Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sakthi Leelai
Sakthi Leelai
Sakthi Leelai
Ebook315 pages3 hours

Sakthi Leelai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100703922
Sakthi Leelai

Read more from Indira Soundarajan

Related to Sakthi Leelai

Related ebooks

Reviews for Sakthi Leelai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sakthi Leelai - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    சக்தி லீலை

    Sakthi Leelai

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    1

    வாசகர்களுக்கு என் வணக்கங்கள்! கடந்த ஆண்டுகளில் அனுமனின் வரலாற்றையும் அவனது மகிமையையும் தொடராய் வழங்கி முடிந்த நிலையில் நான் இப்போது அம்பிகையை சரண் புகுந்திருக்கிறேன்.

    அம்பிகை என்றாலும் அம்பாள் என்றாலும் சக்தி என்றாலும் தேவி என்றாலும் தாயார் என்றாலும் அது மேலான அந்த பராசக்தியையே குறிக்கும்.

    மிகச் சனாதனமானது நமது மதம் என்றால் இதன் தொடக்கத்தை துல்லியமாகக் கூறமுடியவில்லை என்பதே பொருளாகும். பிற மதங்களைப் பற்றி எண்ணத் தொடங்கிடும் போதே ஒரு இரண்டாயிரம் வருடம் என்கிற ஒரு காலகதி நம் மனதில் தோன்றிவிடுகிறது. ஆனால் நம் இந்து மதத்தை இந்த இரண்டாயிரம் வருடம் என்கிற காலகதிக்குள் எல்லாம் அடைக்கவே முடியாது. உலகப் பொதுமறையான திருக்குறளுக்கும் இரண்டாயிரம் ஆண்டுக் கணக்கு சொல்லப்படுகிறது. திருக்குறள் போல சகல முனைகளிலும் ஒரு முழுமையான உலகுக்கே பொதுவான ஒரு நூலை வேறெங்கும் இன்று வரை காணமுடியவில்லை. அத்தனை முழுமையான ஒரு திருக்குறளுக்கே இரண்டாயிரம் ஆண்டுகால வயதென்றால், நம் மதத்துக்கு எத்தனை மூப்பும் முதுமையும் இருந்திருக்க வேண்டுமென்கிற கேள்வி எழுகிறது.

    நம் மொழியாகிய தமிழ் மொழியின் பழமைச் சிறப்புக்கு 'கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த முதுமொழி' என்கிற சொலவடை ஆதாரமாகும். இத்தனை நீண்ட என் பீடிகைக்குக் காரணம் உள்ளது. நமது மதமும் சரி; மொழியும் சரி நீண்ட பாரம்பரியம் கொண்டு திகழ்கிறது என்பதே அது!

    இம்மட்டில் நம் மதத்தின் ஆன்மிக நெறிப்பாடுகள் ஆறு வழித்தடங்கள் கொண்டதாய் உள்ளது. 'சைவம் வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்யம், செளரம்' என்பதே அந்த வழித்தடங்கள்.

    ஆதிசங்கரரே இதை நமக்கு அருளியவரும்கூட, ஏன் இத்தனை வழித்தடங்கள்! ஒன்று போதாதா? மற்ற மதங்களிலெல்லாம் ஒருவழித் தடம்தானே...? இறைவனும் ஒருவன்தானே? அப்படியிருக்க எதற்கு இத்தனை வழித்தடங்கள் என்கிற கேள்வி நமக்குள் எழலாம்.

    இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால்! எல்லா மதங்களும் ஒருவழித் தடம்தான்! இதில் ஒரு மனித உயிரின் ஆன்மிகப் பயணமானது அந்த உயிர் பிறக்கிற தாய் - தந்தையரை வைத்தும், அடுத்தகட்டமாக பிறக்கிற இடம், அந்த இடத்தை உடைய ஊர், ஊரை உடைய நாடு என்று இதையெல்லாம் சார்ந்தே உள்ளது. சுருக்கமாய்க் கூறுவதானால் நம் ஆன்மிகப் பயணத்தை நம் பிறப்பே தீர்மானித்து விடுகிறது. நமது வேலையெல்லாம் அதில் ஈடுபாட்டோடு பயணிப்பது மட்டும்தான்.

    அப்படி பயணிக்கின்றவர்களுக்கு அவர்களின் வழித்தடம் மிக உயர்ந்ததாகத் தோன்றுவது ஒரு சராசரி மனித இயல்பே!

    உதாரணமாக, ஒரு வைணவர் தன் வழித்தடமே மிக உயரியது- மிகச் சிறந்ததென்று கருதி, திருமாலே என் வரையில் முற்றான தெய்வமென்று நம்பி, வைணவ நெறிமுறைகளில் பிறழ்ச்சியின்றி நடப்பதை நாம் தவறாகக் கருதமுடியாது. அப்படி அவர் கருதினாலே அவரால் நூறு சதவிகிதம் பக்தி செலுத்த முடியும். அதன் காரணமாக தன்னையறியதலும் தான் சார்ந்த உலகம் மற்றும் உயிர்களை உணர்தலும் நிகழ்ந்திடும். இது சைவ வழி நடப்பவர்க்கும் பொருந்தும்; சாக்த வழி நடப்பவர்க்கும் பொருந்தும். இவ்வாறு நடப்பவர்கள் ஒன்றை மட்டும் மறந்து விடக்கூடாது. தன்வழி மிக உயர்வானதென்று தாராளமாகக் கருதலாம். அதற்காக மற்ற வழிகள் தம் வழியினும் தாழ்வானதென்று மட்டும் கருதிவிடக்கூடாது. இந்த எண்ணம் ஆன்மிகச் சிந்தனைக்குள் அவர்களை சராசரி மனிதர்களாக்கிவிடும்.

    பெரிது-சிறிது உயர்வு-தாழ்வு போன்றவை எல்லாம் குணம் கொண்டவையல்ல; அவை அடையாளங்கள்!

    ஒரு பனைமரத்தையும், ஒரு மாமரத்தையும் காண நேர்கிறது. பனைமரம் உயர்ந்து வளர்ந்திருக்கும். மாமரமோ அகன்று வளர்ந்திருக்கும். பனைமரம் உயரியது என்பது இங்கே அதன் வடிவத்துக்குதான்.... குணத்துக்கானதல்ல.... இரண்டு மரங்களும் அதனதன் படைப்பில் சிறப்புகளைக் கொண்டவையே! இரண்டும்தான் நமக்குத் தேவை.

    இதுபோன்ற இயற்கை சார்ந்த விஷயங்களில் நாம் பேதம் பார்த்து வருந்துவதோ மகிழ்வதோ இல்லை. இது இயல்பென்றே கொள்கிறோம். ஆனால் உணர்வு சார்ந்த ஆன்மிகத்தில்தான் பல பாதைகள் இருப்பதால் சில நேரங்களில் சிலர் தன் பாதையே உயரியதென்று ஆணவமாய்ப் பேசுவதும் அதற்கேற்ப செயல்படுவதும் நடந்து விடுகிறது.

    நல்ல ஞானத்தோடு நோக்கினால் எல்லா பாதைகளும் ஒரு புள்ளியை நோக்கியே சென்று முடிவது புலனாகும். அந்த ஒன்றை பரம்பொருள் என்றும் கூறலாம்; நாராயணன் என்றும் கூறலாம்; ஆதிசிவன் என்றும் பராசக்தி என்றும் கூறலாம். பெயரில் ஒன்றுமில்லை. பெயரைக் கொண்ட அந்த உச்சபட்சம்தான் உயிர்களுக்கான இலக்கு.

    அந்த உச்சபட்சம் ஆதிசக்தி வடிவாய் இருப்பதாக பாவித்து வியாசர் எனும் மாமுனிவர் எழுதியதே தேவி பாகவதம்!

    அந்த தேவி பாகவதத்தின் துளிகளே இந்த "சக்திலீலை' தொடர்!

    நம் வழித்தடம் எதுவாய் இருப்பினும், நம் வழித்தடத்தோடு தொடர்புடைய ஏனைய வழித்தடங்கள் குறித்து தெரிந்து கொள்வதில் பிழையே இல்லை. சொல்லப் போனால் ஆன்மிக உலகம் தன்வசம் கொண்டிருக்கும் சகலத்தையும் நாம் பாரபட்சமின்றி தெரிந்து வைத்துக்கொள்வது நம் மனதை விசாலமாக்கும். அறிவைப் பிரகாசமாக்கும். இதனால் நம் உள்ளொளியும் அதிகரித்து நாம் மேலான நிலையைப் பெறுவது சுலபமாகும்.

    இந்த தேவி பாகவதத்தை நமக்கு வழங்கிய வியாசர்தான் மகாபாரத்தையும் நமக்கெல்லாம் தந்தவர். ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட மகாபாரதத்தை வியாசர் கூறக்கூற துளியும் இடைவெளிக் காலமின்றி எழுதியவர் கணபதியாவார். அவர் எழுதுகோலாய்ப் பயன்படுத்தியது தன் கூரிய தந்தத்தை!

    இவ்வாறு கணபதி எழுதும்போது வியாசர் சில தருணங்களில் திணறிப் போனாராம். மகாபாரதத்தை ஒரே மூச்சில் எழுதி முடிக்க விரும்பியதுதான் காரணம். தன்னால் சொல்ல முடியும் அந்த வேகத்துக்கு கணபதியால் எழுத முடியாதென்பதே துவக்கத்தில் வியாசரின் கருத்தாக இருந்தது. ஆனால் கணபதி எழுத ஆரம்பிக்கவும் வியாசர் மாட்டிக் கொண்டார். மகாகணபதியின் வேகத்துக்கு வியாசரால் சொல்ல முடியவில்லை. எனவே வியாசர் ஒரு உபாயம் செய்தார். ஒருசிறு ஓய்வு தனக்குத் தேவைப்படும் போதெல்லாம், தான் முன்பு சொன்ன சுலோகத்துக்கு பொருள் தெரியுமா என்று கணபதியிடம் கேட்க, கணபதியும் பொருள் கூற, அந்த தருணத்தை தனக்கான ஓய்வாக எடுத்துக் கொண்டாராம் வியாசர்.

    மகாபாரதம் பற்றி கூறிடும்போது, ஒரு முனியும் ஒரு இறையும் போட்டி போட்டுக்கொண்டு வழங்கிய அருட்கொடை அது என்பார்கள். அதே முனிவரின் இன்னொரு பெரும் அருட்கொடை தான் தேவி பாகவதம்! பொதுவாக இறை சிந்தனை தோன்றும் போது, இறைவன் ஆணா பெண்ணா என்று சிலருக்கு கேள்வி எழும், இரண்டுமற்ற மேலான ஒரு வடிவாகவும் இருக்கக்கூடும் என்பர் சிலர். இருக்கக்கூடுமென்று சந்தேகமெல்லாம் எதற்கு? அதுதான் உண்மை என்பர் இன்னும் சிலர்.

    ஆனபோதிலும் உயிரினமென்று வரும் போது ஆண்-பெண் எனும் இரண்டு தன்மைகள் தேவையாகிறது. இந்த இரண்டு இருந்தாலே ஒன்று உருவாக முடியும் என்பதே யதார்த்தம் இந்த இரண்டில் எது பெரியது? வலியது என்றும் கேள்விகள் எழுகின்றன. இதுதான் சற்று மருவி சக்தி பெரிதா? சிவம் பெரிதா என்றானது என்பர். பின் இரண்டுக்குமே ஒன்றில்லாவிட்டால் மற்றொன்றுக்கு சிறப்பில்லை என்கிற உண்மை தெளித்திட இரண்டும் ஒன்றாகி அர்த்தநாரி என்றானது என்பர்.

    ஈசன் வரையில் சரிபாதி இடம்பிடித்த சக்தி, திருமால் வரையில் மார்பில் இடம் பிடித்து திருமாலின் இதயத்துடிப்பே நான் தான் என்கிறாள். பிரம்மன் வரையில் இவளே சரஸ்வதி என்றாகி, பிரம்மாவின் ஏட்டிலும் எழுதுகோலிலும் கலந்து விடுகிறாள்.

    சக்தியின் இந்த மாறுபட்ட தன்மைகள் ஒருபுறமிருக்க, அவளது மூலத்தன்மை எத்தகையது? அவளின்றி, அதாவது சக்தியின்றி ஏன் எதனாலும் இயங்க முடிவதில்லை? இதை சற்று மாற்றி, 'இயங்க வேண்டுமெனில் சக்தி வேண்டும்' என்றும் கூறலாம்.

    இந்த சக்திகூட உடற்சக்தி, உள்ள சக்தி என இரு கூறாக உள்ளது. இரண்டாக இருந்தாலே தேவைப்படும். ஒன்றைத் தரவும் முடியும் என்பதுதானே யதார்த்தம்?

    ஆக, இரண்டாகவுள்ள அந்த ஒன்றான சக்தியை நாம் தேவி பாகவதம் வாயிலாக புரியமுயல்வோம். இந்த பாகவதம் குறித்த மேலும் சில கருத்துக்களையும் சிந்திப்போம்.

    பாரதம் தந்த வியாசர் தேவி பாகவதத்தை மட்டும் நமக்குத் தரவில்லை வேதங்களையெல்லாம் நான்காய்ப் பிரித்து நமக்கு அருளியவரும் அவரே! அதனாலேயே அவருக்கு வேத வியாசர் என்ற பெயரும் ஏற்பட்டது. இத்துடன் பதினெட்டு புராணங்களையும் நமக்கு அருளினார்.

    எல்லாம் எதற்கு?

    இறை குறித்த தெளிவை மனிதர்கள் பெறவேண்டும் என்பதற்காகவே. இதில் தேவிபாகவதத்தை அவர் விசேஷமாகக் கருதி சூதமுனி என்பவருக்கு கூறிட, பின் அவரால் இது பரீக்ஷித்து எனும் அரசனுக்குக் கூறப்பட்டு, அவன் முடிவான முக்தியை அடைந்தான் என்கிறது புராணம்.

    முன்னதாக ஒரு கருத்து அழுத்தமாகக் கூறப்படுகிறது தேவி பாகவதம் ஒரு அற்புதப் புதையல்! இதை சொல்லவும் கேட்கவும் மிகுந்த புண்ணியம் செய்திருக்க வேண்டும். இது ஒருவர் மனதில் நிரம்பிவிட்டால் அவர் சக்தி களஞ்சியமாகி, முக்தி இலக்கை அவர் தேடத் தேவையின்றி அதுவாக தேடி அவர்களிடம் வந்துவிடுகிறதாம்.

    எனவே நமக்கெல்லாம் பெரும் தெளிவையும் ஞானத்தையும் தரவுள்ள வியாசரின் தேவி பாகவதத் துளிகளை வரும் இதழ் முதல் தொடர்ந்து உட்கொண்டு, நான் முன்பே கூறியதுபோல நல்ல மனவிசாலம், உற்சாகமான மனநிலை, இதோடு வளமான எதிர்காலத்தையும் அடைவோமா?

    2

    ஸ்ரீதேவி பாகவதமே இங்கு "சக்தி லீலை' எனும் பெயரில் புராண வரலாறாகத் தொடர்ந்திட உள்ளது. இதை நமக்கு அருளியவர் வியாசர் என்பதிலிருந்து அவராலேயே நான்கு வேதங்கள், பதினெட்டு புராணங்கள் எல்லாமும் நமக்குக் கிடைத்தன என்பதை அறிந்த நிலையில் இனி நாம் தேவி பாகவத்தின் அருட்துளிகளை அனுபவிப்போம்.

    இந்த பாகவதமானது வாசிக்கவும் கேட்கவுமென்றே உருவான ஒன்று இதை வியாசர் தன் சீடர்களுக்கு உபதேசிக்க, அவர்கள் மூலமாக இது உலகில் பரவியது.

    இந்த அருளமுதத்தைக் கேட்க தீராத வினைகள் தீரும்.

    நம் பித்ருக்களுக்கு விமோசனம் கிட்டும்.

    மாயை சூழ்ந்த இந்த உலகில் நம் சந்ததிகள் நலமுடன் வாழ்வார்கள்.

    அது எப்படி என்கிற கேள்வி இவ்வேளையில் சிலருக்காவது எழும். ஒரு புராணக் கதையை வாசிப்பதென்பது பொழுதுபோக்கு நோக்கிற்காக அல்ல. பொழுதுபோக்க உதவும் ஒரு கற்பனையான இலக்கியமும் இதுவல்ல. புராணக் கதைகள் காலங்களை வென்று வாழ்பவை. மானுடர்களுக்கு வழிகாட்டவென்றே வடிவமைக்கப்பட்டவை. இதை எழுதிய முனிவர் வியாசர் ஸ்ரீ விஷ்ணுவின் அம்சம்! இவரது பிறப்பு நோக்கமே தவம் புரிவதும், புராணங்களை எழுத்து வடிவாக்கி உலகில் பரவச் செய்வதென்பதும் தான் அப்படிச் செய்தாலே மனிதகுலத்துக்கு அறிவுக்கண்களைத் திறந்துவிட்டது போலாகும்.

    மானிடர்கள் முதல் ஏனைய ஆயிரக்கணக்கான உயிர்களும் இந்த மண்ணில் வாழ பஞ்சபூதங்களைப் படைத்து, அவற்றின் மூலம் தாவரங்களைப் படைத்து ஊனுடம்பு பசியின்றி இருக்க வழி செய்த இறைவனின் கருணை மனம் கொண்டதால்தான். மனதன் எனப்பட்ட மனிதனின் ஆறாம் அறிவினை விழிப்பிக்கவும், அதன் பசிக்கும் வழிசெய்ய புராணங்களை அருளச் செய்தான்.

    புராணங்களை சிலர் நம்பமுடியாத ஒன்றாகவும் மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகவும் மனித வாழ்வுக்குப் பொருந்தாததாகவும் இருப்பதாகக் கூறுவர். இந்த கருத்து சரியானதல்ல. இது ஒரு வகை அவசரக் கருத்து. வாழ்வை ஆழமாகப் பார்த்து உணர முடியாதவர்களின் ஒரு தற்காலிகக் கருத்து. இப்படிப்பட்ட கருத்து கொண்டிருந்த பலரை காலம் மாற்றியுள்ளது.

    இன்றைய வாழ்க்கைச் சூழலிலிருந்து பின்னோக்கி பல்லாயிரம் ஆண்டுகளும் ஏன் யுகங்களும் கடந்து நடந்தவற்றையே நாம் புராணங்களாகக் காண்கிறோம். அதனால் இன்றைய வாழ்வியல் சூழல் புராண சங்கதிகளை நம்பி மட்டுமே ஏற்க வேண்டிய ஒன்றாக ஆக்கியுள்ளது. இது நம் வாழ்க்கைக்கே கூட மிகப் பொருந்தும். இன்று எண்பது வயதை எட்டிவிட்ட ஒருவர் தன் பள்ளிக்கால அனுபவங்களைச் சொல்லும்போது இன்றைய மாணவர்களுக்கு அது நம்பமுடியாததாக இருக்கும். 'ஏழெட்டு மைல் தூரம் நடந்துசென்று படித்தோம்; மணலில் எழுதினோம்; நன்றாகப் படித்தால் ஒரு வகுப்பிலிருந்து இரண்டு வகுப்புகளைக் கூட தாண்டிச்சென்று படிக்கமுடியும்' என்றெல்லாம் கூறும்போது இன்று பள்ளிக்கு பேருந்திலும் இரு சக்கரவாகனங்களிலும் செல்லும் பிள்ளைகள் வியப்பார்கள் ஆனாலும் நம்ப முடியவில்லையென்று கூறமாட்டார்கள். ஒரு எண்பது ஆண்டு காலமாற்றம் என்பது வியப்புக்குரியதாக மட்டுமே உள்ளது. இதுவே எண்ணூறு எட்டாயிரம் என்றாகும் போது எவ்வளவு மாற்றங்களுக்கு ஆளாகும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

    அவ்வளவு ஏன்?

    ஒரு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கைபேசி பற்றிய கற்பனைகூட யாருக்கும் கிடையாது. இன்று கைபேசியானது பேசுவதற்கு மட்டுமின்றி சகல விஷயங்களுக்கும் என்றாகி விட்டது. இன்று ஒருவரிடம் கைபேசி இல்லையென்றால் அவர் ஒரு காட்டில் அநாதரவாக வாழ்வதாகவே பொருள்! நாளை இந்த கைபேசியும் சுருங்கி ஒரு பேனா வடிவம் கொண்டு இப்போதுள்ளதை விடவே அதிக பயன்களையும் தரப்போகிறதென்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இன்னும் ஒரு நூற்றாண்டில் இந்த பேனா வடிவம்கூட தேவைப்படாது. அடுத்த மாற்றத்துக்கு இது சென்றுவிடும்.

    இப்படிப்பட்ட மாற்றம் விஞ்ஞானத்துக்கு மட்டுமல்ல; காலத்துக்கும்தான்! மாறாத ஒன்றை இந்த உலகில் பார்க்கவே முடியாது அதனாலேயே மாற்றம் ஒன்றே மாறாதது என்றனர்.

    இந்த சிந்தனைகளோடு தேவி பாகவத்திடம் வருவோம். திறந்த மனதோடு வியாசர் அருளிய இதை முதலில் மனம் கொண்டு வாசிப்போம். நடுநடுவே யோசிக்கவும் செய்வோம். இதனால் நம் உள்ளொளி அதிகரித்து நம் பட்டறிவானது ஞானமாகக் கனிவதை நாம் உணரலாம்.

    இந்த தேவியின் திருவருள் சங்கதிகளை வியாசரும் அவர் சீடர்களும் மட்டும் இந்த உலகிற்கு அருளவில்லை. முருகப் பெருமானும் தன் பங்கிற்கு அகத்தியரிடம் கூறினார்.

    முன்னதாக அகத்தியரை நாம் ஓரளவாவது அறிந்து கொள்ள வேண்டும். அகத்தியர் இந்திரனின் விருப்பத்தின் பொருட்டு உருவானவர் என்றொரு வரலாறு உண்டு. அதாவது இந்திரன் பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னியையே பூவுலகில் அகத்தியராகப் பிறக்கச் செய்தான் என்பர். அக்னியும் அதன் பொருட்டு பூமிக்கு வந்து, நிமி என்னும் காலதேவனால் ஒரு கும்பத்தில் சதுர்புஜங்களுடன் கையில் கமண்டலமுடன் அகத்தியராய் அவதரித்தார். இவருக்கு முன் பிறந்தவர் வசிட்டர், எனவே இருவருக்கும் ஒரே கால அளவு என்பர்.

    அகத்தியருக்கு அக்னியே மூலம் என்ற போதிலும், உருவம் கொள்ள உதவியவர்கள் முனி பரம்பரையினர் ஆவர். அந்த பரம்பரையைச் சேர்ந்தவரே கால புருஷனான நிமி! முனி பரம்பரையில் உள்ளோர் தங்கள் பூவுலக வாழ்வின் முடிவில் சொர்க்கம் செல்ல வழியின்றி பித்ருக்களாய் அண்ட வெளியில் அல்லல்படுவதை அகத்தியர் காணநேர்கிறது. அவர்கள் சொர்க்கம் செல்ல வேண்டுமாயின் அகத்தியர் திருமணம் செய்துகொண்டு தந்தை ஸ்தானத்தையும் அடைய வேண்டும். அப்படி ஆனாலே அவர் கர்ம காரியம் செய்யும் தகுதி படைத்தவர் ஆவார். பிறகே பித்ருக்களும் கடைத்தேற முடியும். எனவே அகத்தியர் அதன்பொருட்டு "லோபமுத்ரா' எனும் நிகரில்லாத அழகிய பெண்ணை தன்பொருட்டு உருவாக்கி, அவளையே மணந்து, அவள் மூலமாக இத்மவாகு என்கிற மகனையும் பெறுகிறார்.

    இவரது பிரதான சீடன் அக்னிவேஸ்யன் என்பவராவார். இவர் எழுதிய 'அகத்தியம்' என்பது தலைசிறந்த தமிழுக்கான இலக்கண நூலாகும். அகத்தியர் ஈசனாருக்கும் பார்வதி தேவிக்கும் மிகப்பிரியமானவர். அகத்தியருக்கு முருகப் பெருமான் மேல் மிகவும் பிரியம். முருகனைத் தன் குருவாக வரித்துக்கொண்டு இவர் பல அரிய பாடங்களைக் கற்றுள்ளார். முருகனும் இவர் பொருட்டு மனம் விட்டு பல அரியனவற்றைப் பகிர்ந்துள்ளான். அதில் ஒன்று தேவியின் பிரதாபம்!

    அந்த பிரதாபத்துக்குரிய ஒரு கதையே சூரியனைத் தொடக்கமாகக் கொண்ட இந்தக் கதை! சூரியனுக்கு பல புத்திரர்கள் அவர்களில் 'சிரார்த்ததேவன்' என்று ஒருவன் இவனை வைவஸ்வத மனு என்றும் கூறுவர். இவனுக்கு புத்திரப்பேறு இல்லாதுபோய், இவன் அதற்கான வருத்தத்தில் இருந்தான். பொதுவாக அந்த நாளில் புத்திரப்பேற்றுக்கென ஒரு கணக்கு இருந்தது. இல்லற பந்தம் ஏற்பட்டு ஒன்பது ஆண்டு காலம்வரை புத்திரப்பேறு இல்லாது போனால், அதன் பின்புலத்தில் அருள் குறைபாடு இருப்பதாகப் பொருள் புத்திரப்பேறு இல்லாத தம்பதியரின் பின்புலத்தில் பாவங்கள் இருப்பதும் ஒரு காரணம் இது நீங்க ஒரே வழி வேள்வி புரிவது என்பதுதான்.

    சிரார்த்த தேவனும் தனக்கு புத்திரன் வேண்டி புத்திர காமோஷ்டி யாகம் புரிகிறான். யாகத்தில் பங்குகொண்ட சிரார்த்த தேவனின் மனைவியான சிரத்தாதேவி தனக்கு பெண் குழந்தை வேண்டுமென்று பெரிதும் விரும்பிய நிலையில் யாக நெருப்பிலிருந்து ஒரு பெண் குழந்தையே தோன்றி அவர்களை அடைகிறது.

    இதனால் சிரார்த்த தேவன் வருந்துகிறான். தான் பிள்ளையை எதிர்பார்த்ததாகக் கூறி மனைவியிடம் சண்டையும் போடுகிறான். அப்போது அங்குவரும் வசிஷ்ட மகரிஷி சிரார்த்த தேவனுக்கு ஒரு உபாயம் கூறுகிறார்.

    ஈஸ்வரனுக்குண்டான பஞ்சாட்சரி எனும் மகாமந்திரமானது ஈஸ்வர தரிசனத்துக்கு வழிவகுக்கும். அப்படி தரிசனம் நேரும்போது அக்னியில் தோன்றிய இந்த பெண் குழந்தை ஆணாக வேண்டுமென்று வரமாகக் கேட்டால் அருளுவது நிச்சயம் என்கிறார்.

    சிரார்த்த தேவனும் பஞ்சாட்சர மந்திரம் கொண்டு கடுந்தவம் புரிந்திட ஈசனும் தோன்றி அவன் விருப்பத்தை

    Enjoying the preview?
    Page 1 of 1