Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oozhale Un Ver Enge?
Oozhale Un Ver Enge?
Oozhale Un Ver Enge?
Ebook58 pages22 minutes

Oozhale Un Ver Enge?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஞாநி 4.1.1954 அன்று செங்கற்பட்டில் எந்த பூர்விக சொத்துமில்லாத ஒரு கீழ் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். கல்வி ஒன்றே தன் குழந்தைகளுக்குத் தரும் சொத்து என்ற பார்வையில் இயங்கிய தந்தை வேம்புசாமி 1935 முதல் 1975 வரை ஆங்கில இதழியலில் இயங்கியவர். மூன்று சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இதழியலுக்கு வராத நிலையில் ஞாநி அதில் ஈடுபட்ட கடந்த 40 வருடங்களாக இதழியல், சமூக அரசியல் விமர்சனம், நாடகம், தொலைக்காட்சி, சிறுவர் வாழ்வியல் ஆகிய துறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர். எழுபதுகளில் மாணவராக சோஷலிச அரசியல் ஆதரவுபிரசாரத்தில் ஈடுபட்டார்.பின்னர் நெருக்கடி நிலையின்போது அதை கடுமையாக எதிர்த்த இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் பணியாற்றினார். எண்பதுகளில் மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்புடன் தேசிய முன்னணி உருவாக்கப்பட்டபோது அதை ஆதரித்து வி.பி.சிங்கின் மொழிபெயர்ப்பாளராக 70க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் பணியாற்றினார். மேதா பட்கர், ஜார்ஜ் பெர்ணான்டெஸ், நிகில் சக்ரவர்த்தி கிருஷ்ணய்யர், அஸ்கர் அலி எஞ்சினீயர், நாகபூஷண் பட்நாயக், தீஸ்தா சேதல்வாட் ஆகியோரின் மேடைப் பேச்சுகளை நேரடியாக மொழிபெயர்த்தவர். அண்மைத் தேர்தலில் மாற்று அரசியலை முன்வைத்தமைக்காக மக்கள் நலக்கூட்டணியை தீவிர்மாக ஆதரித்தார்.எழுபதுகள் முதல் இன்று வரை மனித உரிமைகள், மகளிர் சமத்துவம், சாதி ஒழிப்புக்காகப் பணியாற்றும் பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மதவாத எதிர்ப்பில் தொண்ணூறுகளிலிருந்தே தீவிரமாக இயங்கி வருபவர்.

நாடக மேதையான பாதல் சர்க்காரால் பயிற்றுவிக்கப்பட்ட ஞாநி 1978 முதல் இன்றுவரை பரீக்‌ஷா என்ற நாடகக்குழுவை நடத்தி வருகிறார். சென்னையில் வீதி நாடக இயக்கத்தின் முன்னோடி. 40க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார்.

பெரியார் வாழ்க்கை பற்றிய இரண்டரை மணி நேரப் படத்தை 'அய்யா என்ற தலைப்பில் 2003ல் உருவாக்கினார்.40க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும், ஐந்து கதைப் படத் தொடர்களையும் இயக்கியுள்ளார்.

இதழியலில் செய்தி விமர்சன இதழ்கள் உருவாகாத காலகட்டத்திலேயே 1982ல் தீம்தரிகிட என்ற இதழை நடத்தி முன்னேர் செலுத்தினார். ஜூனியர் போஸ்ட் இதழை ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும் தரமான இதழாக 1993ல் மாற்றிக் காட்டினார். சுமார் 30 வருடங்கள் முன்பே தொலைக் காட்சிக்கான முதல் இதழ் 'டி.வி.உலகம்' , சென்னை நகரத்துக்கான முதல் இதழ் 'ஏழு நாட்கள்' ஆகியவை இவர் முயற்சிகள். தேங்கிக் கிடந்த சிறுவர் இதழியலை மாற்றும் விதத்தில் 1999ல் சுட்டி விகடன் இதழை வடிவமைத்து உருவாக்கி வெற்றி பெறச் செய்தார்.2016ல் தமிழில் மாணவரகளுக்கான முதல் இதழாக தினமலர் வெளியிடும் பட்டம் இதழை வடிவமைத்து உருவாக்கி அதன் ஆலோசகராக இருந்து வருகிறார். சிறுவர்கள், இளைஞர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் வரையறுத்திருக்கும் பத்து வாழ்க்கைத்திறன்களைப் பயிற்றுவிக்கும் பணியில் கடந்த பத்தாண்டுகளாக ஈடுபட்டுள்ளார். சிங்கப்பூர் கம்போடியா, பாலி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து,இத்தாலி, வியன்னா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் பயணம் செய்துள்ளார். நாத்திகர். பகுத்தறிவாளர். சாதி மறுப்பாளர். ஞாநியின் குடும்பத்தினரும் அதே நிலையில் உள்ளவர்கள்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580121203978
Oozhale Un Ver Enge?

Read more from Gnani

Related to Oozhale Un Ver Enge?

Related ebooks

Reviews for Oozhale Un Ver Enge?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oozhale Un Ver Enge? - Gnani

    http://www.pustaka.co.in

    ஊழலே உன் வேர் எங்கே?

    Oozhale Un Ver Enge?

    Author:

    ஞாநி

    Gnani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/gnani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    முன்னுரை

    கல்வி, மருத்துவம், காவல், நீதி அரசியல் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் இருக்கும் ஊழல்தான் நம்முடைய சமூகத்தை கடுமையாக பாதிக்கிறது.

    இன்றைய சமூகத்தில் லஞ்சம் வாங்காமல் இருப்பது மட்டுமே நேர்மையானதாகக் கருதப்படுகிறது. நான் வாங்கமாட்டேன். ஆனால் எப்படி கொடுக்காமல் இங்கே வாழ முடியும் என்று பலர் கேட்கிறார்கள். கொடுக்கிறவர்கள் இருக்கும்வரை வாங்குபவர்களையும் ஒழிக்க இயலாது.

    ஊழலின் உச்சமாக இருக்கும் துறை அரசியல். அதில் ஊழலின் வேரைத் தேடிப்போய்ப் பார்க்கும் வாய்ப்பை ஜூனியர்விகடன் 2004ன் பிற்பகுதியில் எனக்கு அளித்தது. அதற்காக அதன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன், நிர்வாக ஆசிரியர் அசோகன், பொறுப்பாசிரியர் அறிவழகன் மூவருக்கும் என் நன்றி. இந்த எட்டு இதழ் தொடரைப் படித்த (எனக்கு முன் அறிமுகமற்ற) வாசகர்கள் பலர் அக்கறையுடன் விவாதித்தது இதை எழுதியது குறித்த மகிழ்ச்சியை எனக்கு ஏற்படுத்தியது.

    சிறு பிரசுரங்களாகக் குறைந்த விலையில் இத்தகைய கட்டுரைகளை வெளியிடும் எங்கள் முயற்சி வெல்ல, இத்தகைய பிரசுரங்களை நண்பர்களுக்குப் பரிசாக அளித்து பரப்பி உதவுங்கள்.

    ஞாநி

    சென்னை

    1

    இந்தியாவை முன்னேறவிடாமல் தடுக்கும் மிகப் பெரிய தடைக்கல் எது?

    இந்தக் கேள்வியை பள்ளிக்கூட மாணவர்கள் முதல் பல்லு போன பென்ஷந்தாரர்கள் வரை யாரிடம் கேட்டாலும் சட்டென்று பதில்சொல்லிவிடுவார்கள்.

    ஊழல்தான்!

    கொஞ்சம் அறிவுப்பூர்வமாக காரணம் சொல்ல விரும்புபவர்கள் ‘வறுமை’, ‘எழுத்தறிவின்மை’, வேலை இல்லா திண்டாட்டம்’ என்றெல்லாம் சொல்லலாம். ஆனால் அதற்கெல்லாம் காரணம் என்ன என்று துருவினால், அம்புக்குறி சுற்றி வந்து நிற்பது ஊழல் விஷவிருட்சத்தை நோக்கித்தான்!

    இந்த ஊழலின் வேர் எங்கே ஊன்றி நிற்கிறது என்பது அடுத்த கேள்வி.

    இதற்கும் எல்லாரும் சுலபமாகப் பதில் சொல்லிவிடுவார்கள், ’அரசியல்தான்’ என்று.

    ஏன் அரசியல் இப்படி இருக்கிறது? இந்த நிலையை மாற்றவே முடியாதா? யார் மாற்றுவது?

    இதெல்லாம் அடுத்தடுத்து வரும் கேள்விகள்.

    இதற்கெல்லாம் பதில் கண்டுபிடிக்க நாம் அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல்வாதிகளிலேயே மிக முக்கியமானவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி முக்கியமானவர்கள் வேறு யாருமல்ல. நாம் தேர்ந்தெடுத்து அனுப்புகிற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான்!

    இவர்களைப் புரிந்துகொள்வதில் இத்தனை காலமாக இல்லாத ஒரு வசதி இப்போது ஏற்பட்டிருக்கிறது. தேர்தலில் நிற்கிற ஒவ்வொரு

    Enjoying the preview?
    Page 1 of 1