Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yuga Sandhi
Yuga Sandhi
Yuga Sandhi
Ebook333 pages2 hours

Yuga Sandhi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.

கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.

பெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

பஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.

சமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125404065
Yuga Sandhi

Read more from Vaasanthi

Related to Yuga Sandhi

Related ebooks

Reviews for Yuga Sandhi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yuga Sandhi - Vaasanthi

    http://www.pustaka.co.in

    யுக சந்தி

    Yuga Sandhi

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    1

    அண்ணா மேம்பாலம் டிராஃபிக் சிக்னலில் பச்சைவிளக்குக்காக வண்டியில் காத்திருக்கும் நேரத்தில் அவளுக்கு திடீரென்று நினைவுக்குவந்தது. இப்பொழுதெல்லாம் அடிக்கடி முன்னறிவிப்பில்லாமல் வந்து நிற்கும் நினைவு.

    இப்படிப்பட்ட ஒரு புழுங்கித் தவிக்கும் ஜூலை மாதத்து மதிய வேளையில்தான் அம்மா வீட்டை விட்டு வெளியேறினாள். சமையலறையின் மேலிருந்த பரணில் 28 ஆண்டுகளாக முந்தைய ஜன்மத்து சின்னமாக இருந்த அந்த பழுப்பு நிற சூட்கேஸை யாரிடமோ சொல்லி கீழே இறக்கியிருக்க வேண்டும். அவளுடைய பிறந்த வீட்டு சொத்து என்று சொல்லும்படியான ஒரே வஸ்து. மழைக்காலத்துக்கு முன்னும் பின்னும் ஒருமுறை வருஷா வருஷம் அதைக் கீழே இறக்கி தூசி தட்டி, ஷு பாலீஷால் துடைத்து வெயிலில் காயவைப்பாள்.

    அதன் மேல் புரியாத பாஷைகளில் லேபிள்கள் குறுக்கும் நெடுக்குமாக ஒட்டப்பட்டிருக்கும். அதை ஒரு பரிவுடன் அவள் வருடுவதையும் முகத்தில் ஒரு மென்மை படர்வதையும் காயத்ரி கவனித்திருக்கிறாள். கடந்த 28 வருடங்களில் ஒருமுறை கூட அந்த சூட்கேஸ், எந்த ஊருக்கும் பயணித்ததில்லை.

    இப்போது அதில் தனது உடுப்புகளைத் திணித்துக் கொண்டு, நா கிளம்பறேன் காயத்ரி என்று விட்டு அம்மா கிளம்பியபோது அவளைத் தடுக்கமுடியாது என்று தோன்றிற்று. தொண்டையை அடைத்துக்கொண்டு கண்களில் நீர் நிறைந்தாலும் அவளைத் தடுப்பது நியாயமில்லை என்று தோன்றிற்று. இப்படிப்பட்ட தருணம் என்றாவது வரும் என்ற அனுமானத்தாலேயே அம்மா அந்தப் பெட்டியைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அதைப் பற்றிப் பிறகு நினைக்கும் போதெல்லாம் மனசு அதிர்கிறது.

    காயத்ரி, மை டியரெஸ்ட், அம்மாவுக்கு எல்லாருமே டியரெஸ்ட், என்று அவள் தவறாமல் அனுப்பும் கணினித் தபாலில் அவளது அந்த திடீர்ப் பயணத்தைப் பற்றியோ, அதற்கு முந்தின அவளது 28 வருஷ வாழ்வைப் பற்றியோ எந்த ஒரு குறிப்போ நினைவூட்டலோ இருப்பதில்லை. அது ஏதோ தனக்கு சம்பந்தப்படாத விஷயங்கள் போல. அம்மாவின் இந்த முழுமையான விலகல் அசம்பாவிதமாகப்படவில்லை.

    அம்மாவின் பயணத்தை திடீர் புறப்பாடு என்று சொல்ல முடியாது என்பதால் இருக்கலாம். சில நிகழ்வுகள் சில தற்செயல் சம்பவங்களால் நடைபெறுவது போலத் தோன்றினாலும் வாழ்க்கையையே திசைதிருப்புவதாக இருந்தாலும் திசைதிருப்பல் ஒரே ஒரு சம்பவத் தூண்டலால் ஏற்பட்டுவிடாது என்று காயத்ரி நினைத்துக்கொண்டாள். அதன் ஆதாரவேர்கள் எங்கோ சரித்திரத்தில் புதைந்திருக்கும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சமுதாய சந்துகளிலும் பொந்துகளிலும் பல்வேறு ரூபங்களில் ஆரோகணித்திருக்கும். நான், எனது மண், எனது இனம் என்று கணக்கிட்டு பூகோள வரைகோடுகள் போட்டதிலிருந்து, தனது அதிகாரத்தை நிலைநாட்ட விதிமுறைகள் எழுதியதிலிருந்து துவங்கியிருக்கும். சர்வாதிகார விதிகளையெல்லாம் அர்த்தசாஸ்திரமாக்கியதிலிருந்து.

    ஆனால் அம்மா ஒரு வேடிக்கையான காரணத்தைச் சொன்னாள். பிரதான சாலைகளிலெல்லாம் ஐந்து ஆண்டுகளுக்குள் நெடுநெடுவென்று வளர்ந்து நிற்கும் பன்னாட்டு நிறுவனக் கட்டிடங்கள்தான் தனது இன்றைய நிலைக்குக் காரணம் என்று அடித்துச்சொன்னாள். கண்களில் தீட்சண்யமான பார்வையுடன் மெல்லிய உதடுகள் துடிக்க அதை அவள் சொல்லும்போது அம்மாவைப் புண்படுத்தக்கூடாது என்று காயத்ரி மெளன மாக இருப்பாள். சில சமயங்களில் அம்மா உண்மையிலேயே இந்த மண்ணின் ஆதார முரண்பாடுகளைப் புரிந்துகொள்ளவில்லையோ என்று விசனமேற்படும்.

    சிக்னல் மாறிற்று. கிட்டத்தட்ட மதிய உறக்கத்தில் இருந்த போக்குவரத்து உசுப்பிவிட்டது போல தலைதெறிக்க நகர ஆரம்பித்தது. அமெரிக்கன் கான்ஸலேட்டைத் தாண்டிக் கொண்டு லாகவமாக ராதாகிருஷ்ணன் சாலையில் வண்டி செல்ல ஆரம்பித்ததும் மெரீனா கடற்கரைக் காற்று குசலம் விசாரிக்க விரைந்து வந்தது.

    அம்மாவைப் போல் அலுக்காமல் சலிக்காமல் வெப்பத்தையும் கடலையும் ரசிப்பவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் ஒரு ஈ-மெயிலிலும் வெப்பத்திற்காக ஏங்குகிறேன் என்ற வாக்கியம் இதுவரை வரவில்லை. அம்மாவுக்கு இன்னும் என்னவெல்லாமோ பிடிக்கும்.

    வெறுங்காலில் பாதம் புதைய மணலில் நடக்கப் பிடிக்கும். கடலோர மீனவக் குடிசைகளில் நின்று மீன்பிடி மர்மங்களைப் பற்றிப் பேசப் பிடிக்கும். தோட்டத்து மல்லிகையை நெருக்கமாகக் கட்டி சூடிக்கொள்ளப் பிடிக்கும்.

    ஒரு நாள் போதில் பழுப்பு நிற சூட்கேஸை நிரப்பி, ‘நா கிளம்பறேன்’ என்று சொன்னபோது இவையெல்லாம் அற்பமாக, நெடும் பயணத்தில் சந்தித்த பலவற்றில் சிலவாகப் போயிருக்க வேண்டும்… துரோகங்கள் விழுங்கிவிட்ட சாமான்ய மோகங்களாக.

    நீ ஏன் போகணும்? நா இருக்கேனே, ராமு இருக்கானே என்று சொல்ல முடியவில்லை. ஏன் என்று புரியவில்லை, அம்மா என்ன சொல்வாள் என்று தெரிந்ததால் இருக்கலாம். உன் வாழ்க்கையை நீ வாழக் கற்றுக் கொள். என் உதவி உனக்குத் தேவையில்லை; ராமுவுக்கும் தேவையில்லை. சகலத்தையும் துறக்கும் மோனத்தை எட்டிவிட்டவளிடம் யாசகம் கேட்பதோ, அபயம் அளிப்பதாக பாவிப்பதோ அவளை அவமானப்படுத்தும் என்கிற தயக்கம் காரணமாக இருக்கலாம்.

    தெருமுனையில் கவனத்தை ஈர்ப்பது போல இந்த விளம்பரப் பலகையில் சினிமா நட்சத்திரங்கள் கார்கில் யுத்த வீரர்களின் நலனுக்காக நிதி திரட்ட ஆடப்போகும் கிரிக்கெட் மாட்சைப் பற்றி கொட்டை எழுத்துக்களில் இருந்தது. அவளுக்கு சித்தப்பா குமாரின் நினைவு வந்தது, யுத்தகளத்தில் இருக்கிறார்; இதுவரை உயிரோடு இருக்கிறார். அவர் வீட்டுக்கு நேற்று சென்ற போது சித்தி ஷகீலாவைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது. ராணுவத்தில் இருக்கும் சித்தப்பா ஒரு முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டது விநோதம். கோவை குண்டுவெடிப்புக் கலவரத்தின்போது அங்கு சென்ற ராணுவயூனிட்டில் இருந்தவர் அநாதையாக நின்ற ஷகீலாவைத் திருமணம் செய்து கொண்டு வருவார் என்று யாரும் நினைக்கவில்லை. அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சினை வரலாம் என்று ரொம்ப நாளைக்கு அவர்களது திருமணம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

    ஷகீலா செதுக்கிய தந்தச் சிலைபோல இருப்பாள். அதைக் கண்டுதான் சித்தப்பா மயங்கி இருக்கவேண்டும். அவள் நிலையைக்கண்டு ஏற்பட்ட கனிவாகவும் இருக்கலாம்.

    ‘அங்கு குற்றவாளியாக உணர்ந்தேன்’ என்று கோவையிலிருந்து திரும்பியதும் அவளிடம் அவர் சொல்லியிருக்கிறார். ஆனால் பாட்டி வெளிப்படையாகத் தனது அதிருப்தியைக் காண்பித்தாள். நம்ம ஜனத்திலே பெண்களே கிடைக்காம போயிட்டாங்களா உங்களுக்கெல்லாம் என்று பொத்தாம் பொதுவாகக் கத்தியபோது அதைக் கேட்கும் அம்மாவுக்கு எப்படியிருக்கும் என்று பாட்டி யோசித்திருக்கமாட்டாள். பாட்டிக்கு யாரைப் பற்றியும் அக்கறை இல்லை என்பதுதான் உண்மை.

    தனது பாதுகாப்பைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை அவளுக்கு. வேறு ஜாதி, இனம் என்பதெல்லாம் அந்தப் பாதுகாப்புப் பிரச்சினையில் விளைந்தவை என்று காயத்ரி நினைத்துக்கொண்டாள். பாட்டி மாறிப்போனது இன்னமும் நம்ப முடியாததாக இருந்தது. பாட்டியின் நினைவு வரும் போதெல்லாம் ஏதோ ஒரு கெட்ட கனவை மறக்க முயல்வது போல மனசு அதை ஒதுக்கப் பார்த்தது. 25 வருஷங்களாக தான் பாசம் என்று அறிந்ததெல்லாம் ஒருநாள் போதில் வேஷமாக மாறினது தர்க்கத்திற்கப்பாற்பட்டதாக இருந்தது. அம்மாவுக்கும் பாட்டிக்கும் இடையே கனிந்திருந்த உறவு அபூர்வமானது என்று பலர் அதிசயப்பட்டுச் சொல்வதை அவள் கேட்டிருக்கிறாள். பாட்டியின் செளகர்யத்துக்காக அம்மா என்னவெல்லாம் செய்யவேண்டியிருந்தது என்பதைப் பாட்டி உணரமாட்டாள். ஏனென்றால் அவையெல்லாம் இயல்பாக நடந்தது போல நடந்தன.

    தனக்கு ஏதும் சிரமம் இருந்ததாக அம்மா காண்பித்துக் கொண்டதில்லை. பாட்டி சற்றும் யோசிக்காமல், எதிர்க் கட்சிக்குத் தாவினதுதான் அம்மாவுக்கு மிகப் பெரிய அடியாக இருக்கவேண்டும். காயத்ரிக்கு இருந்தது. திடீரென்று அன்னியமாக்கப்பட்டது போல, இத்தனை நாட்களாக இருந்த உறவெல்லாம் அர்த்தமற்றுப் போனது போல மனசு அதிர்ந்தது.

    இனிமே எனக்கு இங்க என்ன இருக்கு என்று பாட்டி மூக்கை சிந்தியபடி கிளம்பியபோது, அவளும் என் அம்மாவும் நியூயார்க்கில் படித்துக்கொண்டிருக்கும் ராமுவும் ஏதோ குற்றவாளிக் கூண்டில் நிற்பது போலவும் நியாயம் தர்மம் என்பதெல்லாம் எதிர்த்தரப்புக்குப் போய்விட்டது போலவும் தோன்றிற்று.

    என்ன நடக்கணுமோ அதுதான் நடக்கும் என்று பாட்டி விதிர்த்து நின்ற அவர்களிடம் எதற்கோ நியாயம் பேசுவது போல் பேசிக்கொண்டே, ‘போயிட்டு வரேன்’ என்றுகூடச் சொல்லாமல் கிளம்பியபோது இப்படி ஒரு நாள் நடக்கவேண்டும் என்று அவள் காத்திருந்தது போல இருந்தது. பாட்டி செல்வதை அம்மாவும் அவளும் மெளனமாகப் பார்த்துக் கொண்டு அன்று நின்றது இப்போது அர்த்தம் பொதிந்ததாகத் தோன்றிற்று.

    இரவெல்லாம் தூக்கம் வராமல் மனசு அதிர்ந்து அதிர்ந்து எழுப்பி உட்கார்த்திய போது, எவ்வளவோ விஷயங்கள் எதிர்பாராமல் நடந்துவிட்டபோது பாட்டியின் செயலுக்கு ஏன் இத்தனைக் கோபமும் ஆத்திரமும் வருகிறது என்று அவளுக்குப் புரியவில்லை. ஆனால் நினைத்த மாத்திரத்தில் ஒரு ஆற்றாமை குமுறிக் கொண்டு வந்தது. பாட்டி கிளம்பிப் போன மறுநாள் காலை அம்மா பால்கனியில் வழக்கம்போல் அமர்ந்திருந்தாள். ஆனால் வழக்கம் போல் பேப்பரைப் படிக்காமல் ஆகாசத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள். அவளெதிரில் இருந்த நாற்காலியில் பொத்தென்று காயத்ரி அமர்ந்தபோது அம்மாவின் முகத்தில் மிக லேசான சலனம் ஏற்பட்டது.

    பாட்டி இப்படி செய்வான்னு நான் நினைக்கவேயில்லை! என்றாள் காயத்ரி, ஏற்கனவே பேசிக்கொண்டிருந்த விஷயத்தைத் தொடர்வது போல்.

    அம்மா சற்று நேரம் பேசாமல் இருந்தாள். பிறகு லேசாகச் சிரித்தாள்.

    அவள் வேற எப்படியும் செய்திருக்க முடியாது.

    எனக்கு வித்யாசமாபடறது என்றாள் காயத்ரி ஆத்திரத்துடன். இதுதான் சாக்குன்னு கிளம்பிப்போற மாதிரியில்லே போனாள்?

    எல்லாருடைய செய்கைக்கும் ரொம்ப ஆழமான காரணம் இருக்கு காயத்ரி என்றாள் அம்மா நிதானமாக.

    சுயநலத்தைத் தவிர வேறு எதுவும் இருக்கறதா எனக்குத் தெரியல்லே. அதுக்கு ஃப்ராய்டியன் விளக்கம் கொடுக்கணும்னா ஆதாரங்களையெல்லாம் தேடிண்டு போகலாம்.

    அதெல்லாம் தேவை காயத்ரி என்றாள் அம்மா. இல்லேன்னா நாம உடைஞ்சு போயிடுவோம்.

    முட்டைக்குப் பின் கோழியா, கோழிக்குப் பின் முட்டையா என்கிற விஷயம் இது. ஒளரங்கசீப் தக்காணப் போரில் தோற்றதன் காரணங்களைக் குறிப்பிடுக. அவள் பதில்: அவனது பேராசை + முட்டாள்தனம். பரீட்சை விடைத்தாள் சிவப்புக் கோடிட்டுத் திரும்பி வந்தது. -விளக்குக.

    எல்லாவற்றிற்கும் இப்போது விளக்கம் தேவை. ஆதியோடு அந்தமான சரித்திர காரணங்கள் தேவை. நமது சமாதானத்திற்கு. பிற்கால சந்ததியினரின் கவனத்துக்கு. இன்னின்ன காலகட்டத்தில் ஆண்களும் பெண்களும் இப்படி இப்படி நடந்ததற்கு பொருளாதார, சமூக, சரித்திர, அரசியல் காரணங்கள் இவை இவை. யாருமே தனித் தனி பிறவி இல்லை, ஒரு அமைப்பைச் சார்ந்தவர்கள் என்பதால், மண்ணில் ஜனித்த விஷயமே ஒரு விவகாரம். எல்லாருமே ஏதாவது ஒரு அரசியலைச் சார்ந்தே வாழவேண்டும் என்பது போல. முட்டையையும் கோழியையும் பிரிக்க முடியாதது போல. பேராசையையும் பெருநஷ்டத்தையும் பிரிக்க முடியாதது போல… அது பலப் பல கர்மங்களின் தொடர். காரணத்துள் பின்னப்பட்ட காரியங்களின் சங்கிலி…

    காந்திசிலையைக் கடக்கும் போது இடுப்புப் பையில் செருகியிருந்த பேஜர் ஒலித்தது. அவள் வண்டியைத் தெரு ஓரமாக நிறுத்திப்பார்த்தாள். கோட்டைக்கு அருகில் கலவரமாம். அலுவலகத்திலிருந்து செய்தி. அறைக்குச்சென்று படுத்தால்போதும் என்று உடம்பெல்லாம் அசத்திற்று. நேற்று மாலை நடக்க வேண்டிய ஒரு அரசியல் பொதுக் கூட்டம் இரவில் துவங்கி விடிய விடிய நடந்தது. தூங்காமலே ரிப்போர்ட் எழுதி ப்ரூஃப் பார்த்துத் திருத்திக் கொடுத்துவிட்டு மதியம் ஓய்வெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பியிருந்தாள். தலையை வேறு வலித்தது. இப்போது திடீரென்று என்ன கலவரம்? நினைவுக்கு வந்தது. இன்று ஏதோ ஜாதிப் பேரவை ஊர்வலம்.

    கண்ணகி சிலைக்கருகிலேயே போலீஸ் எல்லா வண்டிகளையும் நிறுத்திற்று. காயத்ரி தனது பத்திரிகை அடையாள அட்டையைக் காண்பித்தாள். போலீஸ் வழி விட்டது. கலவரம் ஏதும் கண்ணில் படவில்லை. ஜாதி ஊர்வலம், என்றதுமே கலவரம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் அலுவலகம் எச்சரித்ததாகத் தோன்றிற்று. அவளுக்கு எரிச்சல் வந்தது. வேறு ரிப்போர்ட்டர் யாரும் கிடைக்கவில்லையா?

    மேலே செல்லச் செல்ல ஏக போலீஸ் தொப்பிகள் படையாகத் திரண்டிருந்தன. கலவரத்துக்காகக் காத்திருந்தன. இவர்களுக்கு ஏமாற்றமளிக்கக்கூடாது என்ற எண்ணத்திலேயே ஊர்வலக்காரர்கள் கலகமேற்படுத்தலாம் என்று தோன்றிற்று. எம்.ஜி.ஆர். நினைவாலயம் வரையும் அதற்கப்பாலும் போலீஸ் தயார் நிலையில் நின்றது. ஊர்வலம் கோட்டைக்கு எதிரில் கோஷங்கள் முழங்கிவிட்டு மெரீனா சாலையில் வரும் என்று செய்தித்தாளில் வந்த குறிப்பு அவளுக்கு நினைவுக்கு வந்தது. ஜாதி ஊர்வலங்களின் போதெல்லாம் தப்பாமல் கலவரங்கள் நடக்கின்றன. ஊரிலிருக்கும் அத்தனை போலீசும் உஷார் நிலையில் அணி வகுக்க வேண்டியிருக்கிறது. இதெல்லாம் தெரிந்தும் எல்லா ஜாதி, மத ஊர்வலங்களுக்கும் அரசு அனுமதி கொடுக்கிறது. போலீசும் ஒவ்வொரு முறையும் சலித்துக்கொண்டு நிற்கும் என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

    அத்து மீறிப் போகும் ஊர்வலங்களைக் கட்டுப்படுத்த எடுக்கும் முயற்சியெல்லாம் போலீஸ் அத்துமீறலாகப் பரிணமிப்பதும் எதிர்க் கட்சிகள் தயாராக வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளை அறிவிப்பதும் கிட்டத்தட்ட மாறுதலில்லாமல் நடந்துவரும் விஷயங்கள். இந்த மாதிரியான ரிப்போர்ட்களை முன்கூட்டியே எழுதிவிடலாம் என்று நினைத்தபடி அவள் சென்னை பல்கலைக்கழக வளாகத்துக்குள் வண்டியை நிறுத்தத் திரும்பினாள். மூலையில் பிரம்மாண்டமான போஸ்டர் பலகை தெரிந்தது. சர்வதேச குற்றவாளி வாஜ்பாயியா சோனியாவா என்ற கொட்டை எழுத்துக்கள். இருவரின் பிரம்மாண்ட படங்கள் எதிரும் புதிருமாக.

    போஸ்டரின் வார்த்தைகள் சங்கடப்படுத்தின. கண்ணியக் குறைவான பேச்சைக்கேட்டது போல. வண்டியைப் பூட்டி அவசரமாக வெளியில் வந்தபோது ஒரு சின்ன பத்திரிகை நிருபர் கும்பல் நின்றிருந்தது. பரிச்சயமான சில முகங்கள். ஹாய் என்று கையசைப்புக்கள். அவளுடன் படித்த, ஜனநாயக மாதர் சங்கத்தில் தீவிரமாகச் செயல்படும் வள்ளி நின்றிருந்தாள்.

    எப்படியிருக்கே காயத்ரி? என்று புன்னகைத்தபடி அருகில் வந்தாள்.

    காயத்ரி தோழமையுடன் அவள் கையைப் பற்றிய போது இரு கைகளிலும் தெரிந்த நிற வேறுபாட்டை ஆராய்பவள் போல் நின்ற வள்ளியின் முதுகை அணைத்தபடி கேட்டாள்.

    உன்னை கலாட்டா பண்ற கோஷ்டின்னு போலீஸ் நினைக்குமே. இங்கே எங்கே நிக்கறே?

    வள்ளி சிரித்தாள்.

    இங்க வர்றதாவே இல்லே. தூர்தர்ஷன்லே ஏதோ ப்ரோக்ராமுக்குக் கூப்பிட்டிருந்தாங்க. திரும்பி வரும்போது இங்கே மாட்டிக்கிட்டேன். ஊர்வலம் இப்ப வந்துரும்ங்கறாங்க. என்ன நடக்குதுன்னு பார்க்கலாமேன்னு நின்னுட்டேன்.

    ஆண் நிருபர் கும்பலிலிருந்து ஒரு புகைப்படக்காரர் கிடுகிடுவென்று முன்னால் ஓடியபோதுதான் ஊர்வலம் வருவதை காயத்ரி கவனித்தாள். திமுதிமுவென்று அலைஅலையாய் திரண்டு வருவதுபோல வண்ண வண்ணக் கொடிகளை ஏந்தி ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பிக் கொண்டு அவர்கள் வருவதைக் கண்டு காயத்ரிக்கு திகைப்பு ஏற்பட்டது.

    காசு கொடுத்து லாரிலே ஏத்திக்கிட்டு வந்திருக்காங்க என்றாள் வள்ளி. இவள் ஏதோ கேட்டு பதில் சொல்வது போல.

    கோஷத்தில் ஒரு உற்சாகம் கொப்புளித்தது. இந்தத் தருணத்து ஹீரோக்கள் நாங்கள் என்ற எக்களிப்பு தெரிந்தது. ஒரு அரசியல் தலைவரின் பெயர் சொல்லி ஏக வசனத்தில் கிண்டல் கோஷங்கள். அதற்கென்றே தயார்படுத்தப்பட்ட ரவுடிக் கும்பல். கோஷத்தின் தாக்கத்தைப் பற்றிய கவலை யில்லாமல் கழுத்து நரம்புபுடைக்கக் கத்தினார்கள்.

    காயத்ரிக்கு சோர்வாக இருந்தது. இது எப்பொழுது நகர்ந்து எப்பொழுது ரிப்போர்ட் எழுதி வீட்டுக்குச் செல்வது? திடீரென்று எங்கிருந்தோ கற்கள் விழ ஆரம்பித்தன. உடனே போலீஸ் விசை முடுக்கப்பட்டது போல முன்னால் பாய்ந்தது. தடியடி, கூச்சல், அலறல். இதனிடையில் கற்கள் விழுவது நிற்கவில்லை. எங்கேயிருந்து யார் போடுகிறார்கள் என்று புரியாத குழப்பத்தில் வள்ளியின் குரல் பதைப்புடன் கேட்டது.

    காயத்ரி, இந்தப் பக்கம் வா, இங்கே வா காயத்ரி!

    எங்கே, எந்தப் பக்கம். எதுவுமே தெரியவில்லை. எங்கும் புகைமண்டலம். கண்களில் எரிச்சல். புகைப்படக்காரர்களும் நிருபர்களும் இங்குமங்கும் தலைதெறிக்க ஓடினார்கள். யாரோ கையை இறுக்கிப் பிடித்தார்கள்.

    வள்ளியா? ஓடணும். நிக்கக் கூடாது, ஓடணும்.

    யோசனையே செய்யாமல் அவள் ஓடினாள். திக்கும் திசையும் தெரியாமல். கண்ணகி சிலை வந்துவிட்டது. சிலம்பு ஏந்திய கை மங்கலாய்த் தெரிந்தது.

    மடேலென்று ஏதோ தலையைத் தாக்கியது. யாரோ வீசிய கல். ஐய்யய்யோ என்று வள்ளியின் அலறல் கேட்டது. காயத்ரிக்கு நினைவு தப்புமுன் போஸ்டர் கண்ணில் பட்டது. சோனியாவுக்கு பதில் அம்மாவின் உருவம் இருந்தது.

    2

    மாடிப்படி இடுக்கில் காயத்ரியின் பைக்கை சாய்த்து நிறுத்தி செங்குத்தாய் இருந்த படிக்கட்டுகளைக் கடந்து அந்த இரண்டாம் மாடிப் போர்ஷனில் இருந்த தனது அறைக்கதவைத் திறந்தபோது வள்ளிக்கு சோர்வாக இருந்தது. ‘நா இன்னிக்கு முளிச்ச வேளை நல்ல வேளையில்லே’ என்று முணுமுணுக்கும் போது அவை அம்மாவின் வார்த்தைகள் என்று நினைவுக்கு வந்தது. ஊரில் என்ன தப்புத் தண்டாவைப் பார்க்க நேர்ந்தாலும் புருஷன் குடித்துவிட்டு மொத்தினாலும் கடன்காரன் வாசலில் நின்று அசிங்கமாய் கத்தினாலும் அம்மாவுக்கு அன்று அவள் விழித்த வேளைதான் கோளாறு என்று தோன்றும். அவள் நல்ல வேளையில் கண் விழித்த நாள் ரொம்பக் குறைவு என்று மறந்து போகும்.

    மொட்டை மாடி அறையானாலும் கடல் பார்த்த அறை என்பதால் எப்பவும் குளு குளு என்று காற்றடிக்கும் என்று நினைத்து வந்த தனது முட்டாள்தனத்தையும் அப்படி அவளை முட்டாளாக அடித்த புரோக்கரின் சாமர்த்தியத்தையும் அவள் வீட்டில் இருக்கும் நேரத்திலெல்லாம் வியந்திருக்கிறாள். கடலை அறை பார்க்கவேயில்லை.

    அதாவது கடலைப் பார்க்கும் திசையில் ஜன்னல் இல்லை. அதனால் இரவும் புழுங்கிற்று. புரோக்கருடன் அவள் முதன் முதலில் இங்கு வந்தபோது எந்த மாயாஜாலத்தினாலோ காற்று வீசிற்று. புரோக்கர் அன்று விழித்த வேளை நல்ல வேளையாய் இருந்திருக்கும். மாடிப்படிகள் செங்குத்தானவை என்பதும் அன்று மனத்தில் பதியவில்லை. நாற்பது படிகள் இருக்க வேண்டியதில் முப்பத்திரண்டு படிகள் வைத்திருந்தார் வீட்டுக்காரர் சிமெண்டை மிச்சப்படுத்த.

    அவளது வேளைக் கோளாறுதான். புரோக்கரைக் குறை சொல்லமுடியாது. அவளுடைய அவசரத் தேவையை உணர்ந்து அவர் செயல்பட்டார். இல்லாததை இருப்பதாக நம்பவைப்பது அவரது தொழில் தர்மம்.

    அவள் அறைக்கதவை திறந்ததும் கும்மென்று வெப்பம் தேங்கி இருந்தது. அவசரமாக மின்விசிறியைப் போட்டதும் ஊழிக்காற்று போல் ‘உய்’ என்று சப்தமிட்டு பிறகு மாடிப்படியில் உருளும் உருள்கட்டை போல சீராக ஓசை யெழுப்பிற்று. மின் விசிறியின் சப்தத்தைக் கேட்டு புரோக்கர் பரந்தாமன் லேசாகச் சங்கடப்பட்டது நினைவுக்கு வந்தது.

    பால்பேரிங் போயிடுத்து போலிருக்கு. மாத்திட்டாப் போச்சு. செட்டியார்ட்டே (வீட்டுக்காரர்) சொன்னா உடனடியா மாத்திடுவார். என்னைக் கேட்டா நீங்க தனியா இருக்கேள், இந்த சத்தமே ஆறுதலாயிருக்கும். யாரோ துணைக்கிருக்கிற மாதிரி.

    இந்த அறையில் குடிபுகுந்து

    Enjoying the preview?
    Page 1 of 1