Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ithu Pothuvazhiyalla
Ithu Pothuvazhiyalla
Ithu Pothuvazhiyalla
Ebook110 pages41 minutes

Ithu Pothuvazhiyalla

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Ithu Pothuvazhiyalla

Read more from Rajeshkumar

Related to Ithu Pothuvazhiyalla

Related ebooks

Related categories

Reviews for Ithu Pothuvazhiyalla

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ithu Pothuvazhiyalla - Rajeshkumar

    20

    1

    எப்போதோ நடந்தது

    கற்பூரச் சோலை சமஸ்தானம். நடுநிசியைத் தாண்டியிருந்த நேரம் சமஸ்தானத்தின் வெளி பிரகார பிரும்மாண்டமான தூணுக்குப் பின்னால இரண்டு உருவங்கள் இருட்டின் அடர்த்தியில் கரைந்தப்படி நின்று பேசிக் கொண்டிருந்தன.

    சாமுண்டராயா! நாம் எதிர்பார்த்த விநாடிகள் வந்து விட்டது. வேட்டைக்கு போயிருக்கிற ஆனந்த வர்மராஜா காலை ஆறு மணிக்கு மேல்தான் காட்டுப் பகுதியிலிருந்து திரும்புவார். அவர் வருவதற்குள் சாந்தமதியைக் கொன்று... அந்த மஹா ரத்தின ஹாரத்தை கைப்பற்ற வேண்டும்.

    தாண்டவன்! நீ அவசரப்படுகிறாய். அந்தப்புரத்தின் உள் அறையில் இருக்கும் - சாந்தமதியை நாம் நெருங்குவது அவ்வளவு சுலபமில்லை. காவல் பலமாக இருக்கிறது

    அவளை எப்படி நெருங்குவது என்கிற வித்தை எனக்குத் தெரியும் பேசாமல் என்னோடு வா

    இருவரும் பிரகார இருட்டில் - இடுப்பிலிருந்த பள பளப்பான குத்துவாள்களை உருவிக் கொண்டு நடந்தார்கள்.

    இப்போது நடப்பது

    டெலிபோன் அலற ஆரம்பிக்க வீட்டுக்கு புறப்பட்டுப் போக தயாராயிருந்த இன்ஸ்பெக்டர் சத்ய நாராயணன் - எரிச்சலோடு வந்து ரிஸீவரை எடுத்தார். ஸ்டேஷன் கடிகாரத்தில் மணி 11.30 இரவு. வெளியே மழை தூறிக் கொண்டிருந்தது.

    ஹலோ... போலீஸ் ஸ்டேஷன்...? ஒரு ஆண்குரல் மூச்சிரைப்போடு கேட்டது.

    எஸ்.

    ஸார்! ஸ்காலர் தனஞ்செயனுக்கு ஆபத்து... அவரை உடனே காப்பாத்துங்க...

    ஸ்காலர் தனஞ்செயனா...? யாரது...?

    ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட்ல டெப்டி டைரக்டர் ஸார்...! அவரோட உயிர்க்கு ஆபத்து. உடனே அவர் வீட்டுக்கு போங்க ஸார்...

    பேசறது யாரு...?

    டொக்...

    மறுமுனையில் ரிஸீவர் குப்புறப்படுத்துக் கொள்ளும் சத்தமும் அதன் பின் ‘கொர்’ என்ற சத்தமும் கேட்டது.

    ஹலோ... ஹலோ... டெலிபோன் பட்டனை நான்கைந்து முறை தட்டி விட்டு - இன்ஸ்பெக்டர் சத்ய நாராயணன் ரிஸீவரைக் கவிழ்த்தார்.

    ரகு...

    லாக்கப் அறைக்குள் - ஒரு லுங்கிப் பேர்வழியை லத்தி சகிதம் விசாரித்துக் கொண்டிருந்த சப் - இன்ஸ்பெக்டர் ரகு வெளியே வந்தார்.

    ஸார்

    ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட் டெப்டி டைரக்டர் தனஞ்செயனை உங்களுக்குத் தெரியுமா...?

    தெரியாது ஸார். பேரையே இப்பத்தான் கேள்விப்படறேன். ஏதாவது கம்ப்ளைய்ண்ட்டா ஸார்...?

    ஒரு அனானிமஸ் கால் வந்தது. ஸ்காலர் தனஞ்செயனுக்கு ஆபத்து... அவரை உடனே காப்பாத்துங்கன்னு ஒரு ஆண் குரல் கேட்டது. பேசறது யார்ன்னு கேட்டதுமே... ரிஸீவரை வெச்சுட்டாங்க...

    யாராவது விளையாடலாம்... ஸார்...

    நோ... நோ... இதை இக்னோர் பண்ண முடியாது... நீங்க ரெண்டு காப்ஸைக் கூட்டிகிட்டு... அவரோட வீட்டுக்குப் போய்ட்டு வந்துடுங்க...

    அட்ரஸ்... ஸார்...

    போன்ல பேசின ஆள்... அட்ரஸைத் சொல்லாமே... உடனே ரிஸீவரை வெச்சுட்டான்...

    அட்ரஸ் தெரியாம்... இந்த விஷயத்துல எப்படி ஸார் மூவ் பண்றது...?

    டெலிபோன் டைரக்டரியை எடுத்து தனஞ்செயன்ங்கிற பேர்ல டெலிபோன் இருக்கான்னு பாருங்க...

    சப் - இன்ஸ்பெக்டர் ரகு டைரக்டரியைப் புரட்டிப் பார்த்தார். சில விநாடிகளுக்குப் பின் நிமிர்ந்தார்.

    இல்ல... ஸார்...

    சென்ட்ரல் கவர்மெண்ட் போர்ஷனை - எடுத்து ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்டைப் பாருங்க... பார்த்தார்.

    டிபார்ட்மெண்ட்டுக்கு நெம்பர் இருக்கு ஸார்...

    டயல் பண்ணிப் பாருங்க...

    ஸார்... இந் நேரத்துக்கு...?

    "ட்ரை பண்ணுங்க... யாராவது எடுத்துப் பேசலாம்... ரகு நெம்பர் பார்த்து டயலைச் சுழற்றினார். மறு முனையில் ரிங் போயிற்று. போய்க் கொண்டே இருந்தது. முழுசாய் இரண்டு நிமிஷம் பொறுத்துவிட்டு- ரகு உதட்டைப் பிதுக்கினார்.

    நோ... ரெஸ்பான்ஸ் ஸார்

    டைரக்டரியில் இருக்கிற டிபார்ட்மெண்ட் அட்ரஸ் என்ன...?

    நெம்பர் 545, கௌலி ப்ரெளன் ரோடு...

    நேர்ல போயிடுங்க ரகு...! எப்படியும் டிபார்ட்மெண்ட் காம்பௌண்ட் கேட்ல வாட்ச்மேன் இருப்பான். அவன் கிட்டே தனஞ்செயனோட அட்ரஸை கேளுங்க... அவனுக்கு தெரிஞ்சிருக்கலாம்...

    எஸ். ஸார்... சப்-இன்ஸ்பெக்டர் ரகு, இரண்டு கான்ஸ்டபிள்களோடு கிளம்பினார். இன்ஸ்பெக்டர் சத்யநாராயணன் சொன்னார்.

    இஃப் எனிதிங்க் இம்பார்ட்டெண்ட் என் வீட்டுக்கு ‘ரிங்’ குடுங்க. நான் ஸ்பாட்டுக்கு வர்றேன்...

    பெய்து கொண்டிருந்த மழையில் - ஜீப் கிளம்பியது. மோன நிலையிலிருந்த ரோடுகளில் - ஜீப் ஓடி - கௌலி ப்ரெளன் ரோட்டில் - இருந்த - ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்டின் கருங்கல் - கட்டிட காம்பௌண்ட் கேட்டுக்கு முன்னால் நின்றது. வைப்பர்கள் மழை நீரை வழித்துப் போட்டது.

    எஞ்சின் உதறிக் கொண்டிருக்க - ரகு கீழே இறங்கினார்.

    ஹெட்லைட் வெளிச்சத்தில் - காம்பௌண்டின் உட்புறம் வெளிச்சமாய்த் தெரிய அந்த வாட்ச்மேன் கிழவன் ஓடி வந்தான். கையில் டார்ச், ஸார்... ரகு கேட்டார்.

    உம் பேரென்ன...?

    முனுசாமிங்க...

    கட்டிடத்துக்குள்ளே வேற யாராவது இருக்காங்களா?

    இல்லீங்க...

    டிபார்ட்மெண்ட்டோட டெபுடி டைரக்டர் தனஞ்செயனோட வீடு எங்கேயிருக்கு தெரியுமா...?

    தெரியுமுங்க...

    எங்கே...?

    சர்க்யூட் ஹவுஸ் ரோட்ல அஞ்சாவது குறுக்கு தெருங்க. பதினாலாம் நெம்பர் பங்களா...

    வீட்ல யார் யார் இருக்காங்க...?

    அவரும்... அவரோட பொண்ணு மட்டுந்தாங்க...! சம்சாரம் எப்பவோ தவறிட்டாங்க.

    சப் இன்ஸ்பெக்டர் ரகு ஜீப்புக்கு வந்தார். டிரைவரிடம் விபரம் சொல்லிவிட்டு ஜீப்புக்குள் தாவினார். டிரைவர் விரட்டினார். பெய்து கொண்டிருந்த மழை ரோடுகளில் நீரை நிரப்பியிருக்க - ஜீப் அதை இறைத்துக் கொண்டு பறந்தது.

    ஆறுமுகம்... ரகுவின் குரல் கேட்டு - கான்ஸ்டபிள் திரும்பினார்.

    ஸார்...

    வந்த போன் கால் நிஜமாயிருக்கும்ன்னு நம்பறியா?

    "ஸ்டேஷனை விட்டு புறப்படும்

    Enjoying the preview?
    Page 1 of 1