Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaatril Kalanthavale...!
Kaatril Kalanthavale...!
Kaatril Kalanthavale...!
Ebook154 pages1 hour

Kaatril Kalanthavale...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115704131
Kaatril Kalanthavale...!

Read more from Lakshmi Rajarathnam

Related to Kaatril Kalanthavale...!

Related ebooks

Reviews for Kaatril Kalanthavale...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaatril Kalanthavale...! - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    காற்றில் கலந்தவளே...!

    Kaatril Kalanthavale…!

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    இரண்டு மணியிலிருந்தே தயாராகிக் கொண்டிருந்தாள் மரகதம். இரண்டு புடவைகளை எடுத்துக் கொண்டு கணவரிடம் ஓடினாள். அவரோ, சோம்பேறித்தனமாகப் படுக்கையில் புரண்டு கொண்டு இருந்தார். மரகதத்தற்குக் கோபம் கோபமாக வந்தது. என்ன மனஷர் இவர். ஜட்ஜ் நல்ல சிவத்தின் மகளின் கல்யாண வரவேற்பு. முதல் நாளே வரவேற்பு. மறுநாள் கல்யாணம்.

    ஜட்ஜ் நல்லசிவம் அவள் கணவன் வசந்த கோபாலனின் நெருங்கிய நண்பர். பால்ய சிநேகிதரும்கூட. ஆரம்ப காலத்திலிருந்து ஒன்றாகப் படித்தவர்தான். அவள் கணவர், வசந்த கோபாலனும் அந்தஸ்த்தில் குறைந்தவர் இல்லை. நகரத்தில் பெரிய தொழிலதிபர் என்றாலும், இன்னொரு பெரிய மனிதர் வீட்டுக் கல்யாணம் என்றால் தெரிந்தவர் தெரியாதவர் என்று எத்தனை பேர்கள் வருவார்கள். சற்று முன்னால் போனால் தானே தெரியாத வி.ஐ.பி.க்களை அறிமுகம் செய்து கொள்ள முடியும்?

    அது அவர் தொழிலுக்கு உதவும் இல்லையா! அது ஏன் இவருக்குத் தெரிய மாட்டேன் என்கிறது? சமீப காலமாக அவள் மனத்தில் இன்னொரு எண்ணமும் பரவிக் கொண்டு வந்தது. கவலை என்று கூடச் சொல்லலாம். அவள் மகள் விதுபாலா கல்லூரி மாணவி. சங்கீதத்தை பாடமாக எடுத்துக் கொண்டிருக்கிறாள். படிப்பும் முடியப் போகிறது. ஆராய்ச்சி செய்யும் மாணவி.

    நாலு பெரிய மனிதர்கள் நடுவே புகுந்து புறப்பட்டால் தானே மகளுக்கு நல்ல வரனாகத் தேடமுடியும்! நகரத்தின் பெரிய தொழிலதிபர் வசந்த கோபாலனின் மகளை அல்ப சொல்பமான வசதியற்ற குடும்பத்திலா தர முடியும். மிகப் பெரிய இடமாக ஒரு டாக்டர், ஆடிட்டர், தொழிலதிபர்னு பார்க்க வேண்டாமா! முன் கைக்கு முன்னதாகப் போகாமல் சோம்பேறித்தனமாகப் படுத்துச் சோம்பல் முறிக்கும் கணவனைப் பார்த்தால் கோபம் வராதா என்ன?

    என்னங்க! இந்த மயில் கழுத்து புடவையை கட்டட்டுமா! இல்ல மெரூன் கட்டட்டுமா! எனக்கு ஒரே குழப்பமா இருக்குதுங்க!

    ஏம்மா, மணி ரெண்டு தானே ஆறது! இப்பவே என்ன அவசரம்? கல்யாண வீட்ல கூட இப்படி குழப்பமடைய மாட்டாங்க போல இருக்கே?

    இதப்பாருங்க... ரிஸப்ஷன் கரெக்ட்டா நாலு மணிக்கே ஆரம்பம். நாலு மணிக்கே நித்ய ஸ்ரீ கச்சேரி, முன்னாடி போனா ரெண்டு மனுஷாளைப் பார்த்து அறிமுகப்படுத்திண்டு டிபன் சாப்பிட்டுட்டு கச்சேரி கேட்க உட்காரலாம். எனக்கு ஆரம்ப வர்ணத்துலேர்ந்து கச்சேரி கேட்கணும். எங்கம்மா ஜி.என்.பி.யோட சிஷ்யையாக்கும்.

    வசந்த கோபலன் எழுந்து சோம்பல் முறித்த பொழுது அவரது உயரம் நிச்சயம் பலரை அசத்தும். உயரத்துக்கு ஏற்ப முக தேஜஸ்.

    மரகதம், நாளைக்கு போர்டு எழுதறவாளை வரச் சொல்லப்போறேன். ரிஸப்ஷன்ல நாலு போர்டு. ஹால்ல எட்டு போர்ட், வாசல்ல ஒரு அஞ்சாறு போர்ட் போதுமா!

    புடவைகளை நெஞ்சோடு அணைத்தபடி விரைப்பாக நின்ற மரகதம் இப்ப எதுக்கு போர்ட்? என்று கேட்டாள்.

    உங்கம்மா பிரபல பாடகர் ஜி.என்.பி.யோட சிஷ்யைனு எல்லோர்க்கும் தெரியவேண்டாமா! நாம்பளே மறந்துடாமே இருக்கணும் இல்லையா! என்றவரை அறையலாம் போல இருந்தது.

    அதுக்குத்தான் போர்ட் எழுதி மாட்டிடலாம்னு பார்க்கறேன் என்று சொன்னதுடன் நில்லாமல் பகபகவென்று சிரித்தார்.

    உங்களை என்ன பண்ணணும் தெரியுமா!

    அடிக்கலாம் போல இருக்கா! கல்யாண வீடுல நித்ய ஸ்ரீ கச்சேரிக்கு முன்னாடி ஆரம்ப சொற்பொழிவாக 'இவ கல்யாணத்துக்கு என்னை அடிச்சுக் கூட்டிண்டு வந்தானு' மைக் பிடிச்சுச் சொல்லிடறேன் என்ற வசந்த கோபாலனை,

    பேரன் எடுக்கற நாளாச்சு. கிழவன் துள்ளி விளையாடறார் என்று சத்தம் போட்டபடியே ஹாலில் வேடிக்கை பார்த்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்த விதுபாலாவிடம் வந்தாள்.

    வசந்த கோபாலன் விட்டாரா! பின்னாலேயே வந்தார்.

    பேரன் பிறக்கற நாளாச்சுனு சொல்றியே? எப்ப என் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணினே! என்று கேட்டவரை லட்சியம் பண்ணாமல் மகளின் அருகே வந்தாள்.

    மகள் விதுபாலா அப்பா - அம்மாவின் செல்ல உரையாடலை ரசித்தபடியே பில்டர் காப்பியைத் துளித் துளியாக ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தாள். காப்பி வாசனை மூக்கைத் துளைத்தது.

    ஏதும் காப்பி, நான் கலந்து தரல்லையே? என்று கேட்டாள் மரகதம்.

    உங்க அன்புச் சண்டை ஓயாதுனு தெரியும். அப்பா இதையே ஒரு ஸ்டேஜ்ல பேசினா சூப்பரா அப்ளாஸ் கிடைக்கும். ஸ்க்ரிப்டா எழுதினா பணம் கிடைக்கும் என்றாள்.

    அப்படிங்களா! செய்துடலாம். எனக்கும் சூடா ஒரு காப்பி கொண்டு வா. உங்கம்மா இப்ப உக்கிரமா இருக்கா. காப்பி கேட்டா காப்பியிலே எனக்கு அபிஷேகம் தான் கிடைக்கும் என்றபடி மகளின் அருகில் அமர்ந்து கொண்டார்.

    டீ... விது, எனக்கும் சேர்த்து காப்பி கலக்கு. இந்த ரெண்டுல எதைக் கட்டட்டும்? என்று மகளைக் கேட்டாள் மரகதம்.

    ரெண்டும் வேண்டாம். புதுசா வாங்கினாயே மரகதப் பச்சை. அதைக் கட்டு. அதுக்கு ஏத்த நெக்லஸையும், வளையல்களையும் கடை கடையா தேடி வாங்கினமே... மறந்துட்டியா! இடது கைல என்னோட வைர பிராஸ்லெட் போட்டுட்டு போ என்று மகள் சொல்ல, புடவையை சோபாவில் போட்ட மரகதம் மகளைத் தாவி அணைத்துக் கொண்டாள்.

    நீ தாண்டி மதி மந்திரி...

    விடும்மா. காப்பி கலந்துண்டு வரேன். நான் கல்யாணத்துக்கு வராததுனாலே என்னோட பிராஸ்லெட்டை உனக்கு இரவலா தரேன் என்றபடியே காப்பி கலக்கப் போனாள் விதுபாலா.

    கணவரை தார்க்குட்சி போட்டு எழுப்பி எழுப்பி மூன்றே காலுக்கு கிளம்பிவிட்டாள் மரகதம்.

    ப்ரிஜ்ல எல்லாம் இருக்கு. உன் ஃப்ரண்ட்ஸ் வந்தா ப்ரூட்ஸ், பாதாம் பால்னு வச்சிருக்கேன். கதவை தாள் போட்டுக்கோ. வாட்ச்மேன் இல்ல. ஜூரம்னு லீவ் போட்டுட்டான். சமையல் இல்லேனு சமையற்கார அம்மாவும் வரமாட்டா. ஜாக்கிரதையா இரம்மா. என்றவள்,

    இன்னிக்கு வரிசையா நித்ய ஸ்ரீ, அதுக்கு அடுத்தது பால முரளி கிருஷ்ணா, ஜேஸுதாஸ்னு மூணு கச்சேரி இருக்கு வரிசையா. நீ வரல்லேனுட்டே என்றபடியே கிளம்பினாள்.

    அப்பாடி என்று நெட்டுயிர்த்த விதுபாலா ஒரு தட்டில் பட்சணங்களை வைத்துக் கொண்டு கொறிக்க ஆரம்பித்தாள்.

    இன்று மூன்று கச்சேரிகளை மகள் மியூசிக் படித்தவளானாலும் மிஸ் பண்ணுகிறாளே என்று குறைதான். இதை அடிக்கடி சொல்லிப் புலம்பினாள்.

    அம்மா நார்த்துலேர்ந்து ஒரு மியூஸிக் ஸ்டூடண்ட் வந்திருக்கா. ஸோனானு பேர். சூரியன் எப்.எம்.ல யாழ்பாணம் சுதாகர் வாரம் ஒரு நாள் சினிமாப் பாடல்களின் ராகங்களைச் சொல்லுவார். பஹாடினு ஒரு ராகம். அது சோனாவுக்குத் தெரியுமானு கேட்கணும். இன்னிக்கு நம்ம வீட்ல டிஸ்கஷன்ஸ் வச்சிருக்கேன். நீ கேட்கற பாடல்களை எல்லாம் பதிவு பண்ணிண்டு வாம்மா.

    நிச்சயமா... நித்ய ஸ்ரீ கருடத்வனி, வருணாபரணம், நாகஸ்வ ராணினு அபூர்வ ராகங்கள்ல பாடறதைக் கேட்டிருக்கேன்.

    சினிமாப் பாட்டுல கூட வருளாபரணம் ராகத்தை உபயோகிச்சிருக்காங்க. நினைத்தேன் வந்தாய் - நூறு வயசுனு காவற்காரன் படத்துல வர்ற பாட்டு கூடவகுளாபரணம் தாம்மா, குமரிக்கோட்டத்துல ஒரு பாட்டு கூட சுத்த தன்யாசிதாம்மா. அம்மா, 'ஹிமஹரிதயையே’னு ஒரு பாட்டு சுத்த தன்யாசியில பாடுவியே.

    அதை எப்படிடி மறக்க. முடியும். ஜி.என்.பி.யோட பாட்டிடி. எங்கம்மா. பாடுவா நானும் கூடப் பாடுவேன்.

    அம்மா கர்ணன்ல கண்கள் எங்கேனு வர்ற பாட்டும், உன்னால முடியும் தம்பயில வர்ற புஞ்சை உண்டு நஞ்சை உண்டுனு வந்த பாட்டும் சுத்த தன்யாசிதாம்மா.

    ஜி.என்.பி.யோட பராமுக மேல நம்மா கானடா ராகம். உத்தம புத்திரன்ல வந்த முல்லை மலர் மேலனு வர்ற பாட்டும கானடா என்று தன்னுடைய இசை ஞானத்தை மரகதம் பெண்ணிடம் பறை சாற்றிக் கொள்ளத் தவற மாட்டாள்.

    மகளின் சங்கீத ஞானம் மரகதத்தை மிகவும் பெருமைப்பட வைக்கும் விஷயம். வட இந்தியப் பெண் ஒருத்தி வரும் பொழுது தான் வீட்டில் இல்லாதது குறித்து மரகதத்துக்கு வருத்தம்தான்.

    ஆனால் மகளும் அவள் தோழிகளும் செய்யப்போகும் காரியம் தெரிந்தால் கல்யாணமாவது கச்சேரியாவது என்று உதறி விட்டிருக்க மாட்டாளோ!

    அவர்கள் வீடு பணக்காரத்தனமான வீடு. வீட்டைச் சுற்றி

    Enjoying the preview?
    Page 1 of 1