Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sarithira Nayagi Rajanandhini - Sirukathai Thoguppu
Sarithira Nayagi Rajanandhini - Sirukathai Thoguppu
Sarithira Nayagi Rajanandhini - Sirukathai Thoguppu
Ebook550 pages3 hours

Sarithira Nayagi Rajanandhini - Sirukathai Thoguppu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115704057
Sarithira Nayagi Rajanandhini - Sirukathai Thoguppu

Read more from Lakshmi Rajarathnam

Related to Sarithira Nayagi Rajanandhini - Sirukathai Thoguppu

Related ebooks

Related categories

Reviews for Sarithira Nayagi Rajanandhini - Sirukathai Thoguppu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sarithira Nayagi Rajanandhini - Sirukathai Thoguppu - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    சரித்திர நாயகி ராஜநந்தினி

    சிறுகதைத் தொகுப்பு

    Sarithira Nayagi Rajanandhini

    Sirukathai Thoguppu

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    I. சங்க இலக்கிய காலம்

    1. சரித்திர நாயகி

    2. புறத்தில் மலர்ந்த மலர்

    3. மன்னவன் வந்தானடி

    4. மண்ணுக்கு வாரிசு

    5. போரிடாத விழுப்புண்கள்

    6. வஞ்சியின் காதலன்

    7. கண்ணீர்ப் பூக்கள்

    8. வெற்றித் திலகம்

    9. ஆடல் காணீரோ

    II. உத்தர பாரதம்

    10. அஜாத சத்ரூ

    11. ஹர்ஷ தானம்

    12. ராஜ வித்தகன்

    13. துருவ சந்திரா

    14. ஜெயதேவி

    III. பேரரசுகள் காலம் (தமிழகம்)

    15. ராஜ அணங்கு

    16. பரிவாதினி

    17. பெண்ணரசி

    18. ப்ரசித்தர்

    19. வளவர் கோன் பாவை

    20. சதங்கைகள் சிரிக்கின்றன!

    21. ஆணழகி

    22. காலங்களை வென்ற காவலன்

    23. இராஜராஜி

    24. ராஜகோபுரம்

    25. மயூர வல்லி

    26. கைத்தலம் பற்ற....

    27. ராஜநந்தினி

    28. சிற்பியின் காதல்

    29. ராஜதண்டனை

    IV. சாம்ராஜ்ய காலம் (மொகலாய, ஆங்கில சாம்ராஜ்ய காலம்)

    30. மிருணா

    31. நூர்ஜஹான்

    32. மராத்திய மலையில் பூத்த மொகலாய மலர்

    33. கல்லுக்குள் ஈரம்

    34. சரபேந்திரன்

    35. மங்கள விலாசங்கள்

    36. அந்நியத் தாய்

    V. சுதந்திர பாரதம்

    37. அண்ணல் வழியில் அபர்ணா

    பதிப்புரை

    தமிழ் இலக்கியத்தில் வாசகர்களால் பெரிதும் விரும்பப் பெறுவது நாவல் மட்டுமே. புனைந்த சம்பவங்களைத் தொகுத்து வழங்கும் ஓர் கோவையே சமூக நாவல் எனவும், வரலாற்று உண் மைகளை ஆதாரமாகக் கொண்டு புனைந்த உண்மை சம்பவங்களின் தொகுப்பே சரித்திர நாவல் எனவும் வழங்கப் பெறுகின்றது.

    தமிழ் கூறும் நல்லுலகில் சமூக நாவல்களைப் படைத்தனிக்கும் ஆசிரியர் பலரிருப்பினும், வரலாற்று நாவல்களைப் படைத்தளிக்கும் ஆசிரியர் மிகச் சிலரே உளர். சமூக நாவல்களைப் படைப்பதுடன் வரலாற்று நாவலையும் படைத்தளிப்பவர் ஒரு சிலரே. அத்தன்மையில் உருவான படைப்பாளியே ஆசிரியர் திருமதி லட்சுமி ராஜாத்னம் அவர்கள்.

    துணைவரின் துணையோடு தஞ்சைக் கோட்டை, திருபுவனம், திருவிடை மருதூர், செஞ்சிக்கோட்டை எனச் சுற்றிவந்த ஆசிரியர், ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் மன்னர்களின் அரசியல் தந்திரங்கள், மலைகளின் அமைப்பு, போர் முறைகள் போன்ற சரித்திரக் குறிப்புகளைக் கொண்டு 'சரித்திர நாயகி ராஜநந்தினி’ என்ற இச் சிறுகதைத் தொகுப்பினை இலக்கிய உலகிற்குப் படைத்தளித்துள்ளார்.

    ‘சங்க இலக்கிய காலம்' எனும் தொகுப்பில் ஒன்பது சரிந்திர சிறுகதைகளையும், உத்தர பாரதம்' எனும் தொகுப்பில் ஐந்து சரித்திர சிறுகதைகளையும், ‘தமிழகம் ஆண்ட பேரரசுகள் காலம்' எனும் தொகுப்பில் பதினைந்து சரித்திர சிறுகதைகளையும், ‘மொகலாய - ஆங்கில சாம்ராஜ்ய காலம்' எனும் தொகுப்பில் ஏழு சரித்திர சிறுகதைகளையும், 'சுதந்திர பாரதம்’ எனும் தலைப்பில் ஒரு சரித்திர சிறுகதையென, மொத்தம் முப்பத்தேழ் வரலாற்றுச் சிறுகதைகளை வாசகர்களுக்கு வடித்தளித்துள்ளார் ஆசிரியர்.

    முன்னுரை

    பிரமித்து நிற்கிறேன், எத்தனையோ நாவல்களுக்கு முன்னுரை எழுதிய பொழுது ஏற்படாத பிரமிப்பு இப்பொழுது மட்டும் ஏன்? காரணம் இருக்கிறதே! என்னுடைய முப்பத்தி ஐந்து சரித்திர சிறுகதைகள் அடங்கிய தொகுப்பிற்கு முன்னுரை எழுத உட்கார்ந்த பொழுது ஏற்பட்ட பிரமிப்புத்தான் அது.

    வேறுபட்ட எத்தனை எத்தனைகளங்கள். மன்னர்களின் அரசியல் தந்திரங்கள்.... நாட்டின் சேர்க்கைகளும், பிரிவுகளும், சூழ்ச்சிகளும் நான் கண்ட களங்களில் என்னை திகைக்க வைத்து விட்டன என்பது தான் உண்மை. இக்களங்களில் என்னுடன் கைகோர்த்து வந்தவர் என் கணவர் திரு. ராஜரத்தினம், அவருடைய மூன்று எம் ஏ. பட்டங்களில் சரித்திர எம்.ஏ. பட்டமும் ஒன்று.

    1958-ம் ஆண்டு மே 1-ம் தேதி எங்கள் திருமணம் நாள், திருமணம் முடிந்து இரண்டு வாரங்களில் என் பெரிய நாத்தனார் வசிக்கும் செஞ்சிக்கு வந்தோம், செஞ்சிக் கோட்டையில் மலை ஏறி சுற்றி வந்தோம். தேனிலவு என்ற ஒன்று பாவாத காலம், சரித்திரப் பட்டதாரியான என் கணவர், மலைகளின் அமைப்பு, போர் முறை தந்திரங்கள் என்று தேசிங்கு ராஜனின் அரசாட்சியை விவரித்தது இன்றும் என்னால் மறக்க முடியாது.

    அப்பொழுது எனக்கு வயது 16, என் கணவருக்கு 22. நான் திருச்சியில் என் பாட்டி வீட்டில் வளர்ந்தவள். திருச்சி வரும் சமயங்களில் இருவரும் தஞ்சைக் கோட்டை, திருபுவனம், திருவிடைமருதூர் என்று சுற்றி வருவோம். இந்த ஆராய்ச்சிகளும், என் கணவர் எடுத்துரைத்த சரித்திரக் குறிப்புக்களும் என் மணப் பேழையில் பத்திரப்படுத்தப்பட்டன.

    பின்னால் எழுதத் தொடங்கிய பொழுது என் மனப் பெட்டகம் திறந்து நான் இருக்கிறேன், என்னை உபயோகப்படுத்திக் கொள் என்று கூக்குரலிட்டது. பயன்படுத்திக் கொண்டேன்.

    நான் தமிழை ஆர்வத்துடன் படிக்கும் மாணவி, புறத்தில் மலர்ந்த மலர் என்ற சிறுகதையை புறநானூற்றுச் சம்பவத்தை வைத்து எழுதினேன். கல்கியில் வெளியான சிறுகதை அது, எத்தகைய மனிதர்கள் மாபெரும் மன்னர்களாக வாழ்ந்திருக் சிறார்கள்!

    வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்து விட்டவர் பாடமடி என்று ஒரு சினிமாப் பாடல் கூறுகிறது.

    வாழ்ந்து விட்டவர்களிடமிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள்தான் எத்தனை...... எத்தனை.... அது வாழ்க்கைப் பாடம்.... தொடர்ந்து கற்க வேண்டிய பாடம்.

    அப்படி கற்க எனக்கு உறுதுணை புரிந்த என் கணவர் அமரர் திரு. ராஜரத்னம் அவர்களுக்கு இச்சரித்திர சிறுகதைத் தொகுப்பை சமர்ப்பணம் செய்கிறேன்.

    எனக்கு இப்பொழுது 74 வயது. மூன்று பெரிய அறுவை சிகிச்சைகளைத் தாங்கிக் கொண்டு இந்த நிமிடம் வரை பேனா பிடித்து என்னை எழுத வைப்பது இறைவனின் கருணை…

    சரித்திர சிறுகதைகளை தொடர்ந்து வெளியிட்ட அமுதசுரபி, கல்கி, கலை மகன், தேவி மற்றும் ஆனந்த விகடன் பத்திரிக்கைகளுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி! நன்றி! நன்றி!!!

    பல்லாண்டு காலம் அவர்கள் பணி தொடர் இறைவனை வாழ்த்தி, இப்புத்தகங்களைப் படிக்கும் உங்களுக்கும், ஆராய்ச்சி செய்த, செய்யப்போகும் மாணவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி வணக்கம்

    அன்புடன்

    லட்சுமி ராஜரத்னம்.

    I. சங்க இலக்கிய காலம்

    1. சரித்திர நாயகி

    அழகிய பெண்களின் கால் நூபுர ஒலியாக - காதலனின் அணைப்பில் கட்டுண்ட காதலியின் கள்வெறிச் சிரிப்பாக - அவனின் பிடிக்கு அகப்பட்ட மேல் துகிலின் விரிந்த பரப்பாக அந்தச் சிற்றோடை வேகமான நளினத்துடன் அந்தப் பெரிய மாளிகையிலிருந்து ஓடி வந்து கொண்டிருந்தது. அந்த மாளிகை பாலி நாட்டின் ஒரு நகரமான கடம்பின் பெருவாயிலில் இருந்தது.

    அதை ஆள்பவன் நன்னன் வேண்மான். அவனுடைய மாளிகையிலிருந்து தான் அந்தச் சிற்றோடை வெள்ளிப் பாய் விரிப்பாக ஓடி வந்தது. மாளிகையில் ஓடும் ஓடைக்கரையில் ஓர் அழகிய மாமரம், அதை நன்னன் தனது காவல் மரமாக வைத்துக் கொண்டிருந்தான். அந்த மாமரம் சிறு கன்றாக இருந்தபோது ஒரு சாது. நன்னனுக்குக் கொடுத்தார். வேட்டைக்குச் சென்ற சமயம் அந்தச் சாதுவை வெம்புலியிடமிருந்து நன்னன் காப்பாற்றினான்.

    மன்னா, என் உயிரைக் காப்பாற்றிய உனக்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும். நான் தரும் இந்த மாமரத்தின் முதல் பழத்தைத் தின்பவர்கள் சரித்திரத்தில் இடம் பெறுவார்கள். அவர்களைப் பற்றி உலகம் உள்ளவரை மக்கள் அறிவார்கள். அதனால் நீ அதிஜாக்கிரதையாக வளர்த்துப் பழத்தை உண்பாய் என்றார்...

    அதிலிருந்து மன்னன் நன்னன் அம் மரத்தைத் தினம் தவறாமல் பார்வை இடுவான். கன்னிப் பெண்ணின் முற்றாத இளமையாக ஒரு காயை ஈன்றது அந்த மரம், அதைக் கண்ட மன்னன் மனம் பூரித்தான். காய் பழுக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தான். அந்தக் காயும் செம்மைக் கோலம் பூண்டது.

    மன்னன் இன்றும் அதன் அடியில் போய்ப் பார்த்தான். மஞ்சளாகப் பூத்துச் செம்மை கொள்ள - இன்னும் இரண்டு தினங்களாவது காத்துக் கொண்டிருக்க வேண்டுமோ? அந்தப் பழம் இனாவேணியை நினைவுபடுத்தியது. இளவேணி! அவளது அழகிய கதுப்புக் கன்னத்தைப் போல் அல்லவா இது பழுத்துக் கொண்டு வருகிறது! மனம் ரசனையில் பூரித்தாலும், நினைக்கும் பொழுதே எரிந்தது.

    ஒரு மாலையில், மாளிகைக்கு வெளியே குதிரையில் வரும்போதுதான் இளவேணியைப் பார்த்தான். அடைந்தால் இவனளத்தான் அடைவது என்று உறுதி பூண்டான். இவளை அறிமுகப்படுத்திக் கொள்வது நல்ல தல்லவா? அவள் முன்பு போய், பெண்ணே! என்று அழைத்தான்.

    அவன் அரண்டு போய் மன்னனைப் பார்த்தாள். அவன்தான் மன்னன் நன்னன் என்பதைப் புரிந்து கொண்டாள். கண்களில் புத்தொளி பரவியது.

    வணக்கம் மன்னர் பெருமானே என்றாள் அடக்கத்துடன்.

    எங்கே போகிறாய்?

    என் அண்ணன் மாளிகையினுள் வேலை செய்கிறான். அவனனப் பார்த்துவிட்டுச் செல்கிறேன்.

    அவனது மாளிகையில் கோசரர்கள் தாம் வேலை செய்கிறார்கள். அவனது குறும்பான செயல்களுக்குக் கோசர் வீரர்கள்தாம் சரிப்படும் என்று அவர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டிருந்தான். பூழிநாடு தனதானாலும், சேர நாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றியதில் கோசரர்களே பெரிதும் துணை நின்றனர்.

    ஓ நீ கோசரப் பெண்ணா? அதுதான் இவ்வளவு அழகாக இருக்கிறாய்! தனக்கு உட்பட்டவர்கள் தானே என்ற எண்ணம் மன்னன் மனத்தில் அவனது புகழைக் கேட்டதும், அவள் நாணத்துடன் தலை குனிந்தாள்."

    உன் பெயர் என்ன? அவன் தன் கருத்த மீசையைத் தடவிக் கொண்டான்.

    இளவேணி!

    இளவேணி! இனிமையான பெயர் என்ற மன்னன், நாவைச் சொடக்கிட்டான். அவனது கண்களில் மின்னிய சுடரைக் கண்டு திடுக்கிட்டாள் இளவேணி, சட்டென்று அவளது கரத்தைப் பற்றிய மன்னன், இளவேணி நீ, எனது அந்தப்புரத்தை அலங்கரிப்பதை நான் விரும்புகிறேன்.

    அவள் கண்களில் ஒருவிதத் துடிப்போடு பார்த்தாள்.

    மன்னர் பெரும். அந்தப்புரத்தைப் பெண்கள் அலங்கரிப்பது என்பது மன்னர் குல வழக்கப்படி சரியானதுதான். ஆனால் என்னால் முடியாது. நான் ஏற்கனவே மணமானவள். என்னை மன்னியுங்கள். தங்கள் நெஞ்சைத் தழுவ எத்தனையோ கன்னிப் பெண்கள் காத்திருப்பார்கள், அவர்களுக்குக் கொடுத்து மகிழுங்கள். அந்தப் பாக்கியத்தை! புள்ளி மானெனத் துள்ளி ஓடி விட்டாள்.

    மன்னன் கொதித்தெழுந்தான்.

    என்னுடைய ஆதரவின் கீழ் இருக்கும் கோசாப் பெண்ணுக்கு இத்தனை ஆணவமா? என்று வெகுண்டான்.

    இதற்குப் பின்னும் அந்தக் கோசரப் பெண்ணுக்கு நயமாகவும், இதமாகவும் பல சொல்லி அனுப்பினான். அவனுடைய உபத்திரவம் பொறுக்காத இளவேணி தன் கணவனுடன் சேர நாட்டுக்குப் போய்விட்டாள்.

    இளவேணியின் இந்தச் செய்கை, மன்னனின் சீற்றம் எரியும் தீயில் நெய் வார்த்தாற் போல் இருந்தது. பார்க்கும் இடமெல்லாம் இளவேணியாகவே தோற்றம் அளித்தது அவன் கண்களுக்கு.

    இரவு முழுவதும் மழை பெய்தது. அப்பொழுதுதான் சற்று விட்டது. மாமரத்தைப் பார்க்க வந்தான் நன்னான், நிமிர்ந்து கனியைப் பார்க்கவும் ஏதோ ஒரு பார்வை என்று கனியைக் கடித்து புடையில் போடவும் சரியாக இருந்தது. மாங்கனி 'தொப்’பென்று ஓடையில் விழுந்து வேகமாகச் சென்றது. ஆட்களை அழைத்து ஓடச் செய்தான்.

    எப்படியாவது அவன் முதல் பழத்தைச் சாப்பிட்டே தீர வேண்டும். மழை பெய்து ஓட்டை நிறைய நீர் செக்கச் சிவந்து ஓடியது. மாளிகைக்குச் சற்றுத் தூரத்தில் ஓர் அறியாத, சிறுமி ஓடை நீரில் மிதந்து வரும் காயைக் கண்டாள். அவ்வளவுதான், மீன் போல் தாவிப் பாய்ந்து. காயைக் கைப்பற்றித் தன் அரிசிப் பற்களைப் பதித்துத் தின்னத் தொடங்கினான். கனியை எடுக்க ஆற்றோரமாக ஓடிவந்த நன்னனது ஆட்கள் இதைக் கண்டனர். நன்னனது ஆட்கள் இந்தக் கனியின் அருமையை அறியாதவர்கள் அல்லவே? நெஞ்சு பதைபதைத்தனர்.

    பெண்ணே! என்ன காரியம் செய்து விட்டாய்? சாது ஒருவர் அளித்த மாமரத்தின் கனி இது. இதை உண்டால் சரித்திரப் புகழ் பெறுவார்கள். அதனால் மன்னர் இதை உயிருக்குயிராய்க் கருதி வந்தார். நீ கெடுத்து விட்டாயே? என்றார்கள்.

    தன் முல்லைப் பற்கள் தெரியச் சிரித்தாள் அந்தச் சிறுமி.

    நான் சரித்திரப் புகழ் பெற்று விட்டுப் போகிறேன். சாதாரனாக் கோசர குடிமகளான என்னை யார் அறியப் போகிறார்கள்? இந்தப் பழம் எனக்குப் புகழை உண்டாக்கி விட்டுப் போகட்டுமே என்றான் மிக அலட்சியமாக.

    காவலர்கள் திரும்பி வந்து விஷயத்தைச் கூறியதும் பொல்லாத கோபம் வந்துவிட்டது நன்னனுக்கு, திரிபுரம் எரித்த சிவனாக நின்றான்.

    பிடித்து இழுத்து வாருங்கள், அந்தச் சிறுமியை என்று ஆணையிட்டான். காவலர்கள் அந்தச் சிறுமியை இழுத்துக்கொண்டு வந்தார்கள். மன்னன் விசாரணை ஏதும் வைக்கவில்லை. அத்துணை சினம் அவனது அகத்தில் கொழுந்துவிட்டெரிந்தது. நேரடியான தீர்ப்பை உடனே வழங்கினான்.

    இந்தச் சிறுமியை வெட்டித் தலையைக் கொய்துகொண்டு வாருங்கள். எனது தீர்ப்பில் மாற்றங் காண யாரும் முயல் வேண்டாம்.

    பெண்ணின் தந்தை - கோசரர்களின் தலைவன் செய்தி கேட்டு ஓடோடி வந்தான்.

    மன்னா, அறியாத சிறுமி. ஓடை நீரில் மிதந்து வந்த கனியைக் கண்டு விட்டாள். பிழை பொறுக்க வேண்டும். இவளுடைய உயிருக்கு விலையாக எண்பத்தொரு களிறுகளும் இவள் எடைக்கு எடைப் பொன்னும் தருகிறேன். இவள் எனது ஒரே மகள் கருணை காட்டுங்கள். இவள் மாண்டுவிட்டால். நானும் எனது மனைவியும் உயிர் தரிக்க மாட்டோம். கருணை காட்டுங்கள். மன்னா என்று மன்னனின் காலைப் பிடித்துக் கொண்டு கதறினான்.

    ஓ! இவன் இளவேணியின் அண்ணன் அல்லவா? மன்னனின் நெஞ்சில் மாளாத மமதை பெருக்கெடுத்தது, மனம் இரங்க வில்லை. மாறாக இறுகியது. நேரில் நின்று தண்டனையை நிறைவேற்றினான். கோசரப் பெண்களைப் பழி வாங்கிய நிம்மதி பிறந்தது மனத்தில், சாவும் அழிவும் மன்னர்களுக்குப் புதிதல்லவே!

    அழகாகத் தீட்ட விழையும் ஓவியன்போல் நேரம் தனது கருமை நிறத்தைத் தீட்டிக் கொண்டே வந்தது. மஞ்சத்தில் சாய்ந்த மன்னனுக்கு நித்ராதேவியின் அருள் கிட்டவே இல்லை, கண்களை மூடினால் அந்தச் சிறுமியின் பிஞ்சு முகம். சதக்கென்று மண் மாதாவின் மடியில் எறியப்பட்ட கருங்கூந்தல் அடர்ந்த சிறுதலை, உடல் துடித்த துடிப்பு, கண்களில் மரணத்தைச் சந்திக்கும் காட்சி.

    'ஏ, மன்ன! இதென்ன போராட்டம்! நீ போர்க்களங்களைக் கண்டதில்லையா? ஒரு சிறுமிக்காக இப்படி அல்லல் பாடுகிறாயே?' மனம் பேசியது, மனச்சாட்சியின் விழிப்புற்ற குரலுக்கு பதில் சொல்வது போல் மாளிகைக்கு வெளியே ஒரே தலம்.’

    மன்னன் பதைபதைத்தான். அந்தப் பெண்ணின் தாயும், தந்தையும் மாண்டுவிட்டார்களோ? கோசரர்களின் தீப்பந்தங்கள் தொலைதூரத்தில் மாளிகையின் முகப்பில் ஜோதிப் பிழம்புகளாக மாறுவதை மன்னன் கண்டான், காவல் மாமெனக் கருதிய மாமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது. மன்னன் இப்போது நிதானமாகச் சிந்தித்தான். அவன் செய்தது எவ்வளவு பெரிய தவறு!

    அரசனுடைய காவலர்கள் ஓடி வந்தார்கள்.

    மன்னவா! தாங்கள் மாளிகையின் இரகசியச் சுரங்க வழியில் தப்பித்துக் கொள்ள வேண்டியதுதான். கோசரர்கள் தங்களை ஒழிக்க ஓடி வருகிறார்கள்.

    மன்னனும், சில காவலர்களும் ஓடி, சுரங்க வழியே தப்பித்துக் கொண்டார்கள்: புன்னாறை நாட்டுக்கு ஓடி ஒளிந்தான். தன்னுடன் முக்கியப்பட்டவர்கள் சிலர் வந்தது குறித்து அவனுக்கு தெம்பும் துணிவும் ஏற்பட்டன.

    மிஞிலி, நீ என்னுடன் வந்தது குறித்து எனக்கு யானை பலம் வந்ததுபோல் இருக்கிறது என்று படைத்தலைவனைப் பாராட்டினான்.

    சில அமைச்சர்களைப் பாராட்டினான். வாகை மரம் ஒன்றைத் தன் காவல் மரமாக வைத்தான். பெருந்துறையில் தங்கித் தனது படை பலத்தை பார்க்கத் தொடங்கினான்.

    சேர மாமன்னன் களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல் நன்னனது செயலை அறிந்தான். நன்னனின் வசப்பட்ட சேரநாட்டுப் பகுதிகளைக் கைப்பற்ற இது நல்ல தருணம் என்று போர் தொடுத்தான். அவனது படையெடுப்பைத் தாங்காத கோசரர்கள் நன்னனைத் தேடி ஓடினார்கள். நார்முடிச் சேரல் வெகு சுலபமாக நன்னனுடைய பகுதிகளைச் சேர நாட்டுடன் சேர்த்துக் கொண்டான்.

    கொங்கு வஞ்சியை நன்கு அரண்களால் பலப்படுத்தினான். பிறகு பெருந்துறையில் உள்ள நன்னனை எதிர்த்துப் படையெடுப்பைத் தொடந்தான். வாகைப் பெருந்துறையில் கடும் போர் நடந்தது. நன்னன் தோல்வியைத் தழுவிப் புறமுதுகிட்டு ஓடினான்.

    நர் முடிச் சேரல் துரத்திக்கொண்டு ஓடினான். காடு, மலை என்று பாராமல் குதிரையில் தப்பிக்கொண்டு அலைந்தான். ஓரிடத்தில் குதிரையை விட்டுவிட்டுப் போக்குக் காட்டி விட்டு வேறு இடத்துக்குச் சென்றான். கல்லும் முள்ளும் காலைப் பதம் பார்த்தன. தண்ணீர்த் தாகம் நாவை வரட்டியது. நன்னன் சுற்று முற்றும் பார்த்தான். தூரத்தில் மலை முகட்டில் ஒரு குடில் இருப்பதைக் கண்டு அதில் நுழைந்து கதவைத் தாளிட்டுக் கொண்டான்.

    யாரது?

    இழுப்பும் கேவலுமாகக் கேட்ட ஒருவர் இருக்கையை விட்டு எழுந்து வந்தார்.

    அவருடைய கால்களைப் பற்றிக் கொண்டான் நன்னன், ஐயா! என்னைக் காப்பாற்றுங்கள்.

    அவர் எழுந்து நின்ற நன்னனைப் பார்த்தார். கைகளைக் கூப்பி, ஐயா, என்னைப் பகைவர்கள் துரத்துகிறார்கள். என்னை எங்கேயாவது ஒளித்து வைத்துக் கொள்ளுங்கள். யாராவது வந்தால் இங்கு இல்லை என்று சொல்லுங்கன், ஐயா! ஓர் உயிரைக் காப்பாற்றிய புண்ணியம் உங்களுக்குக்கு உண்டு என்று கெஞ்சினான். அந்த மனிதர் நன்னனையே உற்றுப் பார்த்தார்.

    மன்ன! நீங்களா? என்று கேட்ட அம்மனிதர் பின்னால் போனார்.

    நன்னன் அதிர்ந்து போனான். இந்தக் கோசரன் தன்னைப் பழிவாங்கப் போகிறானா? வாகைப் பெருந்துறையில் அவனை எந்தப் புலவர்களும் புகழ்ந்து பாடாமல் மறுத்த தண்டனை போதாதா? பெண் கொடை புரிந்த நன்னன் என்று தூற்றியது போதாதா?

    ஐயா, ஆராயாமல் தங்கள் குழந்தையை நான் கொன்றதற்கு என்னை இப்போது பழி வாங்கிவிடாதீர்கள், ஐயா!

    கண்ணீர் விட்டான் நன்னன்.

    உன்னைக் கொல்ல நான் யார் மன்ன! அதிகாரம் இருக்கிறது என்ற மமதையில் என் மகளை, ஒரு தவறும் செய்யாத பிஞ்சைக் கொன்றாய், என் மனைவி அதே ஏக்கத்தில் இறந்துவிட்டாள். இதோ நான் இருக்கிறேன். நடை பிணமாக. இன்று நீ அகப்பட்டுக் கொண்டாய் என்று நானும் அதே குற்றத்தைச் செய்யமுடியுமா?

    ஐயா! அறியாமல் செய்துவிட்டேன்!

    நானும் அறியாமல் செய்தால் உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? பழத்தைச் சாப்பிட்டுச் சரித்திரத்தில் அழியாப் புகழைப் பெற விரும்பினாய்! ஏன், என் குழந்தை அந்த இடத்தைப் பெற்றுவிட்டாள். பெண் கொலை புரிந்த நன்னன் என்ற பெயரை நீ பெற்று விட்டாய். எந்தக் கவிஞர்களும் உன்னைப் பாடமாட்டார்கள். இதுவே உனக்குச் சாவுக்குச் சமானம். நான் வேறு உன்னைக் கொல்ல வேண்டுமா?

    கதவைத் தட்டும் ஓசை கேட்டது.

    அந்த மனிதர் கதவைத் திறந்து பதில் சொன்னார்.

    இங்கு யாரும் வரவில்லை

    நன்னன் மனசு நன்றியால் துடித்தது.

    அவர் உள்ளே வந்தார். நன்றி ஐயா, நன்றி! என்று தழுதழுத்தான்.

    உன்னைக் கொல்வதனால் என் குழந்தை கிடைப்பாளானால் அந்தச் செயலை நான் செய்வதில் அர்த்தமுண்டு. என் உயிர் போனால் நீ என் மன்னிப்பைப் பெறுவாய், இந்தா தண்ணீர், இதோ உணவு இருக்கிறது. உண்டு விட்டு வந்த வழியே போய் விடு.

    இப்படிக் கண்டறிய அந்தக் கோசரன் தளர்ந்த நடையில் மலைச் சரிவில் இறங்கினார். நன்னன் சிலையாக நின்றான்.

    2. புறத்தில் மலர்ந்த மலர்

    சேரமான் கணைக்கால் இரும்பொறையின் மாபெரும் படை தோல்வியுற்று விட்டது. மாமன்னர் சேரமானின் மகுடம் மண்ணில் சாய்ந்து விட்டது. சேரர் படை சின்னா பின்னமாகியது. சேர மன்னனைச் சோழ மன்னன் கோச்செங்கண்ணான் சிறைப் படுத்தி விட்டான். யானைப் படைகளுக்குப் பெயர் பெற்ற சேரர் படை புறமுதுகிட்டது. சோழனின் யானைகள் இரத்தம் போர்த்த செந்தூரக் குவியல்களாக வெற்றி நடை போட்டு வந்தன.

    கழுமலம் என்ற இடத்தில் சேர மன்னன் கணைக்கால் இரும்பொறைக்கும் சோழ மன்னன் கோச்செங்கண்ணானுக்கும் நடந்த போரில் சேரன் முடியை இழந்து சதாகி விட்டான்!

    சிறைக்குச் சென்ற சேர மன்னனின் கண்களில் கண்ணீர் வடியவில்லை. இரத்தம் வடிந்தது. சேரக் குடிமக்கள் இதைக் கேட்டு எப்படித் துடிப்பார்கள்? ஏன் அவனுடைய தேவி சேரமா ராணி?

    சேரமா தேவிதான் இந்தப் போருக்குக் காரணம் என்பதைச் சேர மன்னன் எப்படி அறிவான்? சுந்தர வல்லி சேரமா தேவியாக ஆவதற்கு முன்பு....

    சேர நாட்டின் மாதண்ட நாயகரின் மகனாக - சுந்தரவல்லியாக இருந்த பொற்சிலையைப் பற்றிக் கேள்விப்பட்டான் சோழன் செங்கண்ணான். அவளது அழகைப் பற்றிக் கேள்விப்பட்டதனால் மனத்தை அடக்க முடியவில்லை. மாறு வேடத்தில் சேர நாட்டில் தங்கிச் சுந்தரவல்லியின் தோற்றப் பொலிவைக் கண்டான். அது சுந்தரவல்லி நந்தவனத்தில் தனித்திருந்த சமயம்.

    இது பெண்களின் உல்லாச நந்தவனம். இங்கு ஆண்கள் வேரக்கூடாது. தாங்கள் வழி தவறி வந்துவிட்டீர்கள். தாங்கள் யார் என்பதை நான் அறியலாமா? என்று கேட்டாள் சுந்தரவல்லி.

    சரியான வழியில்தான் வந்திருக்கிறேன். பல காதங்களைக் கடந்து ஓடோடி வந்திருக்கிறேன். இந்தச் சுந்தரியின் செளந்தர்ய வடிவைக் காண ஓடோடி வந்து விட்டேன்.

    அவள் விழித்துப் பார்த்தாள். தாங்கள் பல காதங்கள் கடந்து வந்திருக்கலாம். ஆனால் தாங்கள் யாரென்று கூறவில்லையே

    நான் சோழ அரசன் செங்கண்ணான். அவள் நம்ப முடியாமல் பார்த்தாள்.

    என்ன விளையாடுகிறீர்கள்? அவள் சினந்தாள்.

    அவன் தன் முத்திரை மோதிரத்தை - சோழ இலச்சினையைக் காட்டினான்.

    இப்பொழுது நம்புகிறாயா சுந்தரி?

    ஓ! சோழ மன்னரே! இதென்ன சோதனை எனது தந்தையாரிடம் போய்த் தங்கள் வருகையை அறிவிக்கிறேன். எனது மடமையான விசாரணையைத் தாங்கள் பொறுத்தருள வேண்டும்.

    சுந்தரவல்லி தலையைக் குனிந்து நின்று அங்கிருந்து அகலத் துடித்தாள்.

    சுந்தரவல்லி, உன் அழகைக் கேள்விப் பட்டு உன்னைக் கானா வந்தேன், அழகும் ஆற்றலும் அறிவும் சோழநாட்டுக்குச் சொந்தமாக வேண்டும்.

    சுந்தரவல்லி அப்படியே ஆடிப்போனாள்.

    மாமன்னரே! இதென்ன சோதனை? தங்கள் நாட்டில் இல்லாத பெண்களா? என்னைவிட அழகிலும் ஆற்றலிலும் அறிவிலும் மேம்பட்டவர்கள் எத்தனையோ பேர்கள் இருப்பார்கள் அரசே! என்னைப் போய்ச் சோதனை செய்வது நியாயமில்லை. தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும். தங்கள் ஆசைக்கும் அன்புக்கும் இந்தப் பேதை அருகதையற்ற வளாக இருக்கிறேன் என்றாள் சுந்தரவல்லி பணிவான குரலில், சோழ மன்னன் மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

    அவள் தொடர்ந்தாள், இந்த ஏழையின் உள்ளம் என்றோ சேர மன்னர்பால் சரணடைந்து விட்டது. விரைவில் தங்களுக்கு என் மன ஓனல் பெரும் அரசே!

    நீ உன் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டாயா?

    அவள் தலையை அசைத்தாள்.

    முடியாது அரசே முடியாது, தாங்கள் இப்படிக் கேட்பது விந்தையாக - ஏன் நகைப்புக்குரியதாக இருக்கிறது. தமிழ்ப் பெண் தன் கணவனை வரித்துவிட்ட பின்பு தன் வார்த்தையில் பிறழ்வதுண்டா? நான் தங்களை அன்னியராக நினைக்கவில்லை, என்னை ஆசீர்வதியுங்கள் அரசே!

    சீறிச் சினந்தான் செங்கண்ணான். எத்துணை ஆசைகளைச் சுமந்து கொண்டு வந்தான் தனக்கும் தன் அரசுக்கும் அடிபணியாதவர்கள் உண்டா என்ற இறுமாப்பில் வந்தானே என்ன ஆயிற்று? கண்கள் சிவந்தன, தோள்கள் புடைத்தன, தொண்டையிலிருந்து அகங்காரமான தொனி எழுந்தது.

    இதுதானா உன் முடிவு?

    ஆமாம், அரசே!

    உன் மன்னவன் சேரமானைச் சிறை எடுத்து உன் வாழ்வைக் குலைக்கவில்லை என்றால் நான் சோழன் கோச் செங்கண்ணான் இல்லை. என்ன செய்கிறேன், பார்!

    சில ஆண்டுகள் பொறுத்திருந்து திட்டம் தீட்டி, படை திரட்டிச் சென்று வெற்றியும் பெற்றுவிட்டான்.

    சேரமாதேவி! அன்று என் மனம் என்ன பாடுபட்டது? நினைத்ததை அடைந்தே தீருவான் இந்தச் சோழ மன்னன். என் வாழ்வில் தோல்வியைத் தழுவ பெத்தாய், இன்று அழுது கண்ணீர் சிந்து! கதறிக் கதறி அழுது மனத்தை உடைத்துக்கொள்.

    இரவு மெல்லப் படர்ந்து வந்தது. நகரின் வெற்றிக் கோலாகலங்கள் இருளை உள்ளே விடாமல் தீப ஒளிகளால் விரட்டி விட்டன. இருளரக்கன் சேர நாட்டின் அரண்மனையை நோக்கித் தோல்வியை எடுத்துக் கொண்டு ஓடினான்.

    குடவாயிற் கோட்டத்தில் சிறை வைக்கப்பட்ட, இரும்பொறையின் நெஞ்சத்துயர் சொல்லில் வடித்து மாளாது. தன் நெஞ்சே வெடித்து விடும் போல நினைத்து நினைத்து வெந்தான்…

    நிலா முற்றத்தில் ராணி அருகே அமர்ந்து பால் அன்னம் Eண்டது கூடக் கனவாகத் தோன்றியது. நினைத்து நினைத்து நா வறண்டது. பழரசம் தரத் தன் தேவி சுந்தரவல்லி அருகில் இல்லையே! ஒரு வாய் தண்ணீராவது கிடைக்குமா? காவலர்கள் பக்கம் திரும்பி 'தண்ணீர், தண்ணீர்' என்று நலிவுற்ற குரலில் கேட்டான். காவலர்களின் அலட்சிய நோக்கும் ஏளனச் சிரிப்பும் அவனது பஞ்சடைந்த கண்களில் மங்கிய சித்திரமாகப் பதிந்தன. அப்படியே மயங்கிச் சாய்ந்தான்.

    புலவர் பொய்கையார் வந்திருப்பதை ஒரு காவலன் வந்து தெரிவித்தான்.

    ஓ.... புலவர் பொய்கையாரா? உடனே அழைத்து வா.... சோழ மன்னனின் நெஞ்சில் வெற்றியின் இறுமாப்பு இறுகிற்று. பொய்கையார் சேர மன்னனின் சிறந்த நண்பராயிற்றே? ஒருவேளை சேர மன்னனை விடுதலை செய்ய வேண்டுகோள் விடுக்க வருகிறாரோ?"

    வருக, வருக, புலவர் பெருமகனாரே! உம் வரவால் இந்த அரசவை பெரும் பேறு பெற்றது என்று சோழ மன்னன் புல்வரை வரவேற்றான். நாட்கள் சில கடந்தும், போரில் வெற்றி பெற்றும் சோழன் சேர மன்னனைக் கைதி நிலையிலேயே அடைத்து வைத்திருப்பதை உணர்த்தவே புலவர் பொய்கையார் அங்கு வந்திருந்தார்.

    நட்புக்கு இலக்கணமாகத் தாம் சேர மன்னனை எப்பாடு பட்டேனும் விடுவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவர் துரிந்து சோழனின் அரசவையினுள் நுழைந்திருந்தார்.

    புலவரே, அடியேன் தங்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டியது உள்ளதா?

    புலவர் பூவாகச் சிரித்தார். கற்றறிந்தோர் காலத்தை வென்ற சிரிப்பு அது, இதில் அடக்கமும், அமைதியும் நிறைந்து பொங்கின.

    இனிப்பை நாடி ஓடும் ஈக்களும், பழுத்த மரத்தைத் தேடி வரும் புள்ளிகளும் போல் மன்னன் அரசவையை நாடி வரும் புலவர்கள் காரியம் இல்லாது வருவார்களா? மன்னா! நின் வெற்றியை, நின் போரின் சிறப்பை 'களவழி நாற்பது' என்ற நூலாக இயற்றியுள்ளேன். இசைவு தந்தால் நின் பெருமையை இத்திருச்சபை அறியக் கூறும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைக்கும்

    அப்படியே ஆகட்டும் புலவரே! தாங்கள் இப்பொழுதே - இத்திருச்சபை கூட்டியுள்ள தருணத்தில் ஆரம்பிக்கலாமே! தமிழ்த் தாகம் எடுத்தவனுக்கு வேறு தாகம் ஏது புலவரே? நல்லது செய்ய நேரம் காலம் பார்க்க வேண்டாம்.

    புலவர் பாட ஆரம்பித்தார். மன்னனின் முகம் சந்திர ஒளியாக திகழ்ந்தது. சோழ மன்னனையும், அவனுடைய நாட்டு வளப்பத்தையும், அவன் பெற்ற வெற்றியையும் சிறப்பித்து அமைந்த பாடல்கள் வரிசை பெற்றன. சேரனின் யானைப் படையைத் தூக்கி எறிந்து வெற்றி பெற்ற தன் யானைப் படையைச் சிறப்பித்துப் பாடியதைக் கேட்ட மன்னனின் முகம் சற்று கர்வத்தால் விகசித்தது.

    'இதைச் சேரமா தேவி கேட்டிருக்க வேண்டும்’ என்று எண்ணினான்.

    வெற்றி வெறி நெஞ்சில் கனத்தது. என்னை அன்று உதறினாயே, இன்று உன்மணாளன் கதியைப் பார், நீ அடையப் போகும் கதியைப் பார்

    மன்னன் அருகே ஒரு வீரன் வந்து நின்றான். அருகில் நெருங்கி விஷயத்தைச் சொன்னான்.

    அரசே, நாங்கள் செல்லும் முன்பே சேரமாதேவி நெருப்பில் விழுந்து பிராணத்தியாகம் செய்து கொண்டார். அரசனின் முகம் இறுகியது. பொய்கையார் பாடல் நிறுத்தினார்.

    நீர் தொடரலாம் என்றான் மன்னன், மனத்தினுள் ஆயிரம் சுழற்சிகள், 'ஓ! என்னை இதிலும் ஏமாற்றி விட்டாள். ‘சண்டாளி!' பற்களால் கடித்துக் கொண்டான்.

    மயங்கி விழுந்த சேர மன்னன் கண்களைத் திறந்து நோக்கினான். அப்பொழுதுதான் தாம் இருப்பது சிறை என்ற உணர்வு வந்தது. மேல் உத்தரியத்தால் மேனியை துடைத்துக் கொண்டான். சந்தனமும், சவ்வாதும் மனத்தமேனியில் புழுதி படிந்திருந்தது.

    மங்கிய வெளிச்சம் சிறிது படர்ந்து கிடந்தது. இருளைக் கண்கள் துழாவியது. சுற்றிச் சுற்றிப் பார்த்தான் சேர மன்னன், ஒரு குவளை நீர் தர அங்கு எவருமில்லை. அவ்வளவு அலட்சியம்! அபேனுடைய மயக்கத்தைப் பொருட்படுத்தியவரும் இல்லை.

    சிந்தித்தான், 'ஒரு மன்னனுக்குப் பொன், பொருள், போக போழ்வை விட மானம் மேலான பொருள் அல்லவா?’ மன்னர்களின் குலமுறை வாழ்வை நினைவுகூர்ந்தான்.

    அருகே கிடந்தது ஓர் ஓலை நறுக்கு. அதை எடுத்தான் சேர மன்னன். ஒரு வாய் தண்ணீர் தராதவனிடம் எழுத்தாணியா கேட்க முடியும்? கால் கட்டை விரல் நகத்தை முடிந்த அளவு பெரியதாகப் பிய்த்தான். நெஞ்சில் வழியும் உதிரமும், இரணமும் தராத வலியையா இந்தக் கட்டை விரல் தந்துவிடப் போகிறது? ஓலையில் எழுதினான்.

    அவன் எதிரே ஒரு குவளை நீரைக் காவலன் கொண்டு எழுபத்தான். 'ஓ.... காலந்தாழ்த்தி வந்த தண்ணீர். ஆபத்துக்கு உதவாத தண்ணீர், சேரமன்னன் அந்தக் குவளை நீரைத் தூக்கி தூர் மாற்றினான். காவலன் ஏளனமாகச் சேர மன்னனுக்குப் பைத்தியம் என்று எண்ணிக் கொண்டே போனான்.

    'களவழி நாற்பதையும் கூறி முடித்தார் பொய்கையார், எப்படியாவது சேர மன்னனைச் சிறை விடுவிக்க வேண்டும் என்ற தாளாத ஆத்திரம் அவருக்கு.’

    புலவரே! சோழ நாட்டின் வெற்றியை மிகவும் அழகு பெற உவமை அரிகளை அமைத்துச் சிறப்புறப் பாடினீர்கள். இன்று இங்கே அரசவை விருந்தை ஏற்று, பரிசில்களைப் பெற்றுச்செல்ல வேண்டும் என்று வேண்டுகிறேன்.

    புலவரின் தீர்க்கமான கண்கள் ஒளிர்ந்தன.

    அரசே! என்று கம்பீரமாக அழைத்தார்.

    என்ன பொய்கையாரே, தங்களுக்கு என்ன தேவையோ கேட்டுப் பெறலாமே?

    எம் போன்ற புலவர்களுக்கு என்ன தேவை மன்னா? நாட்டின் நல்லுறவும், மக்களின் நலமும்தானோ? நீ பெற்ற வெற்றியின் சிறப்பை நான் வியந்து பாடினேன். உலகம் உள்ளளவும் உயர்ந்து நிற்கும். ஆனால் நீ செய்வதற்கும் ஒன்று உண்டு. நீ வெற்றி பெற்ற சேர நாட்டைச் சேர மன்னனுக்கு மீண்டும் அளிப்பதுதான் உனக்குச் சிறப்பைத் தரும் செயல்.

    மன்னன் பொய்கையாரைத் தழுவிக் கொண்டான்.

    உம் விருப்பப்படியே ஆகட்டும் புலவரே! நம்முடன் விருந்து உண்ணவே சேர மன்னரை அழைத்து வரலாம். யாரங்கே சேர மன்னனின் விடுதலையை அறிவிக்கலாம்.

    மன்னா, உம் நெஞ்சம், நீ சேர மன்னனை வெற்றி பெற்று நாட்டைக் கவர்ந்தபோது அனுபவித்த ஆனந்தத்தை விட இப்பொழுது அதிக ஆனந்தத்தை அடைகிறதல்லவா?

    ஆம் புலவரே! உண்மையை மறைக்க முடியாது. கொடுப்பதுதான் சிறப்பு என்ற கொடை மரபில் வந்தவன் நான்.

    மன்னனும் பொய்கையாரும் சிறைச் சாலையினுள் நுழைந்தனர். அங்கே அமைதி தவழ்ந்தது.

    சோழமன்னனுக்கு முன்னால் பாய்ந்து சென்றார் பொய்கையார். சேர மன்னா, இங்கே பார்! உன் நண்பன் பொய்கையார் வந்திருக்கிறேன்.

    சாய்ந்து கிடந்த சேர மன்னனின் உடலைப் புரட்டினார் புபேவர், மானத்தையே பெரியதாக நினைத்துச் சேர மன்னன் ஒரு வாய்த் தண்ணீர் கூடப் பருகாமல் தன் உயிரைக் கூட்டிலிருந்து எடுத்தெறிந்துவிட்டான். சுற்றிலும் பார்த்தார் புலவர், சேரனின் அருகே ஓர் ஓலை நறுக்கு, அதனருகே கால் நகம். புரிந்து கொண்டார் புலவர். நெஞ்சில் இரத்தம் கசிந்தது.

    நான் உன்னைக் காப்பாற்ற வரும் முன் மானத்தைக் காத்துக் கொண்டாய் மன்னா!' என்றவர். சோழனின் பக்கம் திரும்பி, புறத்திற்காக ஒரு மலர் இந்த ஓலை நறுக்கில் மலர்ந்து விட்டது என்று புலம்பினார்.

    புலவரே! சேர மன்னன் என்னை வென்று விட்டான் என்று இடி குரலில் சோழன் கூறியதும் அந்தச் சிறைச்சாலையே ஒரு கணம் நடுங்குவது போல இருந்தது. வீரமும் ஆற்றலும் பிரகாசித்த அவனது இரு விழிகளும் காவிரியைக் கண்களில் கொண்டது போல் தாற்றாகப் பொங்கின, சேரன் மட்டுமல்ல, சேரன்மாதேவியும் வென்று விட்டாள் என்று அவன் உள்ளம் ஓலமிட்டது.

    3. மன்னவன் வந்தானடி

    காதலனின் அணைப்பில் கட்டுண்டு கிடக்கும் காதலியாக பொதினி மலை மஞ்சு மூட்டத்தில் மறைந்து கிடந்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1