Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thottavanai Vittathillai
Thottavanai Vittathillai
Thottavanai Vittathillai
Ebook131 pages55 minutes

Thottavanai Vittathillai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100404164
Thottavanai Vittathillai

Read more from Rajesh Kumar

Related to Thottavanai Vittathillai

Related ebooks

Related categories

Reviews for Thottavanai Vittathillai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thottavanai Vittathillai - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    தொட்டவனை விட்டதில்லை

    Thottavanai Vittathillai

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    1

    காலை நேரப் பரபரப்பான நிமிஷங்களில் இருந்தாள் சுசித்ரா. நெற்றியில் சின்ன சைஸில் சிங்கார் இட்டுக் கொண்டு, சமையலறைக்கு ஓடினாள். டிபன் பாக்சில் சாப்பாட்டை அடைத்தாள். கையில் படிந்திருந்த டைம் ஸ்டார் ரிஸ்ட் வாட்சில் முள் இயக்கத்தைப் பார்த்தாள். பெரிய முள் இயக்கத்தைப் பார்த்தாள். பெரிய முள் சின்ன முள் கூட்டு முயற்சியில் அப்போதைய நேரப் 6. 35 என்றது. வினாடி முள் அதை 6. 36 ஆக்க அவசரமாய் நொண்டிக் கொண்டிருந்தது.

    இருபத்து நாலு வயது கசித்ரா பார்க்கிறவர்களின் கண்களில் ஐஸ் கட்டியை வைக்கிற மாதிரி குளிர்ச்சியான தோற்றம் காட்டினாள்: அரை டஜன் வருஷங்களாய் சத்யா கிளினிக்கில் நர்ஸ் உத்தியோகம் பார்க்கிறாள், முகத்தில் குடும்பப் பொறுப்பு ஒரு சுமை மாதிரி தெரிந்தது, மூன்று பெண்களுக்கு மூத்தவளாய் ஆண் பிள்ளை இல்லாத அந்த வீட்டில் பிறந்து விட்டதில் குடும்ப நிர்வாகம் படுபாரமாய் அவள் தலையில் அழுத்திக் கொண்டிருந்தது.

    பக்கத்து அறைக்கு ஓடினாள்.

    பீரோவைத் திறந்து, நர்ஸ் யூனிபார்மை ஒயர் பேக்கில் திணித்துக் கொண்டபோது -

    'சுசீ...சுசீ..."

    என்ற அம்மா ஜானகியின் குரல் காதைத் தொட்டது. கூடவே இருமல் சத்தம்.

    ஜானகி கணவன் இறந்து போன நாளில் இருமிக் கொண்டே படுக்கையில் படுத்தவள் இன்றைக்கு வரைக்கும் படுக்கையை விட்டு எழவில்லை. டாக்டர் அவளை ஒவ்வொரு தடவை செக்-அப் செய்கிற போதும் - புதுப்புது வியாதி பெயரைச் சொல்லி, பிரிஸ்கிரிப்ஷன் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

    சுசித்ரா அம்மாவின் அருகே வந்தான்.

    என்னம்மா?

    தயக்கத்தோடு அவளின் முகத்தைப் பார்த்தாள் ஜானகி. சொல்ல முடியாமல் தயங்கினாள்:

    எனக்கு ட்யூட்டிக்கு டயமாச்சு. சீக்கிரம் சொல்லிடு நான் போகணும்."

    உன்கிட்டே சொல்றதுக்குக் கஷ்டமா இருக்கு.

    பரவால்ல... சிக்கிரமா சொல்லும்மா...

    வந்து பணம் வெச்சிருக்கியா?

    எதுக்கு?

    வெச்சிருக்கியா?

    எதுக்குன்னு சொல்லும்மா.

    நேத்திக்கு டாக்டர் ஒரு மருந்து எழுதிக் கொடுத்தார். இருமி இருமி நெஞ்செல்லாம் வலி. அந்த மருந்தை சாப்பிட்டாத்தான் ஓரளவுக்கு நல்லா இருக்கும்...

    இதை முதல்லேயே சொல்றதுக்கென்ன? உனக்கு மருந்து வேணும். அவ்வளவு தானே? சாயந்திரம் வாங்கிட்டு வர்றேன்...

    சொல்லிவிட்டுத் திரும்பி நகர்ந்தாள். பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிய வினாடி

    அக்கா, என்ற குரல் கேட்டு திரும்பினாள்.

    பிரேமா நின்றிருந்தாள்,

    பிரேமா சுசித்ராவுக்கு இரண்டு வயது சின்னவள் பி. எஸ்ஸி ஃபிசிக்ஸ் இரண்டாவது வருஷம். குடும்பக் கஷ்டத்தில் கொஞ்சம் கூட அக்கறை எடுத்துக் கொள்ளாதவள். அவள் போட்டிருக்கிற ஷெட்யூல்படி ஒரு புதுப் புடவை அன்றைய தேதியில் வாங்க வேண்டும், என்றால் அன்றைக்கு வாங்கியே ஆகவேண்டும், ஏண்டி, சுசியும் உன்னை மாதிரிதானே அவ எவ்வளவு கஷ்டப்படறா. படிக்க வெக்கறதே பெரிய காரியம். இதுல நீ... என்று ஜானகி சுசித்ராவுக்கு சப்போர்ட் பண்ணி பேசினால் போதும், நல்லா வச்சுக்க முடியாத நீங்கல்லாம் ஏன் நாலு புள்ளங்களைப் பெத்துகிட்டீங்க?' கத்தி பாய்ச்சுகிற மாதிரி நறுக் நறுக்கென்று கேள்விகளை வீசுவாள். இதற்குப் பயந்தே ஜானகியின் வாயில் பெரும்பாலும் பயம். - என்கிற பிளாஸ்டர் ஒட்டிக் கிடக்கும்.

    என்னடி? சுசித்ரா கேட்க

    அக்கா...ஒரு ஐந்நூறு ரூபாய் வேணும்.

    "ஐந்நூறு ரூபாயா?'

    எதுக்கு?

    வர்ற ஃபிஃப்டீன்த் காலேஜ் ஒரு டூர் புாராகிராம், - அதுக்குத்தான்...

    ஏண்டி, நம்ம வீட்டு நிலைமை உனக்குத் தெரியாதா?

    ஸோ...?

    டூர்ல நீ கலந்துக்க வேண்டாம்.

    என்ன விளையாடறயா? நான் கலந்துக்கலேன்னா எவ்வளவு கேவலம்...?

    இதிலென்ன கேவலம்...?"

    உனக்குத் தெரியாது. நீ பணம் தருவியா தரமாட்டியா?

    மாட்டேன்...

    நிம்மதி.

    என்ன நிம்மதி?

    இனிமே நான் காலேஜ் போகலை...

    இது பிரேமாவின் அஸ்திரம்: பிரேமா காலேஜை வெற்றிகரமாக முடித்து, பிரமாதமான வேலையில் உட்கார்ந்து குடும்பத்தின் திணறலை சீராக்குவாள் என்கிற கற்பனைகளில் மூழ்கியிருக்கும் சுசித்ரா, ஜானகியை அவ்வப்போது பணிய வைக்க அந்தந்தச் சந்தர்ப்பங்களில் பிரேமா வீசிவிடும் அஸ்திரம்.

    நிமிர்ந்தாள் சுசித்ரா. மவுனப் பார்வையைச் சில வினாடிகள் அவள் மேல் சிதறவிட்டாள்.

    எப்ப வேணும் பணம்?

    ஒரு வாரத்துல கிடைச்சா போதும்... நகர்ந்தாள் சுசித்ரா.

    இன்னும் தூக்க அத்தியாயத்திலிருந்து கவையாமல் பாயில உருண்டு கிடக்கிற கடைசித் தங்கைகள் நந்தினி, தேவியைக் கடந்தாள். அலமாரியில் இருந்த ஜானகியின் பிரிஸ்கிரிப்ஷன் தாளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

    சூரியன் கிழக்கு வாசலில் தலையை நீட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

    அந்தத் தெருவிலிருந்த எல்லா வீட்டு வாசல்களிலும் கோலம் பளிச்சென்று பிறந்து இருந்தது.

    மெயின் சாலையைத் தொட்டு ஐந்து நிமிஷங்கள் நடந்தாள்.

    இடப் பக்கம் சரிந்துபோன பை - பாஸ் பாதையில் நுழைந்து அந்தப் பாதையின் மறு ஓரத்திலிருந்த கிளினிக்கைத் தொட்டபோது, நேரம் 7.10.

    சத்யா நர்சிங் ஹோம் என்ற பித்தளை எழுத்துகள் போர்டிகோவில் நெற்றியில் துருத்திக்கொண்டு தெரிந்தது. அடிக்கிற வெய்யில் பட்டு மினுமினுத்தது.

    பிரவேச கேட்டில் நுழைந்தாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1