Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Amma
Amma
Amma
Ebook45 pages18 minutes

Amma

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இவர் இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் பி.ஏ. (Honours) சரித்திரம் படித்து பட்டம் பெற்றவர்.

விகடன் மாணவர் திட்டத்தின் மூலம் எழுத்துலகுக்கு R. சுப்புலட்சுமி என்ற பெயரில் அறிமுகமாகி 'ரஷ்மி' என்கிற பெயரிலும் எழுதுவதுண்டு. ஆனந்த விகடன், கல்கி, குமுதம், சுதேசமித்திரன், கலைமகள், அமுதசுரபி, இதயம் போன்ற இன்னும் பல பிரபல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.

இவர் எழுதியதில் சரித்திரம், மர்மம், சமூக பிரச்சனைகள், நகைச்சுவைக் கதைகள் என சுமார் முந்நூறுக்கும் மேல் வெளியாகியுள்ளது. மற்றும் 45 குறுநாவல்கள், 6 நாவல்கள் வெளி வந்துள்ளன.

இவர் எழுதிய இரு நாடகங்கள் சென்னை தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. ஜெய்ப்பூர் தமிழ்ச்சங்கத்திற்காக தமிழ் நாடகங்கள் எழுதியதுண்டு.

கும்பராணாவைப்பற்றி ஆய்வு செய்து எழுதிய இரு குறுநாவல்கள், இந்தியில் திருமதி. ஜெயலக்ஷ்மி சுப்ரமண்யம் என்பவரால் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மேவார் அறக்கட்டளையினரால் 'அகண்ட தீப்' என்கிற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. பல பத்திரிக்கைகள் நடத்திய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் போட்டிகளில் பரிசுகள் வாங்கியவர்.

இவருடைய படைப்புகளை முழுவதும் ஆய்வு செய்து திருமதி. மகேஸ்வரி ஈஸ்வரன் என்பவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125803960
Amma

Read more from Lakshmi Ramanan

Related to Amma

Related ebooks

Reviews for Amma

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Amma - Lakshmi Ramanan

    http://www.pustaka.co.in

    அம்மா

    Amma

    Author:

    லக்ஷ்மி ரமணன்

    Lakshmi Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    1

    ‘சுபா.... உனக்கு டெலிபோன்’ என்று மேரி குரல் கொடுத்ததும் அந்த அறையில் இருந்த சங்கீதாவும், ப்ரியாவும் தங்கள் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டார்கள்.’

    பிற்பகல் மணி சரியாக மூன்று!

    சுபாவின் புதிய சமையல்காரி மஞ்சுளாவிடமிருந்து வந்த ஃபோன் அது என்பது மேரி சொல்லாமலேயே அவர்களுக்குப் புரிந்தது.

    அந்த அறையிலேயே மேரியின் மேஜை மீதுதான் போன் இருந்தது. அதனால் அங்கிருந்து யாருக்கு அழைப்பு வந்தாலும் மேரிதான் எடுத்துப் பதில் சொல்லிவிட்டு உரிய நபரைக் கூப்பிடுவாள்.

    சுபா எழுந்து டெலிபோனை நோக்கிப் போனபோது சங்கீதாவும், ப்ரியாவும் அவளைப் பொறாமையுடன் பார்த்தார்கள்.

    நல்ல கணவன் அமைவது இருக்கட்டும், இந்தக் காலத்தில் நல்ல சமையல்காரியோ அல்லது வேலைக்காரியோ அமைவதற்கும் அதிர்ஷ்டம் பண்ணியிருக்க வேண்டும் என்று தங்களுக்குள் எண்ணிப் பெருமூச்சு விட்டார்கள்.

    சுபாவின் புதிய சமையல்காரி மஞ்சுளா தினமும் சரியாக பிற்பகல் மூணு மணிக்கு ஃபோன் செய்து குழந்தை ஆனந்த் பால் குடித்தானா, தூங்கினானா, விளையாடிக்கொண்டு இருக்கிறானா என்பது போன்ற தகவல்களைக் கொஞ்சம்கூடச் சலிக்காமல் ஒப்பிப்பாள். பிறகு....

    "மேடம்! இன்னிக்கு ராத்திரிக்கு என்ன சமையல் செய்யட்டும்? வெண்டைக்காய் வத்தல் குழம்பு உங்களுக்குப் பிடிக்குமே வெச்சுடட்டுமா? உருளைக் கிழங்கு வதக்கல்

    Enjoying the preview?
    Page 1 of 1