Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sankarachari Yar?
Sankarachari Yar?
Sankarachari Yar?
Ebook53 pages20 minutes

Sankarachari Yar?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஞாநி 4.1.1954 அன்று செங்கற்பட்டில் எந்த பூர்விக சொத்துமில்லாத ஒரு கீழ் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். கல்வி ஒன்றே தன் குழந்தைகளுக்குத் தரும் சொத்து என்ற பார்வையில் இயங்கிய தந்தை வேம்புசாமி 1935 முதல் 1975 வரை ஆங்கில இதழியலில் இயங்கியவர். மூன்று சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இதழியலுக்கு வராத நிலையில் ஞாநி அதில் ஈடுபட்ட கடந்த 40 வருடங்களாக இதழியல், சமூக அரசியல் விமர்சனம், நாடகம், தொலைக்காட்சி, சிறுவர் வாழ்வியல் ஆகிய துறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர். எழுபதுகளில் மாணவராக சோஷலிச அரசியல் ஆதரவுபிரசாரத்தில் ஈடுபட்டார்.பின்னர் நெருக்கடி நிலையின்போது அதை கடுமையாக எதிர்த்த இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் பணியாற்றினார். எண்பதுகளில் மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்புடன் தேசிய முன்னணி உருவாக்கப்பட்டபோது அதை ஆதரித்து வி.பி.சிங்கின் மொழிபெயர்ப்பாளராக 70க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் பணியாற்றினார். மேதா பட்கர், ஜார்ஜ் பெர்ணான்டெஸ், நிகில் சக்ரவர்த்தி கிருஷ்ணய்யர், அஸ்கர் அலி எஞ்சினீயர், நாகபூஷண் பட்நாயக், தீஸ்தா சேதல்வாட் ஆகியோரின் மேடைப் பேச்சுகளை நேரடியாக மொழிபெயர்த்தவர். அண்மைத் தேர்தலில் மாற்று அரசியலை முன்வைத்தமைக்காக மக்கள் நலக்கூட்டணியை தீவிர்மாக ஆதரித்தார்.எழுபதுகள் முதல் இன்று வரை மனித உரிமைகள், மகளிர் சமத்துவம், சாதி ஒழிப்புக்காகப் பணியாற்றும் பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மதவாத எதிர்ப்பில் தொண்ணூறுகளிலிருந்தே தீவிரமாக இயங்கி வருபவர்.

நாடக மேதையான பாதல் சர்க்காரால் பயிற்றுவிக்கப்பட்ட ஞாநி 1978 முதல் இன்றுவரை பரீக்‌ஷா என்ற நாடகக்குழுவை நடத்தி வருகிறார். சென்னையில் வீதி நாடக இயக்கத்தின் முன்னோடி. 40க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார்.

பெரியார் வாழ்க்கை பற்றிய இரண்டரை மணி நேரப் படத்தை 'அய்யா என்ற தலைப்பில் 2003ல் உருவாக்கினார்.40க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும், ஐந்து கதைப் படத் தொடர்களையும் இயக்கியுள்ளார்.

இதழியலில் செய்தி விமர்சன இதழ்கள் உருவாகாத காலகட்டத்திலேயே 1982ல் தீம்தரிகிட என்ற இதழை நடத்தி முன்னேர் செலுத்தினார். ஜூனியர் போஸ்ட் இதழை ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும் தரமான இதழாக 1993ல் மாற்றிக் காட்டினார். சுமார் 30 வருடங்கள் முன்பே தொலைக் காட்சிக்கான முதல் இதழ் 'டி.வி.உலகம்' , சென்னை நகரத்துக்கான முதல் இதழ் 'ஏழு நாட்கள்' ஆகியவை இவர் முயற்சிகள். தேங்கிக் கிடந்த சிறுவர் இதழியலை மாற்றும் விதத்தில் 1999ல் சுட்டி விகடன் இதழை வடிவமைத்து உருவாக்கி வெற்றி பெறச் செய்தார்.2016ல் தமிழில் மாணவரகளுக்கான முதல் இதழாக தினமலர் வெளியிடும் பட்டம் இதழை வடிவமைத்து உருவாக்கி அதன் ஆலோசகராக இருந்து வருகிறார். சிறுவர்கள், இளைஞர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் வரையறுத்திருக்கும் பத்து வாழ்க்கைத்திறன்களைப் பயிற்றுவிக்கும் பணியில் கடந்த பத்தாண்டுகளாக ஈடுபட்டுள்ளார். சிங்கப்பூர் கம்போடியா, பாலி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து,இத்தாலி, வியன்னா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் பயணம் செய்துள்ளார். நாத்திகர். பகுத்தறிவாளர். சாதி மறுப்பாளர். ஞாநியின் குடும்பத்தினரும் அதே நிலையில் உள்ளவர்கள்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580121203977
Sankarachari Yar?

Read more from Gnani

Related to Sankarachari Yar?

Related ebooks

Reviews for Sankarachari Yar?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sankarachari Yar? - Gnani

    http://www.pustaka.co.in

    சங்கராச்சாரி யார்?

    Sankarachari Yar?

    Author:

    ஞாநி

    Gnani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/gnani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. சின்னக்குத்தூசி

    2. ஞாநி

    3. ‘சோ’ மறுப்பு

    4. சின்னக்குத்தூசி எழுதிய பதில்

    5. ஞாநியின் பதில்கள்

    முன்னுரை

    காஞ்சி மடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி துறவு பூண்டு 50 ஆண்டுகள் ஆனதை சினிமாவின் நூறாவது நாள் விழா மாதிரி கொண்டாடி வருகிறார்கள். அடுத்த பிரதமர் ஜெயேந்திரர் தான் என்று சிலர் கிண்டலடிக்கும் அளவுக்கு அவரது அரசியல் பாணி துறவறம் வளர்ந்து கொண்டிருப்பது வருத்தத்திற்குரியது. இப்படிச் சொல்வதால் அந்த பீடத்தின் மீது நமக்குள்ள மதிப்பு இம்மியும் குறைவு பட்டுவிடாதுஎன்று கல்கி இதழ் - எழுதுகிறது. ஒருவர் துறவியானதைக் கொண்டாட வேண்டுமா என்றால் ஜயேந்திரர் விஷயத்தில் அவசியம்தான். ஏனென்றால் 16 வருடங்களுக்கு முன்பு தன் தண்டத்தைப் போட்டுவிட்டு நள்ளிரவில் மடத்தை விட்டு ஓடிப்போனவர் அவர். பிறகு திரும்பி வந்து தொடர்ந்து துறவியாக இருப்பது எப்படிப்பட்டது என்பதற்கு வரலாற்றிலிருந்து இதோ சாம்பிள்!

    1983 ல் ஜயேந்திரர் அழைத்ததன் பேரில் அவரை சந்தித்த சின்னக்குத்தூசி, உடன் சென்ற ஞாநி இருவரும் எதிரொலியில் எழுதிய கட்டுரைகள் அதற்கு 'சோ' வின் மறுப்பு, மறுப்புக்கு மறுப்பை வெளியிட மறுப்பு, முதலியவை தொகுத்து வெளியிடப் படுகிறது.

    1. சின்னக்குத்தூசி

    ஜயேந்திரர் உங்களைப் பார்க்க விரும்புகிறார் என்றார் ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராசன்.

    நமக்கு அதிசயமாக இருந்தது.

    கெல்லீசில் உள்ள கார்ப்பொரேஷன் பாங்க் கிளையின் நிர்வாகி சீனிவாசன் ஒரு நாள் பிற்பகல் வந்தார். அவருடன் நாமும் பரிக்ஷா நாடகக்குழுவின் அமைப்பாளர் ஞாநியும் ஜயேந்திரரைச் சந்திக்கப் புறப்பட்டோம்.

    காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி திருவல்லிக் கேணியில் வசந்த மண்டபத்தில் தங்கி இருந்தார்கள்.

    வசந்த மண்டபத்தின் வாயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஜயேந்திரரை தரிசனம் செய்யக் காத்திருந்தார்கள்.

    கார்ப்பொரேஷன் பாங்க் சீனிவாசன் எங்கள் வருகையை ஜயேந்திரருக்கு ஒரு ஊழியர் மூலம் சொல்லி அனுப்பினார். உடனடியாக நாங்கள் ஜயேந்திரர் தங்கியிருந்த கட்டிடத்திற்குச் சென்றோம். சில படிகள் ஏறியவுடன் ஒரு சிறிய ஹால் இருந்தது. அந்த அறையில் தரை பாயோ சமுக்காளமோ விரிக்கப்பட்டாமல் வெறுமையாக இருந்தது. அந்த அறையில் நாங்கள் காத்திருந்தோம்.

    இரண்டொரு

    Enjoying the preview?
    Page 1 of 1