Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arali Poo Mel Aasai Vaithu...
Arali Poo Mel Aasai Vaithu...
Arali Poo Mel Aasai Vaithu...
Ebook139 pages1 hour

Arali Poo Mel Aasai Vaithu...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110003927
Arali Poo Mel Aasai Vaithu...

Read more from Anuradha Ramanan

Related to Arali Poo Mel Aasai Vaithu...

Related ebooks

Reviews for Arali Poo Mel Aasai Vaithu...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arali Poo Mel Aasai Vaithu... - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    அரளிப் பூ மேல் ஆசை வைத்து...

    Arali Poo Mel Aasai Vaithu…

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    மருகேலரா ஓ ராகவா...

    அவள் பாடிக் கொண்டிருந்தாள். பிசிறு தட்டாத குரல். அநாயாசமான ஏற்ற இறக்கங்கள்.

    கூடத்தில் உட்கார்ந்திருந்த பெண்கள் அத்தனை பேரும், இது வரையில் பேசிய பேச்சுக்களை 'சடக்'கென நிறுத்திவிட்டு இவளையே பார்க்கிறார்கள்.

    கோடி வீட்டு கற்பகம் தன் மாமியாரை இம்சிப்பதும்...

    மாவு மில் மகாதேவன் ஃபாரின் போவதும்...

    இந்த வருட தீபாவளிக்கு வந்திருக்கிற புது டிசைனும்...

    மிராசுதார் பெண் மீனா - டிரைவருடன் ஓடிப் போனதும்...

    இந்த இசையின் முன் மகா அற்பமான விஷயங்களாகப் போய்விட்டது அந்தப் பெண்களுக்கு.

    அடக்கமாய் இழுத்துப் போர்த்திய புடவை. அதில் இழை இழையாகப் பின்னப்பட்ட ஜரிகைப் பூக்கள், உடம்பில் அளவான நகைகள்.

    எல்லாப் பெண்களும் சர்வசாதாரணமாய் தினசரி மாட்டிக் கொள்ளும் இரட்டைவடச் சங்கிலியும், வைரத்தோடும், பேஸரியும்தான். இவ்விடத்தில் ஏகப்பட்ட செளந்தர்யத்தை அள்ளி வீசிக் கொண்டிருந்தது.

    பாட்டின் சுவாரஸ்யத்தில் சற்று தூக்கிய முகவாயும், நீண்ட கழுத்தும், அதில் பூசப்பட்ட சந்தனமும்...

    யாரிவள்...

    கூடத்தின் கோடியில் உட்கார்ந்திருந்த கனமான அம்மாள், பக்கத்திலிருப்பவளிடம் வினவ-அவள், தனக்குப் பக்கத்திலிருந்தவளிடம் விசாரிக்கிறாள்.

    அவ தான் மங்களா.

    எந்த மங்களா?

    அதாண்டி, புரியாமக் கேட்கறயே? நம்ம டாக்டர் ரமணியோட...

    என்னது! அவளா இது? ஊர் முழுக்க 'கொல்'லுனு சிரிப்பா சிரிக்கிற அந்த தாசி மங்களாவா? என்ன தைரியத்துலடி டாக்டர் வீட்டு நவராத்திரி கொலுவுக்கே வந்து பாட்டு பாடறா?

    உஷ்... குரலை அடக்கிப் பேசுடி இவளே! இவதான் தைரியமா வந்திருக்கான்னா - இவளை வாய் நிறைய 'வா'ன்னு கூப்பிட்டு உட்கார்த்தி வச்சுப் பாடச் சொல்லிக் கேட்கறது பாரு இந்த டாக்டர் சம்சாரம் சரசு... அதைச் சொல்லு.

    என்ன பண்றது. அவளை என்ன மிரட்டல் மிரட்டி வச்சிருக்காரோ இந்த மனுஷன்.

    ‘கூட்டத்தின் ஒரு கோடியில் நடக்கும்’ இந்த சம்பாஷணையை காதில் வாங்கிக் கொள்ளாமலேயே - 'மருகேலரா'-ககன மார்க்கமாய் ஊர்வலம் போகிறது. அங்கங்கே சில இடங்களில் உணர்ச்சி வசப்பட்டு இழைகிறது. குழைகிறது. நிமிர்ந்து கம்பீரமாய் கைவீசி ராஜ நடை போடுகிறது.

    வம்பு பேசும் வாய்களைக்கூட இழுத்து மூட வைக்கும் குரல்...

    தன்னை மறந்து உட்கார்ந்திருக்கிறாள் சரசு. அவளையும் விட ஆச்சரியத்தோடு, மங்களாவின் இசையில் மூழ்கி இருக்கிறார்கள் சரசுவின் பத்து வயதுப் பெண் பாரதியும், எட்டு வயசுப் பெண் பானுவும்.

    அம்மாவின் மடியை சதா துவைத்துக் கொண்டிருக்கும் குழந்தை ஹரிகூட, கொஞ்சநேரம் தனது துஷ்டத்தனங்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு மங்களாவையே பார்த்துக் கொண்டிருக்கிறான்.

    பாடிமுடித்த மங்களா, சரசுவின் மடியிலிருந்த ஹரியைப் பார்த்துக் குறும்பாய் கண்சிமிட்டிச் சிரிக்கிறாள். அவன் வெட்கத்துடன் அம்மாவின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொள்கிறான். மீண்டும் அவளைப் பார்க்க வேண்டுமென்கிற குறுகுறுப்பில் - சரசுவின் புடவை தலைப்பின் இடுக்கு வழியாய் அவளைப் பார்த்துச் சிரிக்கிறான்.

    படவா! திருட்டுத்தனமா என்னடா பார்வை. நேரே பார்த்துட்டுப் போயேன்.

    மங்களா, அவனைச் சீண்டிக்கொண்டே எழுந்திருக்க, சரசு வெற்றிலைப் பாக்குத் தட்டை எடுத்து நீட்டுகிறாள்.

    வரேம்மா.

    ரொம்ப சந்தோஷ்ம். அடிக்கடி வந்திட்டுப் போயிட்டு இரும்மா...

    கூடத்தின் மூலையில் எகத்தாளச் சிரிப்பு வெடிக்கிறது. கனம் பொருந்திய அம்மாள், சரசுவின் வெகுளித் தனத்தைப் பார்த்து தன் தலையில் நாசூக்காய் நாலு தடவை அடித்துக் கொள்கிறாள்.

    கருமம். வேலியில போற ஓணானை எடுத்து மடியில கட்டிண்டு, குடையறது குடையறதுன்னு கத்தற மாதிரி இது என்ன சீராடல் வேண்டிக்கிடக்கு.

    இந்தப் பெண்மணிகளை விடவும் அதிகமாய் பொருமியவர்கள் ரமணியின் தாயாரும் தந்தையும்.

    லட்சுமியம்மாளுக்கு எரிச்சலாவது எரிச்சல். கேமரா அறைக்குள்ளிருந்தபடி முனகித் தீர்த்தாள்.

    இவனுக்கு அவ ஒசத்தியா இருந்தா சிவன்கோவில் தெருவோட வச்சுக்க வேண்டியதுதானே. வீட்டுல நாலு கெளரவப்பட்டவங்க வரபோற இடத்துல இவளை என்னத்துக்கு மஞ்சகுங்குமத்துக்கு வரவழைக்கணும்... உங்களுக்காகட்டும், உங்க பிள்ளைக்காகட்டும் கொஞ்சம்கூட விவஸ்தையே இல்லே. இந்த அசட்டுப் பொண்ணும் அவகிட்ட இளிச்சு இளிச்சுப் பேசிட்டிருக்கா. எப்ப தன் புருஷன் கொஞ்சம் 'கெக்கே பிக்கே'ன்னு தெரியுமோ அப்பவே இவளுக்கு உஷாரா இருக்கத் தெரிய வேண்டாம்?

    இருக்கட்டும், இருக்கட்டும். எல்லாரும் போனதுக்கு அப்புறம் அவளை இழுத்து வச்சு, மண்டையில ஏர்றாப்பல நாலு வார்த்தை சொல்லு. ரமணிப் பய வரட்டும். நான் பேசிக்கிறேன். - மகாலிங்கம் கறுவிக் கொள்கிறார்.

    மனசுக்குள் மாத்திரம், 'குட்டி நல்லாத்தான் இருக்கா. வெள்ளரிப் பிஞ்சு கணக்கா,' என்று சொல்லிக் கொள்கிறார்.

    அன்று இரவு -

    குழந்தைகள் தூங்கிய பிறகு, அந்த வீட்டில் ஒரு சின்ன யுத்தமே நடக்கிறது. யுத்தத்தின் தலைமை சேனாதிபதி லட்சுமியம்மாள் தான்.

    டாக்டர் ரமணி, தனது நர்ஸிங் ஹோமிலிருந்து வந்து, கை கால் கழுவி சாப்பிடும் வரையில் காத்திருந்தவள் பிலுபிலுவெனப் பிடித்துக் கொண்டாள்.

    அவளை எதுக்குடா வீட்டுக்கு வரச் சொன்னே.

    எவளைம்மா?

    அதான், அந்த சிவன்கோவில் தெரு சிறுக்கிய.

    நம்ம சரசு தான். 'நவராத்திரியாயிருக்கு, வெத்தலை பாக்கு வாங்கிக்க வரச் சொல்லுங்க'ன்னா. நான் மாத்திரம் தனியா போயி கூப்பிடலையே. நம்ப பாரதியும், பானுவும் வந்தாங்களே.

    மகனின் பதிலால் இன்னமும் கொதித்துப் போகிறாள். லட்சுமி.

    யாரைக் கேட்டுட்டு பொம்பளைப் பசங்களை அந்தத் தெருவுக்கு அழைச்சுட்டுப் போனே. என்னை ஒரு வார்த்தை கேட்க வேணாம்? வீட்டுக்குப் பெரிய மனுஷியா, உலக்கை மாதிரி நா ஒருத்தி இல்லே. ஏண்டி மூதேவி, அவனுக்குத்தான் புத்தியில்லைன்னா நீ சொல்ல வேணாமா?

    உஷ், அம்மா, இப்ப என்ன நடந்து போயிடுச்சுன்னு இப்படி கத்தறீங்க. மங்களா வந்து வெத்தலைப் பாக்கு வாங்கிட்டு போயி படுத்து ஒரு தூக்கம் போட்டிருப்பா... நாம் என்னத்துக்கு அடிச்சுக்கணும்.

    என்னத்துக்கு அடிச்சுக்கணுமா. ஊரு பொம்பளைங்க எல்லாம் நம்ம வீட்டு கொலுவுக்கு வந்து, நாம விரிச்ச சமுக்காளத்துல உட்கார்ந்துகிட்டு, நம்மளை பத்தியே வம்பளக்கறாங்கடா.

    அதையெல்லாம் காதுல வாங்கிக்காதீங்க.

    நெருப்பில்லாம் புகையுமாடா தம்பி

    புகையை லட்சியம் பண்ணாதீங்கம்மா.

    அப்ப, நெருப்பு இருக்குதுங்கறயா.

    ரமணி, மெளனமாகிறார். கொஞ்ச நேரம் தருமசங்கடமான சூழ்நிலை.

    சரசு... படுத்துக்கப் போகலாமா. நாளைக்கு காலைல ஒரு டியூமர் ஆபரேஷன் இருக்கு.

    -ரமணி, எழுந்து சோம்பல் முறித்தபடி மாடிப்படியில் கால் வைக்க, சரசு தான் படுக்கப்போக மாமியாரின் அனுமதியை வேண்டித் தயங்குகிறாள்.

    வாயேன். - இது ரமணி

    நீங்க போங்க. இதோ பின்னாலேயே வரேன்.

    - இது சரசு.

    ரமணி படுக்கப் போய் வெகு நேரம் வரையில் சரசு மாடிக்கு வரவேயில்லை.

    பாவம், அம்மா அவளுக்கு அர்ச்சனை கொடுக்கறாப்பல இருக்கு. - ரமணி தனக்குள் நினைத்தபடி, தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கிறார்...

    கடைசியில் சரசு வரும்போது பாதி இரவு ஓட்டமாய் ஓடிவிட்டது.

    கணவன் தூங்குகிறானோ என்கிற ஜாக்கிறதை உணர்வுடன், சத்தமில்லாமல் கட்டிலின் நுனியில் அவள் ஒருக்களித்துப் படுக்க -

    Enjoying the preview?
    Page 1 of 1