Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

No… Sudathea
No… Sudathea
No… Sudathea
Ebook96 pages54 minutes

No… Sudathea

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903971
No… Sudathea

Read more from Pattukottai Prabakar

Related to No… Sudathea

Related ebooks

Related categories

Reviews for No… Sudathea

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    No… Sudathea - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    நோ… சுடாதே

    No… Sudathea

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    இன்று...

    நான் உங்களை மகாத்மா காந்தின்னு கூப்பிடலாமா? என்றான் அவன்.

    உன் இஷ்டம். கூப்பிட்டுக்கோயேன் என்றார் தலைவர். தேங்ஸ், என் பேர் என்னன்னு கேக்கலையே?

    என்ன?

    கோட்சே! என்று துப்பாக்கியை எடுத்தான் அவன்.

    இதுவரை எழுதியவர்: ரா.கருணாகரன், சிதம்பரம்.

    எடுத்தவன் ஹீரோ என்பதால் தியேட்டர் முழுக்க கை தட்டியது. முதல் வரிசையிலிருந்து வாய்க்குள் விரலை வைத்து விசில் அடித்தார்கள்.

    அகன்ற திரையில் இப்போது கோட்சே சிகரெட்டைத் தூக்கிப் போட்டுப் உதட்டால் கவ்விப் பிடித்துக் கொண்டு துப்பாக்கியை எதிரே வெலவெலத்த வருக்கு முன்னால் நிமிர்த்தி, எங்க? எங்க சுடட்டும் உன்னை? என்றார்.

    மகாத்மா காந்தி 'ஹே..ராம்’ என்று சொல்லாமல், நோ! சுடாதே! என்று கெஞ்சத் துவங்க...

    மதன் கைக்குட்டை எடுத்து முகத்தில் ஒற்றிக் கொண்டான், நெற்றியைச் சுருக்கினான். இரண்டு ஓரங்களையும் அழுத்திப் பிடித்துக் கொண்டான்.

    சீட்டை விட்டு எழுந்து விட்டான்.

    என்னடா? என்றான் சுனில்.

    வாட்யா? என்றாள் விஜய்.

    நீங்க படம் பாருங்க. தலை வலிக்குது. நான் கொஞ்ச நேரம் வெளில இருக்கேன்

    மதன் இருட்டு வரிசையில் உத்தேசமாகக் கால் வைத்துத் தத்தினான் மூன்று பேரிடம் மன்னிக்கச் சொல்ல வேண்டியிருந்தது. கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த போது ‘டிய்யா, டிய்யா’ என்று சுடுகிற சப்தமும், அலறுகிற சப்தமும் கேட்டது.

    வெளியே வெப்பக் காற்றுத் தாக்கியது. இன்னும் பதினைந்து நிமிடத்தில் விடப்போகிற இடைவேனை விற்பனைக்காக ஸ்டால்களில் சமோசாவும், பாப்கார்னும் அடுக்கிக் கொண்டிருந்தார்கள்.

    மதன் சென்று, ஒரு காபி என்றான்.

    -இன்டெர்வெல் மிஸ் பண்ணாதே சார்! சூப்பரா ஒரு சஸ்பென்ஸ் இருக்கு" என்றபடி காபி கொடுத்தான் பங்க் தலையன்.

    பதில் பேசாமல் காபியை ஊதிப் பருகினான். முடித்ததும் சிகரெட் எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு ஓரமாக இருந்த பாலிமர் தொடர் நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்தான்.

    அருகில் ‘USE ME’ என்று எழுதிய சதுரத் தொட்டியின் மணல் பரப்பின் மேல் முடிந்து போன சிகரெட்டுகளை நட்டு வைத்திருந்தார்கள். சிகப்பாகத் துப்பி வைத்திருந்தார்கள் ‘USE ME’ என்று எழுதாத தரையிலும் நிறைய குப்பைகள் கிடந்தன.

    கால்மேல் கால் -அணிந்த மதன் சிகரெட்டில் சேர்ந்த சாம்பலைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, பிறகு அதைத் தட்டிப் புகைத்தான். எதிர் சுவரில் பார்த்தான்.

    அந்த தியேட்டரில் ஓடிய படங்களுக்கு 100 வது நாள், 150 வது நாள் என்று முத்திரைப் பொறித்து சினிமாவுக்கு சம்பந்தமில்லாத வங்கிக்காரர், நகைக்கடைக்காரர்களால் மேடையில் வழங்கப்பட்ட ஷீல்டுகளை வரிசையாக கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்திருந்தார்கள்.

    பொய்க் கூரையிலிருந்து அலங்கார விளக்குகள் கொஞ்சம் தூசு படிந்து தொங்கின. மதன் சிகரெட் முடித்து விதைத்து விட்டு கண்ணாடி ஜன்னல்கள் அருகில் வந்து நின்றாள்.

    வெளியே கொட்டிய மணிகளைப் போல விளக்குகள் போட்ட வாகனங்கள் சிதறி எல்லா திசைகளிலும் ஓடிக் கொண்டிருந்தன. கீழே கார் பார்க்கிங் பகுதியில் மண்டை மண்டையாய் கார்கள், ஸ்கூட்டர் ஸ்டாண்டில் ராணுவ வீரர்களைப் போல அணிவகுத்து நின்றன. 100 c.c பைக்குகள். தியேட்டர் வாசலில் இரண்டு பூக்காரிகள் சரமாகத் தொங்க விட்டு ஆள் பார்த்து விற்றுக் கொண்டிருக்க..

    மதனைப் பற்றிச் சொல்ல அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்.

    இருபது வயது இளம் இளைஞன். மாநிறம், நீட்டாக வெட்டப்பட்டு வகிடெடுத்து வாரப்பட்ட தலை, கரிய மீசை. குறுகின தோள்கள் மெலிந்த தேகம், நீல ஜீன்ஸ் பேண்ட் காட்டன் அரைக்கை சட்டை, வார் வைத்த செப்பல்ஸ். சட்டக் கல்லூரி மாணவன், ஹாஸ்டலில் தங்கிப் படிப்பவன்,

    சொந்த:ஊர்:தெரியாது

    அப்பா:தெரியாது.

    அம்மா:தெரியாது

    உறவினர்கள்:தெரியாது.

    பிறந்த தேதி தெரியாது.

    அவனுக்குத் தெரிந்த ஒரே தெய்வம் -ஃபாதர் ரோசரியோ, தாம்பரத்தில் செயின்ட் ஹார்ட் கிறிஸ்டியன் மிஷன் எனும் வெளிநாட்டு அமைப்பின் கிளையாக அனாதை விடுதி நடத்தி வரும் பாதர் ரொஸாசியோ தான் அவனுக்கு எல்லாம்,

    அங்கே தான் இவனுக்கு ஒரு வயது இருக்கும்போது வெளியே உடள்ளத் தொட்டியில் போட்டுவிட்டுச் சென்றாள் முகம் தெரியாத தாய். அதற்குப் பிறகு அவன் அந்த அமைதி இல்லத்தின் உறுப்பினரானான்.

    அவன் வளர்ந்ததும், உலகை அறிந்ததும் அந்த வெள்ளைத் தாடிக்கார ரொஸாரியோவால்தான், டிகிரி படிப்பு போதும் ஃபாதர். நான் இங்கயே உங்களுக்கு உதவியா இருக்கிறேன் என்ற அவன் கோரிக்கையை ஏற்கவில்லை அவர்.

    "படிப்பு எல்லாருக்கும் வராது மதன். நீ பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிருக்கே, மேற்கொண்டு படி எது விரும்புறியா படி. மிஷன்ல பர்மிஷன் வாங்கிட்டேன் உன்

    Enjoying the preview?
    Page 1 of 1