Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manjal Kannadi
Manjal Kannadi
Manjal Kannadi
Ebook109 pages35 minutes

Manjal Kannadi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100604012
Manjal Kannadi

Read more from Devibala

Related to Manjal Kannadi

Related ebooks

Reviews for Manjal Kannadi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manjal Kannadi - Devibala

    http://www.pustaka.co.in

    மஞ்சள் கண்ணாடி

    Manjal Kannadi

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    மத்தியான டி.வி. தொடரில் மூழ்கியிருந்தார்கள் அறுபது கடந்த முகுந்தனும் அவர் மனைவி சகுந்தலாவும் பதினொரு மணிக்கு ஆரம்பித்தால் மதியம் இரண்டு மணிவரை டி.வியை விட்டு விலக மாட்டார்கள்!

    அதன் பிறகுதான் மதிய உணவு!

    காலை ஆறரைக்கு மகன் அசோக் புறப்பட்டு போய்விடுவான்.

    அவன் ஒரு ஐ.டி. கம்பெனியில் பெரிய அதிகாரி காலை புறப்பட்டுப் போய்விட்டால், இரவு பத்து மணிக்குத்தான் திரும்புவான். காலை, மதியம் இரண்டு வேலையும் கம்பெனியில் தான் உணவு! முப்பது கடந்தவன் அசோக்!

    அவன் மனைவி சுஜிதாவுக்கு தனியார் வங்கியில் வேலை. அவளும் அதிகாரி. காலை பத்து மணிக்கு பேங்க்! சுஜிதா ஒன்பதே காலுக்கு அவளது இரு சக்கர வாகனத்தில் புறப்படுவாள்!

    ஆறு வயதில் பெண் குழந்தை!

    ஸ்கூல் பஸ் வந்து அவளை அழைத்துப் போகும் கொண்டு வந்துவிடும்!

    சுஜிதா காலை நாலரைக்கு எழுந்து டிபன், சாப்பாடு, காபி என சகலமும் தயாரித்து ஹாட் பேக்கில் நிரப்பிவிடுவாள்

    நான் சமைச்சுக்கறேனே சுஜிதா!

    இல்லை அத்தே! நீங்க கஷ்டப்பட வேண்டாம். முழங்கால் வலி, சர்க்கரை, முதுகு வலினு எல்லாம் இருக்கு! உங்களால் முடியாது! ஸ்கூல் விட்டு குழந்தை வந்தா, அவளை கவனிச்சுக்கணும்! நான் செஞ்சு வச்சிட்டுப் போயிடறேன்!

    மாமியாரை ஒரு வேலை செய்ய விடமாட்டாள்.

    உள்ளங்கையில் வைத்துத் தாங்குகிறாள்.

    அவளை ரெண்டு பேருக்குமே ரொம்பப் பிடிக்கும். அவள் வந்த நாள் முதல் இன்றுவரை எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அப்படி ஒரு இணக்கம்!

    கை நிறைய சம்பாதிக்கிறாள்.

    புருஷனும், மனைவியுமாகச் சேர்ந்து 2 லட்ச ரூபாய்க்கு சம்பாத்தியம். அவர்களே கட்டிய சொந்த வீடு, வாகன வசதிகள், அந்தக் குடும்பத்தில் எந்த ஒரு குறையும் இல்லை!

    அசோக் ஒரே மகன். ரெண்டு தங்கைகளும் கல்யாணமாகி ஒருத்தி வெளிநாட்டில் இன்னொருத்தி மும்பையில்.

    அப்பா முகுந்தன் மத்திய அரசில் பணியாற்றி, ஓய்வு பெற்று பென்ஷன் வாங்குபவர்! தன்னால் முடிந்த உதவிகளை குடும்பத்துக்கு முகம் சுருக்காமல் செய்யும் மனிதர்!

    வருபவர்கள்! உறவுக்காரர்கள், நண்பர்களிடம் முகுந்தனும், சகுந்தலாவும் சொல்வது இதைத்தான்!

    நாங்க குடுத்து வச்சவங்க! எங்க பிள்ளையும், மருமகளும் எங்களை உள்ளங்கையில் வச்சுத் தாங்கறாங்க ஒரு குறையும் இல்லை! நாங்க சந்தோஷமா இருக்கோம்!

    இதைக் கேட்டு பொறாமைப்பட்டு வயிறு எரியும் கூட்டம் ஏராளம்!

    பெருமை பீத்திக்கிறாங்க பாரு! இவன் நாறின நாத்தம் தெரியாதா?

    உள்ளே நிறையப்பூசல் இருக்கும்! நல்லா இழுத்து மூடுதுங்க கிழங்கள் ரெண்டும்!

    ரெண்டு பேரும் வேலைக்குப் போறாங்க! இதுங்க நாய் மாதிரி இருக்குதுங்க!

    இது விமர்சனங்கள்!

    சகுந்தலா கூட வருத்தப்பட்டாள் சுஜிதாவிடம்!

    முகத்துக்கு நேரே பேசிட்டு முதுகுக்கு பின்னால் கேவலமா விமர்சிக்கிறாங்க! நிறையபேர் வயிறு எரியுறாங்க சுஜிதா கலக்கமா இருக்கு திருஷ்டி சுத்திப் போடணும்!

    போடுங்க அத்தே! ஆனா எதுக்கும் கவலைப்படாதீங்க! நம்ம மக்களுக்கு, நாலு பேர் நல்லா இருந்தா பிடிக்காது! ஏதாவது பேசிட்டு அலைவாங்க அதுக்கெல்லாம் மரியாதையே தரக்கூடாது! அத்தே! நம்ம கடமையை நாம செய்யலாம்!

    சுஜிதாவின் பெற்றோர் நாகர்கோவிலில் இருந்தார்கள். அங்கு கூட அதிகம் சுஜிதா போக மாட்டாள்.

    லீவு எடுத்துட்டு மாப்ளை, குழந்தையோட வந்து ஒரு வாரம் இரேன்டி!

    இல்லைம்மா அவருக்கு லீவே கிடைக்காது!

    சரி குழந்தையோட நீ வா!

    அப்படி வந்தா, மாமா - அத்தை கஷ்டப்படுவாங்க.

    ஏண்டீ. உன் மாமியாரால அந்த வேலை கூடவா செய்ய முடியாது! நீ ஓவரா இடம் குடுத்துட்டே!

    தப்பா பேசாதேம்மா! அவங்க முடியாதுன்னு சொல்லலை! என்னைத் தடுக்கவும் இல்லை. எனக்கு விட்டுட்டு வர மனசு இல்லை முடிஞ்சப்பு வர்றேன்!

    அம்மாவின் விமர்சனங்களை பொருட்படுத்த மாட்டாள். சகுந்தலாவும் தன் உறவுக்காரர்களிடம் ஒரு வார்த்தை கூடத் தப்பாகப் பேச மாட்டாள்.

    யாரிடமும் போய் இருக்கவும் மாட்டாள்.

    மும்பையில் உள்ள மகள் அழைத்தும் மறுப்புதான்.

    நீயும், அப்பாவும் எங்கிட்ட வந்து இருக்கக் கூடாதா இவருக்கு உங்க மேல் கோபம்தான்!

    அசோக் அடிக்கடி வேலை நிமித்தம் வெளிநாட்டுக்குப் போய் விடுவான்!

    மூன்று மாதங்கள் ஒரு மாதம் என பல விதமாக பயணம் இருக்கும்!

    அந்த நேரத்தில் எல்லாம் சுஜிதாதான் துணை!

    எங்கே போனாலும் பெரியவர்களையும் அழைத்துக் கொண்டு தான் போவாள்

    சினிமா, பீச், வாரத்தில் ஒரு நாள் ஓட்டல் என சந்தோஷத்துக்கு எந்த ஒரு குறையும் இல்லை!

    வருடத்தில் ஒரு வாரம் விடுப்பு எடுத்து நாலு பேரும் குழந்தையோடு எங்கேயாவது சுற்றுலா புறப்பட்டு விடுவார்கள்!

    சிம்லா, குலு மணாலி, கோவா என பல இடங்களுக்கு சுற்றுலா விமான பயணம் - நட்சத்திர ஓட்டல் வாசம் மாமியாரும், மருமகளும் கடை வீதிகளில் நுழைந்து விட்டால் கரன்சிகள் பறக்கும்! மூட்டை கட்டிக் கொண்டுதான் வருவார்கள். அதற்கு அப்பாவும், பிள்ளையும் மறுப்பே இல்லாமல் ஒத்துழைப்பு தருவார்கள்

    சகுந்தலா நெட்டில் பார்த்து ஆர்டர் செய்வது தனிரகம்!

    நவீனப் பொருட்கள் எது வந்தாலும் உடனே தேடிப்பிடித்து வாங்கி விடுவார்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1