Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vithiyai Vellum Vazhigal
Vithiyai Vellum Vazhigal
Vithiyai Vellum Vazhigal
Ebook152 pages49 minutes

Vithiyai Vellum Vazhigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Udayadeepan has written many books on self-improvement, spiritual and meditation related topics.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110804006
Vithiyai Vellum Vazhigal

Read more from Udayadeepan

Related to Vithiyai Vellum Vazhigal

Related ebooks

Reviews for Vithiyai Vellum Vazhigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vithiyai Vellum Vazhigal - Udayadeepan

    http://www.pustaka.co.in

    விதியை வெல்லும் வழிகள்

    Vithiyai Vellum Vazhigal

    Author:

    உதயதீபன்

    Udayadeepan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/udayadeepan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. விதியை ஏன் வெல்ல வேண்டும்?

    2. விதியின் கரங்களில், அதிக பலம் கொடுக்கப்பட்டிருப்பதன் மர்மம்

    3. சத்திய சக்தியின் ஆற்றலால், கடவுளுக்கும் மேலாக விதி, வைக்கப்பட்டிருக்கிறது

    4. விதி உருவாகும் இடம்

    5. விதியை வெல்ல முடியும்

    6. விதி மனித மனதின், எண்ண ஓட்டத்தில் இயங்குகின்றது

    7. விதியை மதியால் வெல்ல முடியும்!

    8. விதி மனிதத் தவறுகளில் இருந்தே, உருவாகிறது

    9. விதிக்கு உதவும், நமது மூலாதார சக்தி...

    10. நோய்களில் வரும், விதியின் வழி

    11. விதி எழுதிய நன்மைகள்

    12. நல்லதைச் செய்யுங்கள். விதியின் கெடுதல்கள் படிப்படியாக குறையும்!

    13. முன்ஜென்ம விதி, தியானம் செய்பவரிடம், பலிக்காது

    14. கடமைகளைச் செய்யுங்கள், விதியின் பிடிகள் தளரும்

    15. பிராணாயாமம் செய்யுங்கள். உங்களின் தலைவிதி மாற்றி, எழுதப்பட்டு விடும்.

    16. உங்களுக்குள், புதிய மனிதனை, உருவாக்குங்கள் விதியை வெல்ல முடியும்!

    17. சூழ்நிலைகளைவிட்டு வெளியில் வந்து விடுங்கள், விதி முடக்கப்பட்டுவிடும்.

    18. உங்களைச் சுற்றி தடைகள், எதிர்ப்புகள்தான், நீங்கள் மேல் நோக்கிச் செல்ல, உங்களுக்கு, உதவும் விதியின் பாதைகள்

    19. விதி எந்த ரூபத்திலும் வரும். அதை கடுமையாக எதிர்த்துப் போராடினால், அது மரணமடைந்து விடும்.

    20. சும்மா இரு; சொல் அற விதியை, எதிர்க்கும் மந்திரம்.

    21. விதி என்பது, ஒருவரின் பார்வையிலும், குணத்திலும் குடியிருக்கும்

    22. விதியை வெல்லும் வழிகள்

    23. விதியை வெல்ல பகவத் கீதையை, தினமும் படியுங்கள்...

    24. கடவுள் வழிபாடு, பாவங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி

    25. விதி என்பதை, சரியாக புரிந்து கொள்ளுங்கள்.

    பதிப்பகத்தார் உரை

    விதியை வெல்லும் வழிகள், என்ற இந்நூலில், இதன் ஆசிரியர் உதயதீபன் அவர்கள், விதி மனித வாழ்க்கையில், ஏன் வருகிறது? அதன் வீரியத்தை, அதன் தீவிரத்தனத்தை, அதன் கடுமையை, எதிர்த்து போராட, தைரியம், நேர்மையாக இருத்தல், பிறருக்கு உதவுதல், ஏழைகளுக்கு, அனாதைகளுக்கு அன்னதானம் செய்தல் மூலம், விதியின் கொடூர பிடிகளைவிட்டு, வெளியில் வரும் வழிகளை, மிகத் தெளிவாக கூறியுள்ளார்.

    மனிதனை விதி தாக்குவது, மனிதன் பிறருக்கு செய்த பாவ கமைகளில் இருந்து. பிறரை அனுசரித்து, அன்பு செலுத்தி, பிறரை சமமாக மதித்தால், ஒருவரின் செயல்களில் பாவங்கள், உற்பத்தி ஆவதில்லை.

    விதி மூன்று விதங்களில், வருகிறது. அதில் முதலாவது சென்ற ஜென்ம பாவங்கள், இந்த பிறவியில் செய்த கடந்தகால பாவங்கள். தற்போது நடப்பு காலத்தில், செய்யும் பாவங்கள்!

    எனவே இந்த மூன்று வகை, பாவங்களில் இருந்தே, விதி, ஒரு மனிதனின் எண்ணத்தில் வந்து உட்காருகிறது. தீவிரமாக இருக்கும் வரையில், விதியின் தண்டனைகள் கொடுமையாக இருக்கும். ஆனால், தான், பாவம் செய்து விட்டதால், நான் விதியின் கையில் கஷ்டப்படுகிறேன் என்று, விதி நமக்கு கஷ்டங்களை கொடுக்கும்போது, இது இயற்கை என்று, அதை வரவேற்று, மனிதன் நேர்மையுள்ள மனிதனாக, இறைவனின் துணையையும் நாடும்போது, மனிதனின் பாவங்களின் கடுமையான அடி, ஒரு மனிதனை விட்டு, விலகி விடும் என்னும், ஆசிரியரின் கருத்து, மனிதர்கள் விதியை, வெல்ல தெரிவித்திருக்கும், அற்புத வழிகள்.

    பதிப்பகத்தார்.

    1

    விதியை ஏன் வெல்ல வேண்டும்?

    இதுதான், ஒவ்வொரு மனிதனின் பிரச்சினையே!...

    மனிதனின், ஆசை ஒன்றாக இருக்கும். ஆனால் அவனுக்கு கொடுக்கப்படுவது, ஆசைப்படியும், விருப்பப்படியும் இருக்காது. இதனால், மனிதன் அடைவது சிடுசிடுப்பும், மன உளைச்சல்களும் தான்.

    வாழ்க்கை இன்று, நாளை என்று, ஒடிக்கொண்டே...

    இருக்கும். ஆனால், மனிதன் நினைப்பதுமட்டும், தள்ளித்தள்ளி போய்க்கொண்டே இருக்கும். ஏதோ ஒன்று இவனுக்கும், இவனின் விருப்பத்திற்கும் இடையில், புகுந்து இவனுக்கும், இவனின் விருப்பத்திற்கும் இடையே, ஒரு கை குலுக்கலை நிகழ்த்தாத வண்ணம், மனிதனின் கண்ணுக்குத் தெரியாமல், ஒரு பெரும் சுவராக, சுமையாக நிற்கும்.!

    இந்த ரகசிய, மர்ம சக்தியை மீறி...

    அது ஏற்படுத்தும் தடைகளை மீறி, எல்லாம் எந்த மனிதனும், எதையும் தன் விருப்பப்படி, செய்து கொள்வது நடக்காது. செய்து கொள்வது முடியாது.

    இதன் அர்த்தம், மனிதன் வெளியில் தெரியாத...

    அல்லது கண்ணுக்குப் புலப்படாமல் உள்ள, ஒரு சக்தியின் பிடியில், கைதியாக இருக்கிறான். இது அவன், இந்த உலகில் பிறந்தது முதல், இவன் இறக்கும் வரைக்கும் நடக்கும், ஒரு நிகழ்வு அதாவது மனிதனின் வாழ்க்கை, அவனது கையில் இல்லை. அது வேறு, ஒரு சக்தியின் கையில்.

    பாரசீக, பாலைவன மணலில், ஒரு பக்கிரியாக...

    திரிந்து, அங்கங்கே நின்று, உலகம் போற்றும் தத்துவ மற்றும் ஆன்மீகப் ஞானப் பாடல்களை நிறைய எழுதிய ரூபியாத்தின், ஆசிரியனாகிய, உமர்கயாம் என்னும், புலவன் சொல்வது, இது தான்.

    "நீ, இந்த உலகத்தில், உனக்கென...

    ஒதுக்கப்பட்ட நெல்மணிகளுக்கு கூடுதலாக, ஒரு நெல்மணிகூட, நீ பெற்றுக் கொள்ளமுடியாது. எல்லாமே இங்கு, ஒவ்வொரு மனிதனுக்கும், அளந்து தரப்பட்டிக்கின்றன. இந்த அளவு முறைகளை மீறி, மனிதனிடத்து, அவன் விரும்புவது வந்து சேராது" என்கிறான்.

    ஆன்மீக, விளக்கத்தின்படி, ஒவ்வொரு...

    மனிதன், பிறக்கும் போதே, அவன் இறக்கும்வரைக்கும், உள்ள அவனது வாழ்நாளின், ஒவ்வொரு வினாடியும், இதில் தோல்வி, இதில் வெற்றி, இதில் கவலை. இதில் மரணம். இதில் மகிழ்ச்சியான தருணம். இது சுகம் காணும் வேளை. இது பிரியும் நேரம். இது கஷ்டப்படும் வேளை என்று, தேதி வாரியாக, வினாடி வாரியாக, முன்பே தரப்பட்டு விடுகிறது. அதாவது, இந்த விபரங்கள், ஒருவருக்குள்ளே, குறித்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. அம்மனிதனது, ஜீன்களில்.

    இந்தக், குறிப்பின்படி உள்ள வாழ்க்கையில்...

    ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி, ஒரு அடிமையாக மட்டுமே, மனிதன் நடை போட முடியும்! நான் காதலிக்கிறேன் என்று, ஒரு ஏழையாகப் பிறந்த அனார்க்கலி, அக்பரின் மகனான சலீம் என்கிற ஜஹாங்கீர் இளவரசனை, காதலிக்கப் போக, அக்பரின் விருப்பப்படி சலீமை விட்டுவிலக முடியாது என்று அனார்க்கலி, உலகப் பேரரசன்அக்பருக்கே, காதல் மயக்கத்தில் சவால்விட, அதில் அவள் உயிரோடு சமாதி கட்டி, வைத்து எழுப்பப்பட்டதில், அவளின் உயிர், அதில் பறிபோனது, அவளது அனுபவிக்காத இளம் வயதிலேயே!

    காதலிக்க மட்டுமே, அனார்க்கலிக்கு...

    அவள் விதி, இடம் கொடுத்தது. விதி காட்டிய பாதையில் சலீமும், அனார்க்கலியை, உயிருக்கு உயிராக காதலித்தான்...

    இதுவரை, இருவரையும் பேச வைத்து...

    மகிழ வைத்த விதி, அவர்கள் இருவருக்கும் இடையில், நீங்கள் இருவரும், இனி சேர்ந்து வாழ்வது நடக்காது என்று, அது விதித்த தடையில்தான், அனார்க்கலி, சலீமுக்கு இடையில், ஒரு பிரிவு வந்தது. விதி வழியில், அனார்க்கலிக்கு, காதல் வழியில் மரணம் என்று, முன்பே விதிக்கப்பட்டதால், அந்த மரணத்தைப் பெற, அக்பரின் ஆணையையே, தைரியமாக, அனார்க்கலியை மீற வைத்து, அக்பரின் சக்ரவர்த்தி கோபத்தில், அனார்க்கலியின் உயிர், அதில் பிரிக்கப்பட்டது.

    உலகப், புகழ் பெற்றவன், உமர்கயாம்...

    ஆனால் ருசி மிக்க அமுதப் பாடல்களை, நம் நெஞ்சினிக்க பாடியவனுக்கு, நிரந்தரமாக தங்க, ஓர் இடம் இல்லை. ஒவ்வொரு இடமாக காலம் எல்லாம், இங்கும் அங்கும், அவனை அலைய வைத்து விட்டது, அவனது விதி.

    பல இடங்களில், அவன் அலையவேண்டும். அந்த...

    அனுபவத்தில், அவன் காலத்தால் அழியாத காவிய பாடல்களை, எளிமை சொட்ட சொட்ட ஆன்மீகம் தழைய தழைய, இறைப்பாடல்களை, தத்துவப் பாடல்களை, இந்த உலகிற்கு, அவன் தந்தருள வேண்டும் என்பது, அவன் தலைக்குள் விதியாக, எழுதப்பட்ட ‘லிபி’ எழுத்துக்கள்.

    அவன், மனித நிலையை மீறி, எழுத...

    வேண்டும் என்பதற்காக, அவன் குடியில் பிரியம் கொள்ளும்படி செய்தது, அவனது விதி. குடித்துவிட்டு, கற்பனை உலகில் புகுந்து கொண்டு, இனிய வருணனைகளோடு, அவன் பாடிய, அழகு ரூபியாத் பாடல்களில், இன்று உலகம் தஞ்சம் கிடக்கிறது. இனிமையும் எளிமையும், வருணனையும் கருத்தாழமும் உள்ள, ரூபியத் பாடல்கள்,

    Enjoying the preview?
    Page 1 of 1