Volts
6 ratings0 reviews
Book preview
Nandhini 440 Volts - Rajeshkumar
21
1
ஒரு சின்ன குங்குமப் பொட்டாய் உதித்த சூரியன். வழுக்குப் பாறை எஸ்டேட் பூராவும் கனமாய்ப் பரவியிருந்த பனிப்புகையைப் பார்த்து மலைத்துப் போயிருந்தான். நேற்று சாயந்தரம் வரைக்கும் மலைச்சிகரங்களின் மேல் தூங்கிக் கொண்டிருந்த பஞ்சு மேகங்கள், கொத்துக் கொத்தாய் கீழே இறங்கிப் பள்ளத்தாக்கின் சரிவுகளில் மேய்ந்து கொண்டிருந்தன. எஸ்டேட்டின் மையத்திலிருந்த பிரமாண்டமான டீ பாக்டரியின் புகை போக்கியிலிருந்து தேயிலை வறுபடும் மணம் சுகமாய்க் காற்றில் பரவியிருந்தது. தொலை தூரத்தில் மலைகளின் இடுப்புகளில் ஒட்டியிருந்த சின்னச் சின்ன தேயிலைத் தோட்டங்களை நோக்கி - தலையில் கவிழ்த்த கூடையோடு பெண்களின் வரிசையொன்று போய்க் கொண்டிருக்க - பாரி தன்னுடைய அதிகாலை நேர வாக்கிங்கை முடித்துக்கொள்ள எண்ணித் திரும்பினான்.
வெள்ளை நிற பனியனிலும், வெள்ளை நிற ஷார்ட்ஸிலும் ஒரு HI-MAN மாதிரி தெரிந்த பாரிக்கு முப்பது வயது. எப்படிச் சீவினாலும் நெற்றியின் பரப்பில் பிடிவாதமாய் வந்து விழுகிற அந்த கிராப்பின் முடிக்கற்றை ஒரு விசேஷ அம்சம். அவனுடைய கூர்மையான சிறிய கண்களுக்கு எதிராளியைச் சீவுகிற பார்வை உண்டு. மேலும் உதட்டுப் பரப்பு பூராவையும் அடைத்துக்கொண்டு பதிவாகியிருந்த அந்த ‘கரு கரு’ மீசை. அவனுடைய மனைவி நந்தினிக்கு நிரம்பவே பிடிக்கும். ராத்திரி நேரங்களில் அவனுடைய மார்பின் மேல் கவிழ்ந்து கொண்டு வலது கையின் மோதிர விரலால் அந்த மீசையை நெருடிக் கொண்டிருப்பதில் அவளுக்கு ஒரு கிறக்கம். அப்புறம்...
ஹலோ...! குட்மார்னிங் பாரி...!
தேயிலைத் தோட்டச் சரிவில் இறங்கிக் கொண்டிருந்த பாரி நிமிர்ந்தான். ப்ளூ ஸ்கை எஸ்டேட்டுக்குச் சொந்தக்காரனான வாசு, ரத்த நிற ஸ்வொட்டரிலும் க்ரே நிற பேண்டிலும் நின்றிருந்தான்.
ஹலோ...! குட்மார்னிங் வாசு. கோயமுத்தூரிலிருந்து எப்போ வந்தே...?
நேத்தைக்கு ராத்திரி...
புதுசா வாங்கின மில் எப்படி ஓடுது...?
வாசு ‘பச்’ சென்று சொன்னபோது வாயிலிருந்து பனிப்புகை பறந்தது. ஒண்ணும் சரியில்லை பாரி... ஆமா... இன்னிக்கென்ன இந்நேரத்துக்கே வாக்கிங்கை முடிச்சுக்கிட்டே?
இன்னிக்கு மத்தியான பிளைட்ல பாம்பே போறேன்...
ஈஸிட்... பிசினஸ் டூரா...?
நோ... நோ... ஜாலி டூர்...! என்னோட ஒய்ப் நந்தினிக்கு ரொம்ப நாளாவே டூர் கிளம்பணும்ன்னு ஆசை... இந்த ஆஃப் சீசன்ல பாம்பே நல்லாயிருக்கும்... பூனாவுக்கு பக்கத்துல லோனா வாலான்னு ஒரு இடம். நம்ம ஊட்டி மாதிரியான க்ளைமேட். என்னோட பிசினஸ் தோஸ்த் மாணிக்லாலுக்குச் சொந்தமான பங்களா - ஒண்ணு இருக்கு. பாம்பேயிலிருந்து திரும்பறப்போ லோனா வாலாவில் இறங்கி ஒரு வாரம் தங்கிகிட்டு வரலாம்ன்னு திட்டம்...
‘ம்... ம்... ஜமாய்... கல்யாணமான இந்த ரெண்டு வருஷத்துல இப்பதான் மொதல் தடவையா டூர் போறீங்க போலிருக்கு..."
ஆமா...!
கோயமுத்தூர்ல போய் ஃபிளைட்ல போறீங்க...?
ஆமா...!
விஷ் யூ ஹேப்பி ஜர்னி...
தேங்க்யூ...
பாரியும் வாசுவும் புன்னகைகளோடு விலகி நடந்தார்கள். பாரி எதிரே தெரிந்த மலைச் சரிவில் வெளேரென்று தெரிந்த தன்னுடைய எஸ்டேட் பங்களாவை நோக்கி இறங்கினான். சில நிமிஷ நடக்குப் பின்னர் பங்களாவை நெருங்கி வாட்ச்மேனின் ரெண்டாவது சல்யூட்டை தலையசைப்பால் வாங்கிக் கொண்டு உள்ளே போனான்.
லேசாய் ஆச்சர்யப்பட்டான். மிஸ் வயலெட் - அவனுடைய பர்சனல் செக்ரட்ரி - அந்நேரத்துக்கே வந்து வரவேற்பறையில் காத்திருந்தாள். வெளிர் மஞ்சள் நிற கவுனில் அப்போது பறித்த ஒரு சூரியகாந்தி மாதிரி தெரிந்தாள். ஆங்கிலோ- இந்தியப் பெண்களுக்கே உரித்தான ஆப்பிள் நிறம். அந்த உயரம், அந்த செழுமை, அந்த மார்புகள் இவளிடமும் இருந்தன. தமிழைக் குதறிக் குதறிப் பேசாமல் முழுசாய் பேசினாள்.
குட்மார்னிங் ஸார்...
குட்மார்னிங் மிஸ் வயலெட்... என்ன இந்நேரத்துக்கே வந்துட்டிங்க...
வயலெட் காலையில் தேய்த்த ஒழுங்கான பல் வரிசையைக் காட்டிச் சிரித்தாள்.
இன்னிக்கு நீங்க நிறைய பைல்ஸ்ல கையெழுத்தைப் போட வேண்டியிருக்கு ஸார். நீங்க பாம்பே புறப்பட்டுப் போயிட்டிங்கன்னா எல்லாமே பெண்டிங் விழுந்துடும்... ஸோ... இன்னிக்கு நான் என்னோட ஒரு மணி நேரத் தூக்கத்தை தியாகம் பண்ணி குளிச்சு முடிச்சுப் புறப்பு, வந்துட்டேன். நீங்க எத்தனை மணிக்கு கோயமுத்தூர் புறப்படறீங்க ஸார்...?
பை நைன்...
இனஃப்... அதுக்குள்ளே நீங்க பைல்ஸ் முழுவதையுமே பார்த்துக் கையெழுத்து போட்டுடலாம்...
பைல்ஸை எடுத்து வையுங்க மிஸ் வயலெட்... நான் குளிச்சுட்டு வந்துடறேன்...
சிரித்துக்கொண்டே உள்ளே போனான் பாரி.
தன்னுடைய அறைக்குள் நுழைந்தான்.
நந்தினி இன்னமும் உல்லன் போர்வைக்குள் சுருண்டிருந்தாள். அறையின் மூலையில் இருந்த ஹீட்டர் கம்பிகள் தக்காளி ஜாம் நிறத்தில் ஜொலித்து, அறைக்குள் இருந்த காற்றை உஷ்ணமாய் வைத்திருந்தது.
மை ஸ்வீட் நந்து...
கிசுகிசுப்பான குரலில் சொல்லிக்கொண்டே அந்த உல்லன் போர்வையின் மேல் இதமான கனத்தோடு படர்ந்தான்.
உம்...
முனகினாள் நந்தினி.
என்னோட நந்துவுக்கு இன்னமும் தூக்கம் கலையலையா...?
உம்...
என்னஉம்...?
என்னை நீங்க தூங்க விட்டப்போ மணி எவ்வளவு தெரியுங்களா... ரெண்டு...
போர்வைக்குள்ளிருந்து நந்தினியின் குரல் சிணுங்கலாய் வெளிப்பட்டது.
நாம் இன்னிக்கு பாம்பே போகப் போறோம். மறந்துட்டியா? எந்திரிச்சு சீக்கிரமா எல்லாத்தையும் பேக் பண்ணு...
நேத்து ராத்திரியே பேக் பண்ணியாச்சு...
பதில் இன்னமும் போர்வைக்குள்ளிருந்தே வந்தது. பாரி போர்வையை உருவினான்.
நந்தினி தூக்கம் பாக்கி வைத்திருந்த கண்களைச் சிரமப்பட்டு மலர்த்திக்கொண்டு சிரித்தாள்.
குட்மார்னிங். என் அருமைக் கணவரே...
ம்... எந்திரி...