Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nenjukkul Endrendrum Neethane….
Nenjukkul Endrendrum Neethane….
Nenjukkul Endrendrum Neethane….
Ebook376 pages1 hour

Nenjukkul Endrendrum Neethane….

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இவர் இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் பி.ஏ. (Honours) சரித்திரம் படித்து பட்டம் பெற்றவர்.

விகடன் மாணவர் திட்டத்தின் மூலம் எழுத்துலகுக்கு R. சுப்புலட்சுமி என்ற பெயரில் அறிமுகமாகி 'ரஷ்மி' என்கிற பெயரிலும் எழுதுவதுண்டு. ஆனந்த விகடன், கல்கி, குமுதம், சுதேசமித்திரன், கலைமகள், அமுதசுரபி, இதயம் போன்ற இன்னும் பல பிரபல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.

இவர் எழுதியதில் சரித்திரம், மர்மம், சமூக பிரச்சனைகள், நகைச்சுவைக் கதைகள் என சுமார் முந்நூறுக்கும் மேல் வெளியாகியுள்ளது. மற்றும் 45 குறுநாவல்கள், 6 நாவல்கள் வெளி வந்துள்ளன.

இவர் எழுதிய இரு நாடகங்கள் சென்னை தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. ஜெய்ப்பூர் தமிழ்ச்சங்கத்திற்காக தமிழ் நாடகங்கள் எழுதியதுண்டு.

கும்பராணாவைப்பற்றி ஆய்வு செய்து எழுதிய இரு குறுநாவல்கள், இந்தியில் திருமதி. ஜெயலக்ஷ்மி சுப்ரமண்யம் என்பவரால் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மேவார் அறக்கட்டளையினரால் 'அகண்ட தீப்' என்கிற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. பல பத்திரிக்கைகள் நடத்திய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் போட்டிகளில் பரிசுகள் வாங்கியவர்.

இவருடைய படைப்புகளை முழுவதும் ஆய்வு செய்து திருமதி. மகேஸ்வரி ஈஸ்வரன் என்பவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125804001
Nenjukkul Endrendrum Neethane….

Read more from Lakshmi Ramanan

Related to Nenjukkul Endrendrum Neethane….

Related ebooks

Reviews for Nenjukkul Endrendrum Neethane….

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nenjukkul Endrendrum Neethane…. - Lakshmi Ramanan

    http://www.pustaka.co.in

    நெஞ்சுக்குள் என்றென்றும் நீதானே....

    Nenjukkul Endrendrum Neethane....

    Author:

    லக்ஷ்மி ரமணன்

    Lakshmi Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    1

    பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த வினித் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான்.

    இதமான தென்றல் அவன் முகத்தை வருடிச் சிலிர்க்க வைத்தது.

    நீண்டுகொண்டே சென்ற சாலையின் இரு பக்கங்களிலும் படர்ந்திருந்த பசுமை கண்களுக்கு இதம் தந்தது.

    இன்னும் சற்று நேரத்தில் அவன் பயணம் முடிந்து இறங்க வேண்டிய இடம் வந்துவிடும். அங்கிருந்து அவனது தேடல் துவங்கிவிடும்.

    கடந்த சில மாதங்களில் நடந்த சம்பவங்கள் அவன் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டிருந்தன என்றால் மிகையாகாது.

    நினைத்துப் பார்க்கையில் எல்லாமே கனவுபோல் இருந்தது.

    எம்.ஏ. இறுதித் தேர்வை எழுதி முடித்துவிட்டு அவன் தில்லி பல்கலைக் கழகத்தை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தபோது காவேரி அத்தை அவனைக் கைப்பேசியில் அழைத்து, அவன் தந்தை தணிகாசலத்திற்கு நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் உடனே வரும்படியும் அழைத்தது.

    அவன் கிளம்பி சப்தர்ஜங் மருத்துவமனையை அடைவதற்குள் அவர் உயிர் பிரிந்து விட்டது. அந்த அதிர்ச்சியிலிருந்து அவன் மீள்வதற்குள் அத்தை குளியலறையில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு அதிகமாக ஏற்பட்ட இரத்தக் கசிவினால், ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பே இறந்து போனது என்று அடுத்தடுத்து அவனுக்கு ஏற்பட்ட இழப்புகள் வினித்தின் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அமுக்கிப் போடப் போதுமானவையாக இருந்தன.

    தனக்குத் தன் தாயின் மறைவுக்குப் பிறகு நெருக்கமாக இருந்து பாசத்தைப் பொழிந்த இரண்டு பேரையும் அடுத்தடுத்து இழக்க நேரிட்ட சோகத்திலிருந்து தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்துக் கொண்டு அவன் தன் தந்தையின் அலமாரியிலிருந்த ஆவணங்களை சீர்படுத்தி வைக்க முயன்றான்.

    அப்பா விட்டுச் சென்றிருந்த சில டயரிகளைப் படித்தபோது....

    அவனுக்கு நிறைய விஷயங்கள் தெரிய வந்தன. பேருந்து திடீரென்று நின்றது.

    கிருஷ்ணகானபுரம் வந்திடுச்சு. இறங்க வேண்டியவங்க வரலாம் என்று நடத்துனர் குரல் கொடுத்துவிட்டுக் கீழே இறங்கி நின்று கொண்டார்.

    வினித்தும் இன்னும் சில பயணிகளும் தங்கள் உடமைகளைச் சேகரித்துக் கொண்டு இறங்கி நடக்க முற்பட்டார்கள்.

    சாலையைக் கடந்து அங்கிருந்து கிளையாகப் பிரிந்து இறங்கிய பாதை நெளிவு சுளிவுகளுடன் நீண்டு கொண்டே போயிற்று.

    சுற்றிலும் காட்டைப்போல் அடர்த்தியாகத் தெரிந்த மூங்கில் மரங்கள் காற்றில் அசைந்தபோது ஒருவித இனிமையான ஓசை எழும்புகிறதோ?

    'கிருஷ்ணகானபுரம் உங்களை வரவேற்கிறது' என்கிற பெயர்ப்பலகை அவனை வரவேற்றது.

    இந்த ஊருக்கு எப்படி அந்தப் பெயர் வந்தது?

    வினித் பேருந்தில் தன்னுடன் பயணித்த பெரியவரைக் கேட்டபோது அவர் சொன்ன பதில் கேட்க சுவாரஸ்யமாக இருந்தது.

    ஊருக்கு வரம்பு கட்டுகிற மாதிரி வளர்ந்திருக்கிற மூங்கில் மரங்கள் காற்றில் அசையும்போது மனசுக்கு இதமான ஓசையை எழுப்பும். அதற்கு ஏற்ற மாதிரி ஊரைச் சேர்ந்த ஒருவர் புதிதாக விவசாயம் துவங்கி வயல்வெளியை உழுதபோது பூமிக்கடியிலிருந்து புதைந்து போயிருந்த குழலூதும் கிருஷ்ணனுடைய கற்சிலை கிடைச்சுதாம். உற்சாகமான ஜனங்க அவருக்குக் கோயில் கட்டி, குடமுழுக்கு செய்து ஏதோ ஒரு பட்டியாக இருந்த ஊருக்கு கிருஷ்ணகானபுரம்னு நாமகரணம் பண்ணிட்டாங்க.

    அதை நினைத்துக் கொண்டதும் காற்றில் மெல்லிய குழலோசை போன்ற 'ஊ.... ஊ' என்கிற சப்தம் வருகிறதோ என்று தோன்றியது.

    தூரத்தில் எங்கோ மரத்திலமர்ந்து 'கூக்கூ’ என்று குரலெழுப்பிய குயில் தன்னுடைய பாணியில் அந்தச் சூழ்நிலையை இன்னும் ரம்யமாக்கிக் கொண்டு சுருதி சேர்க்கிறதோ?

    'கிருஷ்ணகானபுரம்' என்கிற பெயர் இந்த ஊருக்கு நன்றாகவே பொருந்துகிறது யோசித்தவாறு,

    வினித் தன் தோள்பட்டையிலிருந்து தொங்கிய ஜிப் பையை சரி செய்து கொண்டு கையில் சூட்கேஸுடன் நடந்தான்.

    சரக்… சரக்.... சரக். அவன் பின்னால் யாரோ நடந்து வரும் ஓசை.

    வினித் நாசூக்காகத் திரும்பிப் பார்த்தான்.

    சற்று முன் பேருந்தில் அந்த ஊரின் பெயருக்கு விளக்கம் அளித்த பெரியவர் அவனைப் பார்த்து புன்னகைத்தவாறு அவனைக் கடந்து சென்றார்.

    அவர் முகத்தில் ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி இருந்தது. அவரும் இந்த ஊர்க்காரர்தான் போலும்.

    அடடா.... அவர் பெயரைக் கேட்டுக் கொண்டது யோசிக்கையில் ஞாபகம் வந்தது.... என்ன சொன்னார்? ரங்கசாமி என்று சொன்னார்.

    வினித் தலை நிமிர்ந்து பார்ப்பதற்குள் அவர் வெகுதூரம் போய்விட்டிருந்தார்.

    அத்தனை துரிதமாக அவரால் எப்படி நடக்க முடிந்தது?

    அதுவும் வினித்தைவிட அவர் வயசில் ரொம்பப் பெரியவர்.

    அவருக்கு ஐம்பது வயதிருக்குமா? இல்லை அதை விட அதிகம் இருக்குமோ?

    அவர் நல்ல உயரமாக இருந்தார். நெற்றியில் குங்குமப் பொட்டு பளிச்சிட்டது. முகத்தில் ஒருவித அமானுஷம் பிரதிபலிக்கிறதோ என்று எண்ணத் தோன்றியது அவனுக்கு.

    ஊரை நெருங்குகையில் அவனிடம் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. அது அவன் தாய் கனகத்தின் ஊர்.

    அவளுடைய பிறந்தகத்தாரில் யாரெல்லாம் உயிருடன் இருக்கிறார்கள் என்பது அவனுக்குத் தெரியாது.

    அவன் தாய் இறந்து போய் எத்தனை ஆண்டுகள் இருக்கும் என்று நினைத்துப் பார்க்க முற்பட்ட போதெல்லாம் விவரிக்க முடியாத சோகம் அவனிடம் தலைதூக்கியது. அந்த இழப்பு எத்தனை வேதனை யானது.

    அம்மா.... மெல்லிய திரைக்குப் பின்னாலிருந்து தெரிகிற மங்கலான உருவமாய் அவன் நெஞ்சில் பதிந்து போயிருந்த அவள் முகம்.

    அவன் தந்தையுடன் மாலையும் கழுத்துமாய் நின்ற நிழற்படத்தில் அவள் முகம் தெளிவாக இருந்தது.

    அந்த முகம் அவனுக்கு மறக்கவே இல்லை.

    ஐந்து வயது வரை அவள் அவனிடம் காட்டிய அன்பும் பாசமும்....

    வினித் கண்ணா! நீ எனக்குக் கிடைத்த பொக்கிஷம்டா என்று அவனை அவள் அணைத்துக் கொண்டு கொஞ்சியதெல்லாம் கனவாகிப் போன காரணம்தான் என்ன?

    கடைசியாக அவன் தன் தாயைப் பார்த்த பயங்கர கோலம்.... மனதில் பதிந்து போய் இன்னமும் கண் முன் நின்றது.

    அப்போது அவன் நர்சரிப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். சென்னையில் வீட்டருகிலேயே இருந்த அந்தப் பள்ளிக்கு அவனைக் காலை எட்டரை மணிக்கு அம்மாதான் கொண்டுவிட்டு, பிற்பகலில் அவனைத் திரும்ப அழைத்து வருவாள்.

    அப்பா மாலை வேளைகளில் சீக்கிரமே அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி விடுவார். பிறகு மூவருமாக பீச், பூங்கா, திரைப்படம் என்று எங்காவது போய் வருவார்கள்.

    அப்பாவும் அம்மாவும் ஒருவரையொருவர் நேசித்து மணந்து கொண்டவர்களாம். அம்மா வீட்டவர்களின் விருப்பத்துக்கு எதிராக நடந்த திருமணம் அது என்று அவனுக்கு விவரம் தெரிந்த பிறகு அப்பா சொல்லியிருக்கிறார். பள்ளிப் படிப்பை முடித்ததும் தொடர்ந்து கல்லூரியில் சேர்ந்து படிக்க அம்மா கனகம் சென்னைக்கு வந்திருக்கிறாள்.

    அப்போது அவன் தந்தையை எப்போது எங்கு சந்தித்தாள். அவர்கள் அறிமுகம் எப்படி நேசமாக மாறியது போன்ற விவரங்கள் அவனுக்குத் தெரியாது. ஆனால், அவர்களது தாம்பத்தியத்தின் நெருக்கம் அவர்கள் ஒருவர்மீது மற்றவர் கொண்ட காதலை சொல்லாமல் சொல்லியது.

    அம்மா கலகலப்பானவள், எப்போதும் ஏதாவது ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டே இருப்பாள்.

    அவள் குரல் இனிமையாக இருக்கும்…

    பாடாத நேரங்களில் அப்பாவிடம் எதைப் பற்றியாவது கேள்வி கேட்டுக் கொண்டிருப்பாள்.

    கனகம்! கொஞ்ச நேரம்தான் அந்த வாய்க்கு ஓய்வு கொடேன். அதுக்கு இப்படி வேலை கொடுத்துக்கிட்டே இருந்தால் வலிக்காதா? அப்பா அவளைச் செல்லமாகக் கண்டிப்பார்.

    மாட்டேன் நான் திடீர்னு செத்துட்டால்கூட ஆவியாய் வந்து உங்கக்கிட்டே பேசி உயிரை வாங்குவேன் அவள் பயமுறுத்துவதுபோல் பாவனை காட்டுவாள்.

    ஐயோ நான் தொலைந்தேன் அப்பா பயப்படுவதுபோல் நடித்துவிட்டு இருவரும் சேர்ந்து சிரிப்பார்கள்.

    வீடே அந்தச் சிரிப்பில் நிறைந்து போகும்.

    அப்படியே சிரிப்பும், கலகலப்புமாய் அவர்கள் வாழ்க்கை தொடர்ந்திருந்தால் அவன் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்க வேண்டி வந்திராதோ?

    ஒரு நாள் காலையில் அவனைப் பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டுப் போன அம்மா, மீண்டும் அவனை அழைத்துப்போக வரவில்லை.

    வினித் இங்கே வா என்று அவனுடைய வகுப்பாசிரியை அவன் கையைப் பிடித்து அழைத்துப் போய் ஸ்டாஃப் ரூமில் உட்கார வைத்தாள்.

    இங்கேயே உட்கார்ந்திருக்கணும். எங்கேயும் போகக்கூடாது என்று அவனிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள்.

    என்னாச்சு டீச்சர்? அவன் கேட்டான்.

    எதுவும் ஆயிடக் கூடாதுன்னுதான் உன்னைப் பாதுகாப்பாக வெச்சிருக்க இங்கே இருக்கச் சொல்றேன்.

    அவள் ஏன் அப்படிச் சொன்னாள் என்பது அவனுக்குப் புரியவில்லை.

    அவன் அப்பா தணிகாசலம் அவனை அழைத்துப் போகத் தாமதமாக வந்தார்.

    என்னாச்சு மிஸ்டர் தணிகாசலம்? வினித்துக்கு ஆபத்து வரலாம். ஜாக்கிரதையாகப் பார்த்துக்கங்கன்னு ஏன் போன் பண்ணீங்க?

    ஒரு மிரட்டல் அழைப்பு வந்தது. அதனால் பயந்துட்டேன் அப்பா மழுப்பலாகச் சொன்ன பதில் உண்மையில்லை என்று வீட்டை அடைந்து காரை விட்டு இறங்கியதும்தான் அவனுக்குப் புரிந்தது.

    வினித்! உங்கம்மா நம்மளைவிட்டுப் போயிட் டாடா அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கதறி அழுதவண்ணம் அவனை அப்பா இடுப்பில் தூக்கிக் கொண்டார்.

    வீட்டு வாசலில் போலீஸ் ஜீப்புகள் நின்றிருந்தன.

    அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கூட்டமாக வெளியில் நின்றார்கள்.

    குவியலாக இருந்த ஜனக் கூட்டத்தைப் பிளந்து கொண்டு அப்பா அவனை இடுப்பில் தூக்கயவாறு முன்னேறினார்.

    அம்மா எங்கே போய்விட்டாள் என்று புரியாமல் அவனும் அழத்துவங்கினான்.

    வீட்டுக்குள் படுக்கை அறையில்.... இதென்ன... அம்மா கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தாள்!

    அம்மா எத்தனை அமைதியானவள். இனிமையாகப் பழகக் கூடியவள்.

    அவளைக் கொலை செய்யுமளவுக்கு ஆவேசம் கொண்ட பகைவன் யார்?

    பகல் பன்னிரெண்டு மணிக்கு அடுத்த வீட்டுக்காரி அம்புஜம் அப்பாவின் அலுவலகத்துக்குப் போன் செய்தாளாம்.

    அவர்கள் வீடு திறந்து கிடப்பதாகவும், அம்மா கனகாவை யாரோ குத்திப் போட்டிருப்பதாகவும், வழக்கமாக அந்த நேரத்திற்கு காய்கறி விற்க வரும் வண்டிக்காரப் பெண் வந்து தகவல் சொன்னதாகவும் சொன்னாளாம். வீட்டு அலமாரிகள் அனைத்துமே திறந்து போடப்பட் டிருந்தன.

    வந்தவன் ஒருவனா.... பலரா என்ன தேடி எடுக்க முயன்றிருக்கிறார்கள்?

    அம்மாவின் புடவைகள் அனைத்துமே அடுத்த அறையில் அவனுடைய படுக்கை மீது போட்டு உதறப்பட்டிருந்தன.

    அம்மா! என்று அழுதவாறு அதை எடுக்கப்போன வினித்தை போலீஸ்காரர் தடுத்தார்.

    ஷ்.... எதையும் தொடக்கூடாது தம்பி. கை ரேகைகள் எதிலாவது பதிந்திருக்கான்னு பார்க்கணும்.

    அம்மா! எனக்கு அம்மாகிட்டே போகணும். வினித் அழுதவண்ணம் அவளருகில் ஓடினான்.

    அவனைப் பார்த்து அனைவர் முகத்திலும் பரிதாபம்.

    நீ குட்பாய்தானே? ரகளை பண்ணக்கூடாது. உங்கம்மாவை இப்போ டாக்டர்கிட்டே அழைச்சுகிட்டுப் போகப் போறோம். அதுவரைக்கும் அவங்களை யாரும் தொடக்கூடாது என்று அங்கு நின்றிருந்த போலீஸ்காரர் தடுத்தார்.

    வெள்ளை நிறப் போர்வையால் அவன் அம்மாவை மூடிப் பொட்டலம் போல் ஆக்கி வேனில் எடுத்துக் கொண்டு போனார்கள்.

    அதுதான் அவன் அம்மாவைப் பார்த்த கடைசி காட்சி. அதன் பிறகு....

    வினித்திடம் விவரிக்க இயலாத தனிமையும் சோகமும் புகுந்து கொண்டது. இரவுகளின் பாதித் தூக்கத்தின் நடுவில் எழுந்து அவன் அம்மாவை நினைத்துக் கொண்டு அழுவான். அழுதழுது களைத்துப் போய் தூங்கினதும் உண்டு.

    ஆனால்.... அப்பாவின் வாழ்க்கை முறையே மாறிப் போனது.

    2

    அதன் பிறகு அப்பா முழுக்கவே மாறிப் போனார். அவர் எப்போதுமே அமைதியானவர். தன்னுடைய சோகத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாமல் தனக்குள்ளயே திணித்துக் கொண்டு தவித்தார்.

    கோவையிலிருந்து வினித்தின் அத்தை காவேரி வந்து அவனைப் பார்த்துக் கொள்ள தன் தமையனோடு தங்கினாள்.

    அவளுடையதும் ஒரு சோகக்கதை என்பதை வினித் வளர்ந்து பெரியவனான பிறகு புரிந்து கொண்டான். திருமணமாகிய சில மாதங்களிலேயே கணவனைப் பறி கொடுத்து, புக்ககத்தாரின் ஏசல்களையும் கொடுமைகளையும் தாங்கிக் கொள்ள முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தவளுக்கு வாழ்க்கையில் குறிக்கோளை ஏற்படுத்திக் கொடுத்தது கனகத்தின் மரணம்.

    அவள் வந்த பிறகு வீட்டை நிர்வகிப்பதிலும், வினித்தை கவனித்து வளர்ப்பதிலும் தணிகாசலம் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இருக்க முடிந்தது.

    அவன் தாயைக் கொலை செய்தது யார் என்கிற கேள்விக்கு விடை தேட முடியாமல் போலீஸார் திணறினார்கள்.

    தணிகாசலத்தைப் பார்க்க வீட்டுக்கு அடிக்கடி வந்து போனார்கள்.

    உங்களுக்கு யாராச்சும் விரோதிங்க இருக்காங்களா? உங்க ரெண்டு பேருக்குமிடையில் உறவு முறை எப்படி? என்று கேள்வியை அவன் தந்தைக்கு எதிராக திசை திருப்ப முயன்றபோது அவர் வேதனையில் குலைந்து போனார்.

    என்னங்க இப்படிக் கேட்கறீங்க? என்னையே சந்தேகப்படறீங்களா? கனகாவை ரொம்பவுமே நேசித்துக் கல்யாணம் செய்துக்கிட்டவன் நான். இன்னும் சொல்லப் போனால் இதில் அவளுடைய வீட்டவர்களுக்கு விருப்பமே இல்லை.

    என்ன சொன்னீங்க? பெத்தவங்க சம்மதம் இல்லாமே நடந்த கல்யாணமா இது? அவங்க வீட்டுலே யாரெல்லாம் இருக்காங்க?

    என் மனைவி சென்னைக்குப் படிக்க வந்த மறுவருஷமே அவங்க அப்பா இறந்துட்டார். அம்மா எப்பவுமே சீக்காளி. ஒரு சகோதரன். மத்தபடி யாரும் கிடையாது.

    வீட்டிலே அலமாரிகள் திறக்கப்பட்டு அதிலிருந்து பொருள்களை எடுத்து தாறுமாறாக கடாசி இருக்கிறதாலே வந்தவனுக்கு திருடுவது நோக்கமாக இருக்கலாம்னும் தோணுது என்றார்கள்.

    அடுத்து....

    வந்தது உங்கள் மனைவிக்குத் தெரிஞ்சவங்களாகக் கூட இருக்கலாம்.

    ஏன்னு கேட்டீங்கன்னா கொலை

    செய்தவன் நேராக வந்து மணியடிச்சு வாசல் கதவை திறக்க வெச்சு உள்ளே வந்திருக்கான். உங்க மனைவி எப்படிப்பட்டவங்க? என்று விபரீதமாகக் கேள்வி கேட்டு அவன் தந்தையைக் கோபப்பட வைத்தார்கள். போலீஸார் அப்படிக் கேட்பது தவறில்லையாக இருக்கலாம்.

    எல்லாக் கோணங்களிலிருந்தும் பார்த்து ஒரு கொலையின் உண்மையான காரணத்தையும் யார் கொலையாளி என்பதை கண்டு பிடிக்கவும் ஏதாவது தடம் கிடைக்கிறதா என்கிற அவர்களது தேடலுக்கு உறுதியான விடை கிடைக்கிறதா என்று பார்க்கவுமே அவர்கள் அப்படிக் கேட்டிருக்கலாம்.

    அப்பா தணிகாசலம் சம்பவம் நிகழ்ந்த தினத்தன்று காலையில் அலுவலகம் சென்றதிலிருந்து ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருந்ததையும் அது முடிகிற தருவாயில்தான் அவருக்கு மனைவியைப் பற்றிய அந்த சோகமான செய்தி வந்ததையும், அவரது மேலதிகாரி காவல்துறை அதிகாரியிடம் சொன்ன பிறகு தான் அவரை மற்றவர்கள் அநாவசியமான கேள்விகள் கேட்பதை நிறுத்தினார்கள். இன்னும் அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் தணிகாசலம் தன் மனைவி மீதும் மகன்மீதும் வைத்திருந்த பிரியத்தையும் அளவிட முடியாத அன்பையும் அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

    கொலைகாரன் தன் தாயின் உடலில் மட்டுமல்ல அப்பாவின் மனதிலும் கத்தியை ஆழமாகச் செருகிவிட்டுப் போய்விட்டதை விபத்தினால் உணர முடிந்தது.

    அவன் தந்தை அடிக்கடி எங்கோ கனவில்லயித்துப் போனவரைப் போல் சிலையாகி உட்கார்ந்ததிலிருந்தும், பனிபூத்த மலர்களாய் அவர் கண்களில் ஈரம் படிந்து போனதிலிருந்தும் அவர் அம்மாவின் மீது வைத்திருந்த நேசத்தைப் புரிந்து கொண்டான்.

    அவர் சென்னையில் இருக்கப் பிடிக்காமல் தில்லிக்கு மாற்றல் கேட்டுக் கொண்டு கிளம்பியதும், தன் மனைவியைப் பிரிந்த சோகம் ஓரளவுக்காவது குறையும் என்கிற நம்பிக்கையில்தான்.

    இடமாற்றம் அவன் தந்தையிடம் ஏற்பட்ட இன்னொரு விபரீத மாற்றத்துக்குக் காரணமாகிவிட்டது. காவேரி அத்தை எத்தனை தடுத்தும் கேளாமல் அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானது வினித்துக்கு கிடைத்த அடுத்த அதிர்ச்சி.

    என் தம்பி இப்படி மாறுவதற்குக் காரணம் அந்தக் கொலைகாரன்தான், சண்டாளன். சந்தோஷமாக இருந்த குடும்பத்தின் நிம்மதியைக் கெடுத்து இந்த நிலைக்கு ஆளாக்கிய அவன் நாசமாகப் போவான் அத்தை அந்த முகம் அறியாத பகைவனுக்கு தினம் கொடுத்த சாபம் பலித்ததா என்பது அவனுக்குத் தெரியாது.

    ஆனால் ஒன்று மட்டும் வினித்துக்குப் புரிந்தது. அவன் தாயைக் கொன்றவன், அவளை நினைத்து சோகத்தில் மூழ்கி அணு அணுவாய் அவன் தந்தை இறப்பதற்கு காரணமாகி விட்டான். அவன் செய்யாத இன்னொரு கொலையாக அது ஆகிவிட்டது.

    வினித்தின் மனதில் உறைந்த துயரம் இறுகி ஒருவித வைராக்கியம் பிறந்தது. அவன் தாயை எதற்கு, ஏன் யார் கொன்றார்கள் என்பதை, அவன் எப்படியாவது கண்டறிய வேண்டும். இன்றில்லாவிடினும் என்றாவது ஒரு நாள் அவனுக்கு அது தெரிய வரும்.

    அவனுடைய இந்த ஆத்திரமும், ஆவேசமும் அர்த்தமில்லாததல்ல. தன்னுடைய கொலை வெறியால் ஒரு குடும்பத்தின் சந்தோஷத்தையே அழித்துப் போட்டு விட்ட அந்தக் கொடியவன் யாரென்று ஆதாரங்களுடன் கண்டு பிடித்து அவனுக்குச் சட்டப்படி உண்டான தண்டனை கிடைக்கும்படிச் செய்ய வேண்டும்.

    ஆனால்.... அவன் இன்னார் என்று தெரியாத நிலையில் ஒரு நிழல் யுத்தத்தைத் துவங்கித் தொடருவது என்பது சாத்தியமான விஷயமா?

    வினித் தனக்குள் எழுந்த ஆவேசத்தை அவ்வப்போது அமுக்கிப்போட முயன்றாலும் அது முடிகிற காரியமாக இல்லை.

    குற்றவாளி இன்னார் என்று அவன் அப்பாவுக்குத் தெரிந்திருந்தால் அவர் அவனைச் சும்மா விட்டிருக்க மாட்டார். நிச்சயம் அவனைப் பிடித்து போலீசில் ஒப்படைத்திருப்பார்.

    அவன் தந்தையின் மறைவுக்குப் பிறகு, அத்தையையும் இழந்து.... அந்தத் துயரத்திலிருந்து மீண்டு வர அவன் முயற்சித்தவனாய் அலமாரியிலிருந்து எடுத்த அவன் தந்தையின் பழைய டயரிகளைப் புரட்டிய நேரத்தில் அந்தத் தகவல் கிடைத்தது.

    தமிழ்நாட்டில் வல்லிப்புத்தூர் என்கிற சிற்றூரில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை அவர் விளக்கியிருந்தார்.

    வினித் தேதியைப் பார்த்தான். அவன் தாய் இறந்து ஓராண்டுக் காலத்துக்குள் எழுதப் பட்டிருந்த குறிப்பு அது.

    வல்லிப்புத்தூருக்குச் சென்று அங்கிருந்த சாமியாரின் மூலம் கனகத்தின் ஆவியுடன் தொடர்பு கொண்டேன். பல நாட்கள் விடாமல் முயற்சித்த பிறகுதான் அது சாத்தியமாயிற்று. கொலையாளியின் பெயர் மா" என்ற எழுத்தில் துவங்கும் என்றாள்.

    அவள் ஊரான கிருஷ்ண கானபுரத்தைச் சேர்ந்தவனாம். முழு விவரங்களையும் அவளால் தர முடியவில்லை. மா என்பது அவள் அண்ணன் மாணிக்கமாக இருக்குமோ? எங்கள் காதலை கனகத்தின் வீட்டார் ஏற்கவில்லை, கலியாணத்திற்கும் யாரும் வரவில்லை. சாதி விட்டு சாதியில் அவள் மணந்து கொண்டதால் என் மீது அவர்கள் கோபத்துடன் இருந்தார்கள்.

    அவள் ஊருக்குப் போய் குடும்பத்தினரைப் பார்த்து நல்ல உறவை நிலைநாட்டிக் கொண்டு வரலாம் என்று நான் சொல்லிப் பார்த்தேன். கனகம் மறுத்து விட்டாள். அங்கே போனால் என் உயிருக்கு ஆபத்து வரலாம் என்பது அவள் பயம். அதற்காகத் தன் உயிரை அவள் பலி கொடுக்க வேண்டி வந்ததா? எனக்கு எதுவுமே புரியவில்லை.

    எங்கள் திருமணம் நடந்து ஐந்து வருடங்களுக்குப் பிறகும் அவள் குடும்பத்தாருக்கு எங்கள் மீதிருந்த கோபம் குறையவில்லையா? என்ன அநியாயம். இந்த அரை குறைத் தகவலை எப்படி நான் போலீஸாரிடம் சொல்ல முடியும்? மேலும் கனகத்தின் ஆவியோடு நான் பேசினேன் என்றால் அவர்கள் நம்புவார்களா? மறுபடியும் ஒருமுறை முயன்று பார்க்கலாம் என்றால் அதற்கான வாய்ப்பு கிடைக்கவே இல்லை.

    தன் தந்தை எழுதி வைத்திருந்த குறிப்பு அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

    அவர் தன் தாய் கனகத்தின் ஆவியுடன் பேசினாரா? அது எப்படி முடிந்தது? ஆவிக்கு குரல் உண்டா? உறவுகள் உண்டா?

    வல்லிப்புத்தூருக்குச் சென்று அந்தச் சாமியாரைச் சந்தித்து தன் தாயின் ஆவியுடன் பேச முயற்சிப்பது என்று அவன் தீர்மானித்தான்.

    3

    தன் முயற்சியில் வெற்றி கிடைக்குமா என்கிற சந்தேகம் வினித்துக்கு இருக்கத்தான் செய்தது. அதுவும் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு.... நடக்க வாய்ப் பிருக்கிறதா? யோசித்தான். வல்லிப்புத்தூரில் அவ னுக்கு ஏமாற்றம் காத்திருந்தது.

    அவன் சொன்ன விவரங்களைக் கேட்டதும் அவன் தேடிவந்தவர் இன்னார் என்பதைப் புரிந்து கொண்ட அங்கிருந்த சிலர் ஓ.... ஆவிச்சாமியாரா? அவருக்கு ரிஷிகேசத்திலிருந்த அவரது குரு அடிக்கடி கனவில் வந்து கூப்பிட்ட மாதிரி இருந்துச்சாம். அதனால் அவர் கிளம்பிப் போய் சில வருஷங்களாயிடுச்சு. அதன் பிறகு அவர் இந்தப் பக்கம் வரவேயில்லை தம்பி என்றார்கள்.

    அப்படியா....? அவர் பெயர் என்ன? என்று அவன் கேட்டபோது அவர்கள் உதட்டைப் பிதுக்கி தெரியாது என்று விட்டுத்திருதிருத்ததைப் பார்த்தபோது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

    என்னங்க இது? இந்த ஊரிலேயே அவர் பிரபலமாக இருந்தார் என்பது புரிகிறது. அவர் ஊரை விட்டுப் போன காரணத்தைக்கூட எல்லாரும் தெளிவாகச் சொல்றீங்க. ஆனால் பெயரைக் கேட்டால் தெரியாதுன்னு சொன்னால் எப்படி?

    அதுக்கென்ன தம்பி பண்ணறது? தபால் கொண்டு வருகிறவர் தபால்காரர் மாதிரி, அவருக்கு ஆவியோடு பேசவைக்கிற திறமை இருந்ததாலே ஆவிச்சாமியார் என்கிற பெயர் நிலைச்சுப்போச்சு என்று பதில் சொன்ன ஒருவர் அவன் முகத்தில் படர்ந்த ஏமாற்றத்தைக் கண்டு ஆறுதல் தரும் வகையில்

    Enjoying the preview?
    Page 1 of 1