Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Akkarai Patchai
Akkarai Patchai
Akkarai Patchai
Ebook106 pages57 minutes

Akkarai Patchai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603935
Akkarai Patchai

Read more from Devibala

Related to Akkarai Patchai

Related ebooks

Reviews for Akkarai Patchai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Akkarai Patchai - Devibala

    http://www.pustaka.co.in

    அக்கறை பச்சை

    Akkarai Patchai

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    எதுக்காக அந்த ஸ்கூல்ல சேக்கணும்னு பிடிவாதம் பிடிக்கறே மீரா?

    அதுதான் நல்ல ஸ்கூல்! ப்ரிகேஜில சேர்த்து விட்டுட்டா பன்னிரெண்டாம் வகுப்பு முடியற வரைக்கும் கஷ்டமே இல்லை. தரமான பள்ளிக்கூடம்! காலைல டிபனை குடுத்து விட்டுட்டா, மத்தியான சாப்பாடு அங்கியே! ஆறிப்போனதைக் கட்டிக் கொடுத்து, புள்ளை சாப்பிடாம தவிச்சு, எதுக்கு இந்தக் கஷ்டம்? கல்வியும் தரமா இருக்கணும்! உடம்பும் கெட்டுப் போகக் கூடாது! புரியுதா?

    நீ எதையுமே பிராக்டிகலா யோசிக்க மாட்டியா?

    என்ன சொல்றீங்க?

    அந்த ஸ்கூல்ல வருஷ பீஸ் என்ன தெரியுமா? கிட்டத்தட்ட ரெண்டே கால் லட்சத்துக்கு மேல! தவிர புத்தகங்கள்! கொண்டு போய் விடற வாகனம்! மாசத்துக்கு இருபதாயிரம் ரூபாய் ஆகுது.

    "ஆமாங்க!  பையன் வாழ்க்கைல பெரிய இடத்துக்கு வரணும்னு நெனச்சா, அதுக்கு இப்பவே விதை போடணும்!''

    கார்ப்பரேஷன் பள்ளிக்கூடத்துல படிச்சுக்கூட பெரிய மேதைகள் உருவானதுண்டு.

    சரிங்க! அடுத்தபடியா மரத்தடி, மண்டபம், விளக்குக் கம்பம்னு தொடங்குவீங்க! நான் இல்லைனு சொல்லல. நம்ம புள்ளைக்கு அந்தத் தலையெழுத்து இல்லையே?

    நீ குடும்பத்தை நடத்தறே! அதோட கஷ்டங்களை புரிஞ்சுக்கவே மாட்டியா?

    குடும்பம்னா எல்லாம்தான்!

    "இது நம்ம சொந்த பிளாட்! மாசத் தவணை நாற்பதாயிரம் ரூபாய் கட்டறோம். வெளில வாங்கின லோனுக்காக பத்தாயிரம் ரூபாய் போகுது. குடும்பச் செலவு மாசம் முப்பதாயிரம்! தவிர போக்குவரத்து பெட்ரோல் வகைல பத்தாயிரம். நீ சேர்ந்திருக்கற சீட்டுகளுக்கு அஞ்சாயிரம்! இப்ப பையன் படிப்புக்கு மாசம் இருபதாயிரம். கணக்கு போடு!''

    ஒரு லட்சத்தி பதினைஞ்சாயிரம் ரூபாய் ஆகுது!

    "டாக்ஸ் போக எனக்கு கைக்கு என்ன வருது? ஒண்ணு இருபது! அஞ்சாயிரம் ரூபாய் மீந்தது! அதுவே ஒரு மாசம் அதிகச் செலவானா கையைக் கடிக்கும்! கடன் வாங்கணும்! மருத்துவச் செலவை இதுல சேர்க்கவே இல்லை.''

    அதை வரும்போது பாத்துக்கலாம்!

    தவிர, அப்பா, அம்மா வயசானவங்க இருக்காங்க!

    ''அவங்க உங்க தம்பிகிட்டத்தானே இருக்காங்க?"

    "தம்பிகிட்ட இருந்துட்டா, எனக்குப் பொறுப்பே இல்லையா? அவங்களுக்கு மாசந்தோறும் நாம் தரலைனாலும், ஒரு ஆத்திர அவசரம்னா பிள்ளைனு ஏதாவது செய்ய வேண்டாமா?''

    ''எதுக்கு? உங்கப்பாவுக்கு மாசம் இருபதாயிரம் ரூபாய் பென்ஷன் வருது! தவிர, டெபாசிட் வட்டி பத்து ரூபா வரும்! ஆக முப்பது! உங்க தம்பிக்கு உங்கப்பா பத்து ரூபாய் குடுத்தாலும் மிச்சம் இருபது இருக்கே!"

    ''மத்தவங்க கணக்குகளை பார்க்காதே மீரா! அது தப்பு!''

    இப்ப என்ன சொல்ல வர்றீங்க! பையனை கண்டிப்பா அந்தப் பள்ளிக்கூடத்துலதான் சேர்க்கணும்! இந்த ஏரியால எல்லா புள்ளைங்களும் அங்கேதான் படிக்குது! எதிர் வீட்டு அம்சாவோட ரெண்டு புள்ளைங்களும் அங்கே படிக்குது!

    ''அம்சாவோட புருஷன் பெரிய பிசினஸ்மேன்! அவன் மனைவியும் உழைக்கறாங்க! நம்ம காலனில பல பெண்கள் வேலைக்குப் போறாங்க! நீ படிச்சிட்டு வீட்லதானே இருக்கே?"

    நெனச்சேன்! சுத்திச் சுத்தி நீங்க இங்கேதான் வருவீங்கனு எனக்குத் தெரியும்!

    "மீரா! நீ கிராஜுவேட்! உத்யோகத்துக்கு போன பெண்! கைநிறைய சம்பாதிச்சவ! இப்ப வீட்ல உட்கார்ந்திருக்கே!'' வசந்த் குரலில் ஆதங்கம்!

    என்ன பேசறீங்க! எனக்கு மட்டும் வீட்ல இருக்க ஆசையா? என் சூழ்நிலை அப்படி!

    என்ன சூழ்நிலை? யாரும் கல்யாணம் செஞ்சுக்கலையா? புள்ளை பெத்துக்கலையா? உத்யோகத்துக்கு போகலையா! இதை நான் ஒப்புக்க மாட்டேன்!

    "நிறுத்துங்க! அந்த மாதிரி உள்ள பெண்களுக்கு மத்தவங்க ஒத்துழைப்பு இருக்கு. நான் கல்யாணமாகி ஒரு வருஷம் வேலைக்குப் போகலையா? அந்தநேரம் எல்லா வேலைகளையும் செஞ்சுகிட்டு, ஆபீசுக்கும் போகலையா? உங்கம்மா துரும்பைக் கிள்ளிப் போட்டாங்களா?''

    அவங்களை குறை சொல்லாதே! அவங்க வந்து நம்மகூட ஒரு மாசம் இருந்தா, உனக்குப் புடிக்காது

    அப்படி சொல்லாதீங்க! நாலு புள்ளைங்க உங்கம்மாவுக்கு. ரெண்டு பையன், ரெண்டு பொண்ணுங்க! எங்கியாவது நிலையா உங்கம்மா ஒரு இடத்துல இருக்காங்களா? அத்தையும் மாமாவும் வீடு வீடா எதுக்கு அலையணும்!

    "உளறாதே! அவங்க பெத்த நாலு பேரும் அவங்களுக்கு சமம்தான்!''

    இருக்கலாம்! யாருக்கு எப்பத் தேவையோ, அப்ப அங்கே இருக்க மாட்டாங்க! இதனால யாரோட நெருக்கமும் இல்லாமப் போச்சு! நல்லதோ, கெட்டதோ பெரியவங்க நம்ம கூட நிரந்தரமா இருந்தா, அவங்க தொடர்பான ஒரு கமிட்மென்ட் நமக்கும் இருக்கும்! அவங்களுக்கு வேண்டியதைப் பார்த்துச் செய்யணும்னு பொறுப்பு கூடும்! அவங்க இப்படி இருந்தா, எந்தப் பிள்ளை பொறுப்பை ஏத்துப்பாங்க!

    நீ பெரியவங்களை குறை சொல்றதை விட்டுட்டு நம்ம பிரச்சினைக்கு வந்து சேரு!

    இது நம்ம பிரச்சினைதான்! நான் உண்டான நேரத்துல எனக்கு அவங்க பக்கபலமா இருந்தாங்களா? அந்த நேரத்துல பொண்ணுங்க வீட்டுக்கு அலைபாஞ்சாங்க! நான் எத்தனை கஷ்டப்பட்டேன்னு உங்களுக்குத் தெரியாதா?

    அவன் பேசவில்லை.

    நான் நார்மல் கேஸாக இருந்தாத் தேவலை! கொஞ்சம் சிக்கலான கேஸ்! டாக்டர் எச்சரிக்கை பண்ணினாங்க! பெட்ரெஸ்ட் எடுக்கச் சொன்னாங்க!

    எடுத்தியே!

    Enjoying the preview?
    Page 1 of 1